FIRST ON NET நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்.; வடிவேலு ரிட்டர்ன்ஸ்? ரிட்டையர்டு.?

FIRST ON NET நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்.; வடிவேலு ரிட்டர்ன்ஸ்? ரிட்டையர்டு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, பாலா, தங்கதுரை, இட்டிஸ் பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒன்லைன்…

பணக்கார வீட்டு நாயை கடத்தி விலை பேசி அவர்களையே மிரட்டும் வடிவேலுக்கும் வசதியான பெண்களை கடத்தி பெற்றோரை மிரட்டும் ஆனந்தராஜுக்கும் இடையே நடைபெறும் மோதலே இந்த கதை.

கதைக்களம்..

பணக்கார வீட்டுப் பெண்களை கடத்தி பணம் பறிப்பது ஆனந்தராஜின் வழக்கம். இதுபோல பணக்கார வீட்டு நாய்களை கடத்தி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது வடிவேலுவின் வழக்கம்.

ஒரு கட்டத்தில் ஆனந்தராஜ் வீட்டு நாயை கடத்தும் போது அவரின் காரையும் சேர்த்து கடத்தி விடுகிறார் வடிவேலு.

தன் பண கஷ்டத்திற்காக அந்த காரை அடமானம் வைத்து சேட் ஒருவரிடம் இரண்டு லட்சம் பணம் பெறுகிறார்.

அந்த சூழ்நிலையில் காரை தேடி அலையும் ஆனந்தராஜ் வடிவேலுவை கண்டு பிடிக்கிறார். அந்த கார் எங்கே? அந்த காரில் நான் வைத்திருந்த 10 கோடி ரூபாய் பணம் எங்கே? என கேட்கிறார்.. திருப்பித் தரவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.

ஆனால் அந்த சேட் மாயமாகி விடுகிறார். இந்த நிலையில் தான் வடிவேலுக்கு தன் குடும்ப பிளாஷ்பேக் தெரிய வருகிறது.

அதன் மூலம் நிறைய பணம் சொத்து கிடைக்கும் என நம்புகிறார் வடிவேலு.

அந்த பிளாஷ்பேக் என்ன.? வடிவேலுவை கொன்றாரா ஆனந்தராஜ்? வடிவேலு என்ன செய்தார் என்பதே கதை.

கேரக்டர்கள்…

வடிவேல் காமெடி சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது. நிறைய பழைய காமெடி சீன்களை நினைவு படுத்துகிறார்.

ஆனால் குழந்தைகளை பெரியளவில் கவரும் என நம்பலாம். வடிவேலு காஸ்ட்யூம் கூட கடுப்புதான்.. இவருக்கு 2 சிஷ்யர்.. 1 சிஷ்யை.. அதில் கிங்ஸ்லி காமெடி கொஞ்சம் ஓகே.

ஆனால் ஆனந்தராஜனின் காமெடி பல இடங்களில் ஒர்க்கவுட் ஆகியுள்ளது.. ஆனந்த்ராஜ் அறிமுகமே சூப்பர். ஜெயில் அலப்பறை வேற லெவல்..

இந்த குளிருக்கு சில்லென்னு கவர்கிறார் ஷிவானி… இவருக்கு காட்சியும் குறைவு.. ஆடையும் குறைவு..

சிவாங்கி, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலா, தங்கதுரை, இட்டிஸ் பிரசாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

டெக்னீசியன்கள்…

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். பாடல்கள் கவரவில்லை… பிரபுதேவா நடனமைத்த ‘அப்பத்தா…’ பாடலுக்கு பெரிய செட் பிரம்மாண்டம் தேவையில்லை.. ஈர்க்கவும் இல்லை..

ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்துள்ளார். படத்தின் பின்னணி இசை ஒளிப்பதிவு பாராட்டும் படி உள்ளது.

சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாலித்துள்ளது.

மைனஸ்…

வடிவேலு பிறக்கும்போதே அந்த நாய் பெரிய நாயாக இருக்கிறது. குட்டி நாயாக கூட காட்டவில்லை….

