மீண்டும் ஓடிடி தளத்தை குறி வைக்கும் விஜய்சேதுபதி & நயன்தாரா

மீண்டும் ஓடிடி தளத்தை குறி வைக்கும் விஜய்சேதுபதி & நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் ‘ரெண்டு காதல்’ பிப்ரவரி 14 காதலர் தினத்தையொட்டி வெளியானது.

அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி ‘டூ.. டூ.. டூ’ இரண்டாவது பாடலும் வெளியானது.

இந்த நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் & நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Nayanthara’s one more film to release in OTT

பச்சிளங் குழந்தை மருத்துவ செலவுக்கு ரூ 20 லட்சம் வழங்கிய மக்கள் செல்வன் (வீடியோ)

பச்சிளங் குழந்தை மருத்துவ செலவுக்கு ரூ 20 லட்சம் வழங்கிய மக்கள் செல்வன் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குமாரபாளையம் பகுதியை சேர்ந்த
பாரதி குழந்தைக்கு SMA எனும் சொல்ல கூடிய Genetic Disorder சிகிச்சையின்
மருத்துவ செலவுக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூபாய் 20 இலட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

எனவே குழந்தையின் பெற்றோர் தங்களது மனமார்ந்த நன்றிகளை விஜய்சேதுபதிக்கு தெரிவித்துக் கொண்டனர்.

Vijay Sethupathi donates Rs 20 lakhs to genetic disorder child

சூர்யாவை அடுத்து கமல்ஹாசனை இயக்கும் வெற்றிமாறன்

சூர்யாவை அடுத்து கமல்ஹாசனை இயக்கும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இப்படத்தை அடுத்து தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன்.

இந்த நிலையில் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து புதிய படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

அண்மையில் கமலை சந்தித்த வெற்றிமாறன் ஒரு நாவலை அவரிடம் சொன்னதாகவும் கமலுக்கு அந்த நாவல் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா…

‛‛பிக்பாஸ் சீசன் 5, விக்ரம் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் உடன் புதிய படத்திற்காக கமல்ஹாசன் இணைய உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Vetrimaaran’s next with Ulaga Nayagan Kamal Haasan

‘ருத்ர தாண்டவம்’ மத கலவரத்தை தூண்டும்.; கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு தலைவர் பேட்டி

‘ருத்ர தாண்டவம்’ மத கலவரத்தை தூண்டும்.; கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு தலைவர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது லியோன் சுவாமி பேசியதாவது… “ருத்ரதாண்டவம் படமானது கிறிஸ்துவ மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.

ஜபம் என்பது கிறிஸ்துவ மக்களுக்கு புனிதமானது. ஆனால் இயக்குனர்கள் மத கலவரத்தையும் பிரச்சினையும் உருவாக்குவது போல இப்போது திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.

இது கிறிஸ்தவ மக்களுக்கு பெரிய கஷ்டங்களை தருகிறது.

‘ருத்ர தாண்டவம்’ போன்ற மத கலவரத்தை தூண்டும் படங்களால் அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மதத்தை இழிவுப்படுத்தும் திரைப்படங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போகிறோம்.” என பேசினார்.

ருத்ர தாண்டவம் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வசனம், காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது.

முழு திரைப்படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் படத்திற்கு தடை கோரி வழக்கு போடப்பட்டு இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Christian churches federation opposes Rudra Thandavam movie

என் ரத்தத்தின் ரத்தங்களே…; அரசியலுக்கு அடி போடும் சிம்பு..? திடீர் பரபரப்பு அறிக்கை

என் ரத்தத்தின் ரத்தங்களே…; அரசியலுக்கு அடி போடும் சிம்பு..? திடீர் பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் கட்சிகளில் பல பிரிவுகள் இருக்கும். அதில் வழக்கறிஞர் அணி, இளைஞரணி, கலை இலக்கிய அணி என பல அணிகள் இருக்கும்.

இது போல அணிகள் ஆரம்பிக்கப் போவதாகவும் ரசிகர்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

மதிப்பும் அன்பும் கொண்ட என் ரத்தத்தின் ரத்தமான என் உறவுகளே, வணக்கம்!

நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்.

மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம்.

ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும்

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From the desk of STR Announcement on Fans Welfare Association

ஜோதிகாவின் அடுத்த பட ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தார் சூர்யா

ஜோதிகாவின் அடுத்த பட ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தின் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அதன்படி ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன்பிறப்பு ‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது.

இதில் ஒன்றான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் ஓடிடியில் ரிலீசாகிவிட்டது.

மற்றொரு படமான ‘உடன்பிறப்பு’ படம் ஜோதிகாவின் 50 வது படமாக தயாராகி உள்ளது.

இந்தப் படத்தில், அதிகம் நடித்திராத கிராமத்து வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

மாதங்கியும், வைரவனும் உடன்பிறப்புகள்.

மாதங்கியின் கணவன் சற்குணத்தால் இவர்கள் உறவில் விரிசல் விழுகிறது.

அண்ணனா, கணவனா என்ற இரு துருவங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவராக மாதங்கியின் கேரக்டர் எழுதப்பட்டுள்ளது.

இதில் மாதங்கியாக ஜோதிகாவும், உடன்பிறந்த சகோதரன் வைரவனாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் சற்குணமாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார்.

இமான் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் தயாராகி உள்ளது.

சரவணன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர் 2015ல் வெளியான கத்துக்குட்டி படத்தை இயக்கியவர்.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் 14ல் ஆயுதபூஜை ஸ்பெஷலாக அமேசானில் ‘உடன்பிறப்பு’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Jyothika’s next film release date announced

More Articles
Follows