அதோ முகம் விமர்சனம்

அதோ முகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனிதர்கள் தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் கோர முகத்தை சில நேரம் வெளிப்படுத்துவார்கள்.. இந்த கோர முகத்தை காட்டும் முகம் தான் ‘அதோ முகம்’.

ஸ்டோரி

ஊட்டியில் ஒரு தனி பங்களாவில் தன் மனைவி சைதன்யாவுடன் வசிக்கிறார் சித்தார்த்.

மனைவிக்கு தெரியாமல் அவளை சந்தோஷப்படுத்த நினைத்து கணவன் செய்த ஒரு விஷயம் அவனுக்கும் அவள் மனைவிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது.. அது என்ன.?

தனது மனைவியின் நடவடிக்கைகளை செயல்களை கண்காணிக்க அவளுக்கே தெரியாமல் அவளது மொபைல் போனில் ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்கிறார் கணவன்.. இதனால் இவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அவன் சந்திக்கும் பிரச்சனைகள் சவால்கள் சந்தேகங்கள் என்ன என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

முதலில் அப்பாவியாக காணப்படுகிறார் இந்த கணவன் நாயகன் சித்தார்த்.. முதலில் மனைவியை நேசிப்பது அவளின் செய்கைகளை ரசிப்பது என மெல்ல மெல்ல நகரும் கதை பின்னர் மனைவியை வெறுப்பது அவள் மீது எரிச்சலை காட்டுவது என வெரைட்டி காட்டியிருக்கிறார் சித்தார்த்.

நாயகி சைதன்யா இந்த கேரக்டருக்கு அச்சு அசலாக பொருந்திவிட்டார்.. ஒரு கட்டத்தில் அவரது அபாய முகம் காட்டும் போது அடடா நமக்கு ஆபத்து என்ற எண்ணம் தோன்றுகிறது. கொஞ்சம் மிரள வைத்திருக்கிறார்..

சித்தார்த்தின் நண்பனாகவும், முதலாளியாகவும் வரும் ஆனந்த் நாக் மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவர்களுடன் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார் உள்ளிட்டோரும் உண்டு.. தங்கள் கேரக்டர் கதைக்கு ஏற்ப இவர்கள் பயணித்துள்ளனர்..

எவரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கேரக்டரில் அருண் பாண்டியன்.. நாயகன் சித்தார்த்துக்கு நம்பிக்கை நம்பிக்(கை) கொடுத்து கதைக்கு உதவி இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

அதோ முகத்தின் இரண்டாம் பாகத்திற்காகவே இந்த படத்தில் கொஞ்சம் பாகத்தை மிச்சம் வைத்து விட்டார் இயக்குனர் சுனில் தேவ்.. அதை இந்த பாகத்தில் முடித்திருந்தால் இன்னும் திரைக்கதைக்கு சுவாரசியம் கூடியிருக்கும்..

மணிகண்டன் முரளியின் இசையில் பாடல்களும், சரண் ராகவனின் பின்னணி இசையும் உறுத்தாமல் இருக்கிறது.. இரண்டும் நேர்த்தி..

அருண் விஜயகுமாரின் ஒளிப்பதிவில் அதோ முகம் பிரகாசிக்கிறது.. படத்தொகுப்பு – விஷ்ணு விஜயன்.. கலை இயக்குனர் – சரவணா அபிராமன் இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்..

இயக்குனர் சுனில் தேவ் படத்தை இயக்கியிருக்கிறார்.. எந்த ஒரு குடும்பம் ஆனாலும், எந்த ஒரு உறவு ஆனாலும் நாம் மிக ஆழமாக சென்றால் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ரீல் பெட்டி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது..

அதோ முகம்

Atho mugam movie review and rating in tamil

GLASSMATES கிளாஸ்மேட்ஸ் பட விமர்சனம்..

GLASSMATES கிளாஸ்மேட்ஸ் பட விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்றாக படித்தால் கிளாஸ்மேட்ஸ்.. Class
ஒன்றாக குடித்தால் கிளாஸ்மேட்ஸ்.. Glass

ஸ்டோரி…

நாயகன் அங்கையற்கண்ணனம் அவரது மாமா சரவண சக்தியும் பெரும் குடிமகன்கள்.. இவர்கள் குடிக்காத நிமிடம் நொடி இல்லை என்னும் அளவுக்கு குடியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

ஆனால் இவரது மனைவிகளோ மாமா மாமா என்று பாசம் காட்டும் குடும்பத்து பெண்மணிகள்..

ஒரு கட்டத்தில் இவர்களது குடியினால் இந்த ஊரும் இவர்களது நண்பர்களும் எப்படி எல்லாம் சீரழிகிறார்கள்.. இதனால் இவர்களுக்கு என்ன பாதிப்பு. என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

அங்கையற்கண்ணன்… தயாரிப்பாளரே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடித்திருக்கிறார்.?! சாரி நடித்திருக்கிறார்..

