நாம் இல்லாவிட்டாலும் எல்லாம் நடக்கும்.; ‘விநோதய சித்தம்’ விமர்சனம் 4/5

நாம் இல்லாவிட்டாலும் எல்லாம் நடக்கும்.; ‘விநோதய சித்தம்’ விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, முனிஸ்காநத், தீபக், ஜெய பிரகாஷ், ஹரிகிருஷ்ணன், அசோக் மற்றும் பலர்.

இசை – சத்யா சி
இயக்கம் – சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
படத்தொகுப்பு – எ.எல். ரமேஷ்.
தயாரிப்பு – அபிராமி மீடியா ஒர்க்ஸ்.

ZEE5 ஓடிடி ரிலீஸ் : 13 -10- 2021

ஒன் லைன்…

ஒரு குடும்பமாகட்டும்… ஒரு ஊராகட்டும்… ஒரு நிறுவனமாகட்டும்… ஒரு நாடாகட்டும்.. ஒரு கட்சியாகட்டும்… நாம் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்..

எவர் இல்லாவிட்டாலும் எல்லாமே நடக்கும். ஆணவத்தில் ஆடக்கூடாது என்பதே இப்படத்தின் கரு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்திருக்கும் படம்.

கதைக்களம்…

பிரபலமான நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் பரசுராம் (தம்பி ராமையா).

தன் வீடு முதல் தன் ஆபிஸ் வரை எல்லாமே தன் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்ற நினைப்பு இவருக்கு. நம் பேச்சுக்கு எல்லாரும் கட்டுப்பட்டு நிற்க வேண்டும் என்ற எண்ணமும் இவருக்குண்டு.

ஒரு சூழ்நிலையில் அவசரமாக செல்லும்போது ஒரு கோர விபத்தை சந்திக்கிறார் பரசுராம்.

அதில் படுகாயமடைந்த அவரின் உயிர் மெல்ல மெல்ல பிரிகிறது..

அப்போது அந்த விண்ணுலகத்தில் காலத்தை மனிதரூபத்தில் (சமுத்திரக்கனி) சந்திக்கிறார்.

தான் இல்லையென்றால் ஆபிஸ் & வீடு எதுவும் இயங்காது. எனவே தான் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிக்க கால அவகாசம் தருமாறு காலத்திடம் கேட்கிறார்.

அதுவரை தம்பி ராமையாவுடன் தானும் கூடவே இருப்பதாகவும் சொல்லி அவகாசம் தருகிறார் சமுத்திரக்கனி்.

அதன்படி 90 நாட்கள் ( 3 மாதங்கள்) அவகாசம் கொடுக்கப்படுகிறது.

விபத்தில் மீண்டு கண்விழிக்கும் தம்பி ராமையா அந்த 3 மாதத்தில் என்ன செய்தார்.? அவருடைய கடமைகளை செய்து முடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

காமெடியாக இருந்தாலும் குணசித்திர கேரக்டர் என்றாலும் அதை சிறப்பாக செய்பவர் தம்பி ராமையா.

இந்த படத்தில் அவர்தான் ஹீரோ. சும்மா விடுவாரா..? அடுத்த தேசிய விருதுக்கு முன்பதிவு செய்துவிட்டார் தம்பி ராமையா எனலாம்.

சிடுசிடுவென கண்டிப்பாக பேசுவது முதல் கால தேவனிடம் கெஞ்சுவது முதல் அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

மீண்டும் மண்ணில் வாழ ஆரம்பித்ததும் அவரிடம் நிறைய மாற்றங்கள்.. அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

தம்பி ராமையாவின் மகனாக தீபக், மகளாக சஞ்சிதா ஷெட்டி, நண்பனாக முனிஷ்காந்த், தம்பி ராமையாவின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி…. இப்படி அனைவருமே தங்கள் நடிப்பில் கச்சிதம்.

அதில் ஸ்ரீரஞ்சனி அசத்தலான அழகான அருமையான அம்மா. அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் குறையின்றி நடித்திருக்கின்றனர்.

