டைரக்டருக்கு வார்னிங்… மாணிக் விமர்சனம்

டைரக்டருக்கு வார்னிங்… மாணிக் விமர்சனம்

நடிகர்கள்: மா கா பா ஆனந்த், சூஷா குமார், வஸ்தவன், யோகிபாபு, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்
இயக்குனர் – மார்ட்டின்
ஒளிப்பதிவு – எம்.ஆர்.பழனிகுமார்
இசை – சி.தரண்குமார்
பிஆர்ஓ – சுரேஷ் சுகு மற்றும் தர்மதுரை

கதைக்களம்…

மா.கா.பா. ஆனந்த் பிறக்கும்போதே அது ஒரு பிரச்சினையாகிறது.

அந்த குழந்தையை கொன்றுவிட சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் மா.கா.பா.வின் அம்மா அந்த குழந்தையை காப்பாற்றி விடுகிறார்.

இதனையடுத்து வளர்ந்து பெரியவர் ஆகிறார் மா.கா.பா.ஆனந்த். தனது நண்பன் வஸ்தவன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க வேண்டும் எனவும் அதில் கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற ஒரு சபதம் போட்டு சென்னை வருகின்றன.

அப்போது ஒரு லெகின்ஸ் சாமியாரை சந்திக்கிறார்.

அவர் ஒரு மந்திரம் சொல்கிறார். நீ உடனே பணக்காரன் ஆகிவிடலாம் என்கிறார்.

அதன்படி அந்த மந்திரத்தை மா.கா.பா. உபயோகித்தாரா? பணக்காரன் ஆனாரா? என்ன மந்திரம் அது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இந்த மாதிரி கேரக்டருக்கு தான் இவருக்கு செட்டாகும் என நினைத்தாரோ என்னவோ? அப்படி ஒரு கதையை மாகாபா ஆன்ந்துக்கு கொடுத்துள்ளார் டைரக்டர் மார்ட்டின்.

அவரும் டிவியில் செய்வது போல அதைவிட குறைவாக செய்திருக்கிறார்.

எதிர் நீச்சல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த சூசா குமார் இதில் அழகாக வருகிறார்.

மாகாபா நண்பர் ஒரு சில இடங்களில் கவர்கிறார். சில நேரம் ஓவர் ஆக்ட்டிங் செய்கிறார்.

மனோபாலா, மதுமிதா ஆகியோரும் படத்தில் உண்டு. யோகி பாபு ஒரு காட்சியில் வருகிறார். சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக அருள்தாஸ். இவரின் அலப்பரை தாங்கல. மொக்க ஜோக் மொக்க ஜோக் என சொல்லி சொல்லி நம்மை கழுத்தறுக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் படத்திற்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறார்கள்.

அடல்டி + முழு காமெடி படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் மார்டின். ஆனால் நம்மை தியேட்டரில் அமர விடாமல் செய்கிறார்.

ஒரு சில இடங்களில் காமெடி பெயரில் சோதிக்கிறார். லுசுகு என்ற ஒரு கட்சி வேற இதில். (லுங்கி சுடிதார் குர்தா) இதில் அடிக்கடி டிவி செய்திகள் வேற. அதுவும் மண்டைய போட்டார் அதை போட்டார் என கிண்டல்கள் வேற.

எப்படி படம் எடுத்தாலும் மக்கள் பார்த்து விடுவார்கள் என மார்ட்டின் நினைத்துவிட்டாரோ? என்னவோ?

இதில் ஒரு பேட்டியில் அவரின் வாழ்க்கையில் நடந்த கதை என சொல்லி இருக்கிறார். இப்படியொரு கேவலமான கதையா? என எண்ணத் தோன்றுகிறது.

மாணிக்… டைரக்டருக்கு வார்னிங்

Comments are closed.