நிமிர் விமர்சனம்

நிமிர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : உதயநிதி, பார்வதிநாயர், நமீதாபிரமோத், கருணாகரன், எம்ஸ்பாஸ்கர், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர்
இயக்கம் : பிரியதர்ஷன்
இசை : தர்புகா சிவா மற்றும் அஜனீஷ்
ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம்பரம்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு: ரெட் ஜெயண்ட் மற்றும் மூன்சாட்

கதைக்களம்…

மலையாளத்தில் பகத் பாசில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘நிமிர்’.

கேரளா எல்லையான தமிழகத்தின் ஒரு பகுதியில் உதயநிதி ‘நேஷ்னல்’ என்ற ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அவரது தந்தை மகேந்திரன்.

தன் உறவுக்கார பெண்ணான பார்வதி நாயரை காதலிக்கிறார் உதயநிதி. ஆனால் இந்த காதல் கைகூடாமல் போகிறது.

உதயநிதி கடை அருகில் ஒரு போட்டோ ப்ரேம் செய்யும் கடை வைத்திருக்கிறார் எம்எஸ்.பாஸ்கர். இவருக்கு ஒரு பெண். இந்த கடையில் கருணாகரன் வேலை பார்க்கிறார்.

ஒருமுறை ஒரு பிரச்சினையில் உதயநிதியை ஊர் மக்கள் முன்னிலையில் அடித்து விடுகிறார் சமுத்திரக்கனி.

எனவே அவரை திருப்பி அடிக்கும் வரை நான் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுக்கிறார் உதயநிதி.

சமுத்திரக்கனியை அடிக்க நினைக்கும்போது அவர் பாரீன் சென்று விடுகிறார்.

இதனிடையில் உதயநிதிக்கு மற்றொரு நாயகியான நமீதாபிரமோத் மீது காதல் வருகிறது. இவர் சமுத்திரக்கனியின் தங்கை.

அதன்பின்னர் என்ன ஆனது? செருப்பு போட்டாரா? இந்த காதலாவது கை கூடியதா? சமுத்திரக்கனியை அடித்தாரா? ஆகியவைகளுக்கு விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.
nimir and mannar 1600 x 800 -2a

கேரக்டர்கள்…

யதார்த்தமான நடிப்பில் நிமிர வைத்துள்ளார் உதயநிதி. மனிதன் படத்திற்கு பிறகு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். வேஷ்டி கட்டி கிராமத்து நாயகனாக பளிச்சிடுகிறார்.

இவரின் தந்தையாக மகேந்திரன். சில காட்சிகளில் வந்தாலும் தொழிலை நேசிக்க சொல்லும் தந்தையாக அசத்துகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர நடிப்பிலும் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். இவரின் மகளாக வரும் அந்த பெண் கொள்ளை அழகு.

தன் அளவான நடிப்பில் கருணாகரன் கச்சிதம்.

உதயநிதியை கல்யாணம் செய்ய முடியாத பார்வதி நாயர் சில பெண்களை நினைவுப்படுத்துகிறார். காதல் வேற கல்யாணம் வேற என தன் நடிப்பில் தத்துவம் பேசியிருக்கிறார்.

ஒரு இழவு (மரணம்) வீட்டில் உதயநிதியுடன் கண்களால் பேசி ரசிக்க வைக்கிறார் பார்வதி.

நமீதா புரமோத் கண்களிலும் நம் மனதிலும் நின்று விடுகிறார். அவரின் பெரிய விழிகளை கொண்டு நம்மை சில நேரம் விழுங்கிவிடுகிறார்.

கஞ்சாகருப்பு, சண்முகராஜன், அருள்தாஸ் ஆகியோர் அளவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

படத்திற்கு வசனம் எழுதி நடித்துள்ளார் சமுத்திரக்கனி. வசனங்கள் ப்ளஸ். நடிப்புக்கு அவ்வளவு ஸ்பேஸ் கொடுக்கவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவளார் என்.கே.ஏகாம்பரம் அவர்கள்தான்.

