காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்.. 2/5.; முத்தையா வெத்தையா.. ஆர்யா தேறாதய்யா.!?

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்.. 2/5.; முத்தையா வெத்தையா.. ஆர்யா தேறாதய்யா.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் இனங்கள் மண்ணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போராட்டங்களை மையப்படுத்தியே இருக்கும்.. எனவே சுதாரித்துக் கொண்டு வாய்ஸ் ஓவரில் விளக்கம் கொடுத்துள்ளார் முத்தையா.
இந்த படம் பெண்ணுக்கு அடித்துக் கொள்ளும் கதை என முன்பே சொல்லி விடுகிறார்.

காதர் பாஷா என்ற இஸ்லாமிய பெயரும் முத்துராமலிங்கம் என்ற ஹிந்து பெயரும் ஏன் ஒருவருக்கு வைக்கப்பட்டது என்ற காரணத்தை நீங்கள் கேட்டால் எங்களிடம் பதில் இல்லை.. அதற்கு இந்த படத்திலும் பதில் கொடுக்கப்படவில்லை.

கதைக்களம்…

நாயகி தமிழ் (சித்தி இதானி)யின் குடும்பம் பெரிய குடும்பம். இரண்டு முறை மாமன்கள் இவரை கட்டிக்கொள்ள போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர். இவர்கள் இருவரையும் மணக்க மனமில்லாமல் தவிக்கிறார்.

இவரைப் பெண் பார்க்க எவர் ஊருக்குள் நுழைந்தாலும் வெட்டுகிறார்கள். இந்த நிலையில் இவருக்கு உதவ வருகிறார் ஆர்யா (காதர் பாட்சா).

நாயகிக்கு நாயகன் உதவ என்ன காரணம்.? இவர்கள் இருவரும் யார்? முறைமாமன்கள் என்ன செய்தார்கள்.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த படம்.

கேரக்டர்கள்…

கிராமத்து கதை என்பதால் வேட்டியில் களம் இறங்கியுள்ளார் ஆர்யா. அடிதடி.. புழுதி பறக்க சண்டை.. கண்களில் தெறிக்கும் தீ என அதிரடி காட்டி உள்ளார் ஆர்யா.

சித்தி இத்னானி கிராமத்து பெண்ணாக அம்சமான நடிப்பை கொடுத்துள்ளார். சிரித்த முகத்துடனே நடித்திருப்பது சிறப்பு. இவருக்கு ரவீனா ரவி வாய்ஸ் கொடுத்துள்ளார். அதுவும் கூடுதல் கவனம் பெறுகிறது.

இஸ்லாமிய காதர் பாட்ஷாவாக பிரபு நடித்துள்ளார். தன் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார். ஆர்யா பிறக்கும் போது பிரபு அப்படியே இருக்கிறார். பாக்யராஜ் வயதான பிறகும் பிரபு அப்படியே தான் இருக்கிறார்.

பிரபு மகளாக வரும் சின்னத்திரை நடிகை ஹேமா தயாள் தன் நடிப்பில் கவனம் பெறுகிறார். அழகான முகத்தோடு அழவும் செய்து இருக்கிறார்.

சிங்கம்புலி ஓரிரு காட்சிகளில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார். விக்னேஷ்காந்த், பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன் என ஒரு காட்சியில் வந்து செல்கிறார்கள்.

முக்கியமாக இந்த படத்திற்கு பிளாஷ்பேக் காட்சியே தேவையில்லை. கிளை கதைக்குள் கிளை கதையை வைத்து சோதித்துவிட்டார்.

விஜி, மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன் உள்ளிட்ட பல வில்லிகளும் வில்லன்களும் உள்ளனர். ஒவ்வொருவரின் தோற்றமும் மிரட்டல் ஆகவே உள்ளது.. நல்லவேளை இந்த படத்தில் வேலராமமூர்த்தி இல்லை.

