டிரைவர் ஜமுனா விமர்சனம் – 3.75/5..; ஜம்முன்னு ஒரு த்ரில்லர் ட்ரிப்

டிரைவர் ஜமுனா விமர்சனம் – 3.75/5..; ஜம்முன்னு ஒரு த்ரில்லர் ட்ரிப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஜமுனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ்.. இவர் ஒரு கால் டாக்ஸி டிரைவர். இவரின் கார் பயணத்தில் கொலைகார கும்பல் ஏறுகிறது. இதனையறிந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன செய்தார்.?

நடிகர் நடிகைகள் :- ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், அபிஷேக், மணிகண்டன், ஸ்ரீ ரஞ்சனி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கின்ஸ்லின்.

ஒளிப்பதிவு :- கோகுல் பெனாய்.

படத்தொகுப்பு :- ராமர்.

இசை :- ஜிப்ரான்.

தயாரிப்பு :- 18 ரீல்ஸ்.

தயாரிப்பாளர் :- SP.சௌத்ரி

கதைக்களம்…

அப்பா மரணத்திற்கு பின் தன் குடும்பத்தை தாங்க வேண்டிய சூழ்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. எனவே அப்பா வழியில் கால் டாக்ஸி டிரைவராக பணிபுரிகிறார் ஜமுனா.

ஒரு நாள் ட்ரிப்பில் இவரது காரில் ஒரு கொலைகார கும்பல் ஒரு பிரபலத்தை கொல்ல திட்டமிடுகிறது.

ஒரு கட்டத்தில் இதனையறிந்து கொண்டார் ஐஸ்வர்யா.. அதே சமயம் இந்த குமலபல் பயணிப்பது போலீசுக்கும் தெரிய வருகிறது.

எனவே அவர்கள் காரை துரத்துகின்றனர். கும்பலை போலீஸிடம் ஒப்படைக்க முயல்கிறார் ஐஸ்வர்யா.. ஆனால் அவர்கள் மிரட்டுகின்றனர்.

போலீசுக்கும் கொலைக்காரனுக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட ஐஸ்வர்யா என்ன செய்தார் என்பதே படத்தின் கதை..

கேரக்டர்கள்…

காரின் நாயகி.. கதையின் நாயகி என அனைத்தையும் சுமந்து நிற்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. கனா படத்திற்கு பிறகு ஓர் சிறப்பான கேரக்டரை செய்து பெண்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் காரில் பயணிப்பவர்களும் இவரின் பெற்றோர்களும் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆடுகளம் நரேன், அபிஷேக், மணிகண்டன், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோரும் சிறப்பு.

டெக்னீசியன்கள்…

காரின் வேகத்துக்கும் கதையின் வேகத்திற்கும் தன் இசையை கொடுத்து பயணிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஒரு காருக்குள் கதையின் ஒட்டுமொத்த காட்சிகளும் நகரும் வகையில் இருந்தாலும் அதற்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்து நம்மை கவர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய்.

படத்தொகுப்பு :- ராமர்… படத்தின் ஆரம்பக் காட்சியில் டாக்ஸி பயணம் தொடங்குகிறது. அது போல கிளைமாக்ஸில் சில திருப்புமுனைகளை கொடுத்து நம்மை கவர்ந்துள்ளார்.

எழுத்து & இயக்கம் :- கின்ஸ்லின்.. ஒரு காருக்குள் கதையை நகர்த்தி இருப்பது புத்திசாலித்தனம்.. அதிலும் நாயகியை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கும் கின்ஸ்லினுக்கு நல்ல தைரியம் தான்.

எனவே காட்சி எங்கும் போர் அடிக்காமல் செல்வது பயணத்தின் கூடுதல் சிறப்பு.

ஆக.. டிரைவர் ஜமுனா… ஜம்முன்னு ஒரு த்ரில்லர் ட்ரிப்

FIRST ON NET செம்பி விமர்சனம் 3.75/5.; செது(சிதை)க்கப்பட்டவள்.!