ஒவ்வொரு ப்ரேமையும் நாம் ப்ரேம் போட்டு வைத்துக் கொள்ளலாம். ரசித்து ரசித்து எடுத்து செதுக்கியிருக்கிறார்.

ஒருவேளை உங்களுக்கு இந்தப் படத்தில் கதை, நடிகர்கள் பிடிக்கவில்லை என்றாலும் படத்தை பார்க்க வைத்துவிடுவார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.

தர்புகா சிவா 4 பாடல்களும், அஜ்னீஷ் லோக்நாத் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்து உள்ளனர். நெஞ்சில் மாமழை என்றும் நம்மை நெஞ்சை விட்டு போகாது.

இயக்கம் பற்றிய அலசல்…

ஒரு யதார்த்தமான கதையை அனைவரும் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார். ஒவ்வொரு கேரக்டருக்கும் அர்த்தம் சொல்லியிருக்கிறார்.

உதயநிதி போட்டோ கிராபர் என்றாலும் அவர் வேலையை சரியாக செய்யவில்லை என்பதை காட்சியில் உணர்த்தி, பிறகு அவர் எப்படி கற்றுக் கொள்கிறார் என தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆண் பெண் பழகினாலே அது காதல்தான் என முடிவு எடுக்கும் அப்பாவாக எம்எஸ்.பாஸ்கரை காட்டியிருக்கிறார்.

உதயநிதியிடம் நமீதா காதலை சொல்லும்போது என் அண்ணன் அடிப்பியா? உனக்கு தைரியம் இருக்கா? என அழகாக தெளிவுப்படுத்தி காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இப்படியாக கேரக்டர்கள் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.

அதிலும் இறுதியாக பார்வதியின் கணவர் கேரக்டரை ட்விஸ்ட் வைத்து கொடுத்திருப்பது நச்.

இருந்தாலும் செருப்பு போடும் சபதம் கொஞ்சல் நெருடல்தான்.

நிமிர்… இமைக்காமல் ரசிக்கலாம்.

குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ராமதாஸ், ஆனந்த்ராஜ், சத்யன், மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு, மன்சூர் அலிகான், மதுசுதன் மற்றும் பலர்
இயக்கம் : கல்யாண்
இசை : விவேக் மெர்வின்
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த்குமார்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு: கோட்டப்பாடி ராஜேஷ்

கதைக்களம்…

குலேபகாவலியூர் எனும் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சுதந்திர இந்தியாவுக்கு முன் ஒரு பெரியவர் புதையலை மறைத்து வைக்கிறார்.

அந்த ரகசியத்தை அவரது மகன் அவரின் மகனிடம் (அதாவது பேரன்) தெரிவிக்கிறார்.

எனவே அவரது மச்சான் ஆனந்த்ராஜ் அந்த புதையலை எடுக்க, முனிஸ்காந்தை அனுப்புகிறார்.

மேலும் சிலை திருட்டில் கில்லாடியான பிரபுதேவா மற்றும் ஹன்சிகாவையும் மிரட்டி, அவருடன் செல்ல வைக்கிறார்.

இவர்கள் போகும்போது கார் பிரேக் டவுன் ஆக, ரேவதி லிப்ட் கொடுக்கிறார்.

அப்போது அவருக்கும் புதையல் ரகசியம் தெரிய நால்வரும் பங்கு போட நினைக்கின்றனர்.

இதனிடையில் ஹன்சிகாவின் தங்கை வில்லன் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்.

அதன்பின் என்ன ஆனது? தங்கையை காப்பாற்றினாரா? புதையலை அடைந்தார்களா? என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடை கொடுக்கிறார் டைரக்டர் கல்யாண்.

DTUjadMVoBAK4Hw

கேரக்டர்கள்…

படத்தின் ஹீரோ பிரபுதேவா என்றாலும் கதையின் ஹீரோ ரேவதிதான். படத்தின் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்யும் ரேவதி க்ளைமாக்ஸ் வரை படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறார்.