டெக்னீஷியன்கள்…

சென்டிமென்ட் காட்சி.. காமெடி காட்சி.. பாடல் காட்சி.. சண்டை காட்சி என அனைத்தும் கலவையாக கோர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதில் ஏகப்பட்ட சண்டைக் காட்சிகளுக்கு நடுவே மற்ற காட்சிகளை மட்டும் திணித்து வைத்துள்ளதாக தெரிகிறது.

பஞ்சாயத்து காட்சிகளில் பிற்போக்கான சிந்தனைகள் நிறைந்துள்ளன. மேலும் பெண் சிசு கொலை ஏன்.?

அதேசமயம் ராமநாதபுரம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை போற்றும் வகையில் நிறைய காட்சிகளை வைத்துள்ளார். ஆனால் பெரிதாக எந்த உணர்வும் ஒட்டவில்லை.

அண்மையில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. ஆனால் காதர் பாஷா என்ற முத்துராமலிங்க படத்தில் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

கறி குழம்பு என்ற பாடல் மட்டும் வழக்கம் போல முத்தையா பாணியில் உள்ளது. மற்றபடி பின்னணி இசையில் அனல் தெறிக்க விட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

ஸ்டண்ட் மாஸ்டர்’ அனல் அரசு : இவருக்கும் இவரது குழுவினருக்கும் டபுள் பேட்டா கொடுத்திருப்பார்கள். ஷூட்டிங் முடியும் வரை சண்டை போட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள் போல.. ஆக்சன் பிரியர்களிடம் அப்ளாஸ் அள்ளும்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் : இவர் எப்போதுமே தன்னுடைய பங்கை சிறப்பாக நேர்த்தியாக செய்பவர். இந்த படத்திலும் கிராமத்து மண்வாசனையுடன் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் : எடிட்டிங் செய்யாமல் வெங்காயத்தை உரித்து கொண்டு இருந்தாரோ.? என்பது போல தோன்றுகிறது. முக்கியமாக படத்தின் முதல் காட்சியில் நாயகி யார் என்று தெரியாமல் தேடிச் செல்கிறார் ஆர்யா. ஆனால் பிளாஷ்பேக் காட்சியில் ஆர்யாவும் சித்தி இத்னானி சந்தித்துக் கொள்கிறார்கள். என்னய்யா லாஜிக்.?

கர்வம், கௌரவம் தான் முதல்ல அதுக்கு அப்புறம் தான் எல்லாம்” என்ன பஞ்ச் டயலாக் பேசுகிறார் ஆர்யா. ஆனால் அதில் ஓரளவு கூட கம்பீரமே இல்லை.

பெரும்பாலும் முத்தையா படங்களில் கொம்பன் மருது தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் பஞ்ச் வசனங்கள் அனல் தெறிக்கும். ஆனால் இதில் ஏதோ போகிற போக்கில் டயலாக் பேசுவது போலவே உள்ளது.

சண்டை காட்சிகள் மட்டும் கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது வரை உள்ளன.. சண்டையில் ஆரம்பித்து படம் சண்டையிலே முடிவடைகிறது..

ஆர்யாவுக்கு வேற கருப்பு கலரை தவிர வேற எந்த கலரும் கொடுக்கப்படவில்லை. கருப்பு வேஷ்டி, கருப்பு சட்டை, கருப்பு பனியன்.. கருப்பு ஜட்டி என படம் முழுக்க வருகிறார் ஆர்யா. (காஸ்ட்யூமர் கவனிக்க)

கிராமத்து மண்வாசனை.. மாமன் மச்சான் உறவு.. அண்ணன் தங்கை உறவு.. மாமன் மகள் உறவு.. அங்காளி பங்காளி சண்டை வெட்டு குத்து என எத்தனை படங்களில் தான் முத்தையா இதே ரூட்டில் பயணிப்பாரோ.? முத்தையா இனிமேல் இதெல்லாம் வெத்தையா.. ஆர்யா இதுபோல் நடித்தால் தேறாதய்யா! என சொல்லத் தோன்றுகிறது.

