எங்கிட்ட மோதாதே விமர்சனம்

எங்கிட்ட மோதாதே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நடராஜ் (நட்டி) ராஜாஜி, ராதாரவி, விஜய்முருகன், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், பாலா சிங், ப்ளோரண்ட் சி பெர்ரெரா, தாஷாயினி, முருகானந்தம், வெற்றிவேல்ராஜா மற்றும் பலர்.
இயக்கம் : ராமு செல்லப்பா
இசை : நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவாளர் : எம் சி கணேஷ் சந்திரா
எடிட்டர்: அத்தியப்பன் சிவா
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பு : ஈராஸ் பிலிம் இண்டர்நேஷ்னல்

Enkitta Mothathe team

கதைக்களம்…

ஒன்லைன்… ரஜினி-கமல் ரசிகர்கள் மோதலும், அதனை சுற்றியுள்ள அரசியலும்தான் கதைக்களம்.

ரஜினி ரசிகர் நட்ராஜ் மற்றும் கமல் ரசிகர் ராஜாஜிக்கு கட் அவுட், போர்டு வரைவதுதான் தொழில். ராஜாஜியின் தங்கை சஞ்சிதா.

சில நேரங்களில் ரஜினி-கமல் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால், கட் அவுட் வைப்பதில் ரசிகர்களிடையே மோதல் வலுக்கிறது.

இதனால் ரசிகர்களுக் பெரும் கட்டுபாடுகளை வைக்கின்றனர். இதில் அரசியல்வாதியும் தியேட்டர் உரிமையாளருமான ராதாரவியும் தலையிடுகிறார்.

இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வர, ரசிகர்களுக்கும் அரசியல்வாதிக்கும் மோதல் வலுக்க, அதன்பின் நடக்கும் போராட்டமே இதன் கதை.

Enkita Modhadae stills

கேரக்டர்கள்…

நட்ராஜ்… இவர் உண்மையிலேயே ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால், ரஜினியின் மேனசரிங்களை பிரதிபலிக்கிறார்.

சிகரெட் அடிப்பது முதல் ஆளை அடிப்பது முதல், ரஜினி ஸ்டைலே கண்முன் தெரிகிறது. காதல் காட்சியிலும் அசால்ட்டாக அசத்தியிருக்கிறார்.

கமல் ரசிகராக ராஜாஜி. அமைதியாக இருந்து கவர்கிறார்.

சஞ்சிதா ஷெட்டி மற்றும் பார்வதி நாயர் நல்ல தேர்வு. கிராமத்துக்கு ஏற்ற போல கூந்தல் முதல் ஆடை வரை அழகுதான்.

ராதாரவி மற்றும் விஜய்முருகன் இருவரும் வில்லன்தனத்திலும் கிராமத்து மனிதர்களை நினைவுப்படுத்துகின்றனர்.

நட்ராஜ் நண்பராக வருபவர் ரசிகர் மன்ற கூட்டத்தில் கலகலக்க வைக்கிறார்.

nataraja enkita modhadhae

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நட்ராஜ் சங்கரன் இசையில் இமான் பாடிய உன்ன பாத்தேன் ராசாத்தி பாடல் அருமையான மெலோடி. மற்ற பாடல்கள் ஓகே ரகம்.

எம்சி கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் 1980 ஆண்டுகளில் உள்ள கிராமத்து அழகை கண்முன் விருந்து படைத்திருக்கிறார்.

கலை இயக்குனர் ஆறுச்சாமி கைவண்ணத்தில் திருநெல்வேலி கிராமமும், ரசிகர்கள் உடை, அன்று பிரபலமான பொருட்கள் என அனைத்தையும் நிறைவாக கொடுத்துள்ளார்.

nataraj sanchita Enkitta Mothathe

இயக்கம் பற்றிய அலசல்…

ரசிகர்கள் கட்அவுட் வைப்பது, அதனைச்சுற்றி நடக்கும் அரசியலை உள்ளிட்டவைகளை ரசிக்கும்படி ராமு செல்லப்பா தந்திருக்கிறார்.