வடிவேலு பெரிய ஆளான பிறகும் நாய் அப்படியே இருக்கிறது. நாயின் ஆயுட்காலம் எவ்ளோ..?? 15 வருடம் இருக்கும்.. படத்தின் ஆணிவேரே இதுதான்.. ஆனால் இதை யாருமே் கவனிக்கலையா.?

இந்த லாஜிக் வேண்டாம்.. என நீங்கள் நினைத்தால் படம் பார்க்கலாம்…

விட்னஸ் விமர்சனம் 3.75/5.; மத்திய மாநில அரசுகளின் வீக்னஸ்

விட்னஸ் விமர்சனம் 3.75/5.; மத்திய மாநில அரசுகளின் வீக்னஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

மனிதனின் மலக்குழியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்த தன் மகனுக்காக நீதி வேண்டி போராடும் தாயின் கதை தான் இந்த விட்னஸ்.

கதைக்களம்..

துப்புரவுப் பணியாளர் ரோகிணி. கணவனை இழந்த இவருக்கு ஒரே மகன். கஷ்டப்பட்டு தன் மகனை கல்லூரி வரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒருநாள் இவர் இரவு நேர பணிக்கு செல்கிறார். காலையில் வீட்டிற்கு வரும்போது தன் மகனின் மகனின் மரணச் செய்தியை கேட்டு அறிகிறார்.

ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்யும் போது குடிபோதையில்அவன் இறந்து விட்டதாக தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தன் மகன் குடிக்க மாட்டான். அந்த வேலைக்கு செல்பவன் அல்ல எனக் கூறுகிறார் ரோகிணி. ஆனாலும் நிரூபிக்க முடியாமல் போராடுகிறார்.

இதனிடையில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தைரிய பெண்ணான ஷ்ரத்தா ஸ்ரீநாத் சிசிடிவி காட்சிகளை ரோகிணிக்கு கொடுக்கிறார்.

அதன் பின்னர் ரோகினி கம்யூனிஸ்ட் தோழர்கள் உதவியுடன் நீதிமன்றம் செல்கிறார்.

நீதிமன்றத்தில் கீழ் சாதி பிரிவினருக்கு நீதி கிடைத்ததா? அல்லது அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு கைக்கூலியாக மாறியதா? காவல்துறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் என்ன செய்தார்கள்? என்பதே நீதி(நீதியற்ற) கதை..

கேரக்டர்கள்…

ஏழை கீழ் ஜாதி பெண்மணியாக தன் பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ரோகினி.. அதற்கு ஏற்ப உடல் மொழியும் வாய் மொழியும் பேசி அசத்தியிருக்கிறார்.

தன் மகனுக்கு நீதி கிடைக்க அவர் போராடும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பு…

அப்பார்ட்மெண்ட் வாசிகளை எதிர்த்து போராடும் பெண்மணியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நம்மிடம் பாராட்டுகளை பெறுகிறார்.

வக்கீலாக வரும் சண்முகராஜன் நீதிக்குப் போராடும் மனிதராக உயர்ந்து நிற்கிறார். காண்ட்ராக்டர் தன் உறவினரே என்றாலும் அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகிறது.

நம் வீட்டு கக்கூசை சுத்தம் செய்ய நாமே தயங்கும்போது மனித கழிவுகளை அகற்றும் அந்த தொழிலாளர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டாமா என கேட்கும் காட்சிகள் சிறப்பு.

பொறுப்பைத் தட்டிக் கடிக்கும் உயர் அதிகாரியாக அழகம்பெருமாள். அரசு அதிகாரிக்கே உரிய அதிகாரம் தெனாவெட்டு நிதானம் அனைத்தையும் ஒருமித்த உணர்வோடு செய்திருக்கிறார்.

இவர்களுடன் அந்தச் சேரியில் போராடும் வினோத் சாகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் & கம்யூனிஸ்ட் தோழர் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.

