டபுள் ரோபோஸ்; சிங்கிள் லவ்… 2.0 பட ஸ்டோரி ஒன்லைன்

டபுள் ரோபோஸ்; சிங்கிள் லவ்… 2.0 பட ஸ்டோரி ஒன்லைன்

2 point 0 stillsஷங்கர்-ரஜினி-சன் பிக்சர்ஸ் ஆகியோரது கூட்டணியில் உருவான படம் எந்திரன்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த அப்படத்தில் சில பாடல்களை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருந்தார்.

தற்போது அது போன்ற ரோபோ கதை கொண்ட 2.0 படத்திலும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

’எந்திரன்’ படத்தில் பாட்டு எழுதும்போது ஒருதலைக் காதல் பற்றி சொன்னேன்.

ஒரு பெண் மீது எந்திரத்துக்கு வரும் காதலை எழுதினேன்.

`2.0’ படத்துல இரண்டு எந்திரங்களுக்கு இடையேயான காதலை எழுதியிருக்கேன்’ என தெரிவித்துள்ளார்.

அநேகமாக இது ரஜினி மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இரு ரோபோக்களை பற்றிய காதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீரெட்டி படுக்கை வரிசையில் ஸ்ரீகாந்த்-லாரன்ஸ்?; மிரட்டும் விஷால்

நடிகை ஸ்ரீரெட்டி படுக்கை வரிசையில் ஸ்ரீகாந்த்-லாரன்ஸ்?; மிரட்டும் விஷால்

sri reddyபிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடன் படுக்கை பகிர்ந்த ஒவ்வொரு திரையுலகினரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

தனக்கு சினிமா சான்ஸ் வாங்கி தருவதாக கூறி அவர்கள் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார்கள். ஆனால் எவரும் வாய்ப்பு தரவில்லை என குற்றம் சாட்டி வருகிறார்.

இதுநாள் வரை தெலுங்கு நட்சத்திரங்களை பற்றி கூறி வந்த இவர், தற்போது தமிழ் நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

முதலில் ஏஆர். முருகதாஸ் பெயரை கூறியிருந்தார். தற்போது அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரின் பெயரையும் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள முகநூல் பக்கத்தில்…

விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், ஆனாலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிடுவேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம்.

சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளை எடுக்க அவர்கள் முன்வரவில்லை.” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரே திரையில் ஒன்றாக தோன்றும் கமல்ஹாசன்-சல்மான்கான்

ஒரே திரையில் ஒன்றாக தோன்றும் கமல்ஹாசன்-சல்மான்கான்

kamal haasan and salman khanகமல் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இதன் ஹிந்தி உரிமையை இயக்குனர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளனர்.

எனவே இப்பட தொடர்பான புரமோஷன் பணிகளில் தற்போது இறங்கி இருக்கிறார் கமல்.

இதனையடுத்து சல்மான்கான் தொகுத்து வழங்கும் `தஸ் கா தம்’ என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன்.

ஒரே திரையில் இருவரும் ஒன்றாக தோன்ற இருப்பது இதுவே முதன் முறையாகும்.

நான் போலி பகுத்தறிவாளனா..? தமிழிசைக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் பதிலடி

நான் போலி பகுத்தறிவாளனா..? தமிழிசைக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் பதிலடி

Kamal reaction to Tamilisai Soundararajans complaint on Duplicate atheistபா.ஜ.கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நடிகர் கமல்ஹாசன் குறித்து கூறும்போது…

அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பித்தார் கமல். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார்.

ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார். அப்படி பேசி போலி வே‌ஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது…

லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது. ஒரே நேரத்தில் சட்ட மன்ற, நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது.

என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. நான் பகுத்தறிவாளன் தான்.

ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்பது ஒரு கூக்குரல். அது அவர்களாவே சொல்கிறார்கள்.

இனி என் தொண்டர்கள் அவ்வாறு அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்’ என்றார்.

நடிகர் கமல்ஹாசனின் வீடு முதலில் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இருந்தது.

மேலும் தான் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா என்ற பாடலில் பாடி ஆடினார்.

இதனையடுத்து கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என அழைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal reaction to Tamilisai Soundararajans complaint on Duplicate atheist

ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் இரவில் கதை சொன்ன பரத் நீலகண்டன்

ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் இரவில் கதை சொன்ன பரத் நீலகண்டன்

Shraddha Srinath to romance with Arulnith for Bharath Neelakandans movieஇவன் தந்திரன், விக்ரம் வேதா, உள்ளிட்ட படங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எஸ்.பி.சினிமா சார்பில் சங்கர் தயாரிக்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார்.

பரத் நீலகண்டன் இயக்குகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.

படம் பற்றி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது:

வழக்கமாக, இரவில் கதை கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் கதை சொல்ல டைரக்டர் பெங்களூர் வந்தார்.

இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். மிகவும் பிடித்தது. நடிக்க ஒப்புக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Shraddha Srinath to romance with Arulnith for Bharath Neelakandans movie

சித்தார்த்-கேத்ரீன் தெரசா நடிக்கும் பட சூட்டிங் தொடங்கியது

சித்தார்த்-கேத்ரீன் தெரசா நடிக்கும் பட சூட்டிங் தொடங்கியது

Trident Arts Production No 3 Shoot Kick started in Chennaiசித்தார்த், கேத்ரின் தெரசா இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை சாய் சேகர் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தை ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக மோதவிருக்கிறார்.

முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்து சாய்சேகர் கூறியதாவது…

“முழுக்க முழுக்க நகரப் பின்னணியில் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் காதல், ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாக்க உள்ளோம்.

இந்தப் படத்தில் முதற்கட்டமாக 10 நாள் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம்.இதில் ஹிரோயின் கேத்ரின் தெரசா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறும்.” என்றார்.

Trident Arts Production No 3 Shoot Kick started in Chennai

Trident Arts Production No 3 movie pooja stills

More Articles
Follows