தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவுக்கு கேரளாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இதில் இளையதளபதி விஜய்க்கு சிலை வைக்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களும் அங்கு இருப்பது தாங்கள் அறிந்ததே.
தெறி படம் கேரளாவில் கிட்டதட்ட 200 தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது.
தற்போது பைரவா நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும், குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது விஜய்க்கு எதிராக சிலர் அங்கு செயல்பட்டுவருவதால் தியேட்டர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இருந்தபோதிலும் மேலும் பல தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.