லத்தி விமர்சனம்.. POWER OF POLICE

லத்தி விமர்சனம்.. POWER OF POLICE

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

காவல்துறையில் கண்ணியமிக்க கான்ஸ்டபிள் ஒருவரின் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை.

கதைக்களம்…

தன்னை ஒருவன் காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்வதாக ஒரு பெண் புகார் அளிக்கிறார். பையன் வீட்டில் அவன் அப்பாவை எச்சரிக்கிறார் கான்ஸ்டபிள் விஷால்.

அடுத்த நாள் அந்த பெண் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அந்த பையன்தான் காரணம் என விஷால் தவறாக நினைத்து அடித்து துவைக்கிறார். இதனால் விஷாலை 1 வருடம் இடைக்கால நீக்கம் செய்கிறது காவல்துறை.

மற்றொரு புறம்… தாதா சுறா மகன் ரமணாவை தன் லத்தி கொண்டு தாக்குகிறார் விஷால்.. இதனால் போலீஸ் & தாதா மோதல் வெடிக்கிறது.

ஒரு கான்ஸ்டபிள் எப்படி ஒரு தாதாவை எதிர்த்து நிற்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கம்போல ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் விஷால். அவர் மட்டுமே படத்தை தாங்கி நிற்கிறார். பொறுப்புள்ள அப்பா.. நேர்மையான போலீஸ் என வெளுத்து கட்டியிருக்கிறார்.

மாஸ் என தனியாக காட்டாமல் காட்சியுடன் ஒன்றி போகிறார். ஆனால் நிறைய லாஜிக் மீறல் உள்ளது.

கதையின்்நாயகியாக சுனைனா.. அழகு நிறைந்த மனைவி.. பொறுப்பான அம்மா என மனதில் நிறைகிறார்.

உயர்அதிகாரி பிரபு நடிப்பில் பிரகாசிக்கிறார்.. போலீஸ் முனீஸ்காந்த் & வெங்கடேஷ் கேரக்டரும் சிறப்பு.

வில்லனாக வரும் வெள்ளையன் ரமணாவின் நடிப்பு மிரட்டல்…. அவரது அறிமுகமே அசத்தல்..

விஷாலின் குழந்தையாக நடித்த சிறுவனும் சிறப்பு.. அரசியல்வாதியாக ராஜ்கபூர் & டி.சிவா ஆகியோர் நடிப்பில் நேர்த்தி.

டெக்னீஷியன்கள்…

ஒரு மாஸான ஆக்சன் ஹீரோவை சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் நடிக்க வைத்ததே இயக்குனரின் சுதந்திரம்..

திரைக்கதையில் கையாண்ட விதம் சிறப்பு

ஆக்சனில் விஷால் அதிக ரிஸ்க் எடுப்பவர்.. அதற்கு ஏற்ப ஸ்டண்ட் காட்சிகளை கொடுத்த பீட்டர் ஹெயின் மாஸ்டருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து கொடுக்கலாம்..

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் ஓகே ரகம்… பின்னணி இசை படத்திற்கு பலம். அவிக் பேனர்ஜி எடிட்டிங் ப்ளஸ்… ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம்.

இயக்குனர் வினோத் குமாரின் மேக்கிங் ரசிகர்களுக்கு புதுசு… சில லாஜக் குறைகளை கவனித்திருக்கலாம்..

ஆக லத்தி சார்ஜ்… POWER OF POLICE

Laththi movie review and rating in tamil

FIRST ON NET Project C – Chapter 2.. Indias first Sophomore Film

FIRST ON NET Project C – Chapter 2.. Indias first Sophomore Film

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு பணக்கார வீடு.. அந்த வீட்டில் வசிக்கும் பெரியவருக்கு பக்கவாதம் வந்ததால் முடங்கி கிடக்கிறார். இவருக்கு மனைவி இல்லை.. இவரது மகன் வெளிநாட்டில் வசிக்கிறார்.. இவர்கள் வீடியோ காலில் பேசுவது வழக்கம்..