மண்வாசனை, கன்னிராசியில் அமைதியாக வந்த ரேவதி இதில் சென்ட்ச்சூரி அடித்திருக்கிறார். அவரை எப்படி இந்த கேரக்டருக்கு டைரக்டர் செல்க்ட் செய்தார் என்றே தெரியவில்லை. அதகளம் பண்ணிட்டார்.

பிரபுதேவா டான்ஸ், பைட் என கவர்கிறார். இவரின் அறிமுக காட்சி ரசிக்க வைக்கிறது.

வழக்கமான நாயகியாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட கேரக்டரில் ஹன்சிகா.

ஹன்சிகாவை நிர்வாண பூஜை செய்ய சொல்லும்போது.. அருகில் இருக்கும் ஆனந்த்ராஜ், அந்த பெண் ஆல்ரெடி அப்படிதான்ப்பா இருக்கு என சொல்லும்போது தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.

யோகிபாபுவின் காமெடி காட்சிகளில் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அதுவும் அந்த இடைவேளை டைட்டில் கார்ட் சூப்பர்.

இவருடன் மொட்ட ராஜேந்திரன் செய்யும் அலப்பரை தாங்க முடியாது. சித்தி என ரேவதியை கொஞ்சுவதும் அம்மா என்று எலும்புக் கூட்டை கொஞ்சுவதும் செம அப்ளாஸ்.

ரேவதி எதை சொன்னாலும் நம்பும் நபர்களாக முனிஷ்காந்த் மற்றும் சத்யன்.

என்னப்பா நீயும் ஜட்டி போட்டுட்டு வந்திருக்க என தன் மனசாட்சியிடம் சத்யன் கேட்கும் காட்சிகள், அவர் எல்லாரிடமும் ஏமாறும் காட்சிகள் படத்தின் ஹைலைட்ஸ்.

மன்சூர் அலிகான், மதுசுதன் ஆகியோரின் நடிப்பும் பேசும்படி உள்ளது.

DTTbB3QV4AA6wz4

தொழில்நுட்ப கலைஞர்கள்..

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்து. வின்டேஜ் சீன் முதல் ரோடு சேஸிங் காட்சிகள் வரை அனைத்தும் அருமை.

பிரபுதேவா மற்றும் ஹன்சிகாவின் டூயட் இரண்டு பாடல்களில் பாடலை விட அந்த பேக்ட்ராப் காட்சிகள் அருமை. கலை இயக்குனருக்கு கைகொடுத்து பாராட்டலாம்.

இயக்கம் பற்றிய அலசல்…

கலகலப்பாக படம் கொடுக்க வேண்டும் என கலைஞர்களிடம் கன்டிஷன் போட்டு படத்தை இயக்கியுள்ளார் கல்யாண்.

நிறைய நடிகர்கள் இருக்கிறார்களே என பயந்தாலும் எல்லாரையும் பயன்படுத்தி ரசிக்கும்படி வேலை வாங்கியிருக்கிறார்.

குலேபகாவலி… குதூகலமாய் சிரிக்கலாம்.

தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், நந்தா, யோகிபாபு மற்றும் பலர்
இயக்கம் : விக்னேஷ்சிவன்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
பி.ஆர்.ஓ. : ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு: ஞானவேல்ராஜா

கதைக்களம்…

அக்‌ஷய் குமார் நடிப்பில் ஹிட்டான ஸ்பெஷல் 26. அந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தானா சேர்ந்த கூட்டம்.

ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் திறமையான வாலிபன் இனியன் (சூர்யா).

இவரும் நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக முயற்சிக்கின்றனர்.

இதில் சூர்யா CBI யாக ஆசைப்படுகிறார். கலையரசன் போலீஸ் வேலைக்கு முயற்சிக்கிறார்.

ஆனால் சில லஞ்ச அதிகாரிகளின் சதி வேலையால் இருவருக்கும் வேலை கிடைக்காமல் போகிறது.

இதனால் கலையரசன் தற்கொலை செய்ய கோபம் கொள்கிறார் சூர்யா.