மக்களுக்காக போராடும் ஒருவனுக்கு வீட்டில் கிடைக்கும் மரியாதையும் அவர்கள் குடும்பம் படும் அவஸ்தைகளையும் அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

டெக்னீஷியன்கள்…

படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் தீபக்.. இவரே ஒளிப்பதிவாளர் என்பதால் அதற்கு ஏற்ப காட்சிகளையும் கேமரா ஆங்கிள்களையும் வைத்து பலம் சேர்த்துள்ளார்.

முக்கியமாக படத்தின் கோர்ட் காட்சிகள் அசத்தல் ரகம். கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்கள் மத்தியில் நீதியரசர் அமரும் போது நீதியின் நிலை குறித்து அந்த ஒற்றைக் காட்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.

ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். பார்த்திபன் இறந்த பிறகு ஒலிக்கும் அந்த மரண பாட்டும் பேசும் வசனங்களும் இடைஞ்சலாக உள்ளது.. இசையை குறைத்து வசனங்களுக்கு கவனம் செலுத்தி இருக்கலாம்.. மற்றபடி உணர்வு மிக்க பாடல்களை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார்.

Producer – TG Vishwa Prasad
Co-Producer – Vivek Kuchibhotla

Screenplay – Muthuvel, JP Sanakya

பாடல்களை கபிலன் ராஜ் எழுதியிருக்கிறார். எடிட்டிங் செய்திருக்கிறார் பிலோமீன் ராஜ். இருவரும் தங்கள் பணிகளில் சிறப்பு.

மலக்குழியில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் ஒவ்வொன்றையும் தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற அரசும் அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை இதற்கு தீர்வே கிடையாது..

மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றம் உருவாகும்.. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே நம் எல்லோருடைய மனதிலும் எழும் பெரும் கேள்வியாகும்.

ஆக இந்த விட்னஸ்… மத்திய மாநில அரசுகளின் வீக்னஸ்

குருமூர்த்தி விமர்சனம்.. மீசைய முறுக்கினா போதுமா?

குருமூர்த்தி விமர்சனம்.. மீசைய முறுக்கினா போதுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ராம்கி மிகப்பெரிய தொழில் அதிபர் இவரிடம் உள்ள ஐந்து கோடியை எடுத்துக்கொண்டு காரில் பயணிக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் அருந்த காரை விட்டு இறங்க அந்த நேரத்தில் ஒரு கும்பல் இவரிடம் உள்ள பணத்தை கொள்ளையடித்து சென்று விடுகிறது

இதனையடுத்து அவர் போலீஸ் நட்டியிடம் புகார் தெரிவிக்க அதனை தேடி அலைகிறது காவல்துறை.

போலீஸ் நட்டி, ரவி மரியா மனோபாலா ஆகியோர் அந்த பணப்பெட்டியை தேடி ஊட்டி முழுவதும் அலைக்கின்றனர்.

இதனிடையில் பணப்பெட்டியை அந்த நபரிடம் இருந்து கொள்ளையடிக்க வேறொரு கும்பல் திட்டம் போடுகிறது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருக்கிறார்.

இறுதியில் அந்த பணப்பெட்டி ராம்கிக்கு கிடைத்ததா? போலீஸ் திட்டம் என்ன ஆனது? கொள்ளை கும்பல் திட்டம் என்ன என்பதே கதை.

கேரக்டர்கள்…

நேர்மையான போலீஸ் அதிகாரியாக நட்டி நடித்து இருக்கிறார். இவரின் மனைவி பூனம் பஜ்வா. கம்பீரமான போலீசாக தன்னை தன் உயரத்திற்கு ஏற்ப உயர்த்தி காட்டியுள்ளார் நட்டி நட்ராஜ்.

நட்டிக்கும் பூனம் பஜ்வாவுக்கும் உள்ள கிள்மா பாடல் மார்கழி குளிரில் செம மஜா.

ரவி மரியா மனோபாலா காமெடி நமக்கு எரிச்சலை தருகிறது.