FIRST ON NET செம்பி விமர்சனம் 3.75/5.; செது(சிதை)க்கப்பட்டவள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

10 வயது சிறுமி செம்பி கற்பழிக்கப்பட குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தில் தண்டனை கிடைக்க போராடும் ஒரு பாட்டியின் கதை.

கதைக்களம்…

கொடைக்கானலில் உள்ள புலியூர் என்ற காட்டுப்பகுதியில் 10 வயது சிறுமி செம்பி வசிக்கிறாள்.. தாய் தந்தையை இழந்த இவளுக்கு பாட்டி கோவை சரளாதான் உலகமே.

ஒரு நாள் மலைத்தேன் எடுத்துக் கொண்டு காட்டுப்பகுதியில் செம்பி செல்ல அங்கு 3 பணக்கார இளைஞர்களால் கற்பழிக்கப்படுகிறார்.

இதனால் காவல்துறையில் புகாரளித்து குற்றவாளிகளை கைது செய்ய சொல்கிறார் கோவை சரளா.

ஆனால் காவல்துறையோ அந்த கயவர்களுக்கு துணை போகிறது. இதனால் காவலரை அடித்து துவம்சம் செய்துவிட்டு ஒரு பஸ்ஸில் தன் பேத்தி செம்பியுடன் தப்பித்து செல்கிறார் கோவை சரளா.

அந்த பஸ்ஸில் சகப் பயணிகளில் ஒருவராக வழக்கறிஞர் அஸ்வின் மற்றும் கண்டக்டர் தம்பி ராமையா பயணிக்கின்றனர்.

காவல் அதிகாரியை அடித்த குற்றத்திற்காக கோவை சரளாவை போலீஸ் தேடுகிறது.

ஒரு கட்டத்தில் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு கோவை சரளா யார் என்ற பின்னணி தெரிகிறது.

அதன் பிறகு என்ன ஆனது? மக்கள் யார் பக்கம்? செம்பியை கற்பழித்தவர்களுக்கு துணை போனார்களா.? அராஜக போலீசை அடித்த கோவை சரளாவுக்கு துணை நின்றார்களா.? நீதி யார் பக்கம் நின்றது என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

ஒட்டு மொத்த படத்தையும் ஒரே ஆளாக தோளில் சுமந்திருக்கிறார் கோவை சரளா. பேத்தி மீது பாசம் காட்டுவதாகட்டும்.. நீதிக்கு போராடி போலீசை எதிர்த்துப் பேசுவதாகட்டும்.. கற்பழிப்பை கண்ணீர் கதற சொல்லும் காட்சி ஆகட்டும் என ஒவ்வொரு பிரேமிலும் கோவை சரளா தன் நடிப்பில் மிரள வைத்துள்ளார்.

இந்த படத்திற்கு சரளாவுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

செம்பியாக நடித்துள்ள 10 வயது சிறுமி செல்ல குழந்தை. பாதிக்கப்பட்ட பின் அவரை பார்க்கும் போது நம் கண்களில் கண்ணீர் வரும்.

பஸ்ஸில் பயணத்தின் போது ஒரு வயதான பெண்மணி கற்பழிப்பு சம்பவத்தை எதிர்த்து போராடும் போராளிகளுக்காக உணவு சமைப்பதாக சொல்லும் காட்சிகள் நிச்சயம் கண்கலங்க வைக்கும்.

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அஸ்வின் குமார்.. சில நேரம் காமெடி செய்து சில நேரம் கடுப்பேத்துகிறார் தம்பி ராமையா.

இவர்களுடன் பணக்கார திமிர் பிடித்த இளைஞர்கள் மூணு பேர்
& நாஞ்சில் சம்பத் ஆகியோரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

முக்கியமாக போலீஸ் அதிகாரிகள் & நாஞ்சில் சம்பத் வழக்கறிஞரும் கவனிக்க வைக்கிறார்.

பஸ்ஸில் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.. அது நம் மக்களின் மனநிலையை காட்டுகிறது..

டெக்னீசியன்கள்…

செம்பி படத்தை செழிப்பாக காட்டி கண்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜீவன்.

