First on Net நச்சுன்னு நாலு காதல்.. சில்லுக்கருப்பட்டி விமர்சனம் 3.75/5

First on Net நச்சுன்னு நாலு காதல்.. சில்லுக்கருப்பட்டி விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

இந்த படத்தை 4 விதமாக காதல் கதையாக பிரிந்து தந்திருக்கிறார்.

இடைவேளைக்கு முன்னர் 2 காதல்.. இடைவேளைக்கு பின்னர் 2 காதல்..

15 வயது காதல்… 25 வயது காதல்… 40 வயது காதல்…. 60 வயது காதல்…

முதல் அத்தியாயம் பிங்க் பேக்’

2வது அத்தியாயம் ‘காக்கா கடி’

3வது அத்தியாயம் ‘டர்ட்டிள் வாக்’

4வது அத்தியாயம் ‘ஹே அம்மு’

முதல் கதையில்…

குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கும் பிங்க் ப்ளாஸ்டிக் பையில் குப்பைகளை போடும் ஒரு சிறுமிக்கும் உள்ள ஈர்ப்பு.

தந்தை அன்பாக கொடுத்த காஸ்ட்லியான மோதிரத்தை தவறவிடும் அந்த சிறுமி தவிக்க, குப்பை பொறுக்கும் அந்த பையன் எப்படி அதை அவளிடம் சேர்த்தான் என்பதே கதை.

2வது கதையில்…

வாடகை காரில் பயணம் செய்யும் கேன்சர் இளைஞன் மற்றொரு பயணி பெண் இடையே உண்டான உணர்வுபூர்வமான கவிதை இது.

3வது கதையில்…

திருமணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை கடந்த கன்னிக்கும்…. பேரன் பேத்திகளை பார்த்த மனைவியை இழந்த ஒருவருக்கும் இடையே உருவான முதிர்ந்த காதல் கதை இது.

4வது கதையில்…

வீடே சொர்க்கம் என வாழும் ஒரு இல்லத்தரசிக்கும் (சுனைனா) மனைவியுடன் உடலுறவே சொர்க்கம் என வாழும் சமுத்திரக்கனிக்கும் உள்ள கதை இது..

வசனங்கள் அருமை…

நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது தான். சின்ன சின்ன உணர்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். குப்பை கிடங்கு காதலில் சின்ன சின்ன பசங்களின் டயலாக்குகள் சூப்பர்.

கார் காதலில்…. கட்டி இருக்குறவனுக்கு எப்படி கட்டு கொடுப்பாங்க…

உங்களை சைட் அடித்தவர்கள் கொடுத்த உங்க காதல் பரிசுகளை உங்க புருசனுக்கு கிட்ட காட்டுங்க.. நீங்க எவ்வளவு மதிப்புமிக்கவர் என்பது அவருக்கு தெரியட்டும்.. என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல்கள் அள்ளும்.

30 வருச தாம்பத்தியத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாம எதையும் வீசி எறிய மாட்டோம். ஆனால் இப்போ அப்படியில்லை…
இருட்டுல இன்பம.. வெளிச்சத்துல வெறுமை… இப்படி பல வசனங்கள் உள்ளன.

இந்த கேரக்டர்களில் நடித்த சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் என அனைவருமே கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

நாலு காதல் நாலு பாட்டு வைக்காமல் ஒரு பாட்டை வைத்த இயக்குனரை பாராட்டலாம்.

அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஞானமூர்த்தி என ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவர் என நான்கு பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அத்தனையும் அழகு.

இயக்குநர் ஹலிதாவே எடிட்டிங் செய்துள்ளதால் காட்சிகள் அழகு.

இவ்வாறாக 4 தனி கதைகளை படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவை நான்கிலும் அன்பை மையப்படுத்தி எடுத்துள்ளார்.

இதில் வேறு விதமான ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Sillukaruppatti review rating

பழிவாங்கும் பேய்… கைலா விமர்சனம்

பழிவாங்கும் பேய்… கைலா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏதாவது ஒரு அழகான இடத்தை பார்த்துவிட்டால் உடனே அதை போட்டோ எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் தானா நாயுடு.