அதன்பின்னர் இவரே தனியார் கூட்டம் அமைத்துக் கொண்டு அதிரடியாக ரெய்டு போகிறார்.

அரசாங்கத்தில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்டுகிறார்.

அதனால் இவருக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தது? அதை எப்படி சமாளித்தார் என்பதே மீதிக்கதை.

DTUG65cUMAEVffZ

 

கேரக்டர்கள்…

ஜாலியா ஒரு படம் கொடுக்கனும் என விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்திருக்கிறார் சூர்யா. அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து விடுகிறார்.

சில காட்சிகளில் லோக்கலாகவும் வந்து சி கிளாஸ் ரசிகர்களையும் கவருகிறார்.

சிலர் இவரது உயரத்தை மைனஸ் ஆக சொல்வார்கள். அதை கூட ஓபனாக பேசி அதற்கும் ஒரு பன்ச் வைத்து சிக்ஸர் அடிக்கிறார் இந்த சிங்கம்.

கார்த்திக்கிடம் சேலஞ்ச் செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

சூர்யாவுக்கு உதவி செய்யும் நபர்களாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் ஆகியோர் வருகின்றனர்.

இதில் செந்தில் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் காமெடியிலும் கலக்கியுள்ளனர்.

படத்தின் இறுதிகாட்சியில் ஆங்கிலத்தில் பேசி அசத்தியிருக்கிறார் செந்தில். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றி கைத்தட்டல் பெறுகிறார்.

கீர்த்திசுரேஷ் அழகாக வந்து ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிகள் கலகலப்பாக செல்கிறது.

ஆனந்த்ராஜ் சில காட்சிகள் வருகிறார். ஆபிஸராக வரும் கார்த்தி, சுரேஷ் மேனன் ஆகியோரின் தேர்வும் கச்சிதம்.

DTU18tlV4AMy_-_

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார் அனிருத். பின்னணி இசையும் அந்த பாடல் காட்சிகளும் அருமை.

ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் தன் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

DTSlTgPVwAAJXqn

இயக்கம் பற்றிய அலசல்…

இடைவேளை காட்சி இனி என்னாகுமோ? என ஏங்க வைக்கிறது.

படத்தின் கதையை எதற்காக 1980களில் வைத்திருக்கிறார்-?

இப்போது டெக்னாலஜி முன்னேறிவிட்டது. எந்த தப்பு நடந்தாலும் ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். எனவே அந்த காலத்தை காட்டியிருப்பது புத்திசாலித்தனம்.

முக்கியமாக அப்போது வந்து சூப்பர் ஹிட்டான பட போஸ்டர்களை காட்டியிருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.

க்ளைமாக்ஸை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்களா? என்ற நெருடல் எழுகிறது.

படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு இருந்தும் காமெடி எடுபடவில்லை. தனியார் ரெய்டு இது எல்லாம் எப்படி? எங்கோ இடிக்கிறது.

தானா சேர்ந்த கூட்டம்.. ரசிக்கலாம்

ஸ்கெட்ச் விமர்சனம்

ஸ்கெட்ச் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விக்ரம், தமன்னா, ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன், சூரி மற்றும் பலர்
இயக்கம் : விஜய்சந்தர்
இசை : தமன்
ஒளிப்பதிவு: சுகுமார்
படத்தொகுப்பு: ரூபன்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி
தயாரிப்பு: மூவிங் ப்ரேம் (வெளியீடு கலைப்புலி தாணு)

கதைக்களம்…

வட சென்னை என்றாலே பைக் மற்றும் கார்கள் பிரபலம்.

அந்த பகுதியில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் ஒரு சேட்டுவிடம் வேலை செய்கிறார் விக்ரம்.

லோன் கட்டாதவர்களிடம் இருந்து வண்டிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதுதான் இவரது வேலை.

மற்றொரு புறம் ஐயர் வீட்டு ஐஸ்கட்டி தமன்னாவை காதலிக்கிறார்.

இந்நிலையில் இவரின் எதிர்கேங்கான ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சண்டை வருகிறது.

