தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனை முன்னிட்டு.. “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம்.

நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். #JaiBhim

இப்பதிவை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் ஞானவேல், “உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்..அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி கரம்.” என தெரிவித்துள்ளார்.
ஞானவேல் தற்போது ரஜினிகாந்த் & அமிதாப்பச்சன் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaibhim completed 2 years Suriya Thanks note to CM Stalin