Kathar basha Endra Muthuramalingam movie review and rating in tamil

துரிதம் விமர்சனம் 3.25/5.. துரித பயணம்

துரிதம் விமர்சனம் 3.25/5.. துரித பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Sandiyan Jegan, Edan, A.Venkatesh, Bala Saravanan, Poo Ram, Raams, Vaishali, Srinikila, Aiswarya
Directed By : Srinivasan
Music By : Song – Isai Amuthan Background Music – Naresh
Produced By : Thiruvarul Jeganathan

கதைக்களம்…

நாயகன் ஜெகன் ஒரு கால் டாக்ஸி டிரைவர். நாயகி ஈடன் ஐடி ஊழியர். வேலை காரணமாக அடிக்கடி நாயகன் காரில் பயணிக்கிறார் நாயகி. இவருடன் தோழிகளான வைஷாலி , ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் தினசரி அலுவலகத்திற்கு பயணிப்பது வழக்கம்.

மணிக்கு ஒரு முறை போன் செய்து எங்க இருக்க? என்ன பண்ற? என கேட்கும் சுபாவம் கொண்டவர் நாயகியின் தந்தை வெங்கடேஷ்.

நாயகியை பார்க்கும்போதெல்லாம் நாயகனுக்கு காதல் வளர்கிறது. ஆனால் ஒரு கால் டாக்ஸி டிரைவரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் நாயகி.

ஒரு நாள் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பைக்கில் நெடுந்தூரம் பயணிக்க நேர்கிறது. அப்போது நாயகி கடத்தப்படுகிறார்.

இறுதியில் என்ன ஆனது.? நாயகியை கண்டுபிடித்தாரா.? நாயகனின் காதல் நிறைவேறியதா? நாயகி யார்.? அவரை கடத்துபவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் ‘துரிதம்’ படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சண்டியர் படத்தில் நடித்த ஜெகன் தான் இந்த படத்தில் நாயகன். ஆக்சன் சேசிங் ரொமான்ஸ் ஏக்கம் என அனைத்தையும் சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

ஜெகனின் நண்பனாக பால சரவணன் இருவரும் வரும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்ட்டி.

நாயகி ஈடனும் கதைக்கு ஈடுகொடுத்து தன் கேரக்டரை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மகளை சந்தேகப்பட்டு இப்படியே ஒரு டார்ச்சர் தந்தை இருப்பாரா? என பயப்படும் அளவுக்கு சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளார் வெங்கடேஷ்.

ராம்ஸ் மற்றும் பூ ராமு ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளன.

டெக்னீஷியன்கள்…

இசை : நரேஷ்
இயக்குநர் : சீனிவாசன்
ஒளிப்பதிவாளர்கள் : வாசன் & அன்பு டென்னிஸ்.
படத்தொகுப்பாளர்கள் : நாகூரான் & சரவணன்..

நரேஷின் பின்னணி இசை கதையின் வேக ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துள்ளது.

முக்கியமாக ரோட்டில் பயணிக்கும் போது..் வேன் சீன் & பைக் & ஆட்டோ சீன்ஸ்என அனைத்தையும் ஒலிப்பதிவாளர்கள் திறம்பட நேர்த்தியாக படம் பிடித்துள்ளனர்.

துரிதம் என்ற தலைப்புக்கு ஏற்ப விறுவிறுப்பாக ரோட்டில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் சீனிவாசன். சிட்டியில் நடக்கும் காதலையும் கிராமத்தில் நடக்கும் சாதி மோதலையும் தன்னுடைய தன் திரைக்கதையில் பயணிக்க வைத்து துரிதப்படுத்தி இருக்கிறார்.

இறுதி காட்சியில் நாயகனை நாயகி பார்க்கும் அந்த காட்சி காதலர்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த ஒன்றாகும்.

ஆக… துரிதம்.. துரித பயணம்

#Thuritham from tomorrow in Cinemas..

