திருந்தாத ஜென்மங்கள்… குடிமகன் விமர்சனம்

திருந்தாத ஜென்மங்கள்… குடிமகன் விமர்சனம்

நடிகர்கள்: ஜெய்குமார், ஜெனிபர், பாவா செல்லத்துரை, பாலா சிங், கிருஷ்ண மூர்த்தி, மாஸ்டர் ஆகாஷ் மற்றும் பலர்.
இசை – எஸ். எம். பிரசாந்த்
ஒளிப்பதிவு – அருள்செல்வன்
எடிட்டர் – செல்வராஜ்
இயக்கம் – சத்தீஸ்வரன்
தயாரிப்பு – ஜீவமலர் சத்தீஸ்வரன்
பிஆர்ஓ – குமரேசன்

கதைக்களம்….

எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு அழகான ஊர். தன் மனைவி, தன் மகன், தன் ஊர் மக்கள் என எல்லாருடன் அன்பாக வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜெயகுமார்.

தன் அக்கா மகன் மீது அளவற்ற பாசம் வைத்துள்ள இவர் அவனை காலேஜ்ஜில் படிக்க வைக்க கடன் வாங்குகிறார். இதனால் வட்டியும் ஏறிக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் அரசியல்வாதியின் (கவுன்சிலர்) உதவியோடு ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஊருக்கு மத்தியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது.

மக்கள் எதிர்ப்பால் ஒரு மாதத்தில் கடையை அகற்றிவிடுகிறோம் என அரசியல்வாதி சுறுகிறார்.

ஆனால் அந்த கிராமத்து ஆண்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பல பிரச்சினைகள் எழுகிறது. நாயகன் குடும்பத்திலும் விரிசல் ஏற்படுகிறது. மகனும் தந்தையும் மதிக்காமல் போகிறான்.

அக்கா மகன் படிப்புக்காக வாங்கின கடனை கட்ட முடியாமல் போய்விடுகிறது. அவர்களும் இவர்களை ஏமாற்றிவிடுகின்றனர்.

அப்போது எவரும் எதிர்பாராத வகையில் நாயகி ஜெனிபர் ஒரு முடிவெடுக்கிறார். அது என்ன? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

நடித்தவர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி..?

கந்தனாக நடித்திருக்கும் ஜெய்குமார் குடிகாரன் கேரக்டருக்கு சரியான தேர்வு என்றாலும் ஒரே முக பாவனையை அடிக்கடி கொடுக்கிறார்.

நாயகி ஜெனிபர் நல்ல தேர்வு. அழகு, அன்பு, பாசம் என என நம்மை கவர்கறிர்.

இவர்களுடன் பாவா செல்லத்துரை, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கேரக்டர்களும் கச்சிதம்.
பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை என்ற பேரில் நம்மை கொன்று விட்டார் இசையமைப்பாளர். தேவையில்லாத இடத்திலும் மெட்டு போட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஓகே ரகம்.

கடன் வாங்கி கொடுப்பதாலும் நம்மை சிலர் ஏமாற்றுவதாலும் ஏற்படும் பிரச்சினைகளையும் அழகாக காட்டியிருக்கின்றனர்.

ஒரு காட்சியில் ரூ. 10,000 பணத்தை தொலைத்துவிடுவார் நாயகன். அதை ஒரு பெண் கீழே இருந்து எடுப்பதையும் அவர் பார்த்துவிடுவார். ஆனால் இவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்த பெண் ஒத்துக் கொள்ள மறுப்பார்.

அப்போது குடிகாரன் பேச்சை எவரும் நம்ப மாட்டார்கள். இதுதான் குடிகாரனுக்கு கிடைக்கும் மரியாதை என்பதை அழகாக சொல்லிருப்பார்கள்.

இவை அனைத்தும் இருந்தும் படம் முதுவதும் நாடகத்தன்மை இருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
படத்தின் க்ளைமாக்ஸை பார்த்து ஒரு சிலராவது திருந்தினால் அதுவே படத்தின் வெற்றி.

குடிகாரன்.. திருந்தாத ஜென்மங்கள்…

Kudimagan review

Comments are closed.

Related News

“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில்…
...Read More