பின்னணி இசை இரைச்சலை கொடுக்கிறது. நட்டியை நேர்மையான அதிகாரியாக காட்ட தேவையில்லாத சண்டை காட்சிகளை திணித்துள்ளனர்.

நிறைய காட்சிகளை கிரீன் மேட்டில் எடுத்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. முக்கியமாக போலீஸ் ஜீப் பயணிக்கும் காட்சியும் பூனம் வஜ்வாவின் அம்மா பேசும் மருத்துவமனை காட்சிகளும் அப்படியே உள்ளன.

மொட்ட ராஜேந்திரன் காமெடி செய்வார் என்று பார்த்தால் அவரும் நம்மை வெறுப்பேற்றுகிறார்.

ஒரு குத்துப்பாட்டுக்கு சஞ்சனா மற்றும் அஸ்மிதா உடன் ஆட்டம் போடுகிறார். மஸ்காரா புகழ் ஆட்டக்காரியின் கிளுகிளுப்பான பாடல் செம ஹாட்..

ஒரு பணப்பெட்டியை தேடி கும்பல் அலையும் கதையை இன்னும் சுவாரசியமாகவும் காமெடியாகவும் கொடுத்திருக்கலாம். ஆனால் திரைக்கதை அமைப்பதிலும் காட்சி அமைப்பதிலும் தடுமாறி இருக்கிறார் டைரக்டர் தனசேகர்.

நீ உழைத்த பணம் மட்டுமே உனக்கு சொந்தம்.. அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படாதே என்ற சிறப்பான கருத்தை வலியுறுத்தினாலும் அதை சொன்ன விதத்தில் தடுமாறி இருக்கிறார்.

சத்யதேவ் உதயசங்கர் இசையமைக்க தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஆக குருமூர்த்தி… மீசைய முறுக்கினா போதுமா?

Dr 56 விமர்சனம்..; Human Experiement

Dr 56 விமர்சனம்..; Human Experiement

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கத்தில் ப்ரியாமணி நடிப்பில் உருவான படம் Dr 56.

கதைக்களம்…

உயிரைக் காக்கும் டாக்டர்கள் அடுத்தடுத்து மரணம் அடைகின்றனர். இந்த கொலைகளுக்கு பின்னால் ஒரு நோயாளி இருப்பதை கண்டுபிடிக்கிறார் சிபிஐ அதிகாரி ப்ரியாமணி.

அந்த குற்றவாளியை விசாரணை செய்யும் போது அவன் 56 நிமிடத்திற்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதை அறிகிறார். அவனுக்கும் மருத்துவம் சொன்னது ஒரு டாக்டர் தான்.

அப்படி இருக்கும்போது அவர் டாக்டர்களை மட்டும் குறிவைத்து கொலை செய்ய என்ன காரணம்? இதுவே படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

அழகான உடை அணிந்து ஹீரோவுடன் ஆடிபாடும் கேரக்டர் தான் இதுவரை செய்துள்ளார் பிரியாமணி. ஆனால் இதில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து அசத்தியிருக்கிறார் பிரியாமணி.

நாயகன் PR ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தல். வித்தியாசமான மேக்அப். அதை படம் முழுவதும் செய்திருப்பது அசாத்திய துணிச்சல்.

கூத்துப்பட்டறை கலைஞராக வரும் காட்சிகளும் பாடல்களும் அனல் தெறிக்கிறது. முக்கியமாக ‘அசுரன்.. அசுரன்டா.. பாடல் அசுரன் படத்திற்கே பொருத்தமானதாக இருந்திருக்கும். அப்படி ஒரு வெறித்தனமான ஆட்டம்..

ஜார்ஜ் கேரக்டரில் வரும் அந்த டாக்டர் பாடி லாங்குவேஜும் அவர் காரில் பேசும் வசனங்களும் அசத்தல்…

டெக்னீஷியன்கள்…

பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் கொடுத்துள்ளது. ஆனால் படத்தின் மையக் கருவே பிளாஷ்பேக் காட்சிகள் என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தி படமாக்கி இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

டாக்டர் கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.