இன்று பேஸ்புக்கில் மோதிக்கொள்ளும் ரசிகர்களுக்கு அன்றே தமிழகத்தில் ரஜினி-கமல் அமைத்துள்ள பலம் பற்றி தெரிய வரும்.

எங்கிட்ட மோதாதே… எதிரிக்கு எச்சரிக்கை

வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆர் கே, நீது சந்திரா, இனியா, நாசர், ஜான்விஜய், ஆர் கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், அர்ச்சனா, கோமல்ஷர்மா, சிங்கமுத்து, மனோபாலா, மதன்பாபு மற்றும் பலர்.
இயக்கம் : ஷாஜி கைலாஷ்
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : சஞ்சீவ் சங்கர்
எடிட்டர்: பிரபாகர்
பி.ஆர்.ஓ.: அ ஜான்
தயாரிப்பு : மக்கள் பாசறை (ஆர் கே)

rk advt

கதைக்களம்…

ஒன்லைன்… ரயிலில் நடக்கும் க்ரைம் த்ரில்லர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டில் தீவிரவாதி, ஒரு நடிகை குடும்பம், ஜர்ணலிஸ்ட், நீது சந்திரா, நாலு டாக்டர் ப்ரெண்ட்ஸ், ஒரு பைத்தியக்காரன் குடும்பம், ஒரு பணக்கார பெண், டிடிஆர் உள்ளிட்டவர்கள் பயணம் செய்கிறார்கள்.

அதில் பயணம் செய்யும் 3 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களை கொன்றவர் யார்?

அதனை ஐபிஎஸ் அதிகாரி ஆர். கே. எப்படி கண்டு பிடிக்கிறார்? என்பதே மீதிக்கதை.

vaigai express advt

கதாபாத்திரங்கள்…

ஆர்கேவின் அறிமுகமே அசத்தல்தான். படம் முழுவதும் ஆர்கே-வே ஆட்சி செய்கிறார்.

படத்தின் முதல் காட்சியில் தொடங்கிய அதே எனர்ஜியை க்ளைமாக்ஸ் வரை கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு ஃபிட்டான போலீஸ் கிடைத்திருக்கிறார். ஆனால் ஒரு சில காட்சிகளிலாவது சிரித்து இருக்கலாம் ஆர்.கே. சார்.

இரண்டு கேரக்டர்களிலும் நீத்து சந்திரா ஸ்கோர் செய்கிறார். இனியாவுக்கு இன்னும் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

நாசர், ஜான்விஜய், ஆர் கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், அர்ச்சனா, கோமல்ஷர்மா, சிங்கமுத்து, மனோபாலா, மதன்பாபு, மலையாள கேரக்டரில் வரும் அனுப் ஆகியோரின் கேரக்டர்களில் கூடுதல் பலம் சேர்த்திருக்கலாம்.

vaigai english

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தமனின் பின்னணி இசை தாறுமாறு. சில இடங்களில் ரீப்பிட்டு செய்யாமல் புதுமையாக ட்ரை செய்திருக்கலாம்.

சஞ்சீவ் சங்கர் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கனல் கண்ணன் பைட்டில் அனல் தெறிக்கிறது. எடிட்டர் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

rk neethu

இயக்குனர் பற்றிய அலசல்…

பெரும்பாலும் இதுபோன்ற கதைகளில் 3 கொலைக்கும் ஏதாவது ஒரு கனெக்ஷன் இருக்கும். உடனே ஹீரோ கண்டுபிடித்துவிடுவார்.

ஆனால் இதில், எந்தவித கனெக்ஷன் இல்லை என்பதால், 3 கொலையாளிகள் யார்? என்று சொல்வதில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் டைரக்டர்.

