மெர்க்குரி விமர்சனம்

மெர்க்குரி விமர்சனம்

நடிகர்கள் : பிரபுதேவா, இந்துஜா, ரம்யா நம்பீசன், சனத் ரெட்டி மற்றும் பலர்
இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: திரு
எடிட்டிங்: விவேக் ஹர்சன்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு: பென் மூவீஸ்

கதைக்களம்…

இந்த படத்தில் வசனங்களே இல்லை என்பதுதான் செம ஹைலைட். இப்படியொரு கதைக்களத்தை தேர்ந்தெடுப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். எனவே படக்குழுவிற்கு முதலிலேயே பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

படத்தின் நாயகன் பிரபுதேவா கண் பார்வையற்ற ஒரு கிடார் கலைஞர்.

திகில் படங்கள் என்றாலே காடு இல்லாமல் இருக்குமா..? அந்த மலைக்காட்டில் தன் மனைவி ரம்யா நம்பீசனுடன் வாழ்கிறார் பிரபுதேவா.

ஒருநாள் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அவருக்கு என்ன ஆனதோ? என்று தெரியாமல் வாழ்கிறார் ரம்யா.

மற்றொரு புறம் மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா, தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் ஆகிய 4 ப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள்.

இவர்கள் நால்வரும் ஒரு தனி வீட்டில் வாழ்கிறார்கள்.

இவர்கள் ஒரு நாள் வெளியே செல்லும்போது வழியே ஒரு சடலம் கிடக்கிறது. எனவே அந்த பிணத்தை புதைக்கிறார்கள்.

பின்னர் அதே இடத்திற்கு வேறு ஒரு பொருளை தேடுவதற்கு போகும்போது சடலத்தை புதைத்த இடத்தில் காணாமல் தேடுகிறார்கள்.

இதனிடையில் இந்துஜாவையும் காணவில்லை. இவர்களை தேடி செல்லும் போது ஒரு அமானுஷ்யத்தை பார்க்கிறார்கள்.

அதன்பின்னர் என்ன நடக்கிறது? கொன்றது யார்? இந்துஜா என்ன ஆனார்? என்பதுவே மீதி கதை.

கேரக்டர்கள்…

நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையில் பிரபுதேவா. பார்வையாலேயே கதை சொல்கிறார். கண்கள் முதல் உடல் என அனைத்தையும் நடிக்க செய்திருக்கிறார்.

இவர் எப்படி கண்பார்வையை இழந்தார் என்பதற்கே ஒரு ப்ளாஷ்பேக் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

ரம்யாவுக்கு கேமியோ ரோல் மட்டுமே. கிடைத்த பணியை செய்திருக்கிறார்.

மேயாத மானில் அசத்திய இந்துஜா இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ப்ரெண்ட்ஸ் என்றால் பேசாமல் இருக்க முடியுமா? அப்படியிந்தும் நால்வரும் பேசாமல் இருந்து நடிப்பை பேச வைக்க முயற்சித்துள்ளனர். சபாஷ்.

இவருடன் தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என நண்பர்களின் நடிப்பும் கச்சிதம்.

இவர்களுக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது என்பதும் படத்தின் கதைக்களத்திற்கு ப்ளஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் வசனங்கள் இல்லையென்றால் அந்த காட்சிக்கு பின்னணி இசையே உயிரூட்டும்.

அதை சிறப்பாக படம் முழுவதும் கொண்டு சென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை மிரட்டல்.

திருவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். சவுண்ட் டிசைன் மற்றும் கலை பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
கமல் நடித்த பேசும் படம் என்ற படத்திற்கு பிறகு டயலாக் இல்லாமல் படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

க்ளைமாக்ஸ் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முதல்பாதியில் வரும் சோர்வை தடுத்திருக்கலாம்.
முக்கியமான படத்தின் நீளத்தை குறைத்திருப்பது ரசிக்கும் ரகம்.

கார்ப்பரேட்டின் கம்பெனிகளின் கழிவுகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைக்கிறார் டைரக்டர்.
கார்ப்பரேட்டு கம்பெனிகளால் பாதிக்கப்பட்டோருக்கு இப்படத்தை சமர்ப்பணம் செய்துள்ளனர்.

மெர்க்குரி.. வித்தியாசமான முயற்சி

Comments are closed.