பெரியவரைப் பார்த்துக் கொள்ள அந்த வீட்டில் ஒரு (நாயகி வசுதா) பெண் வேலை செய்கிறார்.. இவரின் வேலை சமைப்பது.. துவைப்பது..

அவரைப் பார்த்துக் கொள்ள ஒரு மற்றொரு ஆண் (நாயகன் ஸ்ரீ) வருகிறார். இவருக்கு படுத்த படுக்கையாக பேச முடியாமல் தவிக்கும் அந்த பெரியவர் ஒரு பிரபல மருந்தை கண்டுபிடித்துள்ளார் என்பதை தெரிய வருகிறது..

அந்த மாத்திரையை சாப்பிட்டால் 60 -70 வயது நபர் 40 வயது போல எனர்ஜி உள்ளவராக மாறிவிடுவார். 20 வயது நபருக்கு 2 மடங்கு எனர்ஜி கிடைக்கும் என்பதால் டிமாண்ட் ஏற்படுகிறது.

இதனையறிந்த வீட்டில் உள்ளவர்கள் என்ன திட்டம் போட்டார்கள்? இந்த ரகசியம் அறிந்த வெளியில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள்? அதுவே ப்ராஜெக்ட் சி.. படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஸ்ரீ & வசுதா ரொமான்ஸ் செம கிக்.. வசுதாவின் வளைவு நெளிவு இளசுக்கு மஜா. ஆனால் இவர் திடீரென ஆக்சன் செய்வது வேற லெவல் ட்விஸ்ட்..

சாம்ஸ்.. ராம்ஜீ… பாலாஜி வெங்கட்ராமன் ஆகியோரின் கேரக்டர் கச்சிதம்..

டெக்னீஷியன்கள்…

வித்தியாசமான கதைகளத்தோடு ஒரு வீட்டில் முழு படத்தையும் படமாக்கி உள்ளனர். முக்கியமாக போரடிக்காமல் முடித்திருப்பது சிறப்பு.

Sophomore Feature Film என்றால் ஒரு படத்திற்கு முன் கதையும் பின் கதையும் இருக்கும். இந்த கதை Chapter 2.. எனவே இந்த படத்திற்கு முதல் பாகமும் வரும் 3வது பாகமும் விரைவில் வரும்..

இயக்குனர் VNO… இசை – சிபு சுகுமாறன்… ஒளிப்பதிவு.. – சதீஷ் ஆனந்தன்.. எடிட்டர் – தினேஷ் காந்தி.. ஆகியோரின் பணிகளில் நேர்த்தி.. படத்தின் முடிவு எதிர்பாராத ஒன்று. எனவே அடுத்த பாகத்தை பார்க்கும் ஆவல் தூண்டுகிறது.

படத்தின் நாயகன் ஸ்ரீ- தான் படத்தின் தயாரிப்பாளர்.. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஜெனீஷ் பெற்று இருக்கிறார்.

? *filmistreet LIVE*?

இன்னைக்கு Watch தான் ட்ரெண்ட்; தமிழக அரசியலை தாக்கிய சாம்ஸ் l Chaams Project C Chapter 2 Sophomore l filmistreet ?? https://youtube.com/shorts/rnH2QMnsEj4?feature=share

? *filmistreet LIVE* ?

Actor Distributor Jenish talks about India’s 1st Sophomore Feature Film l PROJECT C Chapter 2 Chaams l filmistreet ❤‍?https://youtube.com/shorts/n9a85lAfZFg?feature=share

FIRST ON NET என்ஜாய் விமர்சனம்..; ENJOY – My Body My Rules

FIRST ON NET என்ஜாய் விமர்சனம்..; ENJOY – My Body My Rules

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

உடுத்தும் உடை.. வைத்திருக்கும் செல்போன்.. இவற்றில் எல்லாம் பாகுபாடு பார்ப்பதால் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றனர் கல்லூரி மாணவிகள்.

இதனால் தடம் மாறி பார்ட் டைம் விபச்சாரத்திற்கு செல்கின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் ஒன்லைன்..

LNH கிரியேசன், K லட்சுமி நாராயணன் தயாரிப்பில் காம நெடி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் ‘என்ஜாய்’.