மேலும் ஒரு முக்கியமானவரின் காரை தூக்கும்போது சில சிக்கல்கள் எழுகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதை சற்று வித்தியாசமான க்ளைமாக்ஸ் உடன் முடித்திருக்கிறார் டைரக்டர்.

கேரக்டர்கள்…

நிறைய படத்தில் வித்தியாச தோற்றத்தில் வருவார் விக்ரம். ஆனால் இதில் தோற்றத்தில் மாற்றம் இல்லாமல் நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்.

ஸ்கெட்ச் போடுவது, லவ், சென்டிமென்ட் என பல இடங்களில் அப்ளாஸ் பெறுகிறார்.

ஒரு காட்சியில் லவ் தேவையா? லவ் சேல்ஞ்ச் தேவையா? என தனக்குத் தானே பேசிக்கொள்ளும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.

அதுபோல் ஆக்சன் காட்சிகளில் சிங்கமாய் சீறியிருக்கிறார் சீயான்.

இதுவரை கவர்ச்சியில் கலக்கிய தமன்னா இதில் ஹோம்லியாக வெளுத்து கட்டியிருக்கிறார். கேமரா கண்களில் தமன்னாவின் அழகு பளிச்சிடுகிறது.

ஐயர் வீட்டு ஐஸ்கட்டியாக வந்து உருகவைக்கிறார் அழகு தமன்னா.

உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை உன் கூட வாழ்ந்து நான் காண்பிக்கிறேன் என்று விக்ரமிம் சொல்லும்போது காதலர்களை கவர்கிறார் தமன்னா.

நண்பனாக ஸ்ரீமன் நடித்திருக்கிறார். சூரிக்கு அதிக வேலையில்லை. சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

விக்ரமின் மற்றொரு நண்பராக வந்து உயிரைவிடும் அந்த நபரும் சபாஷ் பெறுகிறார்.

ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட வில்லன்கள் கச்சிதம்.

முக்கியமாக தமன்னாவின் ப்ரெண்டாக வரும் அந்த பெண் ரசிகர்களை அதிகம் கவர்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

மாடி சண்டைக்காட்சிகளில் எடிட்டிங் ரூபனின் ஒர்க் அதிகம் பேசப்படும்.

தமனின் இசையில் பின்னணி இசை மாஸ். இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமன்னாவின் காஸ்ட்யூம்தான்.
யமஹா பைக் விளம்பர பாட்டு எல்லாம் ரொம்பவே ஓவர்.

இயக்கம் பற்றிய அலசல்…

வாலு படத்தில் ஜெயித்த விஜய்சந்தர்தான் இதன் இயக்குனர்.

கத்தியில் கைரேகை படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விக்ரம் செய்யும் அந்த காட்சியில் இயக்குனர் தெரிகிறார்.

பார்த்து பழகிய கதைதான் என்றாலும் அதை பரிமாறிய விதம் அருமை. சில காட்சிகளில் அவர் கேரக்டர் எதற்கு? இவர் எதற்கு முறைத்தார்? என்ற கேள்விகளுக்கு விடையில்லை.

ஆனாலும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க விக்ரமுடன் ஸ்கெட்ச் போட்டு தாக்கியிருக்கிறார் விஜய்சந்தர்.

க்ளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த படத்தையும் அத்துடன் குழந்தைகள் தொழிலாளர்கள் அவலத்தையும் சொல்லிவிட்டார்கள்.

மேலும் படிக்கும் வயதில் உள்ளவர்களை படிக்க நாமும் உதவும் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

எந்தவொரு டாப் ஹீரோவும் செய்ய தயங்குவதை க்ளைமாக்ஸில் செய்திருக்கிறார் விக்ரம்.

ஸ்கெட்ச்… ஸ்கெட்ச் போட்டு பார்க்கலாம்.

ஓநாய்கள் ஜாக்கிரதை விமர்சனம்

ஓநாய்கள் ஜாக்கிரதை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கபாலி படத்தில் சென்னையில் ரஜினிக்கு உதவும் இளைஞராக நடித்த விஸ்வந்த் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். டைட்டில் கார்டில் அவரது பெயரே கபாலி விஸ்வந்த் என்றுதான் இடம் பெறுகிறது.