டெக்னீஷியன்கள்…

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சத்யாவின் இசையின் படத்துக்கு சிறப்பு. தேவைக்கு ஏற்ப சரியாகக் கொடுத்திருக்கின்றனர்.

வசனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் ஷார்ப். வசனங்கள் தான் படத்தை பெரிதும் தாங்கி நிற்கின்றன.

இது ஒரு நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை என்பதுபோல் தோன்றுகிறது. அடிக்கடி சீரியல் போல ஒரு நாடகத்தன்மை எட்டிப் பார்க்கிறது. தவிர்த்திருக்கலாம் இயக்குனர் சமுத்திரக்கனி.

ஆனால் படத்தின் நீளம் குறைவு (ஒன்றே முக்கால் மணி நேரம்) என்பதால் நாடகத்தனம் பெரிதாக தெரியவில்லை.

மலையாள சினிமா பாணியில் இப்படியொரு சுவாரஸ்யமான கதையைத் தேர்வு செய்த சமுத்திரக்கனியை நிச்சயம் பூங்கொத்து கொடுத்து பாராட்ட வேண்டும்.

கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவர் வாழ்க்கையில் மற்றொருவர் இல்லாமல் போனாலும் எல்லாம் தானாக நடக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் சமுத்திரக்கனி.

ஆக இந்த விநோதய சித்தம்… வித்தியாசமான சிந்தனை

Vinodhaya Sitham movie review and rating in Tamil

உயிர் மூச்சே… உடன்பிறப்பே விமர்சனம் 3.75/5

உயிர் மூச்சே… உடன்பிறப்பே விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன் லைன்…

‘கத்துக்குட்டி’ படத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை சித்தரித்து இருந்தார் இரா.சரவணன். இந்த உடன்பிறப்பே அவரின் இரண்டாவது படமாக வந்துள்ளது.

பாசமலர்.. தொடங்கி கிழக்குச் சீமையிலே… நம்ம வீட்டு பிள்ளை ’வரை நாம் பார்த்த அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட்தான் இப்படத்தின் உயிர்நாடி.

கதைக்களம்…

அண்ணன் சசிகுமார் & தங்கை ஜோதிகா. தங்கை கணவர் சமுத்திரக்கனி.

நேர்மையான அடிதடி என்றால் சசிகுமார் ரெடி. நேர்மையான அட்வைஸ் என்றால் சமுத்திரக்கனி ரெடி.

தன் மச்சான் அடாவடி பேர்வழி. அதுவே ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தின் பிரிவுக்கும் காரணமாகிறது. எனவே 15 ஆண்டுகளாக பாசப் போராட்டம் நடத்துகிறார் ஜோதிகா.

15 வருடங்கள் அப்படி என்னதான் பிரச்சினை? மீண்டும் இந்த பாசமலர்கள் இணைந்தார்களா? இல்லையா.? என்பதே படத்தின் மீதிக்கதை…

கேரக்டர்கள்…

மாதங்கி கேரக்டரில் ஜோதியாய் ஜொலிக்கிறார் ஜோதிகா.

முதல் பாதியில் வசனங்களில் புயலாய் மிரட்டும் ஜோதிகா, இரண்டாம் பாதியில் மௌனமாகி தென்றலாய் தெரிகிறார்.

தன்னுடைய 50வது படத்தை தனக்கு ஏற்ற மாதிரி அருமையாக தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜோ.

சசிகுமாருக்கே உரித்தான வேஷ்டி சட்டை முறுக்குமீசை என கம்பீரமாக வருகிறார் தோற்றத்திலும் நடிப்பிலும்..

நேர்மையான மனிதராக சமுத்திரக்கனி. தனது அட்வைஸ் கேரக்டரை அட்வைஸ் செய்யாத அளவுக்கு செய்திருக்கிறார்.

ஜோ சசி சமு.. மூவர் பேசும் வசனங்களும் இவர்களின் கேரக்டர்களும் படத்தின் ப்ளஸ்.

இந்த குடும்ப பாச பயணத்தில் காமெடி ட்ராக் போட்டு அசத்தி இருக்கிறார் சூரி. சில இடங்களில் போரடிக்கிறது.