இதுபோன்ற கம்பீரமான ஹீரோக்கள் நல்லது செய்தால், அவரை ஹீரோயின் காதலிப்பார். ஒரு டூயட் இருந்திருக்கும். ஆனால் அதுபோன்ற எந்தவிதமான காட்சிகளையும் வைக்காமல் நகர்த்தியிருப்பது இயக்குனர் சமார்த்தியம்.

ஒரு இண்டர்நேஷ்னல் தீவிரவாதியை எப்படி கண்டுபிடிக்கிறார்? அவரை பிடிக்க ஒருவரே செல்வது கொஞ்சம் ஓவர்தான்.

இறுதியாக அந்த தீவிரவாதியை எதற்காக டிரெயினுக்கு கொண்டு வந்து கொல்கிறார் ஆர். கே. என்பதில் தெளிவில்லை.

அர்ச்சனாவுக்கு மறைந்த நடிகை கல்பனா வாய்ஸ் பொருந்தவில்லை. சில வசனங்களை பார்க்கும்போது டப்பிங் படத்தை பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது.

க்ளைமாக்ஸில் நீத்து சந்திரா கேரக்டருக்கு வைத்த ட்விஸ்ட் செம.

வைகை எக்ஸ்பிரஸ்… ஆர்.கே.வின் த்ரில்லர் எக்ஸ்பிரஸ்

கடுகு விமர்சனம்

கடுகு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, பரத் சீனி, ராதிகா பிரசிதா, ஏ. வெங்கடேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : விஜய் மில்டன்
இசை : எஸ்.என்.அருணகிரி, அனூப் சீலின்
ஒளிப்பதிவாளர் : ஆனந்த் ஜீவா.
எடிட்டர்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா – ஜான்சன்
தயாரிப்பு : பாரத் சீனியின் ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’

kadugu 1

கதைக்களம்…

இந்த சமுதாயத்தில் மற்றவர் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட நாம் நம்மை எப்படி பார்க்கிறோம்? என்பது இதன் ஒன்லைன்.

தரங்கம்பாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்க்கு உதவியாளராக இருப்பவர் ராஜகுமாரன்.

ராஜகுமாரனுக்கு ஜோடி ராதிகா பிரஷித்தா.

தரங்கம்பாடி ஊரின் கவுன்சிலர் பரத் ஒரு பாக்ஸர். இவருக்கு ஜோடி சுபிக்ஷா.

ஒருமுறை இவர்களின் ஊருக்கு மினிஸ்டர் வரும்போது ஒரு பள்ளி மாணவியை மானப்பங்கம் செய்ய முயற்சிக்கிறார்.

இதனையறிந்த பரத், ராஜகுமாரன், ராதிகா பிரசித்தா, வெங்கடேஷ் என்ன செய்தார்கள்?

அந்த சிறுமிக்கு நியாயம் கிடைத்ததா? என்பதை உணர்வுபூர்வமாக படமாக்கியிருக்கிறார் விஜய்மில்டன்.

kadugu audio launch stills

கதாபாத்திரங்கள்…

இதுவரை ஏற்காத கேரக்டரில் பரத். ஒரு அநியாயம் நடந்தால், எல்லா ஹீரோக்கள் என்ன செய்வார்களோ? அதற்கு எதிராக செய்து, அவரின் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்.

பாக்ஸர் கேரக்டருக்கு செம பிட்டாக பொருந்தி இருக்கிறார் பரத்.

காதல் காட்சிகளிலும், ஊர் மக்களை அனுசரித்து செல்லும் காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

இதுநாள் வரை இயக்குனராக கவர்ந்த ராஜகுமாரன் இதில் நடிகராக ஜொலிக்கிறார்.

சிறுமிக்காக உருதுவதும், புலி ஆட்டம் ஆடுவதும், பேஸ்புக்கில் லவ் செய்வதும் என பல காட்சிகளில் கைதட்டல்களை அள்ளி செல்கிறார்.

க்ளைமாக்ஸ் பைட் துள்ளல் என்றால், அவர் பேசும் வசனங்கள் மனதை கிள்ளும்.