நாயகனின் மாமனாக இயக்குனர் சரவணசக்தி. அவரும் பல படங்களில் குடிகாரன் வேடம் ஏற்று அசத்தியிருக்கிறார். இதில் எக்ஸ்ட்ராவா குடித்திருக்கிறார்.

24 மணி நேரமும் குடியில் மூழ்கிக் கிடக்கும் ஒரு குடும்பத் தலைவனை நிச்சயமாக பெண்கள் திட்டி தீர்த்து இருப்பார்கள்.. ஆனால் இதில் பாசம் மழை பொழிவதும் அவர்களுக்கு பணம் கொடுப்பதும் சாத்தியமா?

மறைந்த நடிகர் மயில்சாமிக்கும் இதில் குடிகாரர் வேடம் தான். ஆனால் கொஞ்சம் நல்லவராக இருந்து திடீரென குடிகாரனாக மாறி விடுகிறார்..

இதில் ‘நல்லவன் குடித்தால் குழந்தை.. கெட்டவன் குடித்தால் கொலைகாரன் என்ற தத்துவமும் பேசுகிறார்..

கிளாஸ்மேட்ஸ்

குடிகாரனை திருத்தும் டாக்டராக டி எம் கார்த்திக் நடித்திருக்கிறார். இவரையும் குடிகாரனாக மாற்றி விடுகிறார்கள் கதையின் நாயகர்கள்..

சாம்ஸ்.. இவர் வெளிநாட்டில் ஒழுங்காக வேலை பார்த்து தன் தங்கைகளை திருமணம் முடித்த நல்ல மகனாக இந்தியா திரும்பி வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தையும் இவரையும் குடிமகனாக மாற்றி விடுகிறார்கள்.. இவர் செய்யும் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கிறது..

அபிநட்சத்திரா கேரக்டர்.. நார்மலாக ஆரம்பித்து பின்னர் அதிர்ச்சி அளிக்கிறது.. குடிகார தந்தையை இழந்த பின்னர் இவர் எடுக்கும் முடிவு குடிகாரர்களுக்கு செருப்படி..

நாயகனுக்கு மனைவியாக பிரணா.. அப்பாவி அன்பான மனைவி.. தன்னைக் கணவன் குடித்துவிட்டு அடித்தாலும் குடும்ப கௌரவத்திற்காக வாழும் பெண்களின் நிலையை இவரது கேரக்டர் காட்டுகிறது.

சரவணசக்திக்கு மனைவியாக நடித்த நடிகை வசீகரிக்கிறார்..கணவன் தினமும் குடித்தால் மனைவி தடம் மாறக்கூடும் என்ற மனநிலையை இவரது கேரக்டர் காட்டுகிறது.

டெக்னீசியன்ஸ் …

படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சுமார் ரகமே.. இயக்கம் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி.

வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்கள் குடிகாரன்களை ஆட்டம் போட வைக்கும்.. மது பிரியர்களை மயக்கும் மது பாடலாக அமைந்திருக்கிறது.

பொதுவாகவே தற்போது தமிழ் சினிமாவில் மது சீன்கள் TASMAC அதிகமாகவே காணப்படுகின்றன.. இந்த படத்திற்கு கிளாஸ்மேட்ஸ் என பெயர் வைத்துவிட்டார். அது இல்லாத காட்சிகளை நாம் எதிர்பார்க்க முடியுமா? படத்தில் 95% மதுவை காட்டிவிட்டு 5% அட்வைஸ் செய்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.

குடிகாரர்கள் இல்லை என்றால் அரசு இல்லை.. அரசுக்கு வருமானம் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்..

ஆக தன்னையும் அழித்துவிட்டு தன் நண்பர்களையும் குடும்பத்தையும் அழிக்கும் இந்த ‘கிளாஸ்மேட்ஸ்’ படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால் உங்க விருப்பம்..

கிளாஸ்மேட்ஸ்

GLASSMATES movie review and rating in tamil

ரணம் அறம் தவறேல் பட விமர்சனம் 3.5/5.. ரசிக்கும் ரகம்

ரணம் அறம் தவறேல் பட விமர்சனம் 3.5/5.. ரசிக்கும் ரகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார் வைபவ்.. படத்தில் பணி புரியும் மற்றொரு உதவி இயக்குனரான சரஸ்மேனனை காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் விபத்து ஒன்று ஏற்பட அம்நிஷா நோயால் பாதிக்கப்படுகிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு உதவியாக க்ரைம் ரிப்போர்ட்டர் எழுதும் பணி வைபவ்வுக்கு கிடைக்கிறது.

காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை இவரின் ஓவியத்தாலும் நுண்ணறிவாலும் கண்டுபிடிக்கின்றனர்.

இவர்களது பகுதியில் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் பல மர்ம கொலைகள் நடக்கின்றன.. ஒரு கட்டத்தில் கொலை செய்தவன் மூன்று அட்டைப்பெட்டிகளை ஒவ்வொரு இடத்தில் வைக்கின்றான்..