இந்தப்படம் டிசம்பர் 23ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

கதைக்களம்…

ஒரு கல்லூரி.. அதனை சார்ந்த பெண்கள் விடுதி.. இதில் தங்கும் பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர்.

சில ஏழை மாணவிகளும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரவு நேர பார்ட்டிக்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். இதற்கு பணத்தேவை இருப்பதால் ‘என் உடம்பு என் உரிமை..’ என்ற தத்துவங்களை பேசி விபச்சாரத்துக்கு செல்கின்றனர்..

இது ஒரு புறம் இருக்க.. மற்றொருபுறம் பெண்களுடன் ஜாலியாக இருக்க கொடைக்கானல் வருகின்றனர் மூன்று இளைஞர்கள்.. இவர்கள் இந்த மூன்று பெண்களையும் சந்திக்கின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே இந்த ‘என்ஜாய்’ படம்..

கேரக்டர்கள்…

மதன்குமார்
டான்சர் விக்னேஷ்
ஹரீஸ்குமார்
நிரஞ்சனா
ஜீ,வி அபர்ணா,
சாய் தன்யா
ஹாசின்
சாருமிசா.. ஆகியோர் நடித்துள்ளனர்.

இளசுகளின் உணர்வுகளை அப்படியே டபுள் மீனிங்கல் பேசி நடித்திருக்கின்றனர்.. சில நேரங்களில் செயற்கையாகவே உணர்வுகளை காட்டி இருக்கின்றனர்.

பல காட்சிகள் ஆபாசத்திற்காக திணிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.. முக்கியமாக ஷாலு ஷம்மு (நடிகை அல்ல) ஆன்ட்டி வீட்டில் நடைபெறும் காட்சிகள்..

முக்கியமாக சப்பாத்தி மாவு பிசையனும்.. உருட்டனும் அப்படியே போடணும்.. என்ற டயலாக்குகள் காமத்தின் உச்சம்.. மேலும் திருச்சி சாதனா காட்சிகள் படத்தின் கவர்ச்சி கலகலப்புக்கு உதவியுள்ளன.

லேடிஸ் ஹாஸ்டல் செக்யூரிட்டியிடம் பேசும்போது.. என்ன தாத்தா ரொம்ப தொங்கிடுச்சு என்ற டயலாக்குகள்.. சீலிங் ஃபேன் மாட்டிவிட்டு கீழே இறங்கும் போது மணி அடிக்கும் ஓசை ஆகியவை காம நெடி..

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு – KN அக்பர்.. இசை – KN ரயான் .. எடிட்டர் – மணி குமரன்… பின்னணி இசை- சபேஷ்- முரளி… பாடல்கள் – விவேகா, உமாதேவி… இவர்களின் பங்களிப்பு கச்சிதம்.

கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் ஆபாசம் என கொடுத்து ஒரு விழிப்புணர்வு கதையை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் பெருமாள் சாமி..

ஹர ஹர மகாதேவகி.. இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற பட சாயல்கள் அவ்வப்போது படத்தில் தெரிகிறது..

ஆக சென்சாரில் ஏ சர்டிபிகேட் பெற்ற இந்த படம் இளசுகளை கண்டிப்பாக சூடேற்றும்..

ஆக இந்த என்ஜாய்.. மார்கழியில் மஜா..

FIRST ON NET கனெக்ட் CONNECT விமர்சனம் 2.75/5.; லாக்டவுன் பேய்

FIRST ON NET கனெக்ட் CONNECT விமர்சனம் 2.75/5.; லாக்டவுன் பேய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கொரோனா லாக்டவுனில் தன் ஒரே மகளுடன் தன் வீட்டில் மாட்டிக்கொள்கிறார் நயன்தாரா. அப்போது அந்த வீட்டில் அமானுஷ்ய சக்தி உள்ளதை வீடியோ காலில் அறிகிறார் நயன்தாராவின் தந்தை சத்யராஜ். லாக்டவுனில் பேயுடன் மாட்டிக்கொண்ட தன் மகளையும் தன் பேத்தியையும் சத்யராஜ் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

கதைக்களம்…

சத்யராஜின் மகள் நயன்தாரா. இவரின் கணவர் வினய். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் ஹனியா நஃபீசா.