சுபிக்ஷாவுக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும், அழகாக வந்து போகிறார்.

ராதிகா பிரஷித்தா இயல்பான பெண்ணாக வந்து மனதில் நிறைகிறார்.

அனிருத் பெயரில் வரும் பரத் சீனி சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். அதுபோல் சக்தி, தயா வெங்கட். போலீஸ் ஏட்டு உள்ளிட்டவர்களும் நிறைவான தேர்வு.
kadugu stills

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் விஜய்மில்டன் என்பதால் தனக்கான காட்சிகளை அழகாக படம்பிடித்திருக்கிறார்.

பொதுவாக தரங்கம்பாடி பகுதி சுத்தமாக இருப்பதில்லை. ஆனால் இவரின் கேமரா கண்களில் தரங்கம்பாடி கடற்கரை தங்கமாய் மின்னுகிறது.

மதன்கார்க்கி வரிகளில், அருணகிரி இசையில் உருவான நிலவெது கரையெது பாடல் நிச்சயம் அனைவரையும் கவரும்.

kadugu 2

இயக்குனர் பற்றிய அலசல்…

நாம் சாலையில் செல்லும்போது ஆடம்பரமாக செல்பவரை காண்போம். அதுபோல் மிகவும் எளிமையாக இருப்பவரும் நம் கவனத்தை நிச்சயம் கவருவார்.

அதுபோல இரண்டு கேரக்டர்களை இயக்குனர் கையாண்ட விதம் மிக அருமை.

பாலியல் கொடுமை நடந்தால்தான் குற்றம் என்பதில்லை. அது நடக்க முற்பட்டாலே குழந்தைகளுக்கு எப்படியான பாதிப்பை சந்திக்கிறார்கள் என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார் விஜய்மில்டன்.

இந்த படத்தை வாங்கி வெளியிடும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்

கடுகு… கடலளவு மனசு

புரூஸ் லீ விமர்சனம்

புரூஸ் லீ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜிவி பிரகாஷ், கீர்த்தி கர்பந்தா, பாலசரவணன், முனீஷ்காந்த் ராமதாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் மற்றும் பலர்.
இயக்கம் : பிரசாந்த் பாண்டிராஜ்
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவாளர் : பி.வி. சங்கர்
எடிட்டர்: பிரதீப் இ ராகவ், ஜி. மனோஜ்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பு : கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்

bruce lee gvp

கதைக்களம்…

ஜெமினி கணேசன் என்ற ஜிவி. பிரகாஷ்க்கு புரூஸ் லீ என்ற பட்டப்பெயரும் உண்டு. இவரது நண்பர் பால சரவணன்.

இவர்கள் இருவருக்கும் காதலிகள் உண்டு.

ஒரு சூழ்நிலையில் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகரான ஜிவி, வில்லன் ராமதாஸால் மன்சூர் கொல்லப்படுவதை பார்த்து விடுகிறார்.

போலீசிலிடம் செல்லலாம் என்றால், அவர்களே கொலைக்கு உடந்தையாக இருப்பது தெரிய வருகிறது.

எனவே, அந்த கொலையை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார் இந்த பயாந்தாங்கொள்ளி புரூஸ் லீ என்பதே கதை.

bruce lee team

கதாபாத்திரங்கள்…

வழக்கமான ஜிவி பிரகாஷ் படத்தில் இதுவும் ஒன்று. ரூட்டை மாற்றினால் அவருடைய சினிமா பயணம் சிறக்கும்.

பில்டப் கொடுத்து ஸ்கெட்ச் போடுவதையெல்லாம் ரசிக்க முடியவில்லை. காதலியுடன் ரொமான்ஸ் சுத்தமாக இல்லை.

ஆமா தாடிய எடுக்கிற ஐடியாவே இல்லையா சார்..? என்ன ரகசியமோ..?

பாலசரவணன் கொஞ்சம் ஆறுதல். ஆனால் பெரிதாக சொல்லும்படி இல்லை.

