கொஞ்சம் கொஞ்சம் விமர்சனம்

கொஞ்சம் கொஞ்சம் விமர்சனம்

நடிகர்கள் : கோகுல், நீனு, அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் : உதய்சங்கரன்
இசை : வல்லவன்
ஒளிப்பதிவு: பி.ஆர். நிக்கிகண்ணன்
பி.ஆர்.ஓ. : பெருதுளசிபழனிவேல் (சக்தி சரவணன்)
தயாரிப்பு : சிகே. பெட்டி, பிஆர். மோகன்

????????????????????????????????????????????????

கதைக்களம்…

கேரளாவில் அப்புக்குட்டி வைத்திருக்கும் காயிலான் இரும்புக் கடையில் வேலை பார்க்கிறார் தமிழரான கோகுல்.

அங்கே உள்ள கேரள பெண் குட்டிகளை பார்த்து காதல் வலையில் விழாமல் இருப்பாரா? அவருக்கு ஏற்ற ஜோடியை பார்த்ததும் காதல் கொள்கிறார். அவரும் காதலிக்கிறார்.

இவருக்காக வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருக்கிறார் நாயகி மீனு.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தன் சொந்த ஊருக்கு செல்கிறார்.

அப்போது செல்போன் சார்ஜ் விபத்தில் தன் பாசத்துக்குரிய அக்காவின் காது செவிடாகிறது.

மேலும் ஒரு விபத்தில் தன் அம்மாவை இழக்கிறார்.

அக்காவுக்கு ஆபரேசன், காதலி காணவில்லை என தேடி அலையும் கோகுல் என்ன செய்தார்? என்பதே இதன் மீதிக்கதை.

????????????????????????????????????????????????

கேரக்டர்கள்…

காயிலான் கடை வேலை பார்க்கும் பையனாக தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் கோகுல்.

அக்கா மீது பாசம் காட்டுவதாகட்டும், காதலியை ரூட் விடுவதாகட்டும், வறுமையிலும் நேர்மையாக வாழ்வதாகட்டும் என அனைத்திலும் கோகுல் ஸ்கோர் செய்கிறார்.

காயிலான் கடையில் வேலை பார்த்தாலும், சின்ன சின்ன பொருட்களை கொண்டு புதிது புதிதாக அவர் கண்டு பிடிக்கும் பொருட்கள் அனைத்து இளைஞர்கள் பலருக்கும் விழிப்புணர்வை கொடுக்கும்.

உதாரணமாக எடை போடும் மெசின் எடையை பார்த்து சொல்லுதல்.

????????????????????????????????

நாயகனின் அக்கா, அம்மா, காதலி, நண்பர்கள் என அனைவரும் கச்சிதம். தங்கள் கேரக்டர்களால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

கேரள பைங்கிளியாக வரும் நீனு நினைவில் நிற்கிறார்.

சின்ன சின்ன ரோல்களில் வரும் அப்புக்குட்டி இதில் நிறைய காட்சிகளில் வந்து நிறைவான இடத்தை பெறுகிறார்.

ஜாங்கிரி மதுமிதா, சன் டிவி தாப்பா ஆகியோரும் இவருக்கு ஜோடியாக வந்து லூட்டி அடிக்கிறார்கள்.

ஓரிரு காட்சியில் வரும் மன்சூர் அலிகான், நாயகனின் திறமையறிந்து உதவி செய்வது நெஞ்சை தொடுகிறது.
?????????????????????????????????????????????????????????

தொழில்நுட்ப கலைஞர்கள்….

பாதி படப்பிடிப்பை பொள்ளாச்சிலும் மற்றொரு பாதியை கேரளாவிலும் படம்பிடித்து நம்மை ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஆர். நிக்கிகண்ணன். (இவர் கேவி. ஆனந்திடம் உதவியாளர்)

வல்லவன் இசையில் பாடல்களும் பாடல் வரிகளும் படத்திற்கு அழகை சேர்க்கின்றன.
க்ளைமாக்ஸில் வரும் மழைபாடல் அருமை.

விருந்தாளி படத்தை எடுத்த உதய் சங்கரன்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

சென்டிமெண்ட், நண்பர்கள், நல்லவர்கள், உழைப்பு, முன்னேற்றம் என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து விருந்து படைத்திருக்கிறார்.

திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கும். அதை உதாசீனப்படுத்துபவர்கள் நிச்சயம் ஒருநாள் உணர்ந்து திருந்துவார்கள் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

சில ட்விஸ்ட்கள் வைத்து கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் அனைத்து தரப்பு மக்களை கவர்ந்திருப்பார்.

கொஞ்சம் கொஞ்சம்… அனைத்திலும் கொஞ்சம் கலந்த சுவை விருந்து

Related Articles