தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிதிஷ் வீரா.
இவரது சொந்த ஊர் மதுரை. அங்கேயே தன் பள்ளி & கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.
பின்னர் சென்னை வந்திருக்கிறார்.
சில கட்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமா சான்ஸ் வந்துள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரவே வாய்ப்புகள் கூடியுள்ளது.
ரஜினியின் காலா மற்றும் தனுஷின் அசுரன் படங்கள் இவருக்கு சினிமாவில் மாபெரும் அடையாளத்தை கொடுத்துள்ளது.
நிஜத்தில் பாசிட்டிவ் எண்ணங்களை கொண்ட இவர் அசுரன் படத்தில் நெகவ்டிவ்வான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மே 17 நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் காலமானார். இவருக்கு தற்போது 45 வயதாகிறது.
இவருக்கு 8′ வயதிலும், 7′ வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் புது கார் வாங்கியிருக்கிறார் நிதிஷ்.
தனது நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து தன் காரை காட்டி அவர்களை காரில் ஏற்றி ஒரு ரவுண்ட் அடித்து மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Nithish Veera passed away due to corona