வினய் ஒரு டாக்டர். கொரோனா காலத்தில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்ததில் இவருக்கும் கொரோனா வருகிறது. ஒரு கட்டத்தில் இவர் மரணம் அடைகிறார்.

சத்யராஜ் வேறு ஒரு இடத்தில் வசிக்க நயன்தாராவும் அவர் மகளும் ஒரு வீட்டில் வசிக்கின்றனர். ஒரு நாள் தன் தந்தையின் ஆவியுடன் பேச நினைக்கிறார் நயன்தாராவின் மகள்.

அவர் பேசும்போது ஒரு கெட்ட ஆவி அவருக்குள் நுழைகிறது.

இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் நயன்தாரா. வெளியேவும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நயன்தாராவையும் தன் பேத்தியையும் வேறு ஒரு இடத்தில் இருக்கும் சத்யராஜ் எப்படி காப்பாற்றினார்? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சத்யராஜுக்கு ஒரு வீடு.. நயன்தாராவுக்கு ஒரு வீடு.. சர்ச் பாதிரியாராக வரும் அனுபம் கேருக்கு ஒரு வீடு.. ஆக மொத்தம் மூன்று வீடுகளில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்துள்ளனர்.

வீடியோ காலில் பேசுவது போல கேமராவை செட்டிங் செய்துள்ளனர்.. எனவே கேமராவை அங்கேயும் இங்கேயும் என ஆட்டாமல் படத்தை முடித்துள்ளனர்.

நயன்தாராவின் நடிப்பு பாராட்டுக்குரியது. பாசமான அம்மாவாகவும் பொறுப்புள்ள மகளாகவும் நடித்திருக்கிறார்.

சத்யராஜ் தன் அனுபவ நடிப்பை நிறைய இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு நாள் இவர் காரில் பயணிப்பது போல காட்சி உள்ளது. அப்போது கூட டிரைவரை கூட காட்டாமல் அதைக் கூட வீடியோ காலில் மட்டுமே முடித்து வைத்துள்ளனர்.. பட்ஜெட் பிரச்சினையா என்று தெரியவில்லை?

பேய் ஓட்டும் பாதிரியாராக வரும் அனுபம் கெர் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். வினய் கொஞ்சம் நேரமே வருகிறார்.

நயன்தாராவின் மகளாக நடித்துள்ளவர் ஹனியா நஃபீசா சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

டெக்னீஷியன்கள்..

அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கி இருக்கிறார். லாக் டவுனில் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதை வைத்தே ஒரு கதையை முடித்து இருக்கிறார். ஆனால் அவர் வேறு எதையும் காட்டவில்லை.

படத்திற்கு மிகப்பெரிய பலம் பின்னணி இசை.. பல இடங்களில் பேயை போல நம்மை பயமுறுத்தி வைக்கிறார் ப்ரித்வீ் சந்திரசேகர். படத்தின் ஒளிப்பதிவு முக்கால் பகுதி இருட்டிலே மூழ்கிக் கிடக்கிறது.

100 நிமிடங்களுக்குள் படம் முடிவது படத்தின் பிளஸ்..

ஆக இந்த லாக்டவுன் பேயை பெண்களும் குழந்தைகளும் பயத்துடன் ரசிப்பார்கள்.. அவர்களுக்கு நிச்சயம் ‘கனெக்ட்’ ஆகும்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த படம் ‘கனெக்ட்’.

டிசம்பர் 22 ஆம் தேதி ‘கனெக்ட்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Movie Name: Connect
Production House: Rowdy Pictures

Cast:
Nayanthara as Susan
Sathyaraj as Arthur Samuel
Anupam Kher as Father Augustine
Vinay as Joseph Benoy
Haniya Nafisa as Anna

