சச சச சச சபாஷ் சாண்டா..; சபாபதி விமர்சனம் 3.5/5

சச சச சச சபாஷ் சாண்டா..; சபாபதி விமர்சனம் 3.5/5

ஒன்லைன் : திக்குவாய் பிரச்னை உள்ள சந்தானம் வாழ்வில் விதி விளையாடுகிறது..

சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

கதைக்களம்…

திக்கி திக்கி பேசும் பிரச்சினை உள்ளதால் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறார் சந்தானம் (சபாபதி).

எதிர் வீட்டுப் பெண் சாவித்ரியும் இவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அப்போது இருந்தே சபாபதிக்கு துணையாக இருக்கிறார் சாவி (ப்ரீத்தி ஷர்மா).

திக்குவாய் பிரச்னைகளால் பல வேலை வாய்ப்புகளை இழக்கிறார் சந்தானம்.

சந்தானத்தின் அப்பா எம்எஸ் பாஸ்கர் தன் பணி ஓய்வுக்கு பிறகு சந்தானத்தை நம்பி தானே குடும்பம் இருக்கிறது. அவனுக்கு வேலை கிடைக்காதததால் விரக்தியில் இருக்கிறார்.

ஒருநாள் சந்தானத்தின் நண்பன் புகழ் இவரை சரக்கடிக்க தூண்டி விடுகிறார்.

முதன்முறையாக சந்தானம் குடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார். அன்று முதல் விதி அவரது வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது.

விதியின் விளையாட்டில் சிக்கிய சபாபதி என்ன செய்தார்? எப்படி சமாளித்தார்.? எவ்வாறு எதிர்கொண்டார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நக்கல்… நையாண்டி… கவுண்டர் குடுத்தே பழக்கப்பட்டவர் சந்தானம். ஆனால் இதில் கேரக்டருக்கு ஏற்ப அடக்கி வாசித்துள்ளார். சபாஷ் சாண்டா… (சந்தானத்தை ரசிகர்கள் இப்படிதான் அழைப்பார்கள்)

தன்னால் கவுண்டர்கள் கொடுக்காமல் நடித்தும் அசத்த முடியும் என நிரூபித்துள்ளார். அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு இவர் செய்யும் சேஷ்டைகள் ரசிக்க வைக்கிறது.

அதுவும் குடித்த விட்ட அன்றும் அடுத்த நாளும் சந்தானம் செய்யும் சேஷ்டைகள் சிரிப்புக்கு கியாரண்டி. ஹீரோயினை விட எம்எஸ் பாஸ்கருடன் சந்தானத்திற்கு செம கெமிஸ்ட்ரி. அதகளம் செய்துள்ளனர்.

எம்எஸ் பாஸ்கர் எப்போதும் போல அசத்தல்.

அழகு பெண்ணாக ப்ரீத்தி ஷர்மா. கவர்ச்சி காட்டாமல் கண்களால் கவர்கிறார். இன்னும் நடித்திருக்கலாம். சாரி ப்ரீத்தி.

விஜய் டிவி பிரபலம் புகழ் நண்பராக வருகிறார். புகழ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட குடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். பெரிய காமெடிகள் இல்லை.

உமா, சாண்டா சிஸ்டர், ஹீரோயின் அம்மா, மயில்சாமி, மதுரை முத்து, குடிகார மாறன், கோதண்டம் உள்ளிட்ட பலர் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர். இவர்களை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

லொள்ளு சபா சுவாமிநாதன் வழக்கமான பாணியில் சிரிக்க வைத்துள்ளார். ரிட்டையர்மெண்ட்க்கு அப்புறம் வீட்டில் படும் அவஸ்தைகளை அப்பட்டமாக சொல்லி நடித்துள்ளார்.

வம்சி & சாயாஜி ஷிண்டே வில்லன் நடிப்பில் கச்சிதம். தேவைக்கேற்ற நடிப்பு.

டெக்னிஷீயன்கள்..

சாம் சி.எஸ்-ஸின் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார். எடிட்டர் லியோ ஜான் பால் தேவையற்ற நடிகர்களின் காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம்.

பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது.

சந்தானத்தை வித்தியாசமாக காட்டிய இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் அவர்களை நிச்சயம் பாராட்டலாம்.

முக்கிய மைனஸ் : படம் முழுக்க திக்கு வாயாக வரும் சந்தானம் டூயட் பாடலில் மட்டும் நன்றாக பாடுகிறார். அதை திக்குவாயாக வித்தியாச பாடலாக காட்டியிருக்கலாம்.. அல்லது பின்னணியில் பாடல் ஒலிக்க இவர்கள் ஆடுவதாக காட்டியிருக்கலாம். பல இயக்குனர்கள் பாடல் காட்சியில் மட்டும் இதை கருத்தில் கொள்வதில்லை.

மற்றபடி குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் சபாபதியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆக… சச சச சச… சபாஷ் சாண்டா

Sabhapathy movie review and rating in tamil

Related Articles