ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்த சிம்பு

ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Achcham Yenbadhu Madamaiyada chennai collection reportகெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், பாபா ஷேகல், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த அச்சம் என்பது மடமையடா படம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வெளியானது.

ரூ. 500, 100 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் இதன் வசூலுக்கு தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் இப்படம் ரசிகர்களிடை வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது.

இப்படம் 3 நாட்களில் மட்டும் தமிழகளவில் ரூ. 14 கோடியை வசூல் செய்துள்ளதாம்.

மேலும் சென்னை வசூலில் முதல் வார முடிவில் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி ஆகிய படங்களுக்கு பிறகு 3வது இடத்தை பிடித்துள்ளதாம்.

இதற்கு பிறகுதான் இருமுகன், 24 படங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மீண்டும் சென்னையை ரவுண்ட் கட்டும் ரஜினிகாந்த்

மீண்டும் சென்னையை ரவுண்ட் கட்டும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shootingஷங்கர் இயக்குர் 2.ஓ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதன் சூட்டிங் சில நாட்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்.

தீபாவளியன்று சென்னைக்கு வந்த திரும்பிய ரஜினி, தற்போது மீண்டும் 2.ஓ சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் மீண்டும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

தற்போது சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி தொழில்நுட்ப பூங்காவில் நடைபெற்று வருகிறது.

அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்காக ரசிகர்கள் எடுத்த அவதாரம்

விஜய்க்காக ரசிகர்கள் எடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsபரதன் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன் தயாரித்து வரும் பைரவா அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா, சிஜா ரோஸ், பாப்ரி கோஷ் உள்ளிட்ட இளம் நாயகிகள் பட்டாளமே நடித்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கேரளா மாநிலத்திலுள்ள மலபார் பகுதியின் வெளியீட்டு உரிமையை விஜய் ரசிகர்களே வாங்கியிருக்கிறார்களாம்.

அடுத்த 2017 வருட பொங்கல் தினத்தில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

‘வேதாளம்-ஜில்லா’வில் கனெக்ஷன் ஆன கயல் ஆனந்தி

‘வேதாளம்-ஜில்லா’வில் கனெக்ஷன் ஆன கயல் ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kayal anandhi hotஅஜித் நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பிய படம் ‘வேதாளம்’.

தற்போது இதன் தெலுங்கு ரீமேக் உருவாக உள்ளது.

இதன் கதையில் தெலுங்கு ரசிகர்களுக்காக சில மாற்றங்களை செய்யவிருக்கிறார்களாம்.

இந்த படத்தை ஏ. எம். ரத்னம் தயாரிக்க, விஜய்யின் ‘ஜில்லா’ பட இயக்குனர் ஆர்.டி. நேசன் இயக்கவிருக்கிறார்.

அஜித் வேடத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க, அவரது தங்கை வேடத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கவிருக்கிறாராம்.

தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

‘கபாலி-2’-வை கன்பார்ம் செய்த கலைப்புலி தாணு

‘கபாலி-2’-வை கன்பார்ம் செய்த கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini thaanuஇவ்வருட வெளியான படங்களில் இந்திய சினிமாவையே உலுக்கி பார்த்த படம் ரஜினியின் ‘கபாலி’ என்று சொன்னால் அது மிகையல்ல.

இதன் விளம்பரங்களில் புதுவிதமான யுக்திகளை கையாண்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

இதன் க்ளைமாக்ஸில் இதன் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக காண்பிக்கப்பட்டது.

இதனை நிரூபிக்கும் வகையில், கபாலி-2 என்றொரு டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் தாணு.

நிச்சயம் இதில் ரஜினியை தவிர வேறு யாரும் நடிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஷங்கரின் 2.ஓ மற்றும் தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கும் படங்களை முடித்துவிட்டு, கபாலி2 வில் ரஜினி நடிப்பார் என நம்பலாம்.

கபாலியை காரணம் காட்டி ‘மணல் கயிறு 2’க்கு யு சர்ட்டிபிகேட் பெற்ற எஸ்வி.சேகர்

கபாலியை காரணம் காட்டி ‘மணல் கயிறு 2’க்கு யு சர்ட்டிபிகேட் பெற்ற எஸ்வி.சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manal kayiru 2 movie stillsநீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்வி. சேகர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மணல் கயிறு 2.

மதன்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் சேகர், விசு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தரண் குமார் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனால் தணிக்கை அதிகாரிகளுக்கும் எஸ்வி. சேகருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

நாங்கள் எடுத்திருக்கும் படத்துக்கு நியாயமான சான்றிதழ் கிடைக்கும்வரை போராடுவேன்.

ஆனால் மறுஆய்வுக்குக்காக செல்ல மாட்டேன். கோர்ட்டுக்கு போவேன்.

ரஜினி நடித்த ‘கபாலி’ படத்துக்கு எந்த அடிப்படையில் ‘யு’ சர்ட்டிபிகேட் கொடுத்தனர் என பல கேள்விகளை எஸ்வி. சேகர் கேட்டுள்ளார்.

தற்போது, இறுதியாக ‘மணல் கயிறு 2’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows