விஐபி2 மாஸ் ஹிட்டு; தனுஷின் அடுத்த டார்கெட் அஜித்

விஐபி2 மாஸ் ஹிட்டு; தனுஷின் அடுத்த டார்கெட் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIP2 Telugu version clash with Vivekam release on 24th August 2017கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சௌந்தர்யா ரஜினி இயக்கிய விஐபி2 படம் வெளியானது.

தனுஷ் தயாரித்து நடித்திருந்த இப்படத்தில் கஜோல், அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா, ரைசா, செல்முருகன், ஜெயச்சந்திரன், பிஆர்ஓ ரியாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டான் இசையமைத்திருந்த இப்படம் நல்ல வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் இதன் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பை வெளியிட இருந்தனர்.

ஆனால் தற்போது தெலுங்கு பதிப்பை வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித்தின் விவேகம் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதால் இந்த இரு படங்களுக்கும் மோதல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIP2 Telugu version clash with Vivekam release on 24th August 2017

vip2 august 25

தரமணி சூப்பரான படம்; படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

தரமணி சூப்பரான படம்; படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini praises taramaniகடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படம் வெளியானது.

பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பெண்களை உயர்த்தி இப்படம் உருவாகியிருந்தாலும் ஆண்களின் ஆதரவு அமோகமாக கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து படத்தின் சக்ஸஸ் மீட்டிங்கும் நடைப்பெற்றது.

இதனையறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்க்க விரும்பி பார்த்துள்ளார்.

பின்னர் படத்தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் அவர்களை அழைத்து பாராட்டினாராம்.

களத்திற்கு வாங்க கமல்; நான் இருக்கிறேன்… சீமான்

களத்திற்கு வாங்க கமல்; நான் இருக்கிறேன்… சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasan and seemanஇதுநாள்வரை ஊழல் மற்றும் அரசியல்வாதிகளை மறைமுகமாக சாடி வந்தார் கமல்.

ஆனால் நேற்றைய ட்வீட்களில், அரசை நேரடியாகவே எதிர்த்தார்.

முதல்வரை பதவி விலக சொல்ல எதிர்க்கட்சிகள் ஏன் சொல்லவில்லை.

எனது இலக்கு என்பது சிறப்பான தமிழகம். எனது குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்குத் துணிச்சல் உள்ளது? என்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.

இதுகுறித்து இயக்குநரும் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கூறியதாவது….

களத்திற்கு வாருங்கள். ட்விட்டரில் குரல் கொடுத்தால் போதாது.

நீங்கள் குரல் கொடுத்த உடன் ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் இல்லை.

ஊழலை எதிர்த்து போராட்டம் செய்யப்போவதாக கமல் அறிவித்தால் நாங்கள் கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

அதே போன்று, சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். அதற்கும் நான் அவருடன் இணைந்து போராட தயார்.

ஆனால் அவரது பேச்சுக்கள் வெறும் பேச்சாகவே இருக்கிறது” என்றார் சீமான்.

10 கோடி வாடகை பாக்கி; லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளிக்கு பூட்டு.?

10 கோடி வாடகை பாக்கி; லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளிக்கு பூட்டு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Latha Rajinis Ashram School Closed due to rent balanceரஜினிகாந்தின் மனைவி லதா அவர்கள் சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

இந்த பள்ளி உள்ள கட்டிடத்திற்கு 2009 முதல் தற்போது வரை ரூ. 10 கோடி தரவேண்டும் என்று அக்கட்டட உரிமையாளர் வெங்கடேஷ்வரலு தெரிவித்துள்ளார்.

ரூ. 10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது ரூ.2 கோடி தருவதாக லதா தரப்பு கூறியிருந்ததாகவும், 14 மாதங்களாகியும் லதா ரஜினி பணத்தை தரவில்லை என்று உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே வாடகை பணம் கொடுக்காத காரணத்தினால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

எனவே, இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் வேளச்சேரி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள ஆஸ்ரம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Latha Rajinis Ashram School Closed due to rent balance

 

latha rajinikanth ashram letter

அருள்நிதியின் அரசியல் கதையை இயக்கும் கரு.பழனியப்பன்

அருள்நிதியின் அரசியல் கதையை இயக்கும் கரு.பழனியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arulnithi teams up with Karu Palaniyappan for Political scriptஅண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மரகத நாணயம் படத்தை தயாரித்திருந்தது ஆக்ஸஸ் பிலிம்ஸ்.

தற்போது அருள்நிதியின் நடிப்பில் உருவாகும் இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ராட்சஸன்’ ஆகிய படங்களை இந்நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார் டில்லி பாபு.

இதனையடுத்து மீண்டும் அருள்நிதி நடிக்க ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக இந்த நிறுவனம் தன் பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இப்படத்தை கரு.பழனியப்பன் இயக்கவிருக்கிறாராம்.

இது அரசியலை நையாண்டி செய்யும் கதைக்களம் எனவும் தெரியவந்துள்ளது.

பொதுவாகவே இயக்குனர் கரு. பழனியப்பனின் பேச்சில் சமூக அக்கறை கொண்ட பார்வை இருக்கும்.

எனவே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Arulnithi teams up with Karu Palaniyappan for Political script

எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது.. சமந்தா ஓபன் டாக்

எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது.. சமந்தா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I already got married Actress Samantha open talkநடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 29ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயத்தார்த்தம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமணம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது.

இதற்கு திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதில் இருவரின் குடும்பத்தினர் சுமார் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாகவும் திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் காதல் திருமணம் பற்றி சமந்தா கூறியதாவது…

நாங்கள் நடித்த முதல் பட சூட்டிங்கில் நாக சைதன்யாவை பார்த்த உடனே காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.

இன்னும் எங்களுக்கு சட்டப்படி திருமணம் ஆகவில்லை என்றாலும் அவருடன் மனதளவில் திருமணம் ஆகிவிட்டது. நான் அவரின் மனைவியாகிவிட்டேன்.

திருமணத்திற்கு பிறகும் நான் நானாகவே இருக்கலாம் என புகுந்த வீட்டில் சம்மததித்து இருப்பதால் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார்.

திருமணத்தை முடித்து விட்டு தாங்கள் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்துவிட்டு தேன்நிலவு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

I already got married Actress Samantha open talk

More Articles
Follows