அண்ணன் சூர்யாவுடன் கம்பேர் பண்ணாதீங்க… கார்த்தி

அண்ணன் சூர்யாவுடன் கம்பேர் பண்ணாதீங்க… கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and karthiவினோத் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று.

கார்த்தி, ரகுல் பிரித்தி சிங், போஸ் வெங்கட் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இன்று பாடல்கள் வெளியான நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது கார்த்தி பேசியதாவது…

என் அண்ணன் சூர்யாவுடன் சிங்கம் படத்தில் போலீஸாக போஸ் வெங்கட் நடித்துள்ளார்.

என்னுடன் இந்த படத்திலும் அவர் நடித்துள்ளார்.

நான் அவரிடம் என் அண்ணனைப் போல் எதிர்பார்க்காதீங்க என்பேன்.

நானும் நன்றாக நடிப்பேன். ஆனால் சிங்கம் போல கத்தி பேசும் பன்ச் டயலாக் இல்லை என்பேன். என்று கலகல வென பேசினார் கார்த்தி.

மண்ணின் மைந்தன் & முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற அபி சரவணன்

மண்ணின் மைந்தன் & முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abi saravananமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா ‘பிளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்த மொத்தம் 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தேசம் பத்துரிகை – தேசம் வலைத்தள ஊடகத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த விருது விழாவில் ‘பிக் பாஸ்’ புகழ் பரணிக்கு ‘மலேசிய மக்கள் நாயகன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை பரணியின் ரசிகர்கள் அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

நடிகர் அபி சரவணன் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தன்’, ‘2017 முன்னுதாரண இளைஞர்’ ஆகிய இரு விருதுகள் அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது .

மதுரை தொழிலதிபர் செந்தில் குமரன் ‘பசுமை நாயகன்’ விருதையும், சென்னை தொழிலதிபர் மன்சூர் அலிகான் ‘மக்கள் சேவகர்’ விருதையும் அமைச்சர் டத்தோ சரவணனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இந்த விருது விழாவில் மலேசியர்கள் பலர் ஊடகத் துறை, வர்த்தகத் துறை, விளையாட்டு என்று பலதுறைகளில் இருந்து சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டனர்.

இந்த தேசம் சாதனையாளர்கள் விருது விழாவில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், ம இ கா உதவித் தலைவர் டத்தோ டி.மோமன், போலீஸ் அதிகாரி டத்தோ பரமசிவம், மற்றொரு போலீஸ் அதிகாரி டத்தோ குமரன், இந்தியர் முஸ்லிம் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மனிதநேய மாமணி தொழிலதிபர் ரத்னவள்ளி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை – தேசம் வலைத்தள ஊடகம் முதல் முறையாக நடத்திய விருது விழா மலேசிய சாதனையாளர்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று தேசம் பத்திரிகையின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

தன் மகனுக்காக மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா

தன் மகனுக்காக மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thambi ramaiah and umapathiநடிகராக பிசியாகிவிட்ட இயக்குனர் தம்பி ராமையா தற்போது மீண்டும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தன் மகன் உமாபதி நடிக்கும் “உலகம் விலைக்கு வருது” படத்தை இயக்குகிறார்.

இதில் பகத் பாசிலுடன் கதாநாயகியாக நடித்த மிருதுளா முரளி நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, YG மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஓரிரு தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலையக்கோயில் 7ம் நூற்றாண்டின் முருகன் கோயிலில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

தப்பட்டம் மயிலாட்டம் புலியாட்டம் பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக்கலைஞர்கள் 4 கேமராக்களுடன் தினேஷ் அவர்களின் நடன வடிவமைப்பில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

சிவகார்த்திகேயனுடன் இணைய திட்டம் போடும் வெங்கட் பிரபு

சிவகார்த்திகேயனுடன் இணைய திட்டம் போடும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and venkat prabhuகடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பெரும் சர்ச்சையானது.

அங்கு அதிமுக.வினரால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு அவரது தயாரிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆர்.கே.நகர்’ என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை சரவணராஜன் இயக்கி வருகிறார்.

இதில் நாயகனாக வைபவ் நடிக்க, நாயகியாக சனா, வில்லனாக சம்பந்த் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவதால். கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

அதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலி; அந்நியன் நிஜத்திலும் வருவாரா?

அரசின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலி; அந்நியன் நிஜத்திலும் வருவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anniyan movie stillsதமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை காணப்படுகிறது.

எனவே கடந்த 3 நாட்களாக நிறைய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, கொடுங்கையூர் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற கோரி அந்த பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள மின் ஒயர் அறுந்து கிடப்பதால் அதை சரி செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் எவரும் அந்த பகுதிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் விளையாடி உள்ளனர்.

அப்போது அதில் உள்ள 2 சிறுமிகளை மின்சாரம் தாக்கி அவர்கள் இறந்துள்ளனர்.

இச்சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் என்ற படத்திலும் இதுபோன்ற காட்சி இருக்கும்.

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்ற உயிர்கள் பலியாவது எந்த வித்த்தில் நியாயம்?

மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இந்த அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

அவர்களை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இதனால் அந்த உயிர்கள் மீட்கப்பட்டு விடுமா என்ன?

இதுபோன்ற அதிகாரிகளை தண்டிக்க சினிமாவைப் போல அந்நியன் வருவாரா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சிறுமிகள் உயிரிழப்புக்கு அனுதாபம்-நிதியுதவி போதுமா..? கமல் கேள்வி

சிறுமிகள் உயிரிழப்புக்கு அனுதாபம்-நிதியுதவி போதுமா..? கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன.

அந்த தண்ணீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்ததில், 2 சிறுமிகள் இறந்துள்ளனர்.

சிறுமிகள் மகா (9) மற்றும் பாவனா (8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது,

`கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவணவெல்லாம் செய்ய வேண்டும்’

இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

More Articles
Follows