மலைப்பகுதி காட்சிகளை ஜீவனாக காட்டி ரசிக்க வைக்கிறார். குடுவையில் தேன் ஒழுகும் காட்சிகள் கூட சிறப்பு.

தான் கற்பழிக்கப்பட்டோம் என்பதை கூட உணராமல் குடுவை உடைந்து விட்டது என்ற சிறுமி செம்பி கூறும் போது கோவை சரளாவுடன் சேர்ந்து நமக்கும் கண்ணீர்..

காட்டுக்குள் கோவை சரளா ஓடிச் செல்லும் காட்சிகள் நம்மை பதைபதைக்க வைக்கிறது. படத்தின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பாராட்டும்படியாக உள்ளது.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.. எடிட்டிங் பணிகளை புவன் மேற்கொண்டுள்ளார்.

வழக்கமான பிரபு சாலமன் பட பாணிதான்… ஆனால் இதில் சிறுமி கற்பழிப்பு.. போக்சோ சட்டம் விழிப்புணர்வு.. மக்கள் அரண் என வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அந்த காட்டுப் பகுதியை விட்டு என்றுதான் நாட்டிற்கு வருவாரோ பிரபு சாலமன் தெரியவில்லை.?

முக்கியமாக பஸ் பயணக் காட்சிகள் நமக்கு மைனா படத்தையே நினைவுப்படுத்துகின்றன.

ரவீந்திரன் படத்தை தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.. இந்த படம் நாளை டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது..

ஆக இந்த செம்பி… செது(சிதை)க்கப்பட்டவள்..

Sembi movie review and rating in tamil

ஜாஸ்பர் விமர்சனம்..; ஓல்ட் டான் பாசம்

ஜாஸ்பர் விமர்சனம்..; ஓல்ட் டான் பாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Vivek Rajagopal, CN Bala, Lawanya, Aishwarya Dutta

Director : Yuvaraj.D

Music : Kumaran Sivamani

Producer : Manikandan.C

கதைக்களம்..

நாயகன் விவேக் ராஜகோபால், அவரது மனைவி லாவண்யா மற்றும் சிறுவயது மகன் என குடும்பத்தோடு ஒரு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர்.

அந்த வீட்டின் முதலாளி ஜாஸ்பர். ஒரு குடிகாரன்.

ஒரு கட்டத்தில் பேங்க் மேனஜர் விவேக்கிடம் ஒரு டான் கும்பல் ரூ 100 கோடி கருப்பு பணத்தை மாற்றி தர கேட்கிறது.

சட்ட விரோதமான காரியங்களை செய்ய மாட்டேன் என விவேக் மறுக்க அவரை அந்த கும்பல் கடத்தி செல்கிறது. அப்படியும் சம்மதிக்காத காரணத்தால் கை விரல்களை வெட்டி லாவன்யாவுக்கு அனுப்புகிறது கும்பல்.

எனவே தன் கணவரை காப்பாற்தி தரும்படி ஜாஸ்பரிடம் லாவண்யா கேட்கிறார்.

ஜாஸ்பரும் சம்மதிக்கிறார். லாவண்யாவுக்கு ஜாஸ்பர் உதவ என்ன காரணம்.? அவர்கள் இவருக்கு யார் குடிகாரன் எப்படி காப்பாற்றினார்? கடைசியில் கருப்பு பணத்தை மாற்ற சம்பாதித்தாரா? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

வயதான ஜாஸ்பர் வேடத்தில் நடித்திருக்கிறார் சி.எம்.பாலா.. முரட்டுத்தனமான நடிப்பு..

இளம் வயது ஜாஸ்பராகவும், அவரது மகனாகவும் டபுள் ரோலில் விவேக் ராஜகோபால். மாறுப்பட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

முதல் நாயகியாக லாவண்யா.. மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா தத்தா. இருவரும் அளவான நடிப்பில் கவர்ந்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

டிரம்ஸ் கலைஞர் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம்..

மணிகண்டராஜாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி கச்சிதம். ஆனால் பல காட்சிகளில் தெளிவில்லை.

