தொண்டன் விமர்சனம்

தொண்டன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, சுனைனா, விக்ராந்த், அர்த்தனா, தம்பிராமையா, சூரி, கஞ்சா கருப்பு, வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், சவுந்திர ராஜா மற்றும் பலர்.
இயக்கம் : சமுத்திரக்கனி
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவாளர் : ஏகாம்பரம், ரிச்சர்ட் நாதன்,
எடிட்டர்: ஏஎல் ரமேஷ்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : மணிகன்டன்

Thondan-Press-Meet-Stills

கதைக்களம்…

சமுத்திரக்கனி, விக்ராந்த், கஞ்சா கருப்பு ஆகியோர் ஆம்புலன்ஸில் பணி புரிகின்றனர்.

அதே கிராமத்தில் பணிபுரியும் ஆசிரியை சுனைனா, சமுத்திரக்கனியை காதலிக்க, சமுத்திரக்கனியின் தங்கை அர்த்தனா விக்ராந்தை காதலிக்கிறார்.

ஒரு முறை நாமோ நாராயணனின் தம்பி சௌந்தரராஜாவை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது, அவர் இறக்க நேரிடுகிறது.

முன்விரோதம் காரணமாக சமுத்திரக்கனி இப்படி செய்துவிட்டார், என நமோ நாராயணன் போலீசில் புகார் கொடுக்கிறார்.

மேலும், தான் கொல்லும் ஆட்களை எல்லாம், சமுத்திரக்கனி தன் ஆம்புலன்ஸில் வேகமாக கொண்டு சென்று காப்பாற்றும் சமுத்திரக்கனியின் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்.

அவரின் சதித்திட்டங்களை எப்படி ஹீரோ முறியடித்தார்? என்பதை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இந்த தொண்டன்.

thondan paiyan
கேரக்டர்கள்…

தனக்கு ஏற்ற மாதிரி ஒரு கதையை உருவாக்கி, அதில் தன்னை நன்றாகவே பொருத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.

தன்னால் முடிந்தவரை எவ்வளவு முடியுமோ அந்தளவு சமூக அவலங்களை சாடியிருக்கிறார். வாடிவாசல் முதல் நெடுவாசல் வரை அனைத்தையும் தொட்டு இருக்கிறார்.

80க்கும் மேற்பட்ட காளைகள் பெயரை சொல்லும் காட்சிகள் மெய்சிலிர்க்கும்.

சுனைனா அழகாக அம்சமாக வருகிறார். கருவில் இருக்கும் குழந்தை இறக்கும் காட்சியில் தாய்மைக்கான வலியை வெளிப்படுத்தியுள்ளார்.

அறிமுக நாயகி அர்த்தனா நிறையவே ஸ்கோர் செய்கிறார். தங்கை, காதலி, கல்லூரியில் படிக்கும் பெண் என அனைத்திலும் ஜொலிக்கிறார்.

இரண்டாவது ஹீரோவாக விக்ராந்த். தனக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார்.

ஆனால் முகத்தை எப்போதுமே சீரியஸாகவே வைத்திருக்கிறாரே? அது ஏன் ப்ரோ? கொஞ்சம் சிரிக்கலாமே பாஸ்.

இவர்களுடன் நமோ நாராயணன், கஞ்சா கருப்பு, ஞானசம்பந்தன், வேல ராமமூர்த்தி, சவுந்திர ராஜா, நஷாத் ஆகியோர் நிறைவாக செய்துள்ளனர்.

10 நிமிடங்கள் மட்டுமே வரும் சூரி மற்றும் தம்பி ராமையா ஆகியோர் சீரியஸ் படத்தை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைக்கின்றனர்.

Thondan-Movie-photos

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பெரும்பாலும் ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் பெரிதாக பாராட்டப்படும். இதில் பாடல்கள் நன்றாக இருந்தபோதிலும், அதனை விட பின்னணி இசையில் விளாசியிருக்கிறார்.

பின்னணி இசையில் ஆம்புலன்ஸ் சேஸிங் காட்சிகள் மிரட்டல்.

ஒளிப்பதிவாளர்கள் ஏகாம்பரம், ரிச்சர்ட் நாதன் ஆகியோர் படத்தை ரசிக்கும்படியாக காட்சிகளை அமைத்துள்ளனர்.

thondan movie still

இயக்குனர் பற்றிய அலசல்…

டைட்டில் போடும்போதே ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களுக்கு நன்றி சொல்லி படத்தை இனிதே ஆரம்பிக்கிறார் சமுத்திரக்கனி.