இவர் ஒரு பங்களா ஒன்றை போட்டோ எடுக்கிறார். அதனை பார்த்த இவரது தோழிகள் இது பேய் வீடு. இதனை போட்டோ எடுத்தவர்கள் வேண்டுமானால் உயிரோடு இருக்கலாம். ஆனால் அவரது நெருங்கிய உறவுகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கின்றனர்.

இதற்கு பல சம்பவங்களையும் ஆதாரத்துடன் கூறுகின்றனர்.

இதை நிரூபிப்பது போல அந்த வீட்டின் வாசல் நிறைய கொலைகள் நடக்கிறது.

போலீசார் இதனை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள்.

அந்த ஊர்வாசிகளோ அந்த பங்களா பேய் தான் கொல்கிறது என்கின்றனர்.

போலீசால் அந்த கொலைகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்பதால் குழப்பத்தில் உள்ளனர்.

தானா நாயுடுக்கு தான் எழுதும் கதையில் வரும் கேரக்டர்கள் எல்லாம் கொல்லப்படுவதும் அவை ஒரே தேதியில் நடப்பதால் சந்தேகம் ஏற்படுகிறது.

இதனையடுத்து இவரும் சில முயற்சிகளை மேற்கொள்கிறார்.
கொலைக்கான காரணம் என்ன

நாயகியாக தானா நாயுடுவும் வில்லனாக பட இயக்குனர் பாஸ்கர் சீனுவாசனும் நடித்துள்ளனர். இருவருக்கும் படத்தில் நல்ல போட்டி. நாயகி தானா அமைதியாக இருந்து காரியம் சாதிப்பதில் வல்லவராக இருக்கிறார்.
இதற்கு மேல் அவரின் கேரக்டர் குறித்து சொன்னால் ரகசியம் லீக்காகி விடும்.

போலீசாக அன்பாலயா பிரபாரன், கைலாவின் அம்மாவாக கௌசல்யா நடித்துள்ளனர். தங்கள் கேரக்டர்களில் இவர்கள் கச்சிதம்.

பேபி கைலாவும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

பரணி செல்வத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரவனின் இசை பேசப்படும்.

வழக்கமான பேய் கதையாக இல்லாமல் இன்னும் சில திருப்பங்களை கொடுத்திருந்தால் ரசிகர்களுக்கு கைலா விருந்து கிடைத்திருக்கும்.

பாஸ்கர் சீனுவாசன் சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

Kaila aka Kayla aka Khyla review

சிஸ்டம் சரியில்ல… ஹீரோ விமர்சனம் (3/5)

சிஸ்டம் சரியில்ல… ஹீரோ விமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

2006 ஆண்ட நடந்த +2 பொது தேர்வில் 1200க்கு 1156 மார்க் எடுக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனாலும் அந்த மார்க்கை பார்த்தால் அப்பா திட்டுவார் என பயப்படுகிறார்.

அந்த நேரத்தில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஆப்ரேசனுக்காக 1 லட்சம் தேவைப்படுகிறது. அப்பாவின் உயிரை காப்பாற்ற பணத்துக்காக தன் மார்க் ஷீட்டை விற்றுவிடுகிறார்.

உயிர் பிழைத்த அப்பா இவரை திட்டி வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். இதனால் தவறான வழியில் செல்கிறார் சிவகார்த்திகேயன்.

டூப்ளிகேட் மார்க் ஷீட்டுக்களை பிரிண்ட் செய்வதும் பெரிய பெரிய காலேஜ்ஜில் சீட்டுக்களை பெற ப்ராடு செய்வதுமாக இருக்கிறார்.

அப்போது தான் தன் தங்கை போன்ற இவானாவுக்கு உதவ நினைக்கிறார். அவரை ஏரோ நாட்டிக்கல் படிக்க வைக்க நினைக்கிறார். ஆனால் மார்க்கோ குறைவாக எடுத்துள்ளார்.

அந்த சூழ்நிலையில் பெயில் ஆன மாணவர்களை வைத்து அர்ஜீன் நடத்தும் பயிற்சி கூடத்தில் இவானா கண்டுபிடித்த சால்ட் வாட்டரில் ஓடும் மோட்டார் இருப்பது தெரிய வருகிறது.