ஒரு பெட்டியில் கைகள் மட்டும் மற்றொரு பெட்டியில் கால்கள் மட்டும் மற்றொரு பெட்டியில் உடல் மட்டும் வைத்து வீசி செல்கின்றான்.

இந்த கொலை காவல்துறைக்கு பெரும் தலைவலியாக அமைகிறது. இதனை கண்டுபிடிக்க நாயகி தன்யா ஹோப். அவருக்கு உதவியாக வைபவ் வருகிறார்..

அதன் பிறகு என்ன நடந்தது? கொலை செய்தவன் யார்? அவனின் நோக்கம் என்ன? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Vaibhav
Nandita Swetha
Tanya Hope
Saras Menon
Suresh Chakravarthi
Praniti
Darling Madhan
Jeeva Subramaniam
Padman
Vilangu Kicha Ravi
Dasarathi
Dhayalan
Produced by Madhu Nagarajan,

ரணம் அறம் தவறேல்

ரணம் படம் நடிகர் வைபவ்வின் 25 வது படம். அவருக்கு வெற்றி கொடுக்கும் வகையில் இந்தப் படத்தை அவர் தேர்ந்தெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. பெரும்பாலும் பல படங்களில் ஜாலியாக சுற்றி திரிந்த வைபவ் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து சீரியஸான ரோலில் நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.

நாயகி தன்யா ஹோப்.. சீரியஸான ரோல் தான்.. ஆனால் நாயகனே எல்லாத்தையும் கண்டுபிடித்து விடுகிறார். அதனால் இவரது கேரக்டர் ஒன்றும் இல்லாமல் போகிறது.

முக்கியமான கேரக்டரில் நந்திதா ஸ்வேதா.. 12 வயது பெண்ணுக்கு தாயாக நடித்து சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நந்திதாவின் நர்ஸ் கேரக்டரை வைத்து தான் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

மற்றொரு நாயகியாக சரஸ்மேனன். அழகாக திரையில் தோன்றும் இவருக்கு அதிகப்படியான காட்சிகள் இல்லை.

எவரும் எதிர்பாராத சீரியஸ் போலீஸ் கேரக்டரில் சுரேஷ் சக்கரவர்த்தி. இவரது கேரக்டர் எதிர்பாராத திருப்பத்தை கதையில் ஏற்படுத்தும்..

நந்திதா ஸ்வேதாவின் மகளாக பிரனிதி, வைபவின் நண்பராக டார்லிங் மதன், விலங்கு கிச்சா ரவி, ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் உண்டு. ‘விலங்கு’ படத்தை போல கிச்சா ரவி கேரக்டர் இதிலும் பெரிய எதிர்பார்ப்பு உண்டாக்கி இருக்கிறது

டெக்னீசியன்ஸ்…

Written & Direction by: Sherief
Music: Arrol Corelli
Dop: Balaji K Raja
Executive Producer: Udhayakumar Balaji
Editor: Muniez
Art Director: ManiMozhiyan Ramadurai
Singers: GV Prakash Kumar, Shreya Goshal, Mathichiyam Bala, Pranithi, Raghotham, Sherief
Lyrics: Vivek – Shereif – Arrol Corelli
Choreography: Amir Ads
Stunt: Billa Jagan & Om Prakash
PRO: Sathish Kumar
Production house : Mithun Mithra Productions
Producer: Madhu Nagarajan

மரணமடைந்த மகளிருடன் உடலுறவு கொள்ளும் மனித மிருகங்கள்.. சடலங்கல்களுடன் உடலுறவு கொள்ளும் முறையை நெக்ரோபீலியா (Necrophilia) என்று மருத்துவத்துறை துறையில் அழைக்கின்றனர்..

இதனை மையப்படுத்தி பிளாஷ்பேக் காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்… உயிருள்ளவர்களை கற்பழித்தால் அதற்கு தண்டனை நம் இந்திய சட்டத்தில் உள்ளது.. ஆனால் உயிரற்ற சடலங்களுடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனை இல்லை.. எனவே இந்திய சட்டத்தில் திருத்தம் வேண்டும்.. அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ரணம் அறம் தவறேல் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுகம் இயக்குனர் ஷெரிஃப்.

இந்தத் திரைக்கதைக்கு ஒளிப்பதிவாளரும் இசை அமைப்பாளரும் உறுதுணையாக இருந்து இந்த ரணத்தை மேலும் சிறப்பாக இருக்கின்றனர்.

அரோல் கரோலி திரில்லர் காட்சிகளுக்கு பின்னணி இசையை மிரட்டலாகவும் எமோஷன் காட்சிகளுக்கு ஏற்றது போல இதமாகவும் கொடுத்திருக்கிறார்.. சில சில இடங்களில் தியேட்டரை அதிரவைக்கும் இரைச்சலையும் கொடுத்திருக்கிறார்..

ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி கே ராஜா செய்திருக்கிறார்.. கண்களுக்கு விருந்தளிக்கிறது..

ஆக ரணம் அறம் தவறேல்.. ரசிக்கும் ரகம்..

ரணம் அறம் தவறேல்

Ranam Aram Thavarel movie review