நடிகன் என்ற தன் அடையாளத்தை அசுர லெவலில் மாற்றிய தனுஷ்.; ரசிகர்கள் ஆனந்தம்

Dhanushதனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’, கோலிவுட்டில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ்.

இத்துடன் தாணு தயாரிப்பில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்திலும் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை யுவன்.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43வது படமாகும் என்பதால் தற்காலிகமாக D43 என்று அழைக்கின்றனர்.

இதில் நாயகியாக ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன் ஸ்மிருதி வெங்கட் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார்.

தன் படம் தொடர்பான தகவல்களை தன் ட்விட்டர் பக்கத்தில் தருவதில் தனுஷ் முன்னோடி ஆவார்.

இதனால் 96 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை ட்விட்டரில் பாலோ செய்கின்றனர்.

இதுநாள் வரை தன் புரொபலை நடிகர் என வைத்திருந்த தனுஷ் தற்போது அசுரன்/நடிகர் என மாற்றியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார், தளபதி போன்று இதுநாள் வரை தனுஷுக்கும் எந்த பட்டமும் இல்லை.

இனி நடிப்பு அசுரன் என்ற பட்டம் சூட்டப்படலாம் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Dhanush gets new title card ?

Overall Rating : Not available

Latest Post