கிடாரி விமர்சனம்

கிடாரி விமர்சனம்

நடிகர்கள் : சசிகுமார், நிகிலா விமல், நெப்போலியன், சுஜா வருணி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர்.
இசை : தர்புகா சிவா
ஒளிப்பதிவு : எஸ் ஆர் கதிர்
படத்தொகுப்பு : பிரவீன் ஆண்டனி
இயக்கம் : பிரசாத் முருகேசன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : சசிகுமார்

 கதைக்களம்…

வழக்கமான கிராமத்து வன்முறை களம்தான். இதில் கொஞ்சம் மாறுபட்ட திரைக்கதையுடன் ஆரம்பிக்கிறார் இயக்குனர்.

படத்தின் முதல்காட்சியே ரத்தம் தெறிக்க ஒரு மனிதர் உயிருக்கு போராடுகிறார். அவர்தான் வேல ராமமூர்த்தி. குத்துயிரும் கொலையிருமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஊரில் மிகப்பெரிய பஞ்சாயத்து முதல் அனைத்தையும் செய்து வந்த இவரை கொன்ற எதிரிகள் யாராக இருக்கக்கூடும் என பக்கம் பக்கமாக ப்ளாஷ்பேக் காட்சிகள் விரிகிறது…

kidari stills

கதாபாத்திரங்கள்…

(கி)ராமராஜன் போல், கிராமத்து கேரக்டருக்கும் சசிகுமாருக்கும் அப்படியொரு பொருத்தம். கிராமத்து மண் வாசனை தகுந்த மாதிரி விளாசி தள்ளியிருக்கிறார்.

ஆனால் என்ன, அழகான ஹீரோயின்கள் இருந்தாலும் மனிதர் கெத்து மெயிண்ட் பன்னும் கேரக்டர்களாக செய்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் இறங்கி வாங்க சார்.

கெமிஸ்ட்ரி க்ளாசில ஜாய்ண்ட் பன்னுங்க சீக்கிரம்.

வெற்றிவேலை விட இதில் கூடுதல் அழகையும் நடிப்பையும் கொடுத்திருக்கிறார் நிகிலா விமல்.  வீட்டைவிட்டு சென்ற கிடாரி, திரும்பி வந்த பின், அவரை மடக்கி கொஞ்சும் காட்சியில் தன் குறும்பான நடிப்பால் நிகிலா அங்கே நிற்கிறார். சபாஷ்.

Kidari-Movie-Stills-3

கொம்பையா பாண்டியனாக வரும் வேலராமமூர்த்திதான் படத்தின் ஆணிவேர்.  படம் முழுவதும் ஆட்சி செய்கிறார். இவரது கம்பீர குரலும் படத்திற்குபக்க பலம்.

சட்டையை கழட்டி போட்டு விட்டு வீரத்துடன் நடந்து வரும் காட்சிகளில் அசத்துகிறார்.

பல படங்களில் சின்ன கேரக்டர்களை செய்த சுஜா வருணிக்கு இதில் சிறப்பான வேடம். நிறைவாக செய்திருக்கிறார். இனி வாய்ப்புகள் நிச்சயம் தேடிவரும்.

நாம் பெரிதும் எதிர்பார்த்த நெப்போலியன் கேரக்டர் படத்தின் இறுதியிலே வருகிறது.  மனிதரிடம் அதே அமைதியான நடிப்பு உள்ளது. ஆனால் காட்சிகளில் அழுத்தமில்லை.

ஜோக்கரில் கலக்கிய மு. ராமசாமி இதில் முக்கிய பங்கு வகிக்கிறார். ப்ளாஷ்பேக் காட்சியிலும் கெட்டப் நன்றாக பொருந்தி இருக்கிறது.  இவரது குரலே படம் முழுக்க ஒலிக்கிறது.

இவர்களுடன் வக்கீல், போலீஸ் கேரக்டர்கள் வரை அனைவரும் கச்சிதம்.

kidari stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசைதான். கிடாரிக்கு காட்சிகளில் வெயிட் இருக்கிறதோ இல்லையோ இசையில் வெயிட் கொடுத்திருக்கிறார் தர்புகா சிவா. கிடாரியே உன் போல பாடல் தாளம் போட வைக்கிறது.

எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவில் கிராமத்து மனிதர்கள், வீடுகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

எடிட்டர் பிரவீன் ஆண்டனி நிறைய காட்சிகளை வெட்டியிருக்கலாம். நிறைய ப்ளாஷ்பேக் கொடுத்து, ட்விஸ்ட் என்ற பெயரில் பொறுமையை சோதித்துவிட்டனர்.

பழிவாங்கும் கிராமத்து கதையாக தொடங்கினாலும், க்ளைமாக்ஸில் கதைக்கு கூடுதல் பலம் கொடுத்து நிறைவான முடிவை தந்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகேசன்.

மொத்தத்தில் கிடாரி… கிராமத்து டான்

Comments are closed.

Related News

அண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,…
...Read More
மலையாள மொழியில் வெளியாகி தமிழ் சினிமா…
...Read More
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கட்டப்பாவ காணோம்…
...Read More