ஹாட்ஸ் ஆஃப் ஆர்யா… மகாமுனி விமர்சனம் (3.75/5)

ஹாட்ஸ் ஆஃப் ஆர்யா… மகாமுனி விமர்சனம் (3.75/5)

மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் 8 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் மகாமுனி. இதில் ஆர்யா இரு வேடங்களில் நடித்துள்ளர்.

மகாதேவன் & முனிராஜ் இருவரும் இரட்டையர்கள். சிறுவயதிலேயே தாயை இழந்தவர்கள் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

மகா என்ற ஆர்யா அரசியல்வாதிகளின் கொலை திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுப்பவர். இவரின் மனைவிதான் இந்துஜா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

மற்றொரு முனி என்ற ஆர்யா மிகவும் சாது. விவேகானந்தர் வழியில் பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிக்க நினைப்பவர். பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார். இவரின் அம்மா ரோகினி.

இந்த ஆர்யாவை ஒன் சைட்டாக லவ் செய்கிறார் மகிமா நம்பியார்.

ஒரு கட்டத்தில் இரு ஆர்யாவும் மகாமுனியாய் மாறுவதுதான் படத்தின் பலம். அது என்ன? என்பதுதான் கதை.

கலைஞர்கள்..

நான் கடவுள், அவன் இவன் படத்திற்கு பிறகு அருமையான நடிப்பை கொடுத்துள்ளார் ஆர்யா. கண்களில் கோபம், பாசம், திட்டம், செயல், சாந்தம் என அனைத்தும் கொடுத்துள்ளார். நிச்சயம் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.

இதுவரை நாம் பார்க்காத மகிமா, இந்துஜாவை இந்த படத்தில் பார்க்கலாம். ஜாலியாக இருக்கும் போது ஒன்று, சோகமாக இருக்கும் போது ஒன்று என வெரைட்டி காட்டியிருக்கிறார் இந்துஜா.

மகிமா.. மெகா மா.. என்ற வகையில் வெளுத்து கட்டியிருக்கிறார். ஆர்யாவை கொல்ல திட்டமிட்ட தன் அப்பாவை கண்டிக்கும் காட்சிகளிலும் பெண் பார்க்க வந்தவனை திட்டும் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் இளவரசு இவரின் மனைவியாக தீபா அக்கா, ஜெயபிரகாஷ், ரோகிணி, அருள்தாஸ், மதன்குமார், காளிவெங்கட், GM சுந்தர், கலக்கப்போவது யாரு யோகி என அனைவரும் கச்சிதம்.

சத்யா போலீஸ், இளவரசு, ஜெயப்பிரகாஷ் அடியாள்களின் கேரக்டர்களும் செம.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எஸ் எஸ் தமனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. அதிலும் இடைவேளை காட்சிகளில் இசை மிரட்டல்.

அருள் பத்மநாபனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இது இவரது முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

சாபு ஜோசப்பின் எடிட்டிங் ஓகே. 2ஆம் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டியிருக்கலாம்.

கலை – ரெம்போம் பால்ராஜ். ஆக்‌ஷன் பிரகாஷின் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் பேசும்படி உள்ளது.

இயக்கம் பற்றிய அலசல்…

படத்தின் பலமும் பலவீனமும் மெதுவாக நகரும் காட்சிகளே. இந்த படத்திற்கு இதுபோன்ற திரைக்கதைதான் வேண்டுமென்றாலும் சில காட்சிகளில் அதுவே சோதிக்கிறது. ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் வரை நம்மை ஒருவித பதட்டத்துடனேயே பயணிக்க வைத்துள்ளார் டைரக்டர் சாந்தகுமார். சபாஷ் சார்.

படத்தின் வசனங்கள் ப்ளஸ். அதில்…

நிஜ ரவுடி தன்னை காண்பிச்சுக்க மாட்டான். வெத்து வேட்டுக்கள் தான் தன்னை அடையாளப்படுத்த கத்தி கொண்டே இருப்பார்கள்..

கடவுள் இருக்காரா? இல்லையா? என்பதற்கான விளக்கம் சூப்பர்.

இளவரசு, அருள்தாஸ், போலீஸ் ஆகியோர் குடித்துவிட்டு பேசும் அந்த காட்சிள் கைத்தட்டலை அள்ளும்.

அதுபோல் டாக்டர் காளி வெங்கட் காட்சிகள், போலீஸ் திட்டம் போடும் காட்சிகள், ஜெயப்பிரகாஷ் காட்சிகள் என அனைத்தும் ரசிக்கும் ரகம்.

இரட்டையர் கதை என்றாலும் அதில் காதல், குடும்பம், பாசம், போலி டாக்டர் அரசியல், சாதி வன்மம், திராவிட அரசியல், அடிதடி வெட்டுக்குத்து என்று சமாச்சாரங்களைக் கலந்து கொடுத்திருப்பது சாந்தகுமாரின் சமார்த்தியம்.

ஆக மகாமுனி… ஹாட்ஸ் ஆஃப் ஆர்யா

Magamuni review rating

Comments are closed.

Related News

சினிமா பல விசித்திரமான குணங்களைக் கொண்டது.…
...Read More
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின்…
...Read More