விஸ்வந்த் மற்றும் இவரது 2 நண்பர்கள் சீக்கிரமாக பணம் சம்பாதித்து செட்டில் ஆக ஆசைப்படுகிறார்கள். இவர்களுடன் இயக்குனர் வெங்கடேசனும் இணைகிறார்.

தன் அக்கா கணவர் பெரிய தொழிலதிபர் என்பதால் அவரின் மகளை (5 வயது) கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறார் விஸ்வந்த்.

எனவே இவரின் ஆலோசனைப்படி அந்த மூவரும் கடத்துகின்றனர்.

முதலில் ஒரு கோடி மட்டுமே கேட்க நினைகின்றனர். அப்போதுதான் தன் மாமாவிடம் கோடிக்கணக்கான பணம் வீட்டிலேயே இருப்பது தெரிய வருகிறது.

பின்னர் பணத்தாசை பிடித்து அதிகம் கேட்கின்றனர்.

அந்த இரண்டு நாட்களில் அந்த குழந்தை தன் தாய் மாமா அஸ்வந்தை மற்ற கடத்தல் நண்பர்களுடன் பார்த்து விடுகிறது.

இதனால் மாட்டிக் கொள்வோமே எனப் பயப்படுகிறார். இதனால் தன் அக்காவிடம் உண்மையை சொல்லிவிட நினைக்கிறார்.

ஆனால் மற்றவர்களோ இதற்கு முன் ஒரு பெண்ணை கடத்தி கொலை செய்தோமே அதேபோல் இந்த குழந்தையை கொன்றுவிடலாம் என்கிறார்கள்.

எங்களுக்கு பணம்தான் வேண்டும் என திட்டமிடுகின்றனர்.

இதன்பின்னர் அவர்களுக்குள் என்ன நடந்தது? குழந்தையை கொன்றார்களா? அஸ்வந்த் என்ன செய்தார்? பணம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

?????????????????????????????????????????????????????????

கேரக்டர்கள்…

விஸ்வந்த ஹீரோ என்றாலும் அவரே வில்லனாகவும் மிரட்டியிருக்கிறார். படத்தில் ரொமான்ஸ் இல்லை. எனவே இந்த த்ரில்லர் ஆட்டத்தில் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிறார்.

இவருடன் ஆடம்ஸ், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கேஸியான் என 3 பேர் நடித்துள்ளனர். இன்னும் நடிப்பை மெருக்கேற்றியிருக்கலாம்.

டிவி தொகுப்பாளர் ஆடம்ஸ் கத்தி பேசும்போது என்ன பேசுகிறார்? என்றே தெரியவில்லை. உச்சரிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

கடத்தப்படும் குழந்தையின் பெற்றோர்களான நித்யா ரவீந்தரும், விஜய் கிருஷ்ணராஜும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குழந்தையை பறிக்கொடுத்த பெற்றோர்களின் மன வேதனையை நடிப்பில் உரக்க சொல்லியுள்ளனர்.

குழந்தை நட்சத்திரம் பேபி அம்ருதா அழகு குட்டி. மாமாவின் மீது இவ்வளவு அன்பு காட்டும்போது இப்படி செய்வார்களா? என தவிக்க வைக்கிறார்.

ரித்விகாவுக்கு சின்ன வேடம்தான். பேயாகவும் வருகிறார். ஆனால் நமக்கு பயம்தான் வரவில்லை. மேக்அப் மேன் பேக்அப் ஆகிவிட்டாரா?

onaigal jakirathai

தொழில்நுட்ப கலைஞர்கள்..

மகேஷ், கே.தேவின் ஒளிப்பதிவும் ஆதிஷ் உத்ரியனின் இசையும் ஜஸ்ட் ஓகே.

குழந்தை கடத்தல் படமாகவே சொல்லியிருக்கலாம்.