அதனை வைத்து சீட்டும் வாங்குகிறார் சிவா. ஆனால் இவானா கண்டுபிடிப்பு மெஷின் நிஜமல்ல பொய் என வழக்கு போட அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார்.

இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாற நினைக்கிறார். அப்படி என்ன செய்தார்? அர்ஜீன் யார்? கல்வி சிஸ்டமே சரியில்லாத இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தார் சிவா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வேலைக்காரன் சாயலில் சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு படம் இது. படம் முழுவதும் சீரியசாகவே இருக்கிறார். முகத்தில் வேற ப்ரெஷ்னஸ் இல்லை. ரொமான்ஸ் சுத்தமாக இல்லை. ஆக்சனும் பெரிதாக இல்லை. அடி வாங்குகிறார்.

திறமை இருக்கும் மாணவர்கள் வெளிநாடு சென்றுவிட்டால் நம் நாட்டின் நிலைமை என்னாகும் என பேசும்போது இளைஞர்களிடம் கைதட்டு வாங்குகிறார். அவரிடம் இருக்கும் கலகலப்பு இதில் மிஸ்ஸிங்.

கல்யாணி பிரியதர்சன் நாயகியாக நடித்துள்ளார். அழகாக அறிமுகம் தமிழில். ஆனால் ரொம்ப சின்ன பெண்ணாக இருப்பதால் சிவாவுக்கு ஜோடியாக செட்டாகவில்லை. அதுபோல் அவரது டப்பிங் குரலும் நான் சிங்கியே செல்கிறது.

ஆக்சன் கிங் அர்ஜீன் அசத்தல். ஒரு மனிதனை அழித்தாலும், அவனுடைய ஐடியாலஜியை அழிக்க முடியாது என அவர் கொடுக்கும் பயிற்சிகள் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு.

பெயில் ஆன மாணவர்களுக்கு அவர்களின் திறமை அறிந்து பயிற்சி கொடுத்தபின் அவர்களை வெளிநாட்டுக்கு அர்ஜீன் பேக் அப் செய்வது ரொம்ப ஓவர்.

இளைஞர்கள் நம்பும் அவர் இந்தியாவை நம்பவில்லை. அது சிவகார்த்திகேயன் வந்து சொன்ன பின்புதானா அவருக்கு தெரியும்.? சில காட்சிகளை பார்க்கும்போது ஜென்டில்மேன் படம் நினைவுக்கு வருகிறது.

ரோபோ சங்கர் இருந்தும் காமெடி ஒரு துளி கூட இல்லை. இதில் நாங்களே சிரிச்சிக்கிறோம் என அவர்களே சிரித்துக் கொள்கிறார்கள்.

வில்லனாக அபேய் தியோல் மிரட்டலான நடிப்பு. மாணவர்கள் படிக்கலாம். ஆனால் கற்கக்கூடாது என்று இவர் எடுக்கும் முடிவுகள் நாட்டில் கல்வியின் வியாபார ஊழலை காட்டுகிறது.

மதியாக நடித்துள்ள இவானா கண்டிப்பாக ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார். அப்பாவியான முகம். அழகான தேர்வு. அருமையான கண்டுபிடிப்பு.

இவர்களுடன் அழகம் பெருமாள், குமரவேல், நளினா, ரிஷிகாந்த் ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பொன் பார்த்திபன் மற்றும் அந்தோனி பாக்யராஜின் வசனங்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தும்.

யுவனின் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி பெரிதாக கை கொடுக்கவில்லை. என்னாச்சு ப்ரோ..? க்ளைமாக்ஸ் பாடல் மட்டும் ஓகே.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.

கலையை செல்வகுமார் செய்துள்ளார். கண்டுபிடிப்புகள் சாதனங்களை அவர் செய்த விதம் பாராட்டுக்குரியது.

இரும்பு திரை படத்தை இயக்கிய மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் செல்போன் ஆபத்தை கூறியிருந்தார்.

இதில் நாம் படிக்கிறோம் ஆனால் கற்கவில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். அவரும் ஓரிரு காட்சியில் நடித்துள்ளார்.

