தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில், அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
எனவே தல ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக விவேகம் படத்தின் டீசரை அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்த, அதிரடியான அறிவிப்புகளை
சென்னை, கோயம்பேடு ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
பிறந்தநாள் அன்று காலை, அங்குள்ள நான்கு ஸ்கிரீன்களிலும் நான்கு அஜீத் படங்களை திரையிட இருக்கிறார்களாம்.
ஆனால், எந்த படங்கள் திரையிடப்படும் என அவர்கள் அறிவிக்கவில்லை.
‘பிளைண்ட் டேட்’ போல, எந்தப் படம் என தெரியாமல் தியேட்டருக்குப் போக வேண்டியதுதான்.
அட.. எந்த படமாக இருந்தால் என்ன? அஜித்தை பார்க்கப்போறோம் என கிளம்பவேண்டியதுதானே..
Vivegam teaser and 4 movies will be treat for Ajith fans on his Birth day