நாகேஷ் திரையரங்கம் விமர்சனம்

நாகேஷ் திரையரங்கம் விமர்சனம்

நடிகர்கள் : ஆரி, ஆஷ்னா சாவேரி, காளி வெங்கட், எம்ஜிஆர் லதா, சித்தாரா, அதுல்யா ரவி, மசூம் சங்கர் மற்றும் பலர்
இயக்கம் : முகம்மது இசாக்
இசை : ஸ்ரீ என்ற ஸ்ரீகாந்த்தேவா
ஒளிப்பதிவு: நவ்ஷாத்
எடிட்டிங்: எஸ். தேவராஜ்
பி.ஆர்.ஓ. : வின்சன்
தயாரிப்பு: ட்ரான்ஸ் இந்தியா மீடியா

கதைக்களம்…

ஆரி, ஒரு வீட்டு புரோக்கர். இவருக்கு அம்மாவாக சித்தாராவும் நண்பனாக காளி வெங்கட் நடித்துள்னர்.

தங்கையாக அதுல்யா ரவி, தம்பியாக அபிலாஷ் நடித்துள்ளன்ர்.

ஆரியும் நாயகி ஆக்‌ஷனாவும் காதலிக்கின்றன்ர.

அதுபோல் ஆஷ்னாவின் நண்பரும் அதுல்யாவும் காதலிக்கின்றனர்.

அதுல்யாவின் காதலுக்கு ஆரி பச்சைக் கொடி காட்ட, அதுல்யாவை பெண் பார்க்க வருகின்றனர்.

அப்போது அதிக வரதட்சணை கேட்கின்றனர். வேறுவழியில்லாமல் சித்தாரா சம்மதிக்கிறார்.

எனவே ஒரு கிராமத்தில் உள்ள தமது பூர்விக சொத்தான ஒரு பழைய திரையரங்கம் ஒன்றை விற்று அதுல்யாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

அதன்படி காளி வெங்கட்டுடன் அந்த கிராமத்திற்கு சென்று அந்த தியேட்டரில் தங்குகிறார் ஆரி.

அங்கு ஆரியின் கனவில் ஒரு சிலர் கொல்லப்பட அது நிஜத்திலும் நடந்தேறுகிறது. அப்போதுதான் அங்கு பேய் இருப்பதை ஆரி உணகிறார்.

அதை வீடியோ எடுத்து பார்க்கிறார். வீடியோவில் இவர்தான் இருக்கிறார்.
அப்படியென்றால் இவர்தான் பேயா?

பலரையும் இவரே கொல்ல என்ன காரணம்? பேய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அதுல்யாவின் திருமணம் நடைபெற்றதா? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

பொதுவாக பேய் படங்கள் எல்லாம் பங்களாவில்தான் இருக்கும். ஆனால் இதில் பேய் தியேட்டர் இதுவே புதுசு.

ஆரியின் காதல் மற்றும் ஆக்ஷன் இரண்டிலும் மாறுபட்டு இருக்கிறார்.

இவரே பேயாக உணர்ந்தபின் இவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சி. க்ளைமாக்ஸ காட்சி அந்த பேய் உடல் மாறும் நிலை வித்தியாசமான முயற்சி.

காதல் காட்சிகளில் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார் ஆஷ்னா.

பிற்பாதியில் பேயாகவும் அழகு தேவதையாகவும் வந்து மிரட்டல் செய்திருக்கிறார் மாசூம் சங்கர். பேயை விட கவர்ச்சியில் ரசிகர்களை மிரட்டி விடுவார்.

காளி வெங்கட்டின் காமெடி ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகிறது. இதில் புதிதாக செக்ஸ்க்கு ஆணி அடித்தல் என புது விளக்கம் கொடுத்துள்ளார்.

அதுல்யா அழகாக வருகிறார். நிறைய காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

எம்ஜிஆர் காலத்து லதா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சித்தாரா.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

’இசையமைப்பாளர் ஸ்ரீயின் இசையில் ”கண்கள் ரெண்டும்” என்ற மெலடி பாடல் ரசிக்க வைக்கிறது.

ஆட்டம் போடவும் வைப்பவேன். தலையாட்டி ரசிக்கவும் வைப்பேன் என ஸ்ரீகாந்த் தேவா இதில் நிரூபித்து இருக்கிறார்.

கவிஞர் முருகன் மந்திரம் எழுதிய சங்கி மங்கி லேடி கபாலி தாடி.. பாடல் தாளம் போட வைக்கிறது. ராபர்ட் மாஸ்டரின் நடனமும் அதற்கு பலம் சேர்க்கிறது.

பேய் படங்களுக்கு பின்னணி பிரதானம். அதையும் மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் நெளசத் கேமரா திரையரங்கினை பல இடங்களில் மிரட்டலை காண்பிக்க தவறவில்லை.

வழக்கமான பேய் படமாக இல்லாமல் மிரட்டலான பேய் படத்தை கொடுத்துள்ளார் இசாக்.

நாகேஷ் திரையரங்கம் – நம்பி போகலாம்

Comments are closed.

Related News

ஒரே ‘ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை…
...Read More
ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் இராஜேந்திர…
...Read More
நெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து…
...Read More