நடிகர்கள்: ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் மற்றும் பலர்.
இயக்கம் – ஷங்கர்
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
படத்தொகுப்பு – ஆண்டனி
பாடல்கள் – பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார்,
கலை – டி.முத்துராஜ்
சண்டைபயிற்சி – ஸ்டண்ட் சில்வா
ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி
தயாரிப்பு – சுபாஷ்கரன் லைகா நிறுவனம்
பிஆர்ஓ.. – டைமண்ட் பாபு, ரியாஸ் அஹ்மது, நிகில் முருகன்
கதைக்களம்…
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமில்லை. அனைத்து உயிரினங்களும் சொந்தமானது. ஆனால் 6 அறிவு படைத்த மனிதன் மட்டும் தன் ஆதிக்கத்தால் அனைத்து உயிரினங்களையும் அழித்து இந்த உலகத்தை ஆட்சி செய்து வருகிறான்.
மனிதனை மிஞ்ச எந்த சக்தி இங்கில்லை. எனவே அவன் ஆணவத்தோடு அலைகிறான். பெரிய பெரிய விலங்குகள் இருந்தாலும் அதனை அழிக்க ஆயுதங்களையும் வைத்துள்ளான்.
மேலும் தொழில்நுட்ப என்ற பெயரில் நாட்டின் இயற்கை வளங்களையும் அழித்து வருகிறான். கம்ப்யூட்டர், ரோபோட் முதல் செல்போன்களை வரையும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான்.
செல்போன் கதிர் வீச்சுக்களால் பல்லாயிரக்கணக்கான பறவை இனமும் அழிந்து வருகிறது.
ஒரு நாள் மனிதனை மிஞ்சும் ஒரு ராட்சச பறவை வந்தால் என்னாகும்? அது மனிதர்களை எப்படி அழிக்கும்.
ஒருவேளை அதற்கும் மனிதன் எதையாவது கண்டு பிடித்து அதை அழித்தால் என்னாகும்?
மனிதனுக்கும் அந்த ராட்ச பறவைக்கும் நடக்கும் யுத்தமே 2.0 படத்தின் மையக்கரு.
கதைக்களம்…
நாம் நடந்து செல்ல, பயணம் செல்ல சாலைகளில் வழிகாட்டிகள் இருப்பதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுக்கு எந்த வழிகாட்டலும் இல்லை. ஆனாலும் அவை சரியாகவே பயணிக்கிறது.
தற்போது நவீன தொழில்நுட்பத்தாலும் செல்போன் டவர்களாலும் அதில் எழும் ரேடியசன்ஸால் பறவைகளின் திசை மாறி பறக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
சிட்டுக் குருவி இனமே அழிந்து போகிறது.
எனவே பறவை இனத்தை காக்க ஐந்தாம் திசை பூமிக்கு வருகிறது. (நெகட்டிவ் வைப்ரேசன்ஸ்)
இதனால் சிட்டி ரோபோவை மீண்டும் கொண்டு வருகிறார் சயின்டிஸ்ட் வசீகரன். அந்த பயங்கர சக்தியை அழிக்க முயற்சிக்கிறார்கள்.
அதன் பின்னர் 2 சக்திகளுக்கும் பனிப்போர் நடக்கிறது.
செல்போன்களிடமிருந்து அந்த ராட்ச்ச பறவை தன் இனத்தை எப்படி காக்கிறது..? மனிதர்கள் என்ன செய்தார்கள்? மனிதர்களுக்கு ரோபோ எப்படி உதவியது..? இதுவே 2.0 படத்தின் க்ளைமாக்ஸ்.
கேரக்டர்கள்….
ஒரு ரஜினி என்றாலே நம் மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது. இதில் குறிப்பிட்டு 4 ரஜினிகள் உள்ளனர்.
இது தவிர எத்தனை ரோபோ ரஜினிக்கள் என கணக்கிட முடியாது.
ஒவ்வொரு ரஜினியும் ஒவ்வொரு வகை. ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார் ரஜினி. குக்கூ என்று இவர் சொன்னால் அதுவே தனி ரகம்தான்.
ரெட் சிப் சிட்டி ரோபோ வந்த பிறகு படம் வேற லெவலில் எகிறுகிறது. பறவை மாதிரி பறக்கும் ஸ்டைலை ரோபோ காட்டும் அழகே தனி அழகுதான்.
அக்ஷய்குமார் கேரக்டர் தான் படத்தின் ஆணிவேர். பறவை இனத்துக்காக இவர் படும் பாடு நம்மை அழ வைக்கும்.
நம்மை அறியாமல் நாம் பறவை இனத்துக்கு எப்படி எல்லாம் தீங்கு இழைக்கிறோம் என்பதை உணர வைத்துள்ளார். இவரே வில்லனாக மாறி மாறி வரும்போது அதை காண ஆயிரம் கண் வேண்டும்.
ப்யூட்டிப்புல் ரோபோ எமி ஜாக்சன். நிலா கேரக்டரில் நெஞ்சில் நிறைகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஏஆர். ரஹ்மானின் இசையில் ராஜாளி பாடல் அதிரடி. இந்திரலோகத்து சுந்தரி என்ஜாய் ரகம். புல்லிநங்கால் பாடல் பூரிப்பு.
பின்னணி இசையில் மிரள வைத்துள்ளார். ரோபோக்கள் & பக்ஷி சண்டை காட்சிகள் பட்டைய கிளப்பும்.
இந்திய சினிமாவுக்கு தமிழ் சினிமா தந்த பொக்கிஷம் ஷங்கர்.
செல்போன்கள் மாயமாவது முதல் தன் அதிரடியை அரங்கேற்றியுள்ளார். இது அக்மார்க் ஷங்கர் படம்.
கிராபிக்ஸ் கிங் என்பதை நிரூபித்து உள்ளார் ஷங்கர்.
2.0 ஹாலிவுட்டுக்கு சவால்
2pointO movie review and rating