Crew:
Director: Ashwin Saravanan
Writer: Ashwin Saravanan & Kaavya Ramkumar
DOP: Manikandan Krishnamachari
Editor: Richard Kevin
Music Director: Prithvi Chandrasekhar
Art director: Siva Sankar & Sreeraman
Stunts: ‘Real’ Sathish
Costume Designer: Anu Vardhan & Kavitha J
PRO – D’One
Executive Producer: Ra Sibi Marappan
Associate Producer: Gubendiran VK
Co Producer: Mayilvaganan KS
Production Company: Rowdy Pictures Pvt Ltd
Produced By: Vignesh Shivan

‘கட்சிக்காரன்’ விமர்சனம்.; தலைவனை தட்டிக் கேட்கும் தொண்டன்

‘கட்சிக்காரன்’ விமர்சனம்.; தலைவனை தட்டிக் கேட்கும் தொண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

தன் குடும்பத்தைக் கூட கவனிக்காது கட்சிக்காக உழைக்கும் ஒரு உண்மையான தொண்டன்… ஊழல் செய்து உண்மையான தொண்டனை கூட விரட்டியடிக்கும் தலைவன். இவர்களுக்கு நடைபெறும் மோதலே கதை.

கதைக்களம்…

கட்சி கட்சி கட்சி அதுதான் என் உயிர் மூச்சு என்று வாழ்கிறார் கதாநாயகன்.. திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது கூட இன்ன ஜாதி என்ன மதம் என்று கேட்காமல் அவர் போடும் ஒரே கண்டிஷன் தன் கட்சியில் தன் மனைவி இணைய வேண்டும் என்பதுதான். அப்படி ஒரு விசுவாச தொண்டனாக இருக்கிறார் விஜித் சரவணன்.

தன் தலைவன் தான் எல்லாமே.. அவரால் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கும் என நம்புகிறார்.

ஆனால் கட்சித் தலைவனோ தன்னுடைய சுயலாபத்திற்காக மறைமுக அனைத்தையும் செய்கிறார். கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது முதல் போஸ்டர் ஒட்டுவது என அனைத்தையும் தொண்டன் செய்கிறார். பணம் இல்லாத போது தன் மனைவி தாலி வீட்டை கூட அடமானம் வைக்கிறார் தொண்டர்

ஒரு கட்டத்தில் தனக்கு கவுன்சிலர் போஸ்டிங் கேட்கும்போது தான் தன் தலைவரின் உண்மை முகம் தெரிய வருகிறது.

இதனால் வெறுத்துப் போகும் தொண்டன் தான் செலவு செய்த பணத்தை எல்லாம் திருப்பி கேட்கிறார்.

ஒரு அரசியல்வாதியிடம் கொடுக்கப்பட்ட பணம் எப்படி கிடைக்கும் என மிரட்டுகிறான் தலைவன்.. என்னை போல பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீ பணத்தை திருப்பி கொடுத்து ஆக வேண்டும் என மல்லுக்கட்டி நிற்கிறார் நாயகன்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

கேரக்டர்கள்…

நாயகனாக நடித்துள்ள விஜித் சரவணன். தொண்டன் கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறார்.. கட்சிக்காக அனைத்தையும் இழந்து நிற்கும் போது நமக்கு அவர் மீது பரிதாபம் வருகிறது.

ஒரு கட்டத்தில் தேர்தலில் நிற்க ரெடியாகும் போது.. எதிர்க்கட்சி வேட்பாளரிடம் அவர் பேசும் ஒரு டயலாக் பாராட்டுக்குரியது. நீங்களும் ஓட்டுக்கு பணம் கொடுக்காதீங்க.. நானும் பணம் கொடுக்க மாட்டேன்.. நாம ரெண்டு பேரும் பணம் கொடுக்கலைன்னாலும் மக்கள் கண்டிப்பா வந்து ஓட்டு போடுவாங்க.

நீங்க நல்லவன்னு நினைச்சா உங்களுக்கு ஓட்டு போடட்டும். நான் நல்லவன் என்று நினைச்சா எனக்கு ஓட்டு போடட்டும்.” என்ற வசனம் பேசும் அந்த காட்சி ஓட்டுக்கு பணம் கொடுப்பவனுக்கும் வாங்குபவனுக்கும் செருப்படி.

அவரது மனைவி அஞ்சலியாக ஸ்வேதா டாரதி. நடுத்தர மக்கள் குடும்ப போராட்டத்தை காட்டுயிருகிறார். கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தி.

