விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தில் ஐ பட வில்லன்

விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தில் ஐ பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh gopi அக்னி சிறகுகள், கொலைகாரன் படங்களை தொடர்ந்து தற்போது தமிழரசன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

மேலும் காக்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார்.

இதில் பூமிகா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் டாக்டர் வேடத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி நடிக்கிறாராம்.

இவர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு தற்போது தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஆண்களை அசிங்கப்படுத்தவில்லை; 90ML-ஐ ரசித்தவர்களுக்கு சிம்பு நன்றி

ஆண்களை அசிங்கப்படுத்தவில்லை; 90ML-ஐ ரசித்தவர்களுக்கு சிம்பு நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuஅழகிய அசுரா என்ற பெயரில் அனிதா உதீப் இயக்கத்தில் உருவான படம் 90 எம்எல்.

ஓவியா நாயகியாக நடித்த இப்படத்திற்கு சிம்பு இசையமைத்து ஒரு சிறப்பு காட்சியில் நடித்திருந்தார்.

இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் சிலர் பாராட்டியே வருகின்றனர்.

இப்படம் குறித்து சிம்பு கூறியதாவது…

“பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களில் ஆண்களை மட்டம் தட்டிதான் வைத்திருப்பார்கள்.

ஆனால், 90 எம்எல் படத்தில் ஆண்களை கண்ணியமாகக் காட்டியிருந்தார் டைரக்டர் அனிதா.

மாடர்ன் பெண்களும் அவர்களின் சுதந்திரம் பற்றிதான் படத்தில் காட்டியிருந்தார்.

பல தடைகளை தாண்டி ஓவியா, அனிதா இருவரும் இப்படத்தின் வெற்றியை ருசித்திருக்கிறார்கள். விமர்சனங்களுக்கும், கிண்டல்களுக்கும் அவர்கள் பதிலளிக்கத் தேவையில்லை.

இது பெண்களுக்கான படமாக இருந்தாலும் படத்தை ரசித்த ஆண்களுக்கு நன்றி,” என சிம்பு தெரிவித்துள்ளார்.

Breaking சித்தார்த்-ஜிவி. பிரகாஷ் இணையும் பட டைட்டில் லுக் வெளியானது

Breaking சித்தார்த்-ஜிவி. பிரகாஷ் இணையும் பட டைட்டில் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Siddharth GV Prakash join hands for Sivappu Manjal Pachaiதமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார்.

முதல் படமாக, சொல்லாமலே துவங்கி பிச்சைகாரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்தும் இயக்குனர் சசி “சிவப்பு மஞ்சள் பச்சை” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குகிறார். இதன் பர்ஸ்ட் லுக் இன்று காலை 7 மணிக்கு வெளியிட்டனர்.

அக்கா – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார்.

அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள் (தமிழில் அறிமுகம்) நடிக்க அவரின் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

முதன் முறையாக டிராபிக் இன்ஸ்பெக்டராக நடிகர் சித்தார்த் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில் பைக் ரேசராக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடுயுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – ரமேஷ் P பிள்ளை (அபிஷேக் பிலிம்ஸ்)
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சசி
ஒளிப்பதிவு – பிரசன்னா S குமார்
இசை – சித்து குமார் (அறிமுகம்)
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்
கலை – மூர்த்தி
பாடல்கள் – மோகன் ராஜன்,தமயந்தி
சண்டைப்பயிற்சி – சக்தி சரவணன்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Siddharth GV Prakash join hands for Sivappu Manjal Pachai

அபிநந்தன், உதயா, உத்தரவு மகாராஜா – ஒப்பிட்ட உதயகுமார்

அபிநந்தன், உதயா, உத்தரவு மகாராஜா – ஒப்பிட்ட உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)பொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே பாதிக்கப்படும் உதயா, குறுக்கு வழியில் பெரும் கோடீஸ்வரனாக ஆகும் கதை தான் உத்தரவு மகாராஜா. அறிமுக இயக்குநர் ஆஷிஃப் குரைசி இயக்கத்தில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்ட இந்தப்படத்தில், எதிர் நாயகனாக நடித்திருந்தாலும் மிகவும் வித்தியாசமான ஒப்பனைகளில் வந்து அசத்தியிருப்பார் உதயா.

இவரால் பாதிக்கப்படும் பிரபு, ஒரு கட்டத்தில், மிகவும் நுண்ணிய சிப் எனப்படும் தகவல் தொடர்பு சாதனத்தை உதயாவின் காதில் பொருத்தி, பல உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார். எங்கிருந்து..? யாரால் ? இயக்கப்படுகிறோம் என்பது தெரியாத உதயா படும் வேதனைகள் படத்தின் சிறப்பம்சமான காட்சிகள் என்றால் அதுமிகையாகாது.

