• கபாலி இசை பாடல்கள் விமர்சனம்

  கபாலி இசை பாடல்கள் விமர்சனம்

  கலைப்புலி தாணு தயாரிப்பில், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி.

  ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  இப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

  இதில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆக மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது.

  இப்பாடல் வெளியீட்டுக்கு விழா எதுவும் நடத்தாமல் ஆன்லைனில் வெளியிடுகின்றனர். அந்த பாடல்கள் பின்வருமாறு…

  1)   உலகம் ஒருவனுக்கா…..

  (தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.)

  பாடல் ஆசிரியர் : கபிலன்

  பாடியவர்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா

  பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 02 நொடிகள்

   

  ulagam song stills

  வா நீ வா தோழா…
  உலகம் ஒருவனுக்கா..? உழைப்பவன் யார்..?
  விடை தருவான் கபாலி தான்…
  கலகம் செய்து, ஆண்டையரின் கதை முடிப்பான்..!

  நீ நீயாய் வந்தாய்… தீயின் கருவாய்….
  கண்கள் உறங்கினாலும், கனவுகள் உறங்காதே…

  பூவின் நிழலாய்… புல்லாங்குழலாய்…
  உன்னை வெளியிடு, துளிர் விடு,…
  பலியாடாய் எண்ணாய் விதையாக..

  வாழும் நமக்கு கதைகள் இருக்கு…
  நாளை நமக்கே விடியும்… விழித்து போராடு…
  வானம் உனதே.. பாதி வழியில், பறவை பறக்க மறக்காதே…

  ஏய் எண்ணத்தில் நூறு திட்டமிட்டு,
  கபாலி வாரான் கையத்தட்டு….
  பம்பரம் போல சுத்திக்கிட்டு,
  பரையிசை அடித்திட்டு பாட்டு கட்டு…

  ஏய் இத்தன நாளா கூட்டுக்குள்ள…
  இனிமே வாரான் நாட்டுக்குள்ள…

  போன்ற வரிகள் கபாலியின் ரீ என்ட்ரீயை காட்டுகிறது. இந்த வரிகளும் இந்த குரல்களும் இனி அடிக்கடி கேட்கலாம். ரஜினி ரசிகர்ளுக்கு செம விருந்தாய் இந்த பாடல் அமைந்துள்ளது.

   

  2)      மாய நதி..

  பாடல் ஆசிரியர் : உமா தேவி

  பாடியவர்கள் : அனந்து பிரதீப் குமார், ஸ்வேதா மேனன்

  பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 35 நொடிகள்

   

  mayanadhi song lines

   

  நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே…

  கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே…

  நான் உன்னை கானும் வரையில் தாபத நிலையே

  தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே….

   

  ஆயிரம் கோடிமுறை நான் தினம் இறந்தேன்…

  நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்…

   

  மாய நதி இன்று மார்பில் வழியுதே…

  தூய நரையிலும் காதல் மலருதே…

   

  நீர் வழியிலே மீன்களை போல், என் உறவை நான் இழந்தேன்…

  நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன்…

  ஒளி பூக்கும் இருளே…. வாழ்வின் பொருளாகி…

  வலி தீர்க்கும் வழியாய்… வாஞ்சை தரவா…

   

  நாம் நேசித்த ஒருவரை காலம் காலமாக பிரிந்து, மீண்டும் ஒன்று கூடும் நாளாக தெரிகிறது.

  இந்த இரு குரல்களும் அந்த ஏக்கத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியுள்ளன.

  அண்ணாமலை படத்தில் ரெக்கை கட்டி பறக்குதே என்ற பாடல் போல நரைத்த பின்னும் காதல் மலரும் எனச் சொல்கிறது இப்பாடல்.

  துற வாழ்க்கை அடைந்து மீண்டும் தன் காதலியை கண்டு இருக்கிறார் என்பதை இப்பாடல் வரிகள் வலிகளாய் உணர்த்துகின்றன.