வித்தியாசமான அதே சமயம் கவனம் ஈர்க்கும் கேரக்டரில் கலையரசன்.

ஆடுகளம் நரேன், தீபா, வேல்ராஜ் என அனைவரும் தங்கள் கேரக்டரில் நேர்த்தி.

சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கிறார். அமைதியான அழகான அன்பான மனைவி.. என மிகையில்லாத நடிப்பில் அளவாக நடித்திருக்கிறார் சிஜா.

காவல்துறை ஆய்வாளராக வேல்ராஜ், சசிகுமார் மகனாக சித்தார்த், ஜோதிகாவின் மகள் நிவேதிதா சதீஷ் என அனைவரும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

இமானின் இசை படத்திற்கு பலம்.. பாடல்கள் அனைத்தையும் கேட்கும் ரகத்தில் கொடுப்பது இமான் வழக்கம்தானே.

வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவில் கதாபாத்திரங்களும் காட்சிகளும் கண்களுக்கும் மனதுக்கும் இதமளிக்கிறது.

ரூபனின் எடிட்டிங்கில் காட்சிகள் செம ஷார்ப்..

உடன்பிறப்புகளின் பாசப் போராட்டம், ஆழ்துளை கிணறு, கடன் தவணை கட்ட முடியாத விவசாயி வாழ்க்கை போராட்டம், மார்வாடிக்கு வட்டி பாடம் ஆகிய சமூக அக்கறைகளை இந்த சென்டிமெண்ட் சுவையில் கலந்துள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.

பாசமான கதையை பக்குவமாக பரிமாறுவதில் இயக்குனர் இரா. சரவணன் வென்றுவிட்டார்.

ஆக இந்த உடன்பிறப்பே… உயிர்மூச்சே

Jyothika 50th movie Udanpirappe review rating

FIRST ON NET ஆர்யா Vs ஆண்ட்ரியா.. அரண்மனை 3 விமர்சனம் 3.25/5

FIRST ON NET ஆர்யா Vs ஆண்ட்ரியா.. அரண்மனை 3 விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரண்மனை 3 படத்தை சுந்தர் சி யின் அவ்னி மூவிஸ் சார்பாக குஷ்பு தயாரிக்க சுந்தர் சி இயக்கியுள்ளார்..

ஒன் லைன்…

ஒரு பேய் படம் என்றால் தமிழ் சினிமாவில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.

ஒரு பங்களா/அரண்மனை இருக்கும். அதில் யாராவது ஒருவர் கொல்லப்படுவார். அவர் பேயாக வந்து கொன்றவர்களை பழி வாங்குவார். இதிலும் அதே தான்.

ஆனால் அந்த கதையை தன் வழக்கமான பார்முலா படி நட்சத்திர பட்டாளங்களுடன் கலர்ஃபுல்லாக காமெடியாக மிக பிரம்மாண்டமாக சொல்லியிருக்கிறார் சுந்தர் சி.

கதைக்களம்..

ஜமீன்தார் சம்பத் தன் மகள், அக்கா, தங்கை உள்ளிட்ட சொந்தங்களுடன் மிகப்பெரிய அரண்மனையில் வாழ்கிறார்.

தன் மகள் அந்த வீட்டில் பேய் இருப்பதாகச் சொல்கிறார்.. சம்பத் தன் மகள் மீது பாசத்தைக் காட்டாமல் அடிக்கடி எரிந்து விழுகிறார். ஹாஸ்டலில் சேர்க்கிறார். இப்படியாக செல்கிறது கதை.

இதன் ப்ளாஷ்பேக்கில்.. அந்த அரண்மையில் இருக்கும் பெண் அநியாயமாகக் கொல்லப்பட, அவர் சம்பந்தப்பட்டவர்களைப் பழிவாங்க துரத்துகிறார்.

அவரைக் கொன்றது யார்.? என்ன காரணம்.? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சார்பட்டா பரம்பரையில் முறுக்கேறிய ஆர்யா இதிலும் அதே உடல்வாகுடன் தோற்றமளிக்கிறார். ராஷிகண்ணாவுடன் ஆர்யாவுக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருந்தும் அதற்கான காட்சிகள் இல்லை.