மக்கள் கட்சித் தலைவராக சிவ சேனாதிபதி.. முதலில் நல்லவன் போல் நடித்து கட்சி தொண்டனையும் ரசிகரையும் ஏமாற்றி வைக்கிறார். பின்னர் தான் அவரது சுயரூபம் தெரிய வரும்போது ஆஹா இவன் பக்கா அரசியல்வாதி என்ற எண்ணம் வருகிறது.

அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவரது பிளாஷ்பேக் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாயகனின் நண்பனாக வரும் தெனாலிக்கு சிறப்பான வேடம்.. எவன்னய்யா.. மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சான்? ஒருத்தர் கணக்கு காட்டலைன்னு கட்சி ஆரம்பிச்சாரு.. ஒருத்தரு கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்க கட்சி ஆரம்பிச்சாரு. ஒருத்தர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர்றாரு.. ஒருத்தர் ஜாதிக்காக கட்சி ஆரம்பிக்கிறார்.. இப்படி எல்லாருமே தங்களுடைய சுயலாபத்துக்காக தான் ஆரம்பிச்சாங்க என இவர் பேசும் வசனங்கள் சிறப்பு

இதில் சின்ன சின்ன நடிகர்கள் நடித்திருப்பதால் பெரிதாக கவனம் பெறவில்லை எனலாம்.. இதையே பெரிய நட்சத்திரங்கள் நடித்து இந்த வசனங்கள் பேசி இருந்தால் படத்தின் வெற்றி மாஸ் காட்டி இருக்கும்.

டெக்னீஷியன்கள்…

எத்தனை அரசியல் படங்கள் வந்திருந்தாலும் கட்சித் தலைவன் பற்றிய கேரக்டர் தான் பெரிதாக பேசப்படும்.. ஆனால் இந்த படத்தில் ஒரு தொண்டனின் வலி காட்டப்படுகிறது.. அதை மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் இந்த படத்தை பார்க்கும் தொண்டர்கள் திருந்தினால் தலைவனும் திருந்துவான் இந்த நாடும் உருப்படும்.

இரண்டு பாடல் காட்சிகள் ‘செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே’ என்ற டூயட் பாடல் கிராமத்து அழகைக் கண் முன்னே கொண்டு வருகிறது.

இன்னொரு பாடல் ‘கட்சிக்காரன் கட்சிக்காரன் ‘ என்ற பாடல் இவன் கேள்வி கேட்கும் கட்சிக்காரன் என கூறுகிறது.

சில காட்சிகள் நாடகத்தனமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.. முக்கியமாக கட்சிக் கூட்டம்.. மேடை அமைப்பு என காட்டப்படும் காட்சிகள் சின்ன பட்ஜெட் படம் என்பதை உறுதி செய்கிறது.

காட்சிகளில் அழுத்தம் சேர்த்து எடுத்திருந்தால் முழுத்தகுதி உள்ள திரைப்படமாக அனைவரையும் கவர்ந்திருக்கும்.

ஆக.. கட்சிக்காரன்… தலைவனை தகர்க்கும் தொண்டன்

இப்படத்தில் விஜித் சரவணன் ,ஸ்வேதா டாரதி, அப்புக்குட்டி, சிவ சேனாதிபதி, ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ப.ஐயப்பன் இயக்கியுள்ளார். சரவணன் செல்வராஜ் தயாரித்துள்ளார்.இணை தயாரிப்பு மலர்க்கொடி முருகன்.. மதன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரோஷன் ஜோசப், சி.எம். மகேந்திரா இசை அமைத்துள்ளனர்.

விஜயானந்த் விமர்சனம் 4/5.; உழைப்பின் முகவரி

விஜயானந்த் விமர்சனம் 4/5.; உழைப்பின் முகவரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய் சங்கேஷ்வர் என்ற கர்நாடக தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு இது. 1996ல் கர்நாடகாவில் முதல் பாஜக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.

