தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீனி சௌந்தரராஜன்.. இவரே இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கிறார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
கதைக்களம்…
ஸ்ரீனி சௌந்தர்ராஜன் இவரது மனைவி நிமிஷா. இவர்களுக்கு 12 வயதில் ஜான் என்று ஒரு மகன்.
ஸ்ரீனி ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார் அசோக் (ஸ்ரீனி). இவருக்கு கார் ஓட்ட தெரியாது பைக் ஓட்ட தெரியாது.. எனவே ஆபீசுக்கு வையாபுரி ஓட்டும் ஆட்டோவில் தான் செல்கிறார்..
இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் தன் மகனுக்கு விபத்து ஏற்படவே திடீரென அவசர அவசரமாக காரை ஓட்டி செல்கிறார். இதனால் மனைவிக்கு சந்தேகம் வருகிறது.
மற்றொரு நாள் காய்கறி விற்க்கும் நாகரத்தினம் சீனியை பார்த்து நீ கபில்தானே எப்படி இருக்கிறாய்.? என்கிறார். இதனால் மேலும் குழப்பம் அடையும் மனைவி நிமிஷா.. உங்களின் பிளாஷ்பேக் என்ன? நீங்கள் யார்? என பல கேள்விகளை கேட்கிறார்.
உண்மையில் அசோக் (சீனி சௌந்தரராஜன்) யார்? அவரது பெயர் கபில்.? அவருக்கு கார் ஓட்ட தெரியும் என்றால் தினமும் ஆட்டோவில் செல்வதற்கு காரணம் என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கிறது கபில் ரிட்டன்ஸ்.
கேரக்டர்கள்..
ஸ்ரீனி சௌந்தரராஜன்.. இது இவரது முதல் படம் என்றாலும் நல்ல ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்து சாதிக்க வயது தடையில்லை என திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் முக்கியமாக கிரிக்கெட் விளையாட்டில் இவர் மேற்கொள்ளும் பயிற்சிகள் நம்மை கூட விளையாட வைக்கும்.
சில காட்சிகளில் நாடகத் தன்மை தென்பட்டாலும் புதுமுகம் என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.
நம் வீட்டுப் பெண்களைப் போல நிமிஷா. யதார்த்த நடிப்பில் நம்மை கவர்கிறார்.
காய்கறி விற்கும் நாகரத்தினமா வரும் வருண் என்பவர் சின்ன வேடம் என்றாலும் கதையின் திருப்புமுனைக்கு உதவி இருக்கிறார். அவர் காட்டும் ஆச்சரியங்களும் நண்பனின் ஆர்வத்திற்கு கொடுக்கும் உற்சாகமும் நட்புக்கு அப்ளாஸ்.
சிறு வயது ஸ்ரீனி செளந்தரராஜன் வேடத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் ஸ்ரீனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான் இருவரும் ஓகே ரகம். சிறுவனுக்கு பில்டப் சாங் ரொம்ப ஓவர்.. அதுவும் அவனுக்கு பொருந்தாத குரலில் கொடுத்திருப்பது வருத்தமே..
இவர்களுடன் வையாபுரி & சரவணன் உள்ளிட்டோரும் உண்டு..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஸ்ரீனி புதுமுகம் என்றாலும் எடிட்டர் கேமரா மேன் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர்கள் அனைவரையும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுப்பது தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பு.
ஒளிப்பதிவாளர் ஷியாம் ராஜ். இசையமைப்பாளர் ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையில், சினேகன், பா.விஜய், அருண்பாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இடைவேளைக்கு முன்பு 4-5 பாடல்கள்.. பிறகும் 4 பாடல்கள் என பாடல் போட்டு.. இது பாட்டா நம் பொறுமைக்கு வைக்கும் வேட்டா? என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த கதை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வைத்திருக்கலாம். ஆனால் பல காட்சிகளில் கிரீன் மேட் பயன்படுத்தி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
ஒரு படம் எடுக்கும்போது கிராபிக்ஸ்க்கு செலவு செய்யும் காட்சிகளை கொஞ்சம் காட்சியமைப்பிலும் காட்டி இருந்தால் ரசிக்க தோன்றும் அல்லவா?
கிரிக்கெட் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என கபில் ரிட்டன்ஸ் மெசேஜ் சொல்லுகிறது.
Kapil Returns movie review and rating in tamil