தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
விளையாட்டு துறையில் திறமையானவர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகளே படத்தின் கதை. அதை எப்படி மாற்றுத்திறனாளி நாயகன் எதிர்கொள்கிறார் என்பதே கதை.
இன்று மார்ச் 11ல் சோனி லைவ்வில் வெளியாகியுள்ளது.
கதைக்களம்..
தடகள வீரர் ஆதி (ரன்னிங் அத்லெட்டிக்). ஒருமுறை விபத்தில் தன் ஒற்றை காலை இழக்கிறார். அந்த விபத்திலேயே தன் தந்தை பிரகாஷ்ராஜை இழக்கிறார்.
கால் இல்லை என்பதால் உயிருக்கு உயிராய் காதலித்த பெண்ணையும் ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் அகான்ஷா சிங்கை திருமணம் செய்து கொண்டாலும், சில வருடங்களாகவே அவருடன் பேசாமல் இருக்கிறார்.
தான் தவறவிட்ட ஓட்டத்தை ஒரு ஏழை பெண் கிரிஷா குருப் மூலம் நிறைவேற்ற துடிக்கிறார். ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மிகப்பெரும் ஆளுமையான நாசரை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மேலும் சில உயர்ஜாதியினரால் தடைகள் வருகிறது.
அவர்களை எதிர்த்து போராட முடிந்ததா? ஜெயித்தாரா.? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
மிருகம், ஈரம், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆதி. இந்த படத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார் . கால் முடியாமல் அவர் படும் அவஸ்தைகள் நம் கண்களை குளமாக்கும். கால் இல்லாவிட்டாலும் தன்னால் ஒருவரை ஓட வைக்கமுடியும் என்பதை உணர்வுபூர்வமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
சேலையை விட மாடர்ன் உடையில் நன்றாக இருக்கிறார் அகான்ஷா சிங். க்ளைமாக்ஸ் காட்சியில் அகான்ஷா ஸ்கோர் செய்திருக்கிறார்.
கதை ஓட்டத்தின் நாயகியே கிரிஷா குருப். இவர் கோலி சோடா 2 படத்தில் நடித்தவர். இந்த ரன்னிங் பயிற்சியை இவர் மேற்கொண்டு நடித்திருப்பது சூப்பர். அலட்டிக் கொள்ளாமல் அதே சமயம் அசால்ட்டாக செய்துள்ளார் கிரிஷா.
ஹீரோவோடு படம் முழுக்க வருகிறார் முனீஷ்காந்த். கொடுத்த கேரக்டரில் அதிகமாகவே ஸ்கோர் செய்து மனதில் நிறைந்துள்ளார்.
நாசர், பிரகாஷ்ராஜ், மைம் கோபி ஆகியோரின் நடிப்பை எப்போதும் போல பாராட்டலாம்.
பத்திரிகையாளர் ராமானுஜம் கேரக்டரில் தயாரிப்பாளர் கார்த்திகேயன். யார் இவர் என கவனிக்கத்தக்க வகையில் யதார்த்தமாக நடித்துள்ளார்.
டெக்னீஷியன்கள்…
இளையராஜாவின் இசையில் பின்னனி இசை சூப்பர். ரன்னிங் ரேஸ் சமயத்தில் நம்முடைய ரத்த ஓட்டத்தையும் இசை அதிகரிக்க செய்துள்ளது.
படத்தின் ஆரம்ப பாடல் ஓகே. மற்றவை பெரிதாக எடுபடவில்லை.
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு இரண்டும் சிறப்பு. தேவையில்லாத காட்சிகள் இல்லை எனலாம். ரன்னிங் ரேஸ் காட்சிகள் கண்களுக்கு விருந்து. அதை படமாக்கிய விதமும் சூப்பர்.
விளையாட்டு துறையில் ஜாதி, அரசியல் என பல படங்களில் பார்த்தாலும் அதை வித்தியாசமாக ஒற்றை கால் நாயகனை வைத்து கொடுத்திருப்பது நிச்சயம் பாராட்டை பெறும். அதற்காகவே இயக்குனர் பிரித்வி ஆதித்யாவிற்கும் மற்றும் நாயகன் ஆதிக்கும் வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும்.
ஆக.. இந்த கிளாப்.. நிச்சயம் கிளாப் தட்டி பாராட்டலாம்.
Clap movie review and rating in Tamil