அதில் தேவையில்லாமல் பேய் கதையை கொண்டு வந்து ஏதோ சொல்ல நினைத்து தோற்று விடுகிறார்கள்.

நம் குடும்பத்தில் இருக்கும் ஒருவரே இதுபோன்ற குழந்தை கடத்தலை செய்யலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜே.பி.ஆர்.

ஆனால் பேயை கொண்டு வந்து நம்மை சிரிக்க வைத்துவிட்டார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த பெற்றோர் படும் அவஸ்தை வலியை உணர வைக்கிறது.

ஓநாய்கள் ஜாக்கிரதை… பெற்றோருக்கு எச்சரிக்கை

சாவி விமர்சனம்

சாவி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரகாஷ் சந்திரா தான் இப்பட ஹீரோ.

இவர் பூட்டு சாவி ரிப்பேர் செய்பவர். இவருக்கு நாயகி சுனுலக்‌ஷ்மி மீது காதல்.

ஒரு நாள் ஹீரோவின் நெருங்கிய நண்பர் தன் உறவினர் வீட்டு சாவி தொலைந்துவிட்டது என்றும் அந்த வீட்டு கதவை திறக்க அழைக்கிறார்.

அவரும் உதவுகிறார். உதவி செய்துவிட்டு வரும்போது வழியில் போலீஸ் ஒருவர் இவரை பார்த்து விடுகிறார்.

அடுத்த நாள் காலை அந்த வீட்டில் இருந்து லட்சணக்கனக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் நாயகனுக்கு தெரிய வருகிறது.

இவரை பார்த்த போலீஸ் இவருக்கு வலை வீச, இவர் நிஜத் திருடனுக்கு வலை வீச பல ட்விஸ்ட்டுக்களுடன் திரைக்கதை பயணிக்கிறது.

saavi movie stills

கேரக்டர்கள்…

படத்திற்கும் கதைக்கும் எது தேவையோ அதை அத்தனை கலைஞர்களும் நிறைவாக கொடுத்துள்ளனர்.

சாவி ரிப்பேர் செய்பவர் எப்படி இருப்பாரோ? அதே போல் டிவிஎஸ் ஸ்கூட்டர், எளிமையான வாழ்க்கை என யதார்த்தமாக வருகிறார் நாயகன்.

திருடனை தேடிச் சென்று ஒவ்வொரு ட்விஸ்ட்டாக இவர் சந்திக்கும் போது நமக்கும் அதிக ஆர்வம் ஏற்படுகிறது.

அறம் படத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்த சுனுலெட்சுமி இதிலும் குறை வைக்கவில்லை. இவரின் கண்கள் இவருக்கு மிகப்பெரிய பலம்.

தன் தவிப்பை கண்களால் சொல்லிவிடுகிறார்.

saavi stills

 

இவரின் தந்தையாக வரும் அந்த குடிக்கார அப்பா சூப்பர். ஒரு நிஜ குடிக்காரனை மிஞ்சி விடுகிறார். அவர் செய்யும் அலம்பலை நிச்சயம் அனைவரும் கைத்தட்டி ரசிப்பார்கள்.

நாயகனின் அண்ணன், அவரது நண்பன், தந்தை, மங்கா என்ற அந்த பெண் என அனைவரும் சரியான தேர்வு.

Saavi-Movie-Stills-1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் 2 பாடல்கள்தான். ஒரு டூயட் ஓகே. மற்ற குத்துபாடல் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசை ஓகே சதீஷ்.

சேகர்ராமின் கேமரா அந்த கோவை மாவட்ட காட்சிகளை அடடா எவ்வளவு அழகு? என்று கேட்க வைக்கிறது.

இரண்டு மணி நேரம் கூட படம் இல்லை என்பதால் படத்தை நன்றாக ரசிக்க வைக்கிறது.

சிறிய கதைக்களம், சின்ன பட்ஜெட் என ஆடம்பரமில்லாமல் இயக்குனர் சுப்ரமணியன் கையாண்ட விதம் அருமை.

சாவி – சின்ன படங்களின் நம்பிக்கை சாவி

More Articles
Follows