#ThurithamFromJune2

#SandiyarJegan @actorjegan #EdenKuriakose @Bala_actor #Srinivasan #Naresh #Vasan #Nagooraan #Saravanan @tipsofficial @KskSelvaPRO

Thuridham movie review and rating in tamil

தீராக் காதல் விமர்சனம் 3.5/5.; காதல் என்றும் தீராதே

தீராக் காதல் விமர்சனம் 3.5/5.; காதல் என்றும் தீராதே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதலித்து ஒன்று சேராமல் வெவ்வேறு திருமணம் செய்த காதலர்கள் திருமணத்திற்கு பின்னர் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் தீராக் காதல்.

கதைக்களம்…

கௌதம் (ஜெய்) இவரது மனைவி வந்தனா (ஷிவதா). மகள் ஆர்த்தி (வ்ரிதி விஷால்).. மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் இது.

ஒரு முறை ஆபீஸ் வேலையாக சென்னையிலிருந்து மங்களூருவுக்கு ரயிலில் போகிறார் ஜெய். அப்போது எதிர்பாராமல் தன் முன்னாள் காதலியான ஆரன்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) சந்திக்கிறார் ஜெய்.

அதன் பின்னர் சில தினங்கள் இருவரும் மங்களூருவில் சந்திக்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள்.. பழகுகிறார்கள்.

கொடுமைக்கார கணவனுடன் வாழும் ஐஸ்வர்யாவுக்கு ஜெயின் புதிய காதல் நட்பு மறுமலர்ச்சியை கொடுக்கிறது. இதனால் தன் கணவனை பிரிய நினைக்கிறார் ஐஸ்வர்யா.

தன் பழைய காதலன் உடன் இணைய நினைக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது.? ஜெய் ஏற்று கொண்டாரா? ஜெய் குடும்பம் என்ன ஆனது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை தருகிறது படம்.

கேரக்டர்கள்…

பொறுப்பான கணவன்.. பாசக்கார அப்பா.. அன்பான காதலன் என 3 பரிமாணத்தையும் அழகாக செய்து இருக்கிறார் ஜெய். பக்குவப்பட்ட நடிப்பில் காதலர்களையும் கவர்வார்.

இதுவரை பார்க்காத கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரு பக்கம் காதலன்.. மற்ற பக்கம் கணவன்.. இரண்டிலும் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்.

மேலும் ஐஸ்வர்யா எடுக்கும் முடிவு அதிரடியான திருப்பத்தை கதையில் கொடுத்துள்ளது.

ஒரு காட்சியில் ஜெய் வீட்டில் ஒளிந்திருக்கும் ஐஸ்வர்யா மனநிலை திக் திக் திக் நிமிடம்.. ரசிகர்களுக்கும்.!

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் – சித்து குமார்
ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன் நீலமேகம்
படத்தொகுப்பாளர் – பிரசன்னா ஜி.கே

மங்களூரில் ஈரப்பதம் கலந்த அழகு… ரயில்வே ஸ்டேஷன் காட்சி என அனைத்தையும் ரசித்து எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே தன் பணியை சிறப்பாகவே செய்துள்ளார்.

சித்து குமாரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.. ஆனால் இது போன்ற காதல் கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இதுபோன்ற சிக்கலான காதல் கதறையில் நிச்சயமாக வித்தியாசமான முடிவுகளை எடுக்க முடியாது என்பதை உணர்ந்து அதை எப்படி கையாள முடியுமோ அதை சிறப்பாகவே செய்து இருக்கிறார் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன்.

சில காட்சிகளை நாம் சில படங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்திற்கு ஏற்ப கலைநயத்துடன் இந்த தீரா காதலை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆக தீராக்காதல்… காதல் என்றும் தீராதே

Theera Kadhal movie review and rating in tamil

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம் 3.25/5.; முறுக்கேறிய மூர்க்கசாமீ

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம் 3.25/5.; முறுக்கேறிய மூர்க்கசாமீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ராம்நாடு மாவட்டம் பகுதியில் இரு வேறு சாதிப் பிரிவினர் உள்ளனர். வழக்கம் போல தமிழ் சினிமாவில் காட்டப்படும் மேல் சாதி – கீழ் சாதி பிரிவு தான்.