ஒரு புதிய வகையான நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது அதை முதலில் விலங்குகளிடம் பரிசோதனை செய்வர். அதன் பின்னர் மனிதர்களிடம் பரிசோதனை செய்வர். இந்த முறைக்கு ஹியூமன் எக்ஸ்பிரிமெண்ட் என்று பெயர்.

சில நேரம் இந்த பரிசோதனை மனிதர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தலாம். சில உயிர்களை எடுக்கக்கூடும். இதன் பிறகு தான் அந்த சோதனை வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தெரியவரும்.

இந்த வித்தியாசமான முயற்சியை அடிப்படையாக வைத்து ஒரு புதிய விதத்தில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா.

ஆக இந்த Dr 56 – Human Experiement

வதந்தி விமர்சனம்.. 3.75/5.. சிக்காத சிலந்தி

வதந்தி விமர்சனம்.. 3.75/5.. சிக்காத சிலந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ள ‘வதந்தி’ சீசன் 8 தொடர்களாக உருவாகி உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு வதந்தி செய்தியாக பரவுகிறது.. அதன் பின்னால் பல உண்மைகளும் பல மர்மங்களும் நிறைந்து இருக்கிறது. இறுதியில் அந்த வதந்தி செய்தியானது எப்படி? அதில் உண்மை என்ன? என்பதே படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்…

அழகு நிறைந்த கன்யாகுமரியில் படத்தின் கதை தொடங்குகிறது.

அங்கே அடர்ந்த காடின் அருகே ஒரு படத்தின் சூட்டிங் நடக்கிறது. அப்போது இளம் பெண்ணின் சடலம் கிடைக்கிறது.

அப்படத்தின் ஹீரோயின் தான் இப்படி சடலமாக என உறுதி செய்கிறார் இயக்குனர்.

இதனையடுத்து அந்த செய்தி காட்டு தீயாய் பரவுகிறது. ஆனால் அதன் பின்னர் நான் உயிரோடு தான் இருக்கிறேன் என சொல்கிறார் நாயகி.

இதனால் மக்களும் காவல்துறையும் குழப்பம் அடைகின்றனர்.

அப்படி என்றால் இறந்து கிடந்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.

இது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் எஸ் ஜே சூர்யா.

அந்த பெண் வெலோனி (Valonie) என தெரிய வருகிறது.. முதலில் பரவிய வதந்தி இப்போது தலைப்பு செய்தியாகிறது.

விடுதி நடத்தும் லைலாவின் மகள் தான் வெலோனி.

அழகான அந்த பெண்ணை கொன்றது யார் காதல் பிரச்சனையா பண பிரச்சனையா கற்பழிக்கப்பட்டாரா பழிதீர்க்கப்பட்டாரா என்ன நடந்தது எப்படி நடந்தது ஏன் நடந்தது என்பதை இந்த வதந்தி அவர்கள் விடுதியில் தங்கியவர்கள் யார் யார் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் யார் வேண்டாதவர்கள் யார் என பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரிக்கிறது.

வெலோனிக்கு காதலன் யாராவது இருக்கிறார்களா? ஒருவேளை காதலிக்க மறுத்ததால் கொல்லப்பட்டாரா? காதலில் பிரேக் அப் ஆனதால் கொல்லப்பட்டாரா?

ஒருவேளை நிறைய பாய் பிரண்டு இருந்ததால் பிரச்சனை உருவானதா? என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நகர நகர ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு புதிய கோணத்தில் நகருகிறது.

இறுதியில் இது வெறும் வதந்தியா.? தலைப்புச் செய்தியா? என்பதே படத்தின் வித்தியாசமான கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நாயகன் எஸ் ஜே சூர்யாவுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையை உண்டாக்கும். சிறப்பான நடிப்பை கொடுத்து நம்மை அசர வைத்துள்ளார். இந்த கொலை வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என அவர் படும் வேதனைகள் செம.