ஒரு ஆம்புலன்ஸ் வேலை என்றாலும், அதற்கும் நிறைய பயிற்சிகள், முதலுதவிகள் உள்ளது என்பதை காட்சிகளாக காட்டியிருப்பது அருமை.

நிறைய காட்சிகளில் ஓவர் அட்வைஸ் செய்கிறாரோ? என எண்ணத் தோன்றுகிறது. முக்கியமாக தன் தங்கையிடம் பிரச்சினை செய்த நண்பனிடம் அட்வைஸ் செய்யும் காட்சிகள்.

தங்கள் வகுப்பு மாணவியை ஒருவன் அடித்துவிட்டான் என்பதால் அந்த கல்லூரியே திரண்டு அவனை அடிப்பது, நிச்சயம் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ஈவ்டீசிங் செய்ய நினைப்பவர்களும் இனி பயப்படுவார்கள்.

கெட்ட இளைஞர்களிடம் பெண்கள் படும் அவஸ்தையை ஒரு கல்லூரி காட்சியில் அருமையாக காட்டியுள்ளார்.

தொண்டன்… சமூகத்திற்கு வேண்டியவன்

பிருந்தாவனம் விமர்சனம்

பிருந்தாவனம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அருள்நிதி, விவேக், தன்யா, எம்எஸ் பாஸ்கர், டவுட் செந்தில், எம்எஸ் பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், செல்முருகன் மற்றும் பலர்.
இயக்கம் : ராதாமோகன்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : எம்எஸ் விவேகானந்தன்
எடிட்டர்: டிஎஸ் ஜெய்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : ஷான் சுதர்சன்

arul nithi and tanya

கதைக்களம்…

நாயகன் அருள்நிதிக்கு பேச்சும் வராது. காதும் கேளாது.

இவர் ஊட்டியில் ஒரு சலூனில் வேலை செய்து வருகிறார். அங்கு அவருடன் டவுட் செந்திலும் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு அருகாமையில் ஒரு சூப்பர் மார்கெட்டை நடத்தி வருகிறார் நாயகி தன்யா.

ஒரு சூழ்நிலையில் தன் சொந்த வேலைக்காக ஊட்டி வரும் நடிகர் விவேக் (படத்திலும் நடிகர்தான்), அருள்நிதியை சந்திக்க, இருவரும் நட்புடன் பழகுகின்றனர்.

இந்நிலையில் விவேக் மூலம் தன் காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்த சொல்கிறார் தன்யா.

அருள்நிதிக்கும் தன்யாவை பிடித்திருந்தாலும் அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.

அவர் ஏன் மறுக்கிறார்? அதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கான விடையை படத்தின் கடைசி 20 நிமிடங்களில் சொல்கிறார் இயக்குனர் ராதா மோகன்.

tanya

கேரக்டர்கள்…

மௌன குரு படத்திற்கு பிறகு ஓர் அமைதியான நடிப்பை கொடுத்திருக்கிறார் அருள்நிதி.

வாய் பேச முடியாவிட்டாலும், தன் நடிப்பை பேச வைத்திருக்கிறார் அருள்நிதி.

துறுதுறுப்பான நடிப்பில் துள்ளலாக வருகிறார் தன்யா. தமிழக ரசிகர்களின் நெஞ்சத்தில் இனி இவருக்கும் ஒரு தனியிடம் உண்டு.

விவேக் பேக் டூ பார்ம். படம் முழுக்க தன் காமெடியை அள்ளித் தெளித்திருக்கிறார் விவேக்.

சினிமாவில் தான் விட்ட கேப்பில் சூரி, யோகி பாபு, ராஜேந்திரன் ஆகியோர் புகுந்திவிட்டதை ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்.

இவர்களுடன் டவுட் செந்தில், எம்எஸ் பாஸ்கர், செல் முருகன், கிருஷ்ணமூர்த்தி, அக்கா ஷர்மிளா ரோஷி ஆகியோர் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

brindhavanam stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் சந்திரசேகரின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் ரகம்.

ஊட்டி அழகை தன் கேமராவில் அழகாய் படம் பிடித்துள்ளார் எம்எஸ் விவேகானந்தன்.

சைகை மொழியால் படம் முழுவதும் உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

சிலருக்கு அனுதாபம், சிலருக்கு அன்பு எவ்வளவு முக்கியம் என்பதை தன் நாயகன் மூலம் காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார் டைரக்டர்.

ஹீரோ-ஹீரோயின் காதல் கைகூடி வரும்போது, படத்தை முடிக்காமல் நீட்டியிருப்பது கொஞ்சம் சலிப்பை தட்டுகிறது.

