களவாடிய பொழுதுகள் விமர்சனம்

களவாடிய பொழுதுகள் விமர்சனம்

நடிகர்கள் : பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்
இயக்கம் : தங்கர்பச்சான்
இசை : பரத்வாஜ்
ஒளிப்பதிவு: தங்கர்பச்சான்
எடிட்டிங்: ஆண்டனி
பி.ஆர்.ஓ. : டைமண்ட் பாபு
தயாரிப்பு: கருணாமூர்த்தி

கதைக்களம்…

கடந்த 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த காதல் படங்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்பதால் இதை தைரியாக வெளியிட்டுள்ளனர். சரி இனி கதைக்கு வருவோம்.

நிச்சயம் நீங்கள் அழகி படம் பார்த்திருப்பீர்கள். பள்ளிப் பருவத்தில் காதலித்த இருவர் காதலில் தோல்வியுற்று பிரிகின்றனர்.

பின்னர் வேறு ஒரு திருமண பந்தத்தில் இணைந்து விடுவார்கள். சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் வாழ்க்கையில் சந்திப்பார்கள். அதானே.

இப்படக்கதையும் அதுதான். ஆனால் இதில் நாயகி பூமிகா வசதியாக இருக்கிறார். நாயகன் பிரபுதேவா ஏழை டிரைவாக வருகிறார். பிரகாஷ்ராஜ் பூமிகாவின் புருசனாக வருகிறார்.

சில வருடங்களுக்கு பிறகு சந்தித்த காதலர்கள் என்ன செய்தார்கள்? என்பதே இதன் மீதிக்கதை.

DRxYI2qU8AAeQpy

 

கேரக்டர்கள்…

பல படங்களில் நடனமாடி மகிழ்வித்த பிரபுதேவா இதில் நன்றாக நடித்து நம்மை மகிழ்விக்கிறார்.

அவருக்காக ஒரு குத்து பாடல் கொடுத்து ஆடவைத்து அதிலும் சமூக கருத்துக்களை சொல்லி நம்மை கவர்ந்துவிடுகிறார் டைரக்டர்.

ஏழ்மையிலும் நேர்மையாக நடப்பது, அரசியல் பேசுவது என ரவுண்ட் கட்டி அடித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு இப்படியொரு படம் இனி கிடைக்குமா தெரியவில்லை. ஒரு பக்கம் மனைவி மகள் குடும்பம், மறுபக்கம் முன்னாள் காதலி, முதலாளி என உணர்ந்து நடித்திருக்கிறார்.

அன்பான மனைவியாகவும், அழகிய காதலியாகவும், பொறுப்பான முன்னாள் காதலியாகவும் என அனைத்திலும் ஜொலிக்கிறார் பூமிகா.

தன் காதலன் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என செய்யும் முயற்சிகள் பலருக்கு பலவற்றை நினைவுப்படுத்தும்.

கணவருக்கு துரோகம் செய்யாமல் காதலனுக்கு உதவும் கேரக்டரில் பூமிகா உயர்ந்து நிற்கிறார்.

தன் உயிரை காப்பாற்றிய பிரபுதேவாவுக்கு உதவ நினைக்கும் கேரக்டரில் பிரகாஷ்ராஜ்.

தன் மனைவிக்கு முன்பு காதல் இருந்தது என்பதை தெரிந்துக் கொண்டு, எல்லா தப்புக்கும் நான்தான் காரணம் என நினைத்து வேதனைப்படுவது பக்குவப்பட்ட நடிப்பு.

கடைசி வரை பூமிகா யார்? என்று தெரியாமல் அப்பாவி மனைவியாக பிரபுதேவாவின் மனைவியாக நடித்துள்ளவர் ஆச்சரியப்பட வைக்கிறார்.

கணவனை கண்டிப்பதும், பணக்கார பூமிகா கொடுக்கும் பணத்தை வாங்கி வசதியாக வாழ நினைப்பதும் ஒரு சராசரி பெண்னுக்கே உள்ள குணாதிசயம்.

 

DSC1pVwVQAAiaJJ

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பரத்வாஜ் இசைய்யில் அழகே அழகழகே பாடல் அருமை. சேரன் எங்கே சோழன் எங்கே பாடல் சமூக கருத்துள்ள பாடல்.

மற்றொரு பாடலில் இங்கே ஒருத்தனுக்கு ஒருத்தியும் காவியம்தான். ஐந்து பேருக்கு ஒருத்தி என்பதும் காவியம்தான் என்பதை பாடல் வரிகள் மூலம் அருமையாக புரிய வைத்துள்ளார் வைரமுத்து.

திருமணத்திற்கு பின்பு பழைய காதலர்கள் சந்தித்தால் ஏதாவது தப்பு நடந்துவிடுமோ? என்ற நோக்கத்தில் கதையை சொல்லாமல் கண்ணியத்தோடு கதையை நகரத்தியிருக்கிறார் தங்கர்பச்சான்.

ஆனால் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

அழகி படத்தின் இரண்டாம் பாகத்தை மற்றொரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான்.

எத்தனை காதலிகளுக்கு தங்கள் பழைய காதலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் அருகருகே வசிப்பது கிடைக்கும் என்ற வசனங்கள் உருக வைக்கும்.

களவாடிய பொழுதுகள்… காதல் மனதுகள் களவாடப்படும்

Comments are closed.

Related News

அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு…
...Read More