First on Net வாடாத பாசமலர்.. நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் (3.25/5)

First on Net வாடாத பாசமலர்.. நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் (3.25/5)

கதைக்களம்…

எத்தனை இன்னல்கள் வந்தாலும் தன் தங்கைக்காக எந்தவொரு தியாகமும் செய்ய தயாராக இருக்கும் அண்ணனின் கதை இது.

இதில் சிவகார்த்திகேயன் அண்ணன். அவரது தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சின்ன வயதிலேயே இவரின் தந்தை சமுத்திரக்கனியை இழந்துவிடுகிறார். பெயரியப்பா சித்தப்பா ஆதரவு இல்லை. எனவே தன் தங்கையை பார்த்து பார்த்து வளர்க்கிறார்.

இவரின் தங்கையின் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் தனக்கு விருப்பமில்லை என்றாலும் தங்கையின் விருப்பத்தின் பேரில் நட்ராஜை திருமணம் செய்து வைக்கிறார்.

அதன்பிறகு நட்ராஜ் தன் வில்லத்தனத்தை காட்ட, என்ன செய்தார் இந்த அண்ணன் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு ஹோட்டல் மெனு கார்டை விட படத்தில் நடித்துள்ளவர்கள் அதிகம். எனவே நீங்க டயர்ட் ஆகாம சுருக்கமாக சொல்லி முடிக்கிறோம்.

இப்படியொரு அண்ணன் நமக்கு வேண்டும் என ஏங்க வைத்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். க்ளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்க வைக்கிறார்.

தந்தையை இழந்த பிள்ளைகள் படும் கஷ்டத்தை வாழ்ந்து சொல்லியிருக்கிறார். ஜாடிக்கு ஏத்த மூடீ போல பாசமிக்க தங்கையாக ஐஸ்வர்யா. அவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

சிவாவுடன் சேர்ந்துவிட்டால் மட்டும் சூரிக்கு காமெடி சிக்ஸர் அடிக்கிறது. அதுபோல் சிலகாட்சியில் வந்தாலும் யோகிபாபு கைத்தட்டலை அள்ளுகிறார்.

ஹீரோயின் அனு இமானுவேல் கண்களாலும் உதடுகளாலும் பேசியே நம்மை கவர்ந்துவிடுகிறார்.

நட்ராஜ், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பு கச்சிதம். ஹீரோயின் அண்ணன்களாக வரும் ரெஜித் மேனன், சிரிப்பு போலீசும் நம்மை கவர்கின்றனர்.

மாமா வரும் சண்முகராஜன், முத்துராமன் ஆகியோரின் நடிப்பு சிறப்பு

இவர்களுடன் பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, அருந்ததி, சமுத்திரக்கனி, ஆர்.கே. சுரேஷ், சுபு பஞ்சு, அர்ச்சனா உள்ளிட்டோர் கச்சிதம். சூரியின் மகனும் சூப்பர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எங்க அண்ணன் பாடல் இமான் இசையில் இதமாக இருக்கிறது. பின்ணனி இசையும் ஓகே.

நீரவ் ஷா ஒளிப்பதிவில் மயிலாஞ்சி பாடல் கண்களுக்கு குளிர்ச்சி.

காந்த கண்ணழகி பாடல் தேவையில்லாத ஒன்று.

நிறைய காட்சிகளை வெட்டியிருந்தால் சீரியல் போல இல்லாமல் படமாக இருந்திருக்கும். சென்டிமெண்ட் என்ற பெயரில் ப்ளாஷ்பேக் காட்சி கொஞ்சம் நீளம். அதுபோல் சில மொக்கை காமெடியை தவிர்த்திருக்கலாம்.

கூட்டுக்குடும்பம், தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என பல உறவுகளை இழந்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற ஒரு படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

பாண்டிராஜ் தன் பாணியில் ஒரு குடும்ப விருந்து படைத்திருக்கிறார்.

ஆக… அண்ணன் தங்கை உறவு என்பது வாடாத பாசமலர் என்பதை காட்சிகளில் நிரூபித்திருக்கிறார்.

Comments are closed.

Related News

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள…
...Read More