பிருந்தாவனம்… பிடிக்கும் வனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா, கோவை சரளா, தம்பி ராமையா, மதுமிளா, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, கௌசல்யா, மயில்சாமி, சரவண சுப்பையா மற்றும் பலர்.
இயக்கம் : ஐக்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : சத்யன் சூரியன்
எடிட்டர்: டிஎஸ் சுரேஷ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : ஏ பார் ஆப்பிள் சார்பாக இயக்குனர் அட்லி

Sangili-Bungili-Kadhava-Thorae jiiva and -Sri-Divya

கதைக்களம்…

வழக்கமா ஒரு பேய் கதையில் என்ன இருக்கும்..?

பேய் பங்களா அங்கே ஒரு குடும்பம். பேய்க்கு ஒரு ப்ளாஷ்பேக், பேயின் ஆசையின் நிறைவேற்ற சில நபர், சமாதானம் ஆன பேய் மறையும். இதானே.

இந்த கதையும் அப்படித்தான். இதில் சற்று வித்தியாசமாக உறவினர்கள் அடித்துக் கொள்ள கூடாது. குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேய் ஆசைப்படுகிறது.

அத்துடன் வாடகையில் வீட்டிலேயே வசிக்கும் ராதிகாவுக்காக சொந்த வீடு வாங்க ஆசைப்படும் மகன் ஜீவாவின் கேரக்டர் புதுசு.
sbkt team movie stills

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் ஜீவா. ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனாக வருகிறார். இவருடன் சூரி.

சந்தானத்திற்கு அடுத்து ஜீவாவிற்கு சூரியுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என நம்பலாம்.

ஸ்ரீதிவ்யா அழகில் ரசிக்க வைக்கிறார். நடிப்பில்…? அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை பாவம்.

பின்னணி இசையில் பயமுறுத்தும் படத்தில் சூரியின் காமெடி கொஞ்சம் ரசிக்கலாம்.

முக்கியமாக வாஷிங் மெஷின் காமெடி இனி பாப்புலராக பேசப்படும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ராதாரவிக்கு நிறைய காட்சிகள். இடைவேளைக்கு பிறகு அவரே பேயாட்சி நடத்துகிறார்.

ஒரு பாசமான அம்மாவாக ராதிகா அசத்துகிறார். தாய்மாமனாக வரும் இளவரசு நாயகனுக்கு கைகொடுக்கிறார்.

sbkt kovai sarala radhika

தம்பி ராமையா, தேவதர்ஷினியின் ரொமான்ஸ் காட்சிகள் காம நெடி.

மதுமிளா, கௌசல்யா, மயில்சாமி, சரவண சுப்பையா ஆகியோரின் கேரக்டர்களில் அழுத்தமில்லை.

இவர்களைத் தவிர பேய் படத்தில் யாரு எல்லாம் இருப்பாங்க..?

கோவை சரளா,  தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரன் தானே.. அவங்க எல்லாம் இருக்காங்க.. நல்ல வேளை இந்த டெம்ப்ளேட்டில் மனோபாலா இல்லை.

sbkt sri divya

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம். இந்த இசையை பேய் வரும் பயத்தை உண்டாக்குகிறது.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ஓகே. ஒரு பங்களாவை சுற்றியே காட்சிகள் நகருவதால் சில காட்சிகள் போரடிக்கிறது.

முதல் பாதி ரசிக்க வைக்கும் அளவுக்கு இரண்டாம் பாதி கைகொடுக்கவில்லை.

புதிய கதையுடன் டைரக்டர் ஐக் களம் இறங்கியிருந்தால், இன்னும் ஆச்சரியப்பட்டு இருக்கலாம்.

சங்கிலி புங்கிலி கதவ தொற… திறந்தாலும் பயமில்லை

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்…. உதயநிதியின் உத்தரவை ஏற்கிறோம்.

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்…. உதயநிதியின் உத்தரவை ஏற்கிறோம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : உதயநிதி, ரெஜினா காஸன்ட்ரா, ஸ்ருஷ்டி, சூரி, யோகிபாபு, மதுமிதா, லிவிஸ்டன், ரவிமரியா, ரோபோ சங்கர், மன்சூர் அலிகான், சாம்ஸ் மற்றும் பலர்.
இயக்கம் : எழில
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : கே.ஜி.வெங்கடேஷ்
எடிட்டர்: ஆனந்த் லிங்ககுமார்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : ரெட் ஜெயண்ட் மூவிஸ்


விமர்சனம்…

உதயநிதியின் உத்தரவை ஏற்கிறோம்.