இயக்குனர் யுவராஜ்.டி,.. வழக்கமான ஆக்‌ஷன் கதை என்றாலும் அதை வித்தியாசமாக காட்ட முயற்சித்துள்ளார்.

ஆனால் திரைக்கதை நகரும் வேகத்தில் கோட்டை விட்டுள்ளார். மேலும் ஜாஸ்பர் இன் பிளாஷ்பேக் காட்சிகளில் தெளிவு இல்லை.. எனவே இது ஒரு வித சோர்வை ரசிகர்களுக்கு தெரிகிறது.

ஆக ஜாஸ்பர்… ஓல்ட் டான் பாசம்

Jasper movie review and rating in tamil

லத்தி விமர்சனம்.. POWER OF POLICE

லத்தி விமர்சனம்.. POWER OF POLICE

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

காவல்துறையில் கண்ணியமிக்க கான்ஸ்டபிள் ஒருவரின் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை.

கதைக்களம்…

தன்னை ஒருவன் காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்வதாக ஒரு பெண் புகார் அளிக்கிறார். பையன் வீட்டில் அவன் அப்பாவை எச்சரிக்கிறார் கான்ஸ்டபிள் விஷால்.

அடுத்த நாள் அந்த பெண் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அந்த பையன்தான் காரணம் என விஷால் தவறாக நினைத்து அடித்து துவைக்கிறார். இதனால் விஷாலை 1 வருடம் இடைக்கால நீக்கம் செய்கிறது காவல்துறை.

மற்றொரு புறம்… தாதா சுறா மகன் ரமணாவை தன் லத்தி கொண்டு தாக்குகிறார் விஷால்.. இதனால் போலீஸ் & தாதா மோதல் வெடிக்கிறது.

ஒரு கான்ஸ்டபிள் எப்படி ஒரு தாதாவை எதிர்த்து நிற்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கம்போல ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் விஷால். அவர் மட்டுமே படத்தை தாங்கி நிற்கிறார். பொறுப்புள்ள அப்பா.. நேர்மையான போலீஸ் என வெளுத்து கட்டியிருக்கிறார்.

மாஸ் என தனியாக காட்டாமல் காட்சியுடன் ஒன்றி போகிறார். ஆனால் நிறைய லாஜிக் மீறல் உள்ளது.

கதையின்்நாயகியாக சுனைனா.. அழகு நிறைந்த மனைவி.. பொறுப்பான அம்மா என மனதில் நிறைகிறார்.

உயர்அதிகாரி பிரபு நடிப்பில் பிரகாசிக்கிறார்.. போலீஸ் முனீஸ்காந்த் & வெங்கடேஷ் கேரக்டரும் சிறப்பு.

வில்லனாக வரும் வெள்ளையன் ரமணாவின் நடிப்பு மிரட்டல்…. அவரது அறிமுகமே அசத்தல்..

விஷாலின் குழந்தையாக நடித்த சிறுவனும் சிறப்பு.. அரசியல்வாதியாக ராஜ்கபூர் & டி.சிவா ஆகியோர் நடிப்பில் நேர்த்தி.

டெக்னீஷியன்கள்…

ஒரு மாஸான ஆக்சன் ஹீரோவை சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் நடிக்க வைத்ததே இயக்குனரின் சுதந்திரம்..

திரைக்கதையில் கையாண்ட விதம் சிறப்பு

ஆக்சனில் விஷால் அதிக ரிஸ்க் எடுப்பவர்.. அதற்கு ஏற்ப ஸ்டண்ட் காட்சிகளை கொடுத்த பீட்டர் ஹெயின் மாஸ்டருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து கொடுக்கலாம்..

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் ஓகே ரகம்… பின்னணி இசை படத்திற்கு பலம். அவிக் பேனர்ஜி எடிட்டிங் ப்ளஸ்… ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம்.

இயக்குனர் வினோத் குமாரின் மேக்கிங் ரசிகர்களுக்கு புதுசு… சில லாஜக் குறைகளை கவனித்திருக்கலாம்..