இதில் ஆர்யாவும் பேயாக வருகிறார். ஆனால் பயமில்லை. முக்கியமாக ஆர்யா ஏன் பேயாக வருகிறார்? என்பதற்கான காரணங்கள் சரியாக இல்லை.

சுந்தர் படம் என்றால் நாயகி ஒரு காட்சியிலாவது பிகினி உடையில் கவர்ச்சியாக வருவார். சுந்தர் நம்மள ஏமாத்தல… (இதை நம் அருகில் இருந்த ரசிகரே சொன்னார்.) இதில் ராஷி கண்ணா அப்படி சில்லுன்னு வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார்.

ஆண்ட்ரியா அசத்தல்.. அழகாகவும் வருகிறார். அசிங்கமாகவும் வருகிறார். அழவும் வைக்கிறார். பயமுறுத்தியும் செல்கிறார்.

படத்தின் இயக்குனர் சுந்தர் சி இதில் ஆர்யாவை விட அவரே ஹீரோவாக தெரிகிறார். கிட்டத்தட்ட ஆர்யாவை பேய் வில்லனாக்கிவிட்டார். என்ன கோபமோ.?

விவேக் யோகிபாபு மனோபாலா.. இந்த மூவரின் கூட்டணி படத்திற்கு ப்ளஸ்.. பேயிடம் அடிவாங்கும் காட்சிகளிலும் இவர்கள் ஒளிந்து கொள்ளும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை.

திருமணமாகி 15 வருடத்திற்கு பிறகும் கன்னி கழியாத விவேக் & மைனா காட்சிகள் ரசிகர்களுக்கு டபுள் (மீனீங்) ட்ரீட்.

சாக்‌ஷி அகர்வால் & டிக் டாக் நளினி காட்சிகள் ஓகே ரகம்.

வில்லனாக சம்பத் & வேல ராமமூர்த்தி, மதுசூதன் ராவ் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பில் தங்கள் கேரக்டர்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.

மேலும் அமித் பார்கவ், வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாத், செல் முருகன் இவர்களுடன் சுந்தர் சி-யின் யுனிட் ஆட்கள் நிறைய பேருக்கு வாய்ப்பளித்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

திரைக்கதை வேங்கட் ராகவன்.. வசனம் பத்ரி

இசை: சத்யா சி.. ஆண்ட்ரியா பாடும் அம்மாவின் தாலாட்டு… செங்காத்தாளே… பாடல் அனைவரையும் ரசிக்க வைக்கும். ஆர்யா & ராஷி ஜோடிக்கு ஒரு டான்ஸ் சாங்… ஒரு மெலோடி சாங் என கொடுத்துள்ளார். ரசவாச்சி, தீயாகத் தோன்றி பாடல்கள் இரண்டையும் ரசிக்கலாம்.

யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்தளிக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சி செட் அரங்கம் பிரமிக்க வைக்கிறது.

இயக்கம்: சுந்தர் சி. மனோபாலாவின் உருவத்தை அநியாயத்துக்கு கிண்டல் செய்துள்ளனர். அதை தவிர்த்திருக்கலாம்.

சுந்தர் படம் என்றால் ஜாலியா இருந்தா போதும் என நினைப்பவர்கள் ரசிகர்கள். அதை காப்பாற்றியிருக்கிறார். மேலும் தன் பங்குக்கு ஹீரோயிசம் காட்டி பேயை விரட்டியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் கிராபிக்ஃஸ் பேய் பைட் & சிலை சிங்கம் எழுந்து வந்து பேயை கொல்வது குழந்தைகளை நிச்சயம் பயமுறுத்தும்.

அரண்மனை 3′ படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Sundar Arya Aranmanai 3 review rating

பக்கா ட்ரீட்மெண்ட்… டாக்டர் விமர்சனம் 4/5

பக்கா ட்ரீட்மெண்ட்… டாக்டர் விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டாக்டர் எப்படி இருக்கிறார் என பார்ப்போமா..?

கதைக்களம்…

நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெறும் துப்பாக்கிச்சூட்டில்தான் படம் தொடங்குகிறது.

ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வருண் டாக்டராக சிவகார்த்திகேயன். இவர் ஒரு நேர்மையான மருத்துவர்.

நாயகி பத்மினியாக பிரியங்கா மோகன். இவர்களுக்கு நடக்கவிருந்த திருமணம் ஒரு பிரச்சினையால் நிற்கிறது.

ஒரு கட்டத்தில் பள்ளிக்குப் போன பத்மினியின் அண்ணன் மகள் ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார். பத்மினியின் அண்ணியாக வரும் அர்ச்சனாவின் குழந்தை காணாமால் போகிறது.

அந்த சிறுமியைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கி தன்னை பிடிக்காது என்று சொன்ன நாயகிக்கு உதவுகிறார் டாக்டர் வருண்.

அந்த கும்பல் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

கமர்சியல் ஹீரோ என்றாலும் ஒரே மாதிரியான படங்களை செய்யாமல் நெக்ஸ்ட் ரூட் போட்டிருக்கும் சிவகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டலாம். சபாஷ் டாக்டர்.. உங்க பேஷண்டும் (ரசிகர்களும்) ஹாப்பி தான் சிவா.

இந்த படத்தில் கவுண்டர் காமெடிகள் கொடுக்காமல் சிக்ஸர் அடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இளைஞர்களின் டார்லிங் மெழுகு சிலையாக வலம் வருவார் பிரியங்கா மோகன். இவரின் நடிப்பை விட அழகு பேசப்படும்.

கோலமாவு கோகிலா மற்றும் சந்தானத்தின்’,‘ஏ1’ படங்களில் ரெடின் கிங்ஸ்லீயின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அதை இதிலும் இம்மியளவு கூட குறையாமல் செய்துள்ளார்.

யோகிபாபு ஹீரோவாக நடிப்பதை விட காமெடி கேரக்டரில் அதிகம் ஸ்கோர் செய்யலாம். இதில் யோகிபாபுவும் பின்னி பெடலடுத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி-யோகி பாபுவின் காம்போ தமிழ் சினிமாவுக்கு புதுசு.

வித்தியாசமான வில்லன் வேடத்தில் வினய்.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றொரு ஸ்டைலிஷ் வில்லன் இவர். சிவகார்த்திகேயன் & வினய் பேசி மோதிக் கொள்ளும் காட்சிகள் வித்தியாசமான சிந்தனை.

இவர்களுடன் இளவரசு, அருண் அலெக்ஸாண்டர், அர்ச்சனா ஆகியோரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

ஓரிரு காட்சிகளில் வரும் மிலிந்த் சோமனும் நம் கவனம் ஈர்க்கிறார்.

தீபா அக்கா இதில் வேற லெவல். சாகறத்துன்னு முடிவு ஆச்சு.. எப்படி இறந்தா என்ன? இவர் கேட்கும் போது செம.

ஆல்வின், மெல்வினாக ரகுராமும், ராஜீவ் லட்சுமணனும் ட்விஸ்ட் கொடுக்க வந்துள்ளனர்.

சுனில் ரெட்டி, அவரது அடியாள் சிவா ஆகியோரும் சூப்பர். கவனிக்க வைத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

அனிருத்தின் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி தெறிக்கவிட்டுள்ளார். இவையிரண்டும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. சிவகார்த்திகேயன் படம் என்றால் அனிருத்துக்கு அல்வா சாப்பிடுவது போல வெளுத்து கட்டியிருக்கிறார்.

செல்லம்மா பாடலும் அதனை படமாக்கிய விதமும் நன்றாக ரசிக்க வைக்கிறது. அதில் ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் சூப்பர்.

சென்னை மற்றும் கோவாவின் அழகை தன் கேமராவுக்குள் கடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்.

நிர்மலின் படத்தொகுப்பு கச்சிதம். 2ஆம் பாதியில் கொஞ்சம் எடிட் போட்டிருக்கலாம். கதையை ரசிகர்களால் யூகிக்க முடிகிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

டாக்டர் இப்படியெல்லாம் செய்வாரா? என்ற கேள்வி இருக்கலாம். சமூக அக்கறையுள்ள டாக்டர் இப்படி செய்வார் என்று சொல்லலாம்.