   

  3)      வீர துறந்துரா…

  பாடல் ஆசிரியர் : உமா தேவி

  பாடியவர்கள் : கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார்

  பாடல் நேரம் : 3 நிமிடங்கள் 17 நொடிகள்

  வீரத் துரந்தரா

  எமை ஆளும் நிரந்தரா

  பூமி அறிந்திரா

  புது யுகத்தின் சமர் வீரா

  உன்நிலை கண்டு

  இன்புற்றார்க்கு

  இரையாகாமல்

  அன்புற்றார் அழ

  அடிமைகள் எழ

   

  உரிமை யாழ் மீட்டினான்

  உணர்வால் வாள் தீட்டினான்

  உலகில் யாரென காட்டினான்

   

  தடைகள் அறுந்திட

  தலைகள் நிமிர்ந்திட

  “கடை”யன் “படை”யன் ஆகினான்…

  இப்படியாக தூய தமிழ் வரிகள் இருந்தாலும், இடையே ஆங்கில ராப் வரிகளும் புகுத்தப்பட்டுள்ளது.

  “EVERY MAN GOTTA RIGHT TO DECIDE HIS DESTINY” என்றும் வருகிறது.

  இது கொஞ்சம் தாளம் போட வைக்கும் உள்ள பாடலே. ஆனால் இது எல்லாருக்கும் பிடித்த பாடலாய் இருக்குமா? என்பதை படம் வந்தே பிறகே காண முடியும்.

   

  4)   வானம் பார்த்தேன்…

  பாடல் ஆசிரியர் : கபிலன்

  பாடியவர் : பிரதீப் குமார்

  பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 52 நொடிகள்

  kabali vaanam parthen video song

  நதியென நான் ஓடோடி…
  கடலினை தினம் தேடினேன்…

  தனிமையின் வலி தீராதோ…
  மூச்சு காற்று போன பின்பு நான் வாழ்வதோ…
  தீராத காயம் மனதில் உன்னாலடி… ஆறாதடி…

  வானம் பார்த்தேன்… பழகிய விண்மீன் எங்கோ போக…
  பாறை நெஞ்சம் கரைகிறதே…

  இது மிகவும் சோகப்பாடலாக உள்ளது. இது ரஜினி, ராதிகா ஆப்தேவின் இளமைக் கால பாடலாக இருக்கும் என தோன்றுகிறது. அல்லது தங்களது இளமை காலத்தை எண்ணிப் பார்க்கும் பாடலாக இருக்கும் என தோன்றுகிறது.
  அதில் காதல் காயங்கள் கலந்துள்ளதாக தெரிகிறது.

   

  5)   நெருப்புடா…

  நடுவில் இடம் பெறும் வசனங்களை ரஜினிகாந்த் எழுதியிருக்கிறார்.

  பாடல் எழுதி பாடியிருப்பவர் : அருண்ராஜா காமராஜ்

  kabali fire

  நெருப்புடா நெருங்குடா பாப்போம்

  நெருங்குனா பொசுக்குற கூட்டம்!

  அடிக்கிற அழிக்கிற எண்ணம்

  முடியுமா நடக்குமா இன்னும்

  அடக்குனா அடங்குற ஆளா நீ

  இழுத்ததும் பிரியற நூலா நீ

  தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ

  விடியல விரும்பற கபாலீ…

  என்று உணர்ச்சிமிக்க வரிகளுடன் தொடங்குகிறது.

  இந்த பாடல் உருவாகும் முன்பே பட்டைய கிளப்பியது இந்த வார்த்தை. தற்போது இன்னும் எகிற வைத்துள்ளது.

  கபாலி நெருங்குகிறவன் சாவை நெருங்குகிறான் என்பது போல அனைத்து வரிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இந்தப் பாடலை திரையரங்குகளில் கேட்க பல நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.  விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.

  Comments are closed.

  Related News

  இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
  ...Read More
  சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், கஜோல்,…
  ...Read More
  தமிழ் படங்களுக்கு மலேசியாவில் பெருமளவில் மார்கெட்…
  ...Read More