ஜூன் 22-ல் 30 தியேட்டர்களில் விஜய் படங்கள்; தெறிக்கவிடும் ரசிகர்கள்

ஜூன் 22-ல் 30 தியேட்டர்களில் விஜய் படங்கள்; தெறிக்கவிடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala Theatres plans to screen different Vijay movies on his Birthday

தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு உள்ள மார்கெட் நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இவரது படங்கள் வந்தாலே ரசிகர்கள் மிகப்பெரிய விழா போல கொண்டாடுவார்கள்.

அதுவும் அவரது பிறந்தநாள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தையே மிஞ்சிவிடும் அளவுக்கு கேரளாவில் உள்ள ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

கேரளா முழுவதும் உள்ள திரையரங்குகளில் விஜய் படத்தை திரையிட அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி பல மாவட்டங்களில் விஜய் படங்களை திரையிடுகின்றனர்.

Kerala Theatres plans to screen different Vijay movies on his Birthday

அந்த லிஸ்ட் இதோ….

1.Mundakkayam – Ghilli
2.Kottayam – Thirumalai
3.Kasargod – Pokkiri
4.Alappuzha – Shajahan
5.Kattakada – Thuppakki
6.Chengannur – Theri
7.Ettumanoor – Ghilli
8.Thrissur – Pokkiri
9.Adoor – Theri
10.Cherthala – Sachien
11.Cherthala – Ghillli
12.Idukki – Theri
13.Peyad – Theri
14.Palakkad – Theri
15.Vaikom – Kaththi
16.Pathanamthitta – Thirupachi
17.Pothencode- Thupakki
18.Malappuram – Theri
19.Ernakulam – Kaththi
20.Mukkam – Pokkiri
21.Kollam – Sivakasi
22.Chenganashery – velayudham
23.Mavelikkara – Pokkiri
24.Cherthala – velayudham
25.Idukki – kaththi
26.Trivandrum – Mersal
27.Trivandrum – Ghilli
28.Irinjalakuda – Theri
29. Kanhanghad – Theri
30.Trivandrum – Kaththi

த்ரிஷாவுக்கு வருமானத் துறை அபராதம்; ரத்து செய்தது ஐகோர்ட்

த்ரிஷாவுக்கு வருமானத் துறை அபராதம்; ரத்து செய்தது ஐகோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trishaநடிகை திரிஷா கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார்.

அவர் கூடுதலாக ரூ.3.52 கோடி வருமானத்தை ஈட்டியதாக வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

தவறான கணக்கு காண்பித்து ஏமாற்றியதாக திரிஷாவுக்கு ரூ.1.16 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை உத்தர விட்டது.

இதனை எதிர்த்து நடிகை திரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விசாரணையில் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

த்ரிஷா 3.52 கோடி ரூபாய் வருமானத்துக்கு கணக்கு காட்டி இருப்பதாகவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் படத்தை முடித்துவிட்டு ரஜினியை இயக்கும் ஏஆர். முருகதாஸ்.?

விஜய் படத்தை முடித்துவிட்டு ரஜினியை இயக்கும் ஏஆர். முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Vijay 62 movie AR Murugadoss plans to direct Rajinikanthரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.

எனவே படங்களில் நடிக்க மாட்டார் என எல்லாரும் நினைத்திருந்த நிலையில், திடீரென கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

தற்போது அதன் சூட்டிங்குக்காக மேற்கு வங்கத்தில் இருக்கிறார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையைமக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிக்கக்கூடும் என கிசுகிசுக்கப்படுகிறது.

தன் அரசியல் வருகையையொட்டி ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்து விட்டு பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக பணியாற்றவிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

2021ல் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலையே ரஜினி குறி வைத்திருப்பதால் அதற்குள் படங்களை முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம்.

After Vijay 62 movie AR Murugadoss plans to direct Rajinikanth

விநாயகர் சதுர்த்தி நாளில் தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்.?

விநாயகர் சதுர்த்தி நாளில் தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vada Chennai and Seema Raja movies may clash on Vinayagar Chathuruthi dayவருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக சீமராஜா படத்துக்காக சிவகார்த்திகேயனை இயக்கி வருகிறார் பொன்ராம்.

இமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஆர்.டி. ராஜா தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் 2 விதமான கெட் அப்புகளில் நடித்து வருகிறார்.

ஒரு தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார்.

இந்த கேரக்டர் ப்ளாஷ்பேக்கில் வருவதாகவும் அதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு ஜூன் 19ம் தேதி முழுவதுமாக முடிவடைய உள்ளதாம்.

இப்படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை செப்டம்பர் 13ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில் தனுஷின் ‘வடசென்னை’ படமும் வெளியாகும் என தகவல்கள வந்துள்ளன.

வெற்றிமாறன் இயக்கி வரும் வட சென்னை படத்தின் ட்ரைலரை வருகிற ஜீலை 28ஆம் தேதி வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vada Chennai and Seema Raja movies may clash on Vinayagar Chathuruthi day

காலாவில் புரட்சி செய்தவர் அஜித்துக்கு புரட்சி வசனம் எழுதுகிறார்

காலாவில் புரட்சி செய்தவர் அஜித்துக்கு புரட்சி வசனம் எழுதுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala and Viswasam movies connected by Dialogue Writer Manikandanரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படத்தில் ரஜினியின் கடைசி மகனாக நடித்தவர் மணிகண்டன்.

இவர் படத்தில் புரட்சி போராட்டங்கள் செய்துக் கொண்டு லெனின் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

இதற்கு முன்பே இவர் விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறாராம்.

இப்படத்தின் வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திலும் வசனகர்த்தாவாக ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

எனவே இதில் புரட்சிக்கரமான வசனங்களை எதிர்பார்க்கலாம்.

விரைவில் விஸ்வாசம் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

Kaala and Viswasam movies connected by Dialogue Writer Manikandan

kaala team

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் மம்மூட்டியின் *பேரன்பு*

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் மம்மூட்டியின் *பேரன்பு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peranbu Tamil movie will be screened in Shanghai International Film Festivalஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் PL. தேனப்பன் தயாரிப்பில் மெகாஸ்டார் மம்மூட்டி நடிக்கும் இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படம் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) நாளை (ஜூன் 16-ம் தேதி) திரையிடப்பட இருக்கிறது.

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கிகாரமும் வரவேற்ப்பும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் மூன்று காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

தயாரிப்பாளர் P L தேனப்பன், இயக்குநர் ராம் மற்றும் தங்கமீன்கள் சாதனா இத்திரைப்பட விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஷாங்காய் சென்றுள்ளனர்.

இதில் நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.

Peranbu Tamil movie will be screened in Shanghai International Film Festival

காட்சிகள் விபரம் பின்வருமாறு:

காட்சி 1
ஜூன் 16-ம் தேதி 03:45 p.m.
ஹால் 1, ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா

காட்சி 2
ஜூன் 17-ம் தேதி 03:45 p.m.
ஹால் 7, அரோரா இன்டர்நேஷனல் சினிமா

காட்சி 3
ஜூன் 19-ம் தேதி 08:45 p.m.
ஹால் 6, தி கிராண்ட் நியூ இன்டர்நேஷனல் சினிமா

More Articles
Follows