தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிப்பு – விஷால், ரோபோ சங்கர், கே ஆர் விஜயா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா
இயக்கம் – எம்.எஸ்.ஆனந்தன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி
கதைக்களம்..
ஆகஸ்ட் 15… சுதந்திர தினத்தன்று சென்னையில் முதியவர்கள் வசிக்கும் 50 வீடுகளில் ஒரே நாளில் திட்டமிடப்பட்டு கொள்ளை நடக்கிறது.
கொள்ளையர்கள் விஷாலின் அப்பா பெற்ற சக்ரா விருதையும் கொள்ளை அடிக்கின்றனர்.
விஷாலின் குடும்பமே நாட்டிற்காக உயிர் வாழ்பவர்கள்.
இவரின் தாத்தா, தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்தியாகம் செய்தவர்கள். எனவே விஷாலும் ராணுவத்தில் இணைந்து தாய் நாட்டிற்காக பணியாற்றி வருகிறார்.
விஷாலின் தந்தையான நாசர் இந்திய அரசால் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.
இந்த கொள்ளை வழக்கை விசாரிக்க வருகிறார் விஷாலின் காதலியான ஏ எஸ் பியான ஷ்ரதா ஸ்ரீநாத்.
தன் காதலிக்காகவும் தன் தந்தைக்காகவும் விஷாலும் இந்த வழக்கில் நுழைகிறார்.
கொள்ளையர்கள் யார் என்பதை விஷால் & ஷ்ரத்தா கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கலைஞர்கள்…
ஆக்ஷன் கதை என்றாலே விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது போல.. அவரது உயரத்திற்கு ஏற்ப மிலிட்டரி ஆபீசர் கேரக்டர் செம பிஃட்.
இன்வஸ்டிகேஷன், ஆக்ஷன் என இரண்டிலும் முறுக்குத்தனம் காட்டியிருக்கிறார்.
ஷ்ரதா ஸ்ரீநாத், போலீஸ் அதிகாரியாக தோன்றி அசர வைத்திருக்கிறார். இவர் செய்ய வேண்டிய பாதி வேலைகளை விஷாலே செய்துவிடுவதால் இவருக்கு பெரிதாக வேலையில்லை.
காமெடி பெயரில் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறார் ரோபோ சங்கர். கமிஷனர் எதிரிலேயே அவரை பற்றித் தப்பாக பேச முடியுமா?
ரெஜினா கேஸண்ட்ரா முக்கியமான கேரக்டரில் லேட்டாக வருகிறார். வில்லத்தனத்தை கொஞ்சம் காட்டியிருக்கிறார்.
மனோ பாலா & ஸ்ருஷ்டி டாங்கே வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு (விஷாலின் பாட்டியாக) வருகிறார் கேஆர் விஜயா.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பின்னனி இசையில் யுவன் குறை வைக்கவில்லை. படத்தில் ஒரே ஒரு பாடல்தான் என்பதால் கொஞ்சம் ஆறுதலும் கிடைக்கிறது.
பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் வேகத்தை கலந்து கொடுத்துள்ளார்.
டிஜிட்டல் முறைகேடுகளை முன்வைத்து நமக்கு நிறைய விழிப்புணர்வை எடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்தன்.
மேலும் சில சமூக வலைத்தளங்களில் நம் தனிப்பட்ட தகவல்களை கொடுத்தால் எப்படியெல்லாம் சிக்குவோம் என்பதை அப்பட்டமாக சொல்லியுள்ளார் ஆனந்தன்.
கிளைமாக்ஸ் காட்சியில் டாக்டரிடம் ரெஜினா பேசும் வசனங்கள் தாங்கல.. பல காட்சிகளில் செயற்கையான நாடகத்தன்மை இருப்பதால் ரசிக்க முடியவில்லை.
ஆக… ‘சக்ரா’… விஷாலின் ஆக்ஷன் அல்வா
Vishal’s Chakra movie review and rating in Tamil