கல்வி ஊழலை ஒழிக்க திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

மாணவர்களை பெருமளவில் வைத்திருக்கும் இந்தியாவில் வெறும் 12000 கண்டுபிடிப்புகளே உள்ளன. ஆனால் அந்த மாணவர்களை கூட யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பதை முறையாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதை சூப்பர் ஹீரோ கதையாக வைத்து சொல்ல முற்பட்டு கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். இப்படி எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கூட லாஜிக் இல்லாமல் மேஜிக் போல சொல்லிவிட்டார் என்பது தான் மைனஸ் ஆக அமைந்துவிட்டது.

அதற்கு சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்திருப்பது கூட குறையாகவே உள்ளது. சுயமாக சிந்திப்பவனே சூப்பர் ஹீரோ என சொல்லி முடித்துள்ளார். கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த ஹீரோவை பிடிக்கும்.

மற்றபடி நம்மில் எத்தனை திறமையானவர்கள் இருந்தாலும் நம் சிஸ்டம் சரியாகும் வரை ஒன்றும் நடக்க போவதில்லை.

ஆக இந்த ஹீரோ…. சிஸ்டம் சரியில்ல..

ட்விஸ்ட் ப்ரோ… தம்பி விமர்சனம் 3.25/5

ட்விஸ்ட் ப்ரோ… தம்பி விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

MLA சத்யராஜ் & சீதா தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகள் (ஜோதிகா) ஒரு மகன்.

இவர்களின் மகன் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி போய்விடுகிறார். தன் தம்பிக்காக 15 வருடங்கள் காத்திருக்கிறார் ஜோ. தன் தம்பி வரும்வரை திருமணம் செய்துக் கொள்ளாமலும் இருக்கிறார்.

இந்த நிலையில் கோவாவில் அடிப்பட்ட பிராடு கார்த்தியை உங்கள் மகன் கிடைத்துவிட்டான் என சொல்கிறார் போலீஸ் இளவரசு.

சத்யராஜீம் இவன் என் மகன் தான் என வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஆனால் கார்த்தி ஒரு திருடன் என்பது பாட்டி சௌகார் ஜானகிக்கு மட்டும் தெரிந்து விடுகிறது. ஆனால் இவரால் பேசவும் முடியாது. காதும் கேட்காது.

கார்த்தி வீட்டிற்குள் நுழைந்த பின் என்ன ஆனது? திருடன் என தெரிந்தும் கார்த்தியை சத்யராஜ்க்கு வீட்டுக்கு இளவரசு அனுப்பியது ஏன்? ஜோதிகா என்ன செய்தார்? கார்த்தி அங்கேயே தங்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

வீட்டில் கார்த்தி நுழைந்த பின் ஒவ்வொரு நபரையும் அவர்கள் யார்? என தெரிந்துக் கொள்ள அவர் செய்யும் முகபாவனைகள் சூப்பர். ஜோதிகாவின் பாசத்துக்காக ஏங்கும் காட்சிகளில் தம்பியாக ஜொலிக்கிறார். ஒரு பைட் தான் என்றாலும் சூக்சன் காட்சி ஓகே.

எப்போதும் ஜோதிகாவுடன் ஒட்டிக் கொள்ளும் குறும்பு புன்னகை இதில் மிஸ்ஸிங். ராட்சசி பட பிரின்ஸ்பால் போல இருக்கிறார். அதற்கு காரணம் க்ளைமாக்ஸில் உள்ளது. மற்றபடி கொடுத்த கேரக்டரில் குறையில்லை.

இவரது டியூசன் மாணவராக வரும் குட்டி பையன் அஸ்வத் நம் எல்லாரையும் கவர்ந்து விடுகிறான். சூப்பர் டா குட்டா. அதுபோல் அவனின் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று.

நீண்ட நாளைக்கு பிறகு அரசியல்வாதியாக வில்லத்தனம் காட்டியிருக்கிறார் சத்யராஜ். சபாஷ் சார். அழகான அன்பான அம்மா சீதா.

வீல் சேரில் வந்தாலும் சௌகார் ஜானகி கேரக்டரில் நிற்கிறார். நாயகி நிகிலா விமல். படத்திற்கு நாயகி வேண்டும் என்கிற அளவில் மட்டுமே நிற்கிறார்.