(கீழே உள்ள லிங்கை பார்த்தால் இதற்கான அர்த்தம் புரியும்)

https://www.filmistreet.com/cinema-news/udhayanithi-request-regarding-movie-reviews-at-saravanan-irukka-bayamaen-press-meet/

என்ன கொடுமை சரவணா இது…?

விமர்சனம் எழுதி உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

எய்தவன் விமர்சனம்

எய்தவன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கலையரசன், சாட்னா டைட்டஸ், வேலராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், ராஜ்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : சக்தி ராஜசேகரன்
இசை : பார்த்தவ் பர்கோ
ஒளிப்பதிவாளர் : பிரேம்குமார்
எடிட்டர்: ஜேஜே அலென்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : சுதாகரன்

???????????????????????????????????????????????????

கதைக்களம்…

நீட் தேர்வு (மெடிக்கல் தேர்வு) நடைபெற்ற சமயத்தில் வந்திருக்கும் சரியான படம் இது.

கலையரசனின் தங்கை +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுகிறார். சிறுவயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

கவர்மெண்ட் காலேஜில் சீட் கிடைக்காத காரணத்தினால் தனியார் காலேஜில் சேரும் சூழ்நிலை உருவாகிறது.

இதற்காக :ரூ. 56 லட்சம் பணத்தை லஞ்சமாக கொடுத்து ஒரு காலேஜில் சேர்கிறார்.

அச்சமயம் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்கிறது அரசு.

இதனால் வேறு காலேஜில் தன் தங்கையை சேர்க்க நினைக்கும் கலையரசன், பணத்தை திருப்பி கேட்கிறார்.

நீங்கள் புரோக்கரிடம் லஞ்சமாக கொடுத்த பணத்திற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று கைவிரிக்கிறது நிர்வாகம்.

மேலும் அதற்கான ஆதாரங்களையும் மறைக்க முயற்சிக்கிறது.

இந்நிலையில் ஒரு விபத்தில் தங்கையும் கொல்லப்படுகிறாள்.

இதனால் வெகுண்டெழும் கலையரசன் என்ன செய்தார்? எப்படி பணத்தை பெற்றார்? எப்படி ஆதாரங்களை நிரூபித்தார்? என்பதே இந்த எய்தவன்.

????????????????????????????

கேரக்டர்கள்…

ஒரு சமூகத்திற்கு தேவையான வலுவான கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதற்காகவே கலையரசனை பாராட்டலாம்.

ஒரு யதார்த்த இளைஞனாகவும், பாசமுள்ள அண்ணனாகவும், கல்வி வியாபாரிகளை ஒடுக்கும் பொறுப்புள்ள மனிதனாகவும் கலக்கியிருக்கிறார் கலையரசன்.

காவல் அதிகாரியாக நாயகி சாட்னா டைட்டஸ். அழகாக வந்து போகிறார் டூயட் பாடுகிறார்.

ஸ்மார்ட் ப்ளஸ் ஸ்டைலிஷ் வில்லன் அசத்தல். கல்வியை வியாபாரம் ஆக்குவதிலும் அதில் வரும் பிரச்சினைகளை சமாளிப்பதிலும் கெத்து காட்டியிருக்கிறார்.

கெட்டவனாக இருந்து நல்லவனாக முற்படும் கேரக்டரில் ஆடுகளம் நரேன் ரசிக்க வைக்கிறார்.

தர்மன் கேரக்டரில் வரும் நபர் நினைவில் நிற்கிறார்.

kalai yeidhavan

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பார்த்தவ் பர்கோ இசையில் ஒலிக்கும் பின்னணி இசை படத்தின் காட்சிகளை பேச வைக்கிறது.

கலையரசன் ஒவ்வொரு திட்டமாக தீட்டி செயல்படுத்தும்போது வரும் பின்னணி இசை படத்தை ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் கேமரா கைவண்ணம் படத்திற்கு ப்ளஸ்.

உயிரை கெடுக்கும் டாஸ்மாக் தெருவுக்கு தெரு இருக்கிறது. உயிரை காக்கும் படிப்பை சொல்லிக் கொடுக்கும் மெடிக்கல் காலேஜ் மாவட்டத்திற்கு ஒன்றுதான் உள்ளது என்ற வசனம் நிச்சயம் அரசுக்கு சவுக்கடி.

ஒரு கமர்ஷியல் படத்தில் நல்ல மெசேஜ் சொல்லியிருக்கும் இயக்குனர் சக்தி ராஜசேகரனை நன்றாகவே பாராட்டலாம்.