மொட்டை ராஜேந்திரன் இருந்தால், ஜிவி பிரகாஷ் ஹிட்டடித்து விடலாம் என கணக்கு போட்டுவிடுகிறார் போல. அந்த எண்ணமும் புஷ்தான்.

தன் முதல் தமிழ் படம் இப்படியா கீர்த்தி கர்பந்தாவுக்கு அமைய வேண்டும்? என கேட்கத் தோன்றுகிறது.

மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் இருந்தும் படத்தில் வில்லத்தனம் இல்லை.

ராமதாஸ் வில்லன் வேடம் ஏற்றதால் அவரிடமும் காமெடி இல்லை.

bruce lee gvp bala saravanan

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு ஜிவி பிரகாஷ்தான் இசை என்றாலும் படத்திற்கு பாடல்கள் கைகொடுக்கவில்லை.

பி.வி. ஷங்கரின் ஒளிப்பதிவில் மட்டும் காட்சிகளை ரசிக்க முடிகிறது.

இதில் குழந்தைகள் பிடித்த விஷயங்கள் இருக்கும் என்று இயக்குனர் ஒருமுறை கூறியிருந்தார். ஆனால் நான்தான் உங்கொப்பன்டா என்ற பாடலுக்கு சிறுவர்கள் வருகிறார்கள் அவ்வளவுதான்.

மற்றபடி இளைஞர்கள் ரசிக்கும்படி கூட காட்சிகள் இல்லை.

அதிலும் வில்லனின் ஆட்களை கடத்த போடும் திட்டம், காதலியை காப்பாற்ற போடும் திட்டம்… இந்த மொக்க காட்சி எல்லாம் தேவையா? என்றே கேட்க தோன்றும்.

ஒவ்வொரு படத்தில் இருந்து ஒவ்வொரு காட்சிகளை சேர்த்துவிட்டால் படம் ஓடி விடும் என தப்புக் கணக்கு போட்டுவிட்டார் டைரக்டர் பிரசாந்த்.

புரூஸ் லீ…  செம்மம அடி… யாருக்கோ…?

கட்டப்பாவ காணோம் விமர்சனம்

கட்டப்பாவ காணோம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன் மற்றும் பலர்.
இயக்கம் : மணி செயோன்
இசை : சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவாளர் : ஆன்ந்த் ஜீவா.
எடிட்டர்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : வின்ட்சிம்ஸ் மீடியா

கதைக்களம்…

வாஸ்து பார்த்து வீடு கட்டுவது ஒரு ரகம். கட்டிய வீட்டை வாஸ்துக்கு ஏற்றபடி அமைப்பது மற்றொரு ரகம்.

ஆனால் வாஸ்து சாதனங்களை வீட்டில் வைத்து, அதிர்ஷ்டம் தேடிக் கொள்வது மற்றொரு வகை. இதில் 3வது ரகம்தான் இப்படம்.

பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதலித்து வீட்டை விட்டு வெளியேறும் தம்பதிகள் சிபி ஐஸ்வர்யா.

ஒரு சூழ்நிலையில் இவர்களிடம் கட்டப்பா என்ற ஒரு வாஸ்து மீன் சிக்கிக் கொள்கிறது.

இதனிடையில் இவர்கள் வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் சமயத்தில் ஒரு கும்பல் பணம் கேட்டு இவர்களை மிரட்டுகிறது.

அப்போதுதான் அந்த மீனுக்கு கோடிக்கணக்கான மதிப்பு இருப்பதை தெரிந்து அதை வைத்து அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர் சிபி ஜோடி.

அதன்பின்னர் நடக்கும் மீன் சமாச்சாரங்களே இந்த கட்டப்பாவ காணோம்.

C6NZzMDXEAErfr9

கதாபாத்திரங்கள்…

நாய் படம், பேய் படம் என்று வலம் வந்த சிபி ராஜ் இதில் மீனுடன் கை கோர்த்துள்ளார்.