காமெடி வசனங்கள் செம.. சிரிக்க வைப்பதையே டார்க்கெட்டாக பயன்படுத்தியுள்ளார் டாக்டர் கம் டைரக்டர் நெல்சன்.

‘டாக்டர்’ செம டக்கர்..; விஜய்யை இயக்கி விட்டு மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் நெல்சன்.; புரொடியூசர் இவரா?

ஆனால் சில வசனங்கள் பெண்களை விமர்சிக்கும் வகையில் உள்ளது. அழகா இருக்கிற பெண்களுக்கு அறிவு இருக்காது.. உள்ளிட்ட வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

மெட்ரோ பைட் சீன் மற்றும் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் அசத்தல்.

நிறைய படங்களில் சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால் இதில் சிவகார்த்திகேயனை கம்மியாக பேச வைத்து அவரின் நடிப்பை பேச வைத்துள்ளார் நெல்சன். கோலமாவு கோகிலா பார்முலாவை இதிலும் பயன்படுத்தி ரசிகர்களுக்கு பக்கா காமெடி ட்ரீட்மெண்ட் கொடுத்துள்ளார்.

ஆக.. இந்த டாக்டரின் ட்ரீட்மெண்ட் பக்கா…

Doctor movie review and rating in Tamil

பேய் இல்லாத பேய் மிரட்டல்… லிப்ட் விமர்சனம் 3.5/5

பேய் இல்லாத பேய் மிரட்டல்… லிப்ட் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடர் பதவிக்கு, பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி ஒரு ஐடியில் சேர்கிறார் கவின். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கம்பெனி வி.பி. அவருக்கு ஓவர் டைம் ஒர்க் கொடுக்கிறார்.

இரவு 10 மணிக்கு தான் ஒர்க் முடிகிறது. கவின் மட்டும் தனியாக வேலையை முடித்து விட்டு செல்லும்போது லிப்ட்டில் செல்லும் போது ஒரு அமானுஷ்யம் நடக்கிறது. அந்த அலுவலகத்தை அவரை செல்ல விடாமல் அது தடுக்கிறது.

அவர் எப்படி எல்லாமும் முயன்றும் தப்ப முடியவில்லை. அதே நேரத்தில் மற்றொரு கேபினில் அம்ரிதாவும் மாட்டிக் கொள்கிறார். இருவரையும் அந்த அமானுஷ்யம் துரத்துகிறது.

இவர்களை துரத்த என்ன காரணம்? இவர்களை பேயாக துரத்துவது யார்? இவர்கள் தப்பித்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

கவின் யதார்த்தமான நடிப்பில் நம்மை கவனிக்க வைக்கிறார். எனக்கு காதலிக்க நேரமில்லை என அவர் சொல்லும் போதெல்லாம் பெண்களின் மனம் பாடுபடும்.

அழகான மாடர்ன் மங்கையாக மனம் கவர்கிறார் அமிர்தா ஐயர். டேய்.. NEE GAY இல்லேல்ல.. பின்ன என்னை காதலிச்சா என்ன? என அமிர்தா கேட்கும் போது குறும்பு கலந்த நடிப்பில் மின்னுகிறார்.

முதலில் ஜாலியாக வந்தாலும் பின்னர் பயம், யதார்த்தம் என அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார் அம்ரிதா.

முழுப்படமே இவர்களை வைத்து மட்டுமே செல்கிறது. அதில் முதல் பாதியில் கொஞ்சம் ரொமான்ஸ் கொடுத்திருக்கலாம். இருவரின் பதட்டமே பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

படத்தின் வில்லனாக பாலாஜி வேணுகோபால் மிகையில்லாத நடிப்பு. பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வரும் காதல் ஜோடிகளாக கிரண் கொன்டா, காயத்ரி ரெட்டி நடித்துள்ளனர். இவர்களையும் பாராட்டலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்தில் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை. அதை பாராட்டும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா. ஒரு லிப்ட்டை கூட இனி கண்டால் பயம் வரும் வகையில் கொடுத்துள்ளர்.