அருள்நிதியும் சந்தோஷ் பிரதாப்பும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

சந்தோஷ் பிரதாப் மீது எவராவது கை வைத்தால் அவன் தன் சாதியை சேர்ந்தவர் என்றாலும் அடித்து துவம்சம் செய்பவர் அருள்நிதி.

இந்த சூழ்நிலையில் சாதி அரசியல் நடத்தும் வில்லன் ராஜசிம்மனால் சந்தோஷூக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அதன் பழி அருள்நிதி மீது விழுகிறது.

இதன் பிறகு என்ன ஆனது.? தன் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கினாரா அருள்நிதி.? ராஜசிம்மன் யார்? அவரது பின்னணி என்ன? என்பதே இந்த படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பெரும்பாலும் பேய் மற்றும் திரில்லர் படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. ஆனால் இதில் முழுக்க முழுக்க அடிதடியில் இறங்கி அமர்க்களம் செய்துள்ளார்.

முறுக்கேறிய மீசை அதற்கேற்ற உயரம் என கம்பீரமாக தோன்றி கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார் அருள்நிதி. மூர்க்கசாமி என்ற கேரக்டரில் முத்திரை பதித்துள்ளார்.

அருள்நிதிக்கும் துஷாரா விஜயனுக்கும் உள்ள காதல் காட்சிகள ரசிக்கும்படியாக படமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அருள்நிதிக்கு முத்தம் கொடுத்தபின் துஷாரா பேசும் வசனங்கள் நம்மை கலங்க வைக்கும்.

சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு நட்புக்கு துணை நிற்கும் கேரக்டரில் சந்தோஷ் பிரதாப் பிரகாசிக்கிறார்.

அருள்நிதியின் அப்பாவாக யார் கண்ணன், மாமாவாக முனிஷ்காந்த், மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, சந்தோஷ் காதலியாக சாயாதேவி உள்ளிட்ட கேரக்டர்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் நிற்கும்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக பத்மன் வருகிறார். கதை ஓட்டத்தில் இவரது கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது.

சில நடிகர்களின் போட்டோக்களை வைத்து அவர்களின் சாதியை குறிப்பிட்டு சொல்லி விடுகிறார் இயக்குனர்.

டெக்னீஷியன்கள்…

மிகவும் மோசமான தவறுகளை செய்பவனை கழுவேத்தி மரத்தில் கட்டி வைத்து தண்டனை கொடுப்பது அந்த காலத்து நடைமுறை. எனவே அந்த கழுவேத்தி முறையை பயன்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சை கௌதம் ராஜ்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக கையாண்டு உள்ளார். ராம்நாடு மக்களின் வாழ்வியலையும் அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையும் அப்படியே படம் பிடித்து காட்டி இருப்பது சிறப்பு.

இந்தப் படத்திற்கு இமான் இசை என்றால் நிஜமாகவே நம்ப முடியவில்லை. நிறைய எதிர்ப்பார்த்தோம்.

ஆனால் ‘அவ கண்ணை பார்த்தா.. என்ற பாடல் காதலர்களுக்கு பிடிக்கும். அருள்நிதிக்கு கொடுத்துள்ள பின்னணி இசையில் அனல் தெரிக்கிறது.

கணேஷ்குமாரின் சண்டை பயிற்சி பணத்திற்கு பெரிய பலம் ஆக்ஷனை அள்ளித் தெறிக்கவிட்டுள்ளார். அதுபோல நாகூரானின் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு படத்திற்கு உறுதுணை.

அரசியல் சார்ந்த சாதி படம் என்றாலும் நட்பை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருப்பது படத்திற்கு பெரிய பலம். அது போல ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என நம்பலாம்.

