எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

நடிகர்கள் : ஜிவி பிரகாஷ், ஆனந்தி, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், சரவணன், கருணாஸ், யோகி பாபு, நிரோஷா மற்றும் பலர்.
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : சாம் ஆண்டன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : லைகா நிறுவனம் சுபாஷ்கரன்

கதைக்களம்…

சென்னையிலுள்ள ராயபுரம் ஏரியாவை தன் கைக்குள் வைத்திருப்பவர் நைனா.

இவருக்கு வயது ஆகிவிட்டதால், தன் மகளை கட்டிக்கப் போகும் மாப்பிள்ளையை அடுத்த நைனாவாக ஆக்கிவிடலாம் என நினைக்கிறார்.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 5

 

இதற்காக உங்களில் யார் அடுத்த நைனா? என்ற ரேஞ்சுக்கு போட்டி எல்லாம் நடைபெறுகிறது.

ஒரு சூழ்நிலையில் பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் இவரது மாப்பிள்ளையாக ஆகிறார். அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே கதை.

கதாபாத்திரங்கள்…

ஜி.வி. பிரகாஷ்.. இதுவரை மியூசிக் டைரக்டர், பாடகர் என வலம் வந்தவர் கூடிய விரைவில் டான்சர் ஆகிவிடுவார் என்றே தெரிகிறது. அதற்கான பிள்ளையார் சுழியை இப்படத்தில் போட்டுள்ளார்.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 3

 

மற்றபடி நடிப்பில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார். ஆனால் டான் வேடத்திற்கு அவ்வளவாக பொருத்தமில்லை. பெட்டராக எதிர்பார்க்கிறோம்.

ஆனந்திக்கு பெரிதாக வேலையில்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆனந்தி ரசிகர்கள் படு அப்செட்.

சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகிய பலரும் உண்டு. இவர்கள் தங்கள் அனுபவ நடிப்பால் பாஸ் செய்து விடுகிறார்கள்.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 1

 

கருணாஸ் பேசும் பாகுபலி காளகேயன் வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறது. ஹாப்பி பர்த்டே டு மீ என அறிமுகம் ஆகிறார் விடிவி கணேஷ்.

இதில் அதிகம் ஸ்கோர் செய்பவர் யோகிபாபுதான். இவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு 100% கியாரண்டி கொடுக்கலாம்.

சரக்கு ஓவரா போட்டு இருக்கோமோ? என்று அப்பாவியாக கேட்பது முதல் நைனாவின் நற்காலியை அட்டைய போடுவது முதல் அசத்தியிருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷின் நண்பராக வருபவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். லொள்ளு சபா மனோகர், நிரோஷா உள்ளிட்டோரை சரியாக பயன்படுத்தவில்லை.

இவர்களுடன் பொன்னம்பலம் மற்றும் மன்சூர் அலிகானும் வந்து போகிறார்கள். எதற்காக என்பது தெரியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜி.வி. பிரகாஷின் இசையில் எம்ஜிஆரின் ரீமிக்ஸ் பாடலும் படமாக்கப்பட்ட விதமும் கண்களுக்கு நிறைவு. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பாடலை கானா பாடலாக பாடியிருக்கிறார் கானா பாலா.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 4

 

மைமா பாடல் இளைஞர்களை கவரும். மற்றபடி பின்னணி இசையில் மாஸ் சேர்த்து அசத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

கிருஷ்ண வசந்தின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள், ரவுடிகள் சேசிங் ரசிக்க வைக்கிறது.

படத்தின் ப்ளஸ்…

  • நைனா வாரிசுக்கு நடத்தபடும் ஆடிசனும் யோகிபாபுவின் வர்ணனையும் செம சூப்பர். அதில் டிஆர்பி ரேட்டிங்காக அழவைப்பது அருமை.
  • மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை

படத்தின் மைனஸ்…

  • பயந்த சுபாவம் கொண்ட ஜிவி பிரகாஷ் கடைசியில் வில்லனை பன்ச் செய்வது அவர் பொருத்துக் கொண்டாலும் எங்களால் முடியல.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 6

 

  • கபாலி, தெறி, கத்தி, வேதாளம், 24, ஆகிய படத்தின் வசனங்களை அதிகம் பயன்படுத்தி அவர்களது ரசிகர்களை கவர்ந்தாலும், இயக்குனருக்கு அவரது ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இளைஞர்களை கவர்வதற்காக, லாஜிக் இல்லாமல் தினிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது சலிப்பு தட்டுகிறது.

மொத்தத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு… அட இருக்கட்டுமே. அதுக்கு என்ன?

Comments are closed.

Related News

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘டார்லிங்’, எனக்கு…
...Read More
கடந்த 2015ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில்…
...Read More
இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டி…
...Read More