தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து தன் அடுத்த பட சூட்டிங்கில் பிஸியாகி விட்டார் சிவகார்த்திகேயன்.
பொன்ராம் இயக்கிவரும் இதன் சூட்டிங் தற்போது தென்காசியில் நடைபெற்று வருகிறது.
இதில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சூரி, நெப்போலியன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ரசிகர்களின் முன்னாள் கனவுக் கன்னியான சிம்ரன் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.
இந்த கேரக்டர் குறித்து சிம்ரன் கூறும்போது… “கேரக்டர் பற்றி இப்போது கூறமுடியாது. ஆனால் இது மிகவும் பவர்புல்லான கேரக்டர் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 (விஐபி2) படத்திலும் முன்னணி நடிகையான கஜோலுக்கு பவர்புல்லான கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kajol in Dhanush movie and Simran in Sivakarthikeyan movie plays powerful role