முக்கியமாக தண்ணி அடித்து விட்டு அவர் பேசும் வசன காட்சி கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் நீள்கிறது. அதை எந்த விதத்திலும் போர் அடிக்காமல் அசத்திவிட்டார்.

அந்த காட்சி முடிந்தவுடன் ஸ்ருதி வெங்கட் காட்டும் ரியாக்ஷன் வேற லெவல். அதனை அடுத்து தொடரும் குடும்ப காட்சிகள் நம்மை வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன.

எஸ் ஜே சூர்யா மனைவியாக ஸ்மிருதி வெங்கட் கன்னியாகுமரி பாஷையில் வெளுத்து கட்டியுள்ளார். பெண்களுக்கே உரித்தான ஒரு எதிர்பார்ப்பு ஒரு ஏக்கம் ஒரு பாசம் என ஸ்மிருதி சிலிர்க்க வைக்கிறார்.

இன்ஸ்பெக்டராக வரும் விவேக் பிரசன்னாவும் தன் பங்கை வெகு சிறப்பாக செய்திருக்கிறார். இந்த ஏரியாவுல போண்டா டீ தரும் சுகத்தை பொண்டாட்டி கூட தர மாட்டா என அவர் கொடுக்கும் விளக்கம் வேற லெவல்.

நுனி நாக்கு ஆங்கிலத்தில் அழகாக பேசி நம்மை கவர்கிறார் லைலா. கிளைமாக்ஸ் இல் இவரது வேடம் பயங்கர கைத்தட்டலை இள்ளும்.. வெலோனி கேரக்டரில் நடித்துள்ள சஞ்சனா ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் போட வைக்கிறார்.

நான் அழகாக பிறந்தது குற்றமா? ஏன் அவர் கலங்கும் போது நம்மையும் அழ வைக்கிறார்.

கபடதாரி படத்தை இயக்கிய பிரதீப் இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக நம்மை மிரள வைத்துள்ளார். அதுபோல நாசரின் கேரக்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அவராக இருப்பாரோ என நம்மை திசை திருப்ப பார்க்கிறது திரைக்கதை. பாண்டியன் ஸ்டோர்ஸில் கலக்கிய குமரன் இதில் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார். ஒருவேளை அவர் தான் கொலையாளியாக இருக்குமோ எனவும் நம்மை குழப்ப வைக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

படத்திற்கு ஒளிப்பதிவு பெரும்பலம். கன்னியாகுமரி காட்சிகளையும் காடு பகுதிகளையும் அழகான விடுதியும் என ஒவ்வொன்றையும் அழகாக தன் பிரேமில் படம் பிடித்து காட்டியுள்ளார் சரவணன் ராமசாமி.

இசையமைப்பாளர் சைமன் கேகிங் தன் பின்னணி இசையில் மிரட்டி விட்டார். இந்த வெப் தொடர் முடிந்து சில மணி நேரங்கள் ஆனாலும் அந்த பின்னணி இசை நம்மில் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு இசையை அவர் கொடுத்துள்ளார்.

கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இதை ஒவ்வொரு எபிசோடாக பார்த்தால் போர் அடிக்காது. ஆனால் இந்த 8 எபிசோடையும் ஒரேடியாக உட்கார்ந்து பார்த்தால் இவ்வளவு நீளம் தேவையா? என தோன்றுகிறது.. 6 எபிசோடில் இந்த வதந்தி தொடரை முடித்து இருக்கலாம்.

சில காட்சிகளில் டிவிஸ்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டதாக தெரிகிறது.

முக்கியமாக எழுத்தாளர் நாசர் கற்பனையில் எழுந்த ஒரு சின்ன கதை தேவையில்லாதது போல தோன்றுகிறது. அதை வெட்டி எறிந்து இருக்கலாம் எடிட்டர்.