ஆக கழுவேத்தி மூர்க்கன்…. முறுக்கேறிய மூர்க்க சாமி

Kazhuvethi Moorkkan movie review and rating in tamil

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்.; த்ரில்லர் விசாரணை

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்.; த்ரில்லர் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு குழந்தை கடத்தப்படுவதை பார்த்து விடுகிறார் மகத். இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்.

அப்போதுதான் கடத்தல் கும்பலுக்கும் அந்த காவல் அதிகாரிக்கும் (சுப்ரமணிய சிவா & அமித் பார்கவ்) தொடர்பு இருப்பதை அறிகிறார்.

கடத்தலை பார்த்த குற்றத்திற்காக மகத் கொல்லப்படுகிறார். மகத் கொல்லப்பட்டதை அறிந்த அவரது காதலியும் போலீஸ் அதிகாரியமான வரலட்சுமி விசாரணையில் இறங்குகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? தன் காதலனை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா? குழந்தைகளை கடத்துபவர்களின் நோக்கம் என்ன? இறுதியில் என்ன ஆனது ? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்…

மகத் படத்தில் கொஞ்ச நேரமே வருகிறார். ஓட்டம் பதட்டம் என ரசிக்க வைக்கிறார்.

வழக்கமான நாயகி இல்லாமல் கம்பீரமான போலீஸாக வரலட்சுமி.. தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை தன் நடிப்பால் மெருகூட்டி இருக்கிறார்.

நண்பனுக்காக பழிவாங்கும் நண்பர்களாக சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபாலன் மற்றும் யாசர் அராஃபத் நடித்துள்ளனர்.

இதில் சந்தோஷ் பிரதாப் கூடுதல் கவனம் பெறுகிறார். ஆனாலும் காட்சிகள் பெரிதாக இல்லை.

வில்லன்களாக மாஃபியா கேங் லீடர் சுப்ரமணிய சிவா & போலீசாக அமித் பார்கவும் வருகின்றனர்.

உயர் அதிகாரியாக ஆரவ்.. விசாரணை காட்சிகளில் கம்பீரமாக மிரட்டியிருக்கிறார். இவருக்கு சில ஃபிளாஷ்பேக் காட்சிகளும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

தயாள் பத்மநாபன் இயக்கிய இந்த படம் ஒடிடியில் மே 19ஆம் தேதி வெளியானது. இவரின் முந்தைய ‘கொன்றால் பாவம்’ படமும் ஒரு திரில்லர் தான்.

ஓடிடிக்கு ஏற்ற வகையில் ஒரு திரில்லர் கதையை மெதுவாக கொடுக்க வேண்டும் என நினைத்து அந்த கதைக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு – சேகர் சந்துரு
படத்தொகுப்பு – ப்ரீத்தி பாபு
பின்னணி இசை – மணிகாந்த் கத்ரி

2 காவல் நிலையம் 3 வீடுகள் என கதை நகரும்போது அதை வைத்து தன்னால் என்ன முடியுமோ அது நிறைவாக செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதற்கு ஏற்றார் போல் படத்தொகுப்பும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.

பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

ஒரு காவல்நிலையத்தில் ஒரு ஆய்வாளர் கொலை செய்யப்படுகிறார். ஆனால் காவல்துறை இவ்வளவு மெத்தனமாக இருக்குமா என்ன.?

தன்னுடைய காதலர் காவலராக இருக்கும்போது அவரிடம் ஆலோசனை கேட்காமல் வேறு ஒரு காவல் நிலையத்திற்கு இளைஞர் செல்வது ஏன்?

காதலனைக் கொன்றவனை பிடிக்க போலீசை வரலட்சுமி நம்பாமல் இருக்க என்ன காரணம் ? ஆகிய லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே உள்ளன.

