தியேட்டர் ரிலீஸில் இருந்து ஜகா வாங்கும் ‘ஜகமே தந்திரம்’..? தனுஷ் ட்வீட்டால் ரசிகர்கள் கன்ப்யூஸ்

Dhanushஇந்தாண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘மாஸ்டர்’ & சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் தியேட்டர்களில் ரிலீசானது.

ஈஸ்வரன் படத்தை முதல் நாளே ஓடிடி-யில் வெளியிட திட்டமிடப்பட்டதால், அப்படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தனர்.

எனவே ஓடிடி முடிவை கைவிட்டது படக்குழு.

ஆனால் ‘மாஸ்டர்’ படம் இரு வாரங்களில் ஓடிடி-யில் வெளியானது.

ஒரு படம் தியேட்டரில் வெளியாகி 50 நாட்களுக்குள் ஓடிடியில் வெளியிடக்கூடாது என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருந்த போதிலும் ‘மாஸ்டர்’ படம் OTT-ல் வெளியிடப்பட்டு, தியேட்டரிலும் கூட்டம் அள்ளுகிறது.

இந்த நிலையில் இதே போல பிரச்சினையை தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படமும் சந்தித்து வருகிறது.

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் படத்தை OTT-ல் நேரடியாக வெளியிடும் முடிவை மறுத்தனர்.

இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிய திரைகளில் ரசிக்கும்படி இயக்கப்பட்டுள்ளது என அறிவித்தனர்.

சற்றுமுன் நடிகர் தனுஷும் அவரது ட்விட்டரில்… தியேட்டர் உரிமையாளர்கள் & என் ரசிகர்களை போல ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர் வெளியீடாக எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனால் படத்தயாரிப்பாளர் முடிவில் ஏதேனும் மாற்றம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் ‘ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளர், மனம் மாறி, ஏற்கனவே படத்தை OTT தளத்துக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது.

இத்துடன் ஒரே நாளில் படத்தை தியேட்டர்களிலும் ஓடிடி-யிலும் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்த படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார்.

Actor Dhanush’s surprise breaking statement about Jagame Thandhiram release

Overall Rating : Not available

Latest Post