ஒரு பேய் படத்திற்கு என்ன அவசியமோ அதை பின்னணி இசையில் மிரட்டலாக கொடுத்துள்ளார் பிரிட்டோ மைக்கேல்.

மதனின் எடிட்டிங்க் பக்கா “ஷார்ப்”.

இயக்குனர் வினித் வரபிரசாத் அவர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். காரணம்.. இந்த பேய் படத்தில் அவர் பேயை காட்டவில்லை. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவில் நம்மை பயமுறுத்தி விடுகிறார்.

இதுபோன்ற பேய் படங்கள் என்றாலே நாயகிக்கு மேக்அப் போட்டு தலையை விரித்து போட்டப்படி வருவார்கள். பேய் பங்களா இருக்கும். ஆனால் அந்த பார்முலாக்களை உடைத்து புதிய பேய் கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

முக்கியமாக பேய் படத்தில் ஐடி வேலையில் இருக்கும் தைரியமின்மையை கூறியிருக்கிறார். டார்கெட்… ஒர்க் பிரசர்… வேலையின்மை என பல உதாரணங்களை காட்டியிருக்கிறார். இதனால் பலர் தற்கொலை செய்துக் கொள்வதையும் ஒரு கருத்துக்காக பதிவு செய்துள்ளார்.

பல காட்சிகளில் ரசிகர்கள் சீட் நுனியில் இருப்பார்கள். ஆனால் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது. இது ஓடிடியில் ரிலீசாகி உள்ளது.

லிப்ட்டில் கவின் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஆடும் அந்த கொலை ஆட்டம் பிரம்மிக்க வைக்கிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகியுள்ளது.

lift movie review

FIRST ON NET ஜாதி-மத அரசியலுக்கு நோ என்ட்ரீ…; ருத்ர தாண்டவம் விமர்சனம் 3/5

FIRST ON NET ஜாதி-மத அரசியலுக்கு நோ என்ட்ரீ…; ருத்ர தாண்டவம் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் மற்றும் நாயகன் ரிச்சர்ட் மீண்டும் இணைந்துள்ள படம் ருத்ர தாண்டவம்.

இந்த படத்தை ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கிறார்.

கதையின் நாயகனாக ரிஷி ரிச்சர்ட் நடிக்க அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ராதாரவி, கௌதம் மேனன், தம்பி ராமையா, ஜேஎஸ்கே கோபி, மனோபாலா, தீபா அக்கா, மாரிமுத்து, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஃபாருக் என்பவர் ஒளிப்பதிவு செய்ய ஜுபின் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் படம் ரிலீசாகிறது.

கதைக்களம்…

ருத்ர பிரபாகரன் காவல்துறை அதிகாரி. நேர்மையானவர். பொறுமையானவர். கைதிகளிடம் கூட கனிவாக நடந்துக் கொள்ளும் நல்ல போலீஸ்காரன்.

மாணவர்களிடம் போதை பொருட்கள் விற்கும் 18 வயது இளைஞர்களை ஒரு முறை கையும் களவுமாக பிடிக்கிறார். அவர்கள் பைக்கில் தப்பித்துச் செல்ல அவர்களை துரத்துகிறார்.

அப்போது எதிர்பாராவிதமாக அவர்களை எட்டி உதைத்து பிடிக்க முயலும்போது இருவரும் கீழே விழுந்து விடுகின்றனர்.

அதில் இரு இளைஞன் சில நாட்களில் மரணமடைகிறார். இதனால் ருத்ரனின் வேலைக்கு பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் அந்த இளைஞன் தலித் இளைஞன் என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சினையை வேறு ரூட்டில் திருப்பிவிட ருத்ரன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

அதன்பிறகு என்ன ஆனது? ருத்ரன் மீண்டும் பணியில் சேர்ந்தாரா? வழக்கில் எப்படி ஜெயித்தார்? இளைஞரின் மரணத்தின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ருத்ர பிரபாகரனாக ரிச்சர்ட் நடித்துள்ளார். ஆ… ஊ என கத்தி கத்தி சண்டை போட்டுக் கொண்டோ இல்லை பன்ச் டயலாக் பேசியோ போலீஸ் ஆக தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. கொடுத்த வேலையை சிறப்பாக கச்சிதமாக யதார்த்தமாக செய்துள்ளார் ரிச்சர்ட்.