கொஞ்சம் ரொமான்ஸ் செய்ய முயன்று இருக்கிறார். இவருக்காக கதையில்லாமல் கதைகேற்றப்படி நடித்திருக்கிறார் சிபி.

மற்றொரு வால மீனும் படத்தில் இருக்கிறது. அவர்தான் ஐஸ்வர்யா (ஹி…ஹி… கேரக்டர் பெயர் மீனா… அதான்…)

ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் கொஞ்சம் ரொமான்டிக் மூடிலேயே வருகிறார்.

ஐஸ்வர்யா மீனா என்றால் சாந்தினி வீணா… அட அவர் கேரக்டர் படத்தில் வீணடிக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னோம்.

இவர்களுடன் பேபி மோனிகா, ஜெய்குமார், சித்ரா லட்சுமணன், காளி வெங்கட், மைம் கோபி, டவுட் சரவணன், யோகி பாபு, நலன் குமாரசாமி ஆகியோரும் உண்டு.

இதில் யோகிபாபு, காளி வெங்கட், டவுட் சரவணன், ஆகியோர் ரசிக்க வைக்கின்றனர்.

காளி வெங்கட் கொடுக்கும் டபுள் மீனிங் கவுண்டர்கள் படத்திற்கு பெரிய பலம்.

கிரிக்கெட் மேட்ச் சீன், பாத்ரூம் ட்ரெஸ் கராத்தே மாஸ்டர் வசனங்கள் கைத்தட்டி ரசிக்க வைக்கும்.

C6zh_rhWgAM7VAG

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் தயாநிதி இசையில் சித்து ஸ்ரீராம் பாடியுள்ள ஏ…பெண்ணே பாடல் கேட்கும் ரகம்.

க்ளைமாக்ஸ் பைட் பின்னணி இசை ஜாலி ரகம்.
ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது.

படம் மீன் படம் என்பதால் பல கேரக்டர்களுக்கு மீன் பெயர்களே உள்ளது.
மீனை வைத்து படத்தை முழுவதும் நகர்த்தியிருக்கிறார் டைரக்டர். வாஸ்து பார்ப்பவர்களுக்கு பிடிக்கும். மற்றவர்களுக்கு எப்படியோ..?

சென்னையில் எவ்ளவோ தண்ணி லாரி இருக்கும்போது, மீனை உடனே உடனே எப்படி கண்டுபிடிக்கிறார் டவுட் சரவணன் என்று தெரியவில்லை.

மிகவும் கஷ்டப்படுவது போன்று சிபியை காட்டியிருக்கிறார்கள். ஆனால் ட்ரெஸ் ஆடம்பர பங்களா? இது எல்லாம் எப்படின்னு தெரியல.

கட்டப்பாவ காணோம்… வாஸ்து வஞ்சிரம்

மாநகரம் விமர்சனம்

மாநகரம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கெசன்ட்ரா, சார்லி, ராம்தாஸ் (முனிஷ்காந்த்), மதுசூதனன் மற்றும் பலர்.
இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
இசை : ஜாவேத் ரியாஸ்
ஒளிப்பதிவாளர் : செல்வகுமார் எஸ்.கே.
எடிட்டர்: பிலோமின் ராஜ்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பு : பொன்டேன்ஷியல் ஸ்டூடியோஸ் எஸ்.ஆர். பிரபு

maanagaram stills

கதைக்களம்…

சென்னைக்கு ஐடி கம்பெனியில் வேலை தேடி வரும் ஸ்ரீ. கார் டிரைவர் வேலைக்கு வரும் சார்லி. அதே கம்பெனியில் பணிபுரியும் ரெஜினா. மற்றும் இவரின் காதலன் சுந்தீப் இவர்கள் ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் தாதா மதுசூதனன், காமெடி ரவுடி முனிஷ்காந்த், நேர்மையற்ற போலீஸ் அதிகாரி.

இதனிடையில் தாதா மதுசூதனின் சிறுவயது மகன் கடத்தப்படுகிறான்.

இவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பிரச்சினைகளை சந்திக்க, அந்த அனைத்தும் பிரச்சினைகளையும் ஒரே முடிச்சில் கொண்டு வந்து, அதன்பின் ஒவ்வொன்றாய் இயக்குனர் தீர்வு சொல்லும் போது நம்மை படபடக்க வைக்கிறார்.

இந்த ட்விஸ்ட்கள் அனைத்தையும் நாம் எதிர்பார்க்காத வண்ணம் கொடுத்திருப்பது டைரக்டர் டச்.

maa
கதாபாத்திரங்கள்..

ஸ்ரீ மற்றும் சுந்தீப் இருவரும் நாயகர்கள். ஸ்ரீ கிராமத்து இளைஞர். நகரத்து வாழ்க்கை நரகம் என்றாலும் வேறுவழியின்றி வசிக்கிறார். அதை தன் நடிப்பிலும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீ.

தன்னை ஏற்காக ஒரு பெண் முகத்தில் ஆசிட் ஊற்றிய ஒருவனுக்கு ஆசிட் மூலமே பழிவாங்கும் சுந்தீப் சூப்பர். எவருக்கும் பயப்படாமல் நேர்மையாக துணிந்து வாழும் இவரைப் போன்றோர் மாநகரங்களுக்கு தேவை.

இந்த சீரியஸ் சப்ஜெக்ட்டில் காமெடி சிக்ஸர் அடித்துள்ளார் ‘முண்டாசுப்பாட்டி’ ராம்தாஸ்.

க்ளைமாக்ஸில் இவர் போலீஸிடம் மாட்டிக் கொண்டு செய்யும் வார்த்தை ஜால சேட்டைகள் செம ரிலாக்ஸ்.

இறுதியாக முனிஷ்காந்த் பணத்தை விட்டு சென்று, நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

எமன் படத்தில் முத்திரை பதித்த சார்லி இதிலும் அதிகம் ஸ்கோர் செய்கிறார். தன் ஆஸ்துமா நோய் மகனுக்காக ஏங்குவதும், சென்னை ரூட் தெரியாமல் திண்டாடுவதும் ரசிக்க வைக்கிறது.

இவர்களுடன் ஐடி எச்ஆர். (Human Resource) ரெஜினா மற்றும் மதுசூதனன் கேரக்டர்களும் ரசிக்க வைக்கிறது.

maanagaram team

வசீகரிக்கும் வசனங்கள்…

“இந்த சென்னை சிட்டிக்கு பொழப்பு தேடி வரவங்க இந்த ஊரை திட்டிக்கிட்டேதான் இருப்பாங்க. ஆனா ஒருத்தனும் இந்த ஊரை விட்ட போக மாட்டானுங்க”,”

நடு ரோட்டுல போட்டு ஒருத்தன அடிச்சா ஏன்னு எவனும் கேட்கிறது இல்ல. நாம சரியா கேட்கிறோமோ? ஆனா நாமளும் குறைதானே சொல்றோம்.

உள்ளிட்ட பல வசனங்கள் சென்னை வாசிகளுக்கு உறுத்தலை ஏற்படுத்தும்.

maanagaram heros

இயக்கம் பற்றிய அலசல்…

படத்தின் எந்தவொரு காட்சியையும் ரசிகர்கள் மிஸ் செய்யக்கூடாது என்று இயக்குனர் நினைத்திருப்பார் போல.

படத்தின் டைட்டில் கார்டு முதல் இறுதிவரை சீன் நுனியில் உட்கார வைத்துள்ளார்.

இதுபோன்ற டைட்டில் கார்டு டிசைன்ஸ் நம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும். (மிஸ் பண்ணீடாதிங்க.. பீல் பன்னுவீங்க..)

இயக்குனர் லோகேஷ் கனகராஜை சபாஷ் கனகராஜ் என்று தாராளமாக அழைக்கலாம். அவ்வளவு பொருத்தம்.

மாநகரம்… மெகா விருந்து

More Articles
Follows