ஆக மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன் – த்ரில்லர் விசாரணை

Maruthi Nagar police station movie review and rating in tamil

பிச்சைக்காரன் 2 விமர்சனம்.. 3.5/5.. பிச்சை போடலாம்

பிச்சைக்காரன் 2 விமர்சனம்.. 3.5/5.. பிச்சை போடலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிச்சைக்காரன் முதல் பாகத்தில் ஒரு பணக்காரன் பிச்சைக்காரன் ஆக நடித்திருப்பார். பிச்சைக்காரன் 2 படத்தில் ஒரு பிச்சைக்காரன் ஒரு பணக்காரனாக நடித்திருக்கிறார்.

கதைக்களம்…

1 லட்சம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார் விஜய் குருமூர்த்தி. இவர் இந்தியாவின் 7வது பணக்காரன்.

இவரின் சொத்துக்களை அபகரிக்க விஜய் குருமூர்த்தி கம்பெனியின் CEO அரவிந்த் என்பவர் சதிதிட்டம் போடுகிறார்.

எனவே மூளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம், வேறொருவரின் மூளையை விஜய் உடலில் பொருத்தி, தான் போடும் கட்டளைகளை கேட்பவராக மாற்ற அரவிந்த் முடிவு செய்கிறார்.

பிச்சைக்காரன் சத்யா என்பவனை தேர்ந்தெடுத்து அவருடைய மூளையை விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்துகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? வில்லனின் சதி திட்டம் நிறைவேறியதா.? விஜய் ஆண்டனி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கி தயாரித்து இசையமைத்து எடிட்டிங் செய்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இரண்டு கேரக்டர்கள் என வித்தியாசம் காட்டி தன்னுடைய பங்களிப்பு சிறப்பாகவே செய்துள்ளார்.

மேலும் ஒரு இயக்குனரின் முதல் படம் என்பது தெரியாத அளவிற்கு மேக்கிங்கில் சிறப்பு சேர்த்துள்ளார்.

தன்னுடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். முக்கியமாக இந்த படத்தில் நாயகியுடன் கொஞ்சம் கூடுதலாகவே ரொமான்ஸ் செய்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளார் விஜய் ஆண்டனி.

காவ்யா தப்பார் ஓரிரு காட்சிகளில் வந்து கதையின் போக்குக்கு உதவியுள்ளார். யோகி பாபு நட்புக்காக நடித்திருப்பார் என்றே தெரிகிறது.

முதலமைச்சராக நடித்துள்ள ராதாரவி தன்னுடைய முதன்மை பணியை கச்சிதமாக முடித்துள்ளார்.

சிறுவன், சிறுமியாக நடித்த இருவரின் நடிப்பும் பிரமாதம்.

விஜய் சொத்துக்களுக்கு ஆசைப்படும் அவரது நண்பர்களாக தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பெரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

பொதுவாகவே முதல் பாகம்.. இரண்டாம் பாகம் வந்தால் இரண்டு படங்களின் ஒப்பீடு அதிகமாகவே இருக்கும். முதல் பாகத்தில் அம்மா – மகன் சென்டிமென்ட் உணர்வுப்பூர்வமாக யதார்த்தமாக இருந்தது.

ஆனால் பிச்சைக்காரன் 2 படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் உள்ளது. முதல் பாகத்தை இருந்த அளவு இதில் இல்லை என்பதே உண்மை.

கோயில் சிலையே மற்றும் கல்லூறும் பூவே என்ற பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை படத்திற்கு பலம்.

எடிட்டர் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.. (எடிட்டர் விஜய் ஆண்டனி).

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.

பிச்சைக்காரன் விஜய் ஆண்டனிக்கு ஒரு பிளாஷ்பேக்.. பிச்சைக்காரர்களுக்கான புது வாழ்வு தரும் ‘ஆன்டி பிகிலி’ ஆகியவை சிறப்பு.

ஆனால் நட்பு, துரோகம், அரசியல் என கதைகள் வேறு பாதையில் பயணிப்பதால் சுவாரசியம் குறைகிறது.

ஆக பிச்சைக்காரன் 2.. பிச்சை போடலாம்

Pichaikkaran 2 movie review and rating in tamil

More Articles
Follows