வேலை போன பிறகு சோகமாக இருந்தால் ஓகே. அதற்கும் முன்பும் சோகமயமாகவே இருக்கிறார். காரணம் என்ன ரிச்சர்ட்?

ரிச்சர்ட்டுக்கும் நாயகி தர்ஷா குப்தாவுக்கும் பெரிதாக கெமிஸ்ட்ரி இல்லை. ஒருவேளை மிடுக்கான போலீஸ் என்பதால் அதை குறைத்துவிட்டாரோ?

அழகான பாசமான மனைவியாக வந்து செல்கிறார் தர்ஷா குப்தா.

உயர் அதிகாரியாக ஜேஎஸ்கே கோபி. இவரும் யதார்த்த போலீசாக நடித்துள்ளார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன் துறை அதிகாரிக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை சொல்லும் விதம் அருமை. நிறைய படங்களில் இனி இவருக்கு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

வக்கீல் இந்திரசேனாவாக ராதாரவி. கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் வக்கீல் போல சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மற்றொரு வக்கீலாக மாரிமுத்து. இவர் நியாயம் எது என்பதை பாராமல் காசுக்கு வேலை செய்யும் வக்கீலை காட்டியிருக்கிறார்.

போலீஸ் ரைட்டராக தம்பி ராமையா. நீண்ட நாளைக்கு பிறகு இவருக்கு பொறுப்பான வேடம். மனிதர் குறை வைக்காமல் நடிப்பை வழங்கியுள்ளார்.

வில்லனாக கௌதம் மேனன். ஓவராக கத்தி மிரட்டி வில்லத்தனம் செய்யாமல் தேவைக்கு ஏற்ப கெஞ்சியும் மிரட்டியும் சாதிக்கும் வில்லனிசம் செம.

போதை பொருள் விற்கும் இளைஞனாக பெரிய காக்கா முட்டை நடித்துள்ளார். இவரும் இவரது நண்பரும் தங்கள் கேரக்டரில் கச்சிதம். தீபா அக்கா, ஒய்ஜி

மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ் ஆகிய அனைவரும் தங்கள் கேரக்டர்களில் சிறப்பு. அம்பானி சங்கர் உள்ளிட்ட சில கலைஞர்களுக்கு வேலையே இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாரூக் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு இதம். ஹீரோ அண்ட் வில்லன் சந்திக்கும் காட்சியை பல ஆங்கிளில் காட்டியிருக்கலாம். ஒரே ஆங்கிள் ஷாட் போரடிக்கிறது. அந்த காட்சியில் இசை கூட பெரிதாக கவரவில்லை.

ஜுபின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. சலீம் படத்தில் வரும் பின்னணி இசை போல சில இடங்களில் உள்ளதை இசையமைப்பாளர் கவனித்திருக்கலாம்.

இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை.. இத்தனை தடை.. இவ்வளவு மிரட்டல்… பில்டப் தேவையா? எனத் தெரியவில்லை.
ஒரு போலீஸ்க்கு வழக்கமாக ஏற்படும் பிரச்சினை தான் முதல் பாதி. இரண்டாம் பாதியில் அதை அரசியல் சாயம் பூசிபவர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

தான் சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் விரைவாக சொல்லியிருக்கலாம் இயக்குனர் மோகன். நிறைய காட்சிகளுக்கு கத்திரியும் போட்டு இருக்கலாம். படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கிறது.

மதமாற்றம் மற்றும் போதை பொருள் கலாச்சாரத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளார். ஒருவர் மதம் மாறிய பின்னர் அவர் இருந்த முந்தைய ஜாதி இனி செல்லாது என்பதை அரசியல் நுனுக்கத்துடன் சொல்லியிருக்கிறார்.

ஆக இந்த ருத்ர தாண்டவம்… ஜாதி மத அரசியலுக்கு நோ என்ட்ரீ

More Articles
Follows