கல்தா யாருக்கு? ரசிகனுக்கே…. கல்தா விமர்சனம் 2.5/5

கல்தா யாருக்கு? ரசிகனுக்கே…. கல்தா விமர்சனம் 2.5/5

கதைக்களம்…

நாம் அன்றாடம் கடந்து போகும் குப்பை மேடுகள் நமக்கே எமனாக மாறும் கதை… அதிலும் பணம் பார்த்து அரசியல் நடத்தும் விஷகிருமிகளின் மற்றொரு முகத்தை சொல்கிறது இந்த படம்.

தன்னிலங்காடு… தமிழக எல்லையோரம் உள்ள கிராமம்.

அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்து வரும் மருத்துவ மற்றும் மாமிச கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டுகின்றனர்.

மக்களுக்கு என்ன நோய் வந்தால் என்ன? இதனால் அவர்களுக்கு எந்த பிரச்சினை இருந்தால் என்ன? நம் பொழப்பு சரியா ஓடுகிறதா? என லட்சணக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு கவுன்சிலர், எம்எல்ஏ மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அலட்சியம் காட்டுகின்றனர்.

ஒரு கட்டத்தில் இவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து அந்த பகுதியில் குணா, அவரின் மனைவி, அவரது தம்பி உள்ளிட்ட இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

இறுதியில் மக்கள் போராட்டம் வென்றதா? அதிகார வர்க்கம் வென்றதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

விஜய்சேதுபதி தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதையின் நாயகனாக நடித்த ஆண்டனி இதில் குணா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

ஊருக்காக உழைக்கும் எண்ணம், மக்களுக்கான புரட்சி, மனைவியுடன் ரொமான்ஸ் என யதார்த்தமாக கொடுத்துள்ளார். இவரின் மனைவியாக திவ்யா. கொஞ்சம் நேரம் என்றாலும் கொஞ்சும் நேரம் ரசிக்க வைக்கிறது.

மற்றொரு நாயகன் சிவ நிஷாந்த். நல்ல உயரம். நல்ல ஆக்சன் என கொடுத்துள்ளார். ஆனால் சென்டிமெண்ட் மற்றும் எமோசன் சுத்தமாக ஒர்க் அவுக் ஆகவில்லை.

இவரை ஒருவர் கத்தியால் குத்தியபோது குத்தியவர் கொடுக்கும் ஆவேசம் கூட இவரது முகத்தில் இல்லை. அதுபோல் கஜராஜ் மரணிக்கும் போது இவரின் அழுகை பத்தவில்லை.

இரண்டு நாயகியகள் திவ்யா மற்றும் அய்ரா. ஆனால் அய்ராவின் கேரக்டர் படத்துடன் ஒன்றவில்லை.

காமெடி செய்த அப்புகுட்டி இது வில்லத்தனம் செய்ய முயற்சித்துள்ளார். ஏன் பாஸ்? அது எல்லாம் நமக்கு ஒர்க் அவுட் ஆகுமா? விடுங்க ஜீ. கஜ்ராஜ் கேரக்டர் ரசிகர்களை கவரும்.

இன்னும் சில இதர கேரக்டர்கள் இருந்தாலும் பெரிதாக எடுப்படவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் வாசுவின் கை வண்ணத்தில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

ஜெய் க்ரிஷின் இசையில் பாடல்கள் கவனத்தை ஈர்க்கவில்லை.

வைரமுத்து மற்றும் வித்யாசாகர் வரிகளுக்கு ஏற்ப பாடல்கள் அமையவில்லை.

மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகளால் உண்மாகும் தீமைகளை சொல்லியுள்ளார் டைரக்டர். அதிலும் அரசியல்வாதிகளை நினைத்தால் இந்த நாட்டையே விற்றுவிடுவார்கள். நம்மிடம் இருக்கும் ஓட்டு மை வைத்து தான் அவர்கள் முகத்தில் கரி பூச வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார் டைரக்டர்.

ஆனால் அதை சொன்ன விதத்தில் கோட்டை விட்டுள்ளார். இதற்கான தீர்வு என்ன என்பதை சொல்லவில்லை. மக்கள் போராட்டம் வீண்.. நாம் அரசியல் பழகும் வரை அரசியல்வாதிகளை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல சொன்னாலும் அதிலும் பழிவாங்கும் கதை போல முடித்துவிட்டார்.

Galtha movie review rating

Comments are closed.