தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் கமல் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியானது.
இப்படத்தின் ரிலீசின் போது பிரச்சினைகள் வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் என கமல் கூறியிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தை கையில் எடுத்துள்ளார் கமல்.
இதில் கமல் ‘ரா’ ஏஜெண்ட்டாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மீதமுள்ள சில காட்சிகளை படமாக்கிவிட்டுதான் அடுத்த படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறாராம்.
அதாவது இப்படத்தை முடித்துவிட்டுதான் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் உலகநாயகன்.
Kamalhaasan decided to complete Sabash Naidu before Indian 2