ஒருவன் முன்னேற நினைத்தால்… விடாமல் முயற்சித்தால்… தோல்வி அடைந்தாலும் முயற்சித்துக் கொண்டே இருந்தால் அவன் வாழ்வில் சிகரத்தை தொடுவான்… உண்மையான உழைப்பே உயர்வு தரும்.. என்பதே ஒன்லைன்..

நாயகன் விஜய்யின் அப்பா நடித்திருக்கிறார் ஆனந்த் நாக்…

கதைக்களம்…

அப்பா வழியில் குடும்பத் தொழிலான பிரின்டிங் பிரஸ்சில் பணிபுரிகிறார் ஹீரோ விஜய .

ஒரு கட்டத்தில் லாரி வாங்கி அதை ஓட்டி வியாபாரம் செய்ய நினைக்கிறார். முதலில் அந்த குடும்பம் மறுக்கவே போராடி கடன் வாங்கி லாரி வாங்கி ஓட்டுகிறார்.

இவருக்கு போட்டியாக பிரபல நிறுவனம் பல தடங்கல்களை கொடுக்கிறது. அதனை எல்லாம் முறியடித்து லாரிகளை நிறைய வாங்கி முன்னணி தொழில் அதிபராக உயர்ந்து நிற்கிறார்.

ஆனால் இவரது வியாபாரத்தை சாய்க்க சில மீடியாக்கள் துணை போகின்றன. எனவே அதனை முறியடிக்க தினசரி நாளிதழ் தொடங்குகிறார்.

அதுவும் ஒரு வருடத்திற்குள் பல லட்சம் காப்பி நாளிதழ்களை விநியோகம் செய்வேன் என சவால் விடுகிறார்..

அத்துடன் ஒரு ரூபாயில் நாளிதழை விற்று அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

இதிலும் சிலர் பிரச்சினை உருவாக விஜய் என்ன செய்தார்? அவர் நினைத்தப்படி சாதித்தாரா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைதான் இந்த விஜயானந்த்.

கேரக்டர்கள்…

விஜய் சங்கேஷ்வர் கேரக்டரில் நிஹால். எங்குமே குறை சொல்ல முடியாத அளவுக்கு நிறைவான தேர்வு. ஒரு பக்கம் திமிராக தோன்றினாலும் தன்னம்பிக்கையின் மறு உருவமாய் ஜொலிக்கிறார் நிஹால்.

மகன் ஆனந்த் சங்கேஷ்வராக பாரத் போபனா, விஜய்யின் மனைவி லலிதாவாக சிரி பிரஹலாத் உள்ளிட்டோர் கச்சிதம்.

கணேஷ் அண்ணாச்சியாக வரும் அந்த நபரும் கெத்தாக நடித்திருக்கிறார் நேர்மையாக உழைப்பவனுக்கு உதவும் உயர்ந்த மனிதராக அடையாளம் காட்டி இருக்கிறார்.

டெக்னீஷியன்கள்..

ரிஷிகா சர்மா என்ற பெண் இயக்குனர் அந்த படத்தை இயக்கியிருக்கிறார் 1960 70 80 90 2000 என பல்வேறு காலங்களுக்கு ஏற்ப படத்தின் கதையையும் ஆடை அலங்காரத்தையும் செட்டு உபகரணங்களையும் அழகாக படம் பிடித்துள்ளார்.

முக்கியமாக படத்தின் ஆடை அலங்காரம் செட் பணிகள் என அனைத்தும் நம்மை 60 வருடங்களுக்கு முன்பு கொண்டு செல்கிறது.

கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு, கோபி சுந்தர் பின்னணி இசை, ஹேமந்த்குமார் படத்தொகுப்பு என அனைத்தும் நேர்த்தி.

இந்தப் படத்தை தமிழில் டப் செய்வது என முன்பே முடிவு செய்து இருந்தால் அதற்கு ஏற்ப காட்சிகளையும் சில விஷயங்களை இணைத்து இருக்கலாம். நிறைய இடங்களில் கன்னட படம் பார்ப்பதை போன்ற ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

உண்மையான உழைப்பு உயர்வு தரும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்

ஆக விஜயானந்த் – உழைப்பின் முகவரி.

More Articles
Follows