இந்த நிலையில், இந்தப்படம் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த மூத்த இயக்குநர் ஆர் வி உதயகுமார், “சமீபத்தில் பாகிஸ்தான் போர் விமானத்தை அதைவிட பல மடங்கு வலிமை குறைந்த விமானத்தால் சுட்டு வீழ்த்தி, பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக் கொண்ட நமது விங் கமாண்டர் அபிநந்தன் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்தியாவிற்குத் திரும்பிய அவருக்கு முழு உடல்பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கை வருவதற்குள், பாகிஸ்தான் இராணுவம் அவரையறியமல் அபிநந்தன் உடலில் சிப் பொருத்தியிருக்கக் கூடும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிக்கொண்டார்கள். அபி நந்தன் உடலில், எந்தவிதமான சிப்புகளும் பொருத்தப்படவில்லை என்பதே , மருத்துவப் பரிசோதனையின் பிரதான அறிக்கையாக இருந்தது,,,

உடலுக்குள் சிப் பொருத்தி வேவு பார்க்கவோ அல்லது இன்னொருவரை இயக்கவோ முடியும் என்று உத்தரவு மகாராஜா படத்தில் காண்பித்த சில நாட்களுக்குள், நிஜமாகவே அப்படி இருக்கலாமோ என்று விங் கமாண்டர் அபிநந்தன் விஷயத்தில் பலரும் பேசிக்கொண்டது, ஏதேச்சையாக ஒத்துப் போகிற நிகழ்வாக அமைந்துவிட்டது..” என்று பேசினார்.

சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பூமராங் – அதர்வா

சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பூமராங் – அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

boomerang atharvaaஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கும். ஒன்று கவர்ந்திழுக்கும் தோற்றம், மற்றொன்று நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது. அதர்வா முரளியின் முந்தைய படங்களை கவனித்தால் இது தெளிவாக விளங்கும். மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் அவரின் ‘பூமராங்’ படமும் ஏற்கனவே ரசிகர்களை ஒரு புதுவித அனுபவத்துக்கு தயார் செய்துள்ளது.

எப்போதும் போல், அதர்வா படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களை, கடும் முயற்சிகளை பற்றி பெரிதாக பேசாமல், இயக்குனர் கண்ணனை புகழ்ந்து பேசுகிறார். “கண்ணன் சார் அவருடைய கலைத்திறமையை தாண்டி, அரிதான பல தனிப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார். யாரும் அவ்வளவாக பேசாத சமூக பிரச்சினைகள் பற்றி படங்களில் பேசுவது அதில் ஒன்று. நாம் பல ஆண்டுகளாக சமூக வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பல படங்களை பார்த்திருக்கிறோம். எனினும், அவர் எனக்கு சொன்ன ‘பூமராங்’ ஸ்கிரிப்ட்டை முற்றிலுமாக புதிதாக உணர்ந்தேன். நாம் ஏற்கனவே சொன்னபடி, இது இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது என்ற விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங் காதல், காமெடி, எமோஷன் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம் என்று தான் சொல்லுவேன். மேலும், கண்ணன் சார், ஸ்கிரிப்ட்டில் சில ஆச்சரியமான விஷயங்களை வைத்திருக்கிறார், அது எனக்கு மிகவும் புதியதாகவும் இருந்தது” என்றார் அதர்வா முரளி.

உடன் நடித்த நடிகர்கள் பற்றி அதர்வா கூறும்போது, “நான் எப்போதும் நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருப்பதை நம்புகிறேன். ஒரு படம் மிகச் சரியானதாக இருக்க ஒவ்வொரு நடிகருக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இந்த விதத்தில், கண்ணன் சார், கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் மிகச்சிறந்த வேலையை செய்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல், மேகா ஆகாஷ், இந்துஜா உட்பட அனைவரது கதாபாத்திரத்திற்கும் உண்டான நியாயத்தை செய்திருக்கிறார் கண்ணன் சார்.

தொழில்நுட்ப குழுவை பற்றி கூறும்போது, “ரதனின் பாடல்கள் ஒரு தனித்துவமான உணர்வை உருவாக்கியுள்ளன. ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு வலுவான மற்றும் சிறந்த பின்னணி இசையை வழங்கி தன்னை மேம்படுத்தி வருகிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாரின் வண்ணங்கள் மற்றும் கலர் டோன் மிகவும் புதுமையாக இருக்கிறது. அவருடைய கேமரா, பச்சோந்தி போல சூழ்நிலையைப் பொறுத்து அதன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று நகைச்சுவையாக அவரது வேலையை பற்றி குறிப்பிடுவது உண்டு” என்றார்.

ரஜினியின் பாராட்டு பல கோடி பாராட்டுக்கு சமம்..: ‘பூமராங்’ கண்ணன் நெகிழ்ச்சி

ரஜினியின் பாராட்டு பல கோடி பாராட்டுக்கு சமம்..: ‘பூமராங்’ கண்ணன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது.

இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது.

உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார்.

“ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வந்ததும் ஆடிப் போனேன். நேரில் அவரைப் பார்த்ததும் நெகிழ்ந்தேன். படத்தில் நதி நீர் இணைப்புக்காக நாங்கள் செய்த ஆய்வைச்சொல்லி இது எப்படி சாத்தியப்படும் என்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அரைமணிநேரம் பொறுமையாகவும், ஆழமாகவும் கேட்ட ரஜினி படத்தில் இடம்பெறும் நதிநீர் இணைப்பு பாடலையும், டிரைலரையும் பார்த்துவிட்டு “எக்சலண்ட்…” என்றார். பல்லாயிரம் கோடி பாராட்டுகளைப் பெற்ற அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு பாராட்டு கிடைத்ததும் அது பல கோடி பாராட்டுகளுக்கு சமம் என்று நெகிழ்ந்தேன்.

நான் கிளம்பும்போது “கண்டிப்பாக பூமராங் படத்தைப் பார்க்கிறேன்..!” என்றார் அவர் அன்புடன். இதுவே எங்கள் டீமுக்குக் கிடைத்த முதல் வெற்றி..!” உற்சாகமாக சொல்லி முடித்தார் கண்ணன்.

More Articles
Follows