சின்ன வயது ஜோதிகாவாக அம்மு அபிராமி நடித்துள்ளார். சில காட்சிகள் என்றாலும் நிறைவான நடிப்பு.

இளவரசு, கம்பீரமான போலீஸ் ஆன்சன் பால், பாலா, ஹரிஷ் பெராடி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோவிந்த வசந்தா இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முக்கியமாக பட ட்விஸ்ட் வேகத்தை பாடல்கள் குறைக்கிறது. பின்னணி இசை கவர்கிறது.

படத்தின் ஆரம்ப காட்சியில் 4 லாரிகள் நிற்பதும் அதனை கேமரா படம் பிடித்த விதமும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் பணியில் எந்த குறையும் இல்லை.

எடிட்டர் வினாயக் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருந்தாலும் ஆமை வேக திரைக்கதை தான் மைனஸ்.

மலையாளத்தில் த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். எதிர்பாராத ட்விஸ்ட்டுக்களுடன் ஒரு குடும்ப கதையை கொடுத்துள்ளார்.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பாபநாசம் படத்தை நினைவுப்படுத்துகிறது.

கார்த்திக்கு அந்த வீட்டில் நடந்த சில பிரச்சினைகள் தெரிய வருகிறது. ஆனால் அது எப்படி? என்பதை சொல்லாமல் விட்டு விட்டார். மற்றபடி இந்த கிறிஸ்மஸ் விடுமுறைக்கு ஏற்ற குடும்ப படம் இது.

ஆக மொத்தம் இந்த தம்பி… ட்விஸ்ட் ப்ரோ..

காக்கி சட்டைக்கு கௌரவம்.. காளிதாஸ் விமர்சனம் 3.5/5

காக்கி சட்டைக்கு கௌரவம்.. காளிதாஸ் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு அபார்ட்மெண்டில் இருந்து திருமணமான பெண் ஒருவர் கீழே விழுந்து இறக்கிறார். தற்கொலையா? அல்லது கொலையா? என விசாரணையில் இறங்குகிறார் காளிதாஸ் (பரத்)

எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என குழப்பத்தில் இருக்கும்போதே அதே போல மற்றொரு பெண் இறக்கிறார்.

இதனால் டென்ஷனில் இருக்கிறார். வீட்டிற்குள் சரியாக செல்வதில்லை. மனைவி ஆன் ஷீத்தலை கூட கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கிறார்.

இந்த கேப்பில் இவரின் மேல் மாடி போர்சனுக்கு ஒரு பேச்சுலர் வருகிறார். அவருடன் ஆன் ஷீத்தல் நெருங்கி பழங்குகிறார்.

கொலையில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் மேலதிகாரி சுரேஷ் மேனன் விசாரணைக்கு வருகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? பரத் கொலையாளி யார் என கண்டுபிடித்தாரா? தற்கொலை எனில் அதற்கான காரணம் என்ன? தன் மனைவியுடன் நெருங்கி பழகும் ஆதவ் கண்ணதாசன் யார்? என பல கேள்விகளுக்கு விடையளிக்கும் படமே காளிதாஸ்.

கேரக்டர்கள்…

காவல்துறை பணியில் நேர்மை, உண்மை என இருக்கும் ஒருவர் எப்படியிருப்பார் என அசத்தியிருக்கிறார் பரத். கொலை, விசாரணை, என தினம் தினம் போராடும்போது வீட்டிற்குள் எந்த மாதிரியான பிரச்சினைகள் எழும் என்பதையும் தன் நடிப்பில் உணர்த்தியிருக்கிறார்.

சமூகத்தில் கம்பீரம்.. குடும்பத்தில் கண்ணீர் என பரவச நடிப்பை கொடுத்துள்ளார் பரத். ஹாட்ஸ் ஆஃப் காளிதாஸ்.

சுரேஷ் மேனன் வந்தபிறகு பரத் கேரக்டர் கொஞ்சம் வலுவிழந்துள்ளது. ஒரு பெரிய ஆபிசர் வரும்போது அதுதான் யதார்த்தம் என்றாலும் பரத் ரசிகர்களுக்கு அது ஏமாற்றம்தான்.