ஆக லத்தி சார்ஜ்… POWER OF POLICE

Laththi movie review and rating in tamil

FIRST ON NET Project C – Chapter 2.. Indias first Sophomore Film

FIRST ON NET Project C – Chapter 2.. Indias first Sophomore Film

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு பணக்கார வீடு.. அந்த வீட்டில் வசிக்கும் பெரியவருக்கு பக்கவாதம் வந்ததால் முடங்கி கிடக்கிறார். இவருக்கு மனைவி இல்லை.. இவரது மகன் வெளிநாட்டில் வசிக்கிறார்.. இவர்கள் வீடியோ காலில் பேசுவது வழக்கம்..

பெரியவரைப் பார்த்துக் கொள்ள அந்த வீட்டில் ஒரு (நாயகி வசுதா) பெண் வேலை செய்கிறார்.. இவரின் வேலை சமைப்பது.. துவைப்பது..

அவரைப் பார்த்துக் கொள்ள ஒரு மற்றொரு ஆண் (நாயகன் ஸ்ரீ) வருகிறார். இவருக்கு படுத்த படுக்கையாக பேச முடியாமல் தவிக்கும் அந்த பெரியவர் ஒரு பிரபல மருந்தை கண்டுபிடித்துள்ளார் என்பதை தெரிய வருகிறது..

அந்த மாத்திரையை சாப்பிட்டால் 60 -70 வயது நபர் 40 வயது போல எனர்ஜி உள்ளவராக மாறிவிடுவார். 20 வயது நபருக்கு 2 மடங்கு எனர்ஜி கிடைக்கும் என்பதால் டிமாண்ட் ஏற்படுகிறது.

இதனையறிந்த வீட்டில் உள்ளவர்கள் என்ன திட்டம் போட்டார்கள்? இந்த ரகசியம் அறிந்த வெளியில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள்? அதுவே ப்ராஜெக்ட் சி.. படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஸ்ரீ & வசுதா ரொமான்ஸ் செம கிக்.. வசுதாவின் வளைவு நெளிவு இளசுக்கு மஜா. ஆனால் இவர் திடீரென ஆக்சன் செய்வது வேற லெவல் ட்விஸ்ட்..

சாம்ஸ்.. ராம்ஜீ… பாலாஜி வெங்கட்ராமன் ஆகியோரின் கேரக்டர் கச்சிதம்..

டெக்னீஷியன்கள்…

வித்தியாசமான கதைகளத்தோடு ஒரு வீட்டில் முழு படத்தையும் படமாக்கி உள்ளனர். முக்கியமாக போரடிக்காமல் முடித்திருப்பது சிறப்பு.

Sophomore Feature Film என்றால் ஒரு படத்திற்கு முன் கதையும் பின் கதையும் இருக்கும். இந்த கதை Chapter 2.. எனவே இந்த படத்திற்கு முதல் பாகமும் வரும் 3வது பாகமும் விரைவில் வரும்..

இயக்குனர் VNO… இசை – சிபு சுகுமாறன்… ஒளிப்பதிவு.. – சதீஷ் ஆனந்தன்.. எடிட்டர் – தினேஷ் காந்தி.. ஆகியோரின் பணிகளில் நேர்த்தி.. படத்தின் முடிவு எதிர்பாராத ஒன்று. எனவே அடுத்த பாகத்தை பார்க்கும் ஆவல் தூண்டுகிறது.

படத்தின் நாயகன் ஸ்ரீ- தான் படத்தின் தயாரிப்பாளர்.. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஜெனீஷ் பெற்று இருக்கிறார்.

? *filmistreet LIVE*?

இன்னைக்கு Watch தான் ட்ரெண்ட்; தமிழக அரசியலை தாக்கிய சாம்ஸ் l Chaams Project C Chapter 2 Sophomore l filmistreet ?? https://youtube.com/shorts/rnH2QMnsEj4?feature=share

? *filmistreet LIVE* ?