எய்தவன்… சமூகத்திற்கு ஏற்றவன்

லென்ஸ் விமர்சனம்

லென்ஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆனந்த்சாமி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், அஷ்வதிலால், மிஷா கோஷல், ராஜாகிருஷணன் மற்றும் பலர்.
இயக்கம் : ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவாளர் : எஸ் ஆர் கதிர்
எடிட்டர்: ஜெய்னுல் அப்தீன், காஜின், வெங்கடேஷ்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : மினி ஸ்டூடியோஸ் சிந்து ஜெயபிரகாஷ்

கதைக்களம்…

ஆன்லைன் செக்ஸ் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும்தான் இப்படத்தின் கதை.

சமூக வலைத்தளத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக் கொண்ட ஒரு பெண்ணின் உண்மைச் சம்பவன்மான் இந்த படம்.

ஜெயப்பிரகாஷ் தன் மனைவி மிஷா கோஷல் உடன் ஓர் அழகான ப்ளாட்டில் வசித்துவருகிறார்.

ஆன்லைன் ஜாப் என்று கூறிக் கொண்டு பூட்டிய அறையில் பெண்களிடம் சாட் செய்து, ஆன்லைனில் எல்லாம் லைவ்வாக செய்வதே இவர் வேலை.

ஒருமுறை நிக்கி என்ற பெண்னுடன் சாட் செய்யும்போது பின்னர்தான் அவர் ஆண் என்று தெரிய வருகிறது. (ஆனந்த்சாமி)

அதிலிருந்து விலக நினைக்கும்போது, ஜெயப்பிரகாஷ் மற்ற பெண்களுடன் சாட் செய்த வீடியோவை காட்டி ஒரு நிபந்தனையும் வைக்கிறார்.

தான் தற்கொலை செய்வதை நீ நேரில் பார்க்க வேண்டும் என்று உன் மனைவியை என்னுடன்தான் இருக்கிறாள் என்று வீடியோவை காட்டுகிறார்.

அவர் எதற்காக ,இவர் மனைவியை கடத்த வேண்டும், ஏன் தற்கொலை செய்கிறார்? என்ற பல கேள்விகளுக்கு இதன் க்ளைமாக்ஸ விடை சொல்லும்.

C_Wt1XpXkAIZvvF

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் இயக்குனர் தயாரிப்பாளர் எல்லாம் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்தான்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த இவர், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராகி இருக்கிறார்.

அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஆன்லைனில் இதுபோன்று செக்ஸ் செய்பவர்கள், நிறைய வீடியோக்களையும் மற்றவர்களுக்காக அப்லோட் செய்கின்றனர்.

அவர்கள் நம் உறவினராக இருக்கலாம். நண்பராக இருக்கலாம். வீட்டில் வேலை செய்பவர்களாக இருக்கலாம்.

வீட்டின் எந்த மூலையிலும் அவர்கள் கேமராவை ஒளித்துவைத்து ஆபாச வீடியோவை எடுத்து அதை பார்த்து மற்றவர்களிடம் பகிரலாம் ஆகியவற்றை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

C_SLT9mV0AAVFsB

சொல்லப்போனால் ஆன்லைன் பிரியர்களுக்கு ஓர் அலர்ட் மெசேஜ் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஆனந்த்சாமி நிச்சயம் நம்மை கவருவார். தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதை எவனோ வீடியோ எடுத்தது மூலம் இவரின் வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லியுள்ளார்.

ஏஞ்சல் கேரக்டரில் அஸ்வதிலால் நடித்துள்ளார். வாய் பேசமுடியாத இவரின் வீடியோ இண்டர்நெட்டில் வெளியானதால், படும் அவஸ்தையை தன் நடிப்பில் உணர்த்தியுள்ளார்.

தினம் தினம் கோடி கண்கள் தன்னை கற்பழிப்பது போல் உள்ளது என எழுதிக் காண்பிக்கும்போது ஒவ்வொரு மனதும் கரையும்.

கணவன் எப்போதும் ஆன்லைனில் இருக்கிறாரே? என ஏங்கும் பெண்ணாக மிஷா கோஷல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

படத்தில் ஒரே பாடல்தான் நிச்சயம் ரசிக்க வைக்கும். பின்னணி இசையிலும் ஜிவி பிரகாஷ் மிரட்டியிருக்கிறார்.

கம்ப்யூட்டர் ஆன்லைன் என்ற ஒரே வட்டத்திற்குள் கதை சுழன்றாலும் அதையும் அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர்.

இதுபோன்ற விழிப்புணர்வு படத்தை ரிலீஸ் செய்திருக்கும் வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

லென்ஸ்… ஆன்லைன் வயலென்ஸ்

More Articles
Follows