நாயகி ஆன் ஷீத்தலை சுற்றிதான் படத்தின் கதையே நகர்ந்துள்ளது என்பதை க்ளைமாக்சில் வைத்திருப்பது சூப்பர்.

ஆதவ் கண்ணதாசன் வந்த பிறகு படம் வேற லெவலில் எதிர்பார்ப்புடன் செல்கிறது. அதுபோல போலீஸ் துறையில் துரை சிங்கமாக வருபவர் படத்தை ரசிக்க வைக்கிறார்.

விஜய் டிவி தங்கதுரை முதல் 4 கைதிகள் அட்டகாசங்களும் ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை நம்மை திகிலாகவே வைத்துள்ளது. பாரதியார் பாடல்களை சில இடங்களில் சரியாக பயன்படுத்தியுள்ளார்.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கொலையாளி யார்? ஆதவ் ? பரத்? சுரேஷ் மேனன்? என நம்பை குழப்பிவிட்டு நாம் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்திருப்பது செம.

பொதுவாக தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் என்றாலே நிச்சயம் பன்ச் டயலாக் இருக்கும். அதிரடி சண்டை காட்சிகள், ரவுடிகள் இருப்பார்கள். ஆனால் இதில் எதுவுமே இல்லாமல் வெறும் விசாரணையை வைத்து வித்தியாசமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.

ஆக காக்சி சட்டைக்கு கௌரவம் கொடுத்துள்ளார் காளிதாஸ்.

Kaalidas review rating

வரலாற்றுப் பதிவு.. மெரினா புரட்சி விமர்சனம்

வரலாற்றுப் பதிவு.. மெரினா புரட்சி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் எத்தனையோ போராட்டங்களை பார்த்திருக்கிறோம். கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் ஒரு தலைவன் இல்லாமல், எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் நேர்மையான ஒரு போராட்டம், எந்த ஒரு அழைப்பும் இல்லாமல் நடந்தது என்றால் அது நிச்சயம் ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.

மதுரை அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு நடத்த 2015 & 2016 ஆண்டுகளில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் 2017ல் அந்த ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என மதுரையில் தொடங்கிய இந்த போராட்டம் சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் தொடர்ந்தது.

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டபோதும் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. பெண்களை கண்ணியமாக நடத்தினர் இளைஞர்கள். இத்தனைக்கும் காவல்துறை கூட இதை செய்யவில்லை.

தமிழக இளைஞர்களால் அறவழியில் நடத்தப்பட்ட மெரினா புரட்சி போராட்டம் இறுதிநாளில் சில சமூக விரோதிகளால் கலவரமானது. இறுதியாக மெரினா கடற்கரையில் மீனவர்களை தாக்கினர்.

இந்த நிகழ்வுகளின் தொகுப்பை படமாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ். ராஜ்.

இப்போராட்டம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் வெற்றி எப்படி? நன்மைகள் என்ன? என்பதை விளக்கியுள்ளார்.

ஆனால் யூடிப் சேனல்கள் மற்றும் செய்தி சேனல்களில் வந்தவற்றை அப்படியே காட்சியாக வைத்து காட்டியுள்ளார் என்பதுதான் பலவீனம்.

இந்த விளக்க படத்தில் யூடியுப் புகழ் ராஜ்மோகன், நவீன், ஸ்ருதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த போராட்டம் 8 பேரால் தொடங்கப்பட்டு 18 பேரால் சாதிக்கப்பட்டது போல் சொல்லியுள்ளார்.

நிச்சயம் இந்த போராட்டத்தில் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது.

அவரால் முடிந்தது… இவரால் சாத்தியமானது என்று சொல்லக்கூடாது என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது. நல்லவேளை அவற்றை காட்சியாக வைக்காமல் மேலோட்டமாக சொல்லிவிட்டார்.

ஆக.. டிஜிட்டல் யுகத்தில் தமிழர்கள் நெஞ்சம் நிமிர்த்தி சொல்லிக் கொள்ள பொக்கிஷமாக அமைந்த போராட்டம் இந்த மெரினா புரட்சி.

Marina Puratchi movie review

More Articles
Follows