Actor Distributor Jenish talks about India’s 1st Sophomore Feature Film l PROJECT C Chapter 2 Chaams l filmistreet ❤‍?https://youtube.com/shorts/n9a85lAfZFg?feature=share

FIRST ON NET என்ஜாய் விமர்சனம்..; ENJOY – My Body My Rules

FIRST ON NET என்ஜாய் விமர்சனம்..; ENJOY – My Body My Rules

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

உடுத்தும் உடை.. வைத்திருக்கும் செல்போன்.. இவற்றில் எல்லாம் பாகுபாடு பார்ப்பதால் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றனர் கல்லூரி மாணவிகள்.

இதனால் தடம் மாறி பார்ட் டைம் விபச்சாரத்திற்கு செல்கின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் ஒன்லைன்..

LNH கிரியேசன், K லட்சுமி நாராயணன் தயாரிப்பில் காம நெடி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் ‘என்ஜாய்’.

இந்தப்படம் டிசம்பர் 23ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

கதைக்களம்…

ஒரு கல்லூரி.. அதனை சார்ந்த பெண்கள் விடுதி.. இதில் தங்கும் பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர்.

சில ஏழை மாணவிகளும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரவு நேர பார்ட்டிக்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். இதற்கு பணத்தேவை இருப்பதால் ‘என் உடம்பு என் உரிமை..’ என்ற தத்துவங்களை பேசி விபச்சாரத்துக்கு செல்கின்றனர்..

இது ஒரு புறம் இருக்க.. மற்றொருபுறம் பெண்களுடன் ஜாலியாக இருக்க கொடைக்கானல் வருகின்றனர் மூன்று இளைஞர்கள்.. இவர்கள் இந்த மூன்று பெண்களையும் சந்திக்கின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே இந்த ‘என்ஜாய்’ படம்..

கேரக்டர்கள்…

மதன்குமார்
டான்சர் விக்னேஷ்
ஹரீஸ்குமார்
நிரஞ்சனா
ஜீ,வி அபர்ணா,
சாய் தன்யா
ஹாசின்
சாருமிசா.. ஆகியோர் நடித்துள்ளனர்.

இளசுகளின் உணர்வுகளை அப்படியே டபுள் மீனிங்கல் பேசி நடித்திருக்கின்றனர்.. சில நேரங்களில் செயற்கையாகவே உணர்வுகளை காட்டி இருக்கின்றனர்.

பல காட்சிகள் ஆபாசத்திற்காக திணிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.. முக்கியமாக ஷாலு ஷம்மு (நடிகை அல்ல) ஆன்ட்டி வீட்டில் நடைபெறும் காட்சிகள்..

முக்கியமாக சப்பாத்தி மாவு பிசையனும்.. உருட்டனும் அப்படியே போடணும்.. என்ற டயலாக்குகள் காமத்தின் உச்சம்.. மேலும் திருச்சி சாதனா காட்சிகள் படத்தின் கவர்ச்சி கலகலப்புக்கு உதவியுள்ளன.

லேடிஸ் ஹாஸ்டல் செக்யூரிட்டியிடம் பேசும்போது.. என்ன தாத்தா ரொம்ப தொங்கிடுச்சு என்ற டயலாக்குகள்.. சீலிங் ஃபேன் மாட்டிவிட்டு கீழே இறங்கும் போது மணி அடிக்கும் ஓசை ஆகியவை காம நெடி..

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு – KN அக்பர்.. இசை – KN ரயான் .. எடிட்டர் – மணி குமரன்… பின்னணி இசை- சபேஷ்- முரளி… பாடல்கள் – விவேகா, உமாதேவி… இவர்களின் பங்களிப்பு கச்சிதம்.

கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் ஆபாசம் என கொடுத்து ஒரு விழிப்புணர்வு கதையை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் பெருமாள் சாமி..

ஹர ஹர மகாதேவகி.. இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற பட சாயல்கள் அவ்வப்போது படத்தில் தெரிகிறது..

ஆக சென்சாரில் ஏ சர்டிபிகேட் பெற்ற இந்த படம் இளசுகளை கண்டிப்பாக சூடேற்றும்..

ஆக இந்த என்ஜாய்.. மார்கழியில் மஜா..

More Articles
Follows