அதுமட்டுமில்லாமல் கல்லூரி பெண்கள் காட்சிகள் எனத் தேவையில்லாத காட்சிகளை அகற்றி இருக்கலாம். இவை எல்லாம் ஒரு நீண்ட சீரியலுக்கான காட்சிகளாகவே தெரிகிறது.

இந்த வதந்தி வெப் தொடரை பிரபல இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இணைந்து தயாரித்துள்ளனர்.

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் முக்கியமாக கன்னியாகுமரி கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்ப பயிற்சி கொடுத்து எல்லோரையும் அந்தப் பகுதி மக்களாகவே நடிக்க வைத்து இல்லை வாழ வைத்து இருக்கிறார்.

ஆக… வதந்தி தொடர்… சிக்காத சிலந்தி

RIVET விமர்சனம்..; எம்எல்ஏவுக்கு சாமானியன் அடிக்கும் ரிவெட்

RIVET விமர்சனம்..; எம்எல்ஏவுக்கு சாமானியன் அடிக்கும் ரிவெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

எம்எல்ஏவால் பாதிக்கப்படும் சிலர் அவரை பழி வாங்க ரிவிட் அடிக்கும் கதைதான் இந்த படம்.

கதைக்களம்..

எம் எல் ஏ என்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரை எதிரியாக வைத்திருக்கிறார் சந்தானபாரதி.

தன் பரம்பரை சொத்தை மிரட்டி வாங்கிய சந்தானபாரதியிடம் இருந்து நிலத்தை மீட்க மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார் நாயகன் சாம்ஸ்.

ஒரு கட்டத்தில் எம்எல்ஏவின் மகனை சந்திக்கிறார். அப்போது தன் தந்தையால் பாதிக்கப்பட்ட அவரும் சாம்சுடன் இணைகிறார்.

எம்எல்ஏ வை எதிர்த்து அவரிடம் உள்ள பணத்தை ஆட்டைய போட ஒரு கும்பல் அலைகிறது.

இவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் இணைந்து எம்எல்ஏ வை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

படத்தின் நாயகன் சாம்ஸ். அலட்டிக் கொள்ளாத நடிப்பு.்பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறார். ஆனால் திடீரென மாயமாகி விடுகிறார். கால்ஷீட் பிரச்சனையா என்று தெரியவில்லை?

சந்தான பாரதி சைலன்ட் பாரதியாக வருகிறார். எம் எல் ஏவுக்கே உரித்தான கம்பீரம் இல்லை.

இவர்களுடன் மற்ற அரசியல்வாதிகள் நண்பர்கள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆனால் இன்னும் காட்சிகளையும் அழுத்தமான உணர்வுகளையும் கொடுத்திருக்கலாம்.

முக்கியமாக 50 கோடி பணத்தை அபேஸ் செய்யும் காட்சிகள் காமெடியாக உள்ளது.

ரீவெட் படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார் சவுண்ட் என்ஜினியர் அருண்காந்த்.

ஒரு பக்காவான திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கலாம்.

முக்கியமாக ஒரே மாதிரியான பின்னணி இசை படம் முழுவதும் ஒலிக்கிறது. பட்டாசு வெடிக்கும் காட்சிகள் கூட பட்டாசு சத்தத்தை விட மற்ற இசையே ஒலிக்கிறது.

திரில்லர் காட்சிகளுக்கு இன்னும் மெருகேற்றி இசையை மிரட்டி இருக்கலாம்.

ஆனால் சின்ன பட்ஜெட்டில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார் அருண் காந்த்.

முக்கியமாக அரசியல்வாதிகள் மக்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் தன் குடும்பத்தாரிடமும் உண்மையாக நடக்க வேண்டும் எனவும் கருத்தை முன் வைக்கிறார்.

இல்லை என்றால் தன்னுடன் இருப்பவர்களே தனக்கு எதிரியாக மாறக்கூடும் என்பதை எச்சரிக்கை பதிவாகவும் கொடுத்து ரிவிட் அடித்து இருக்கிறார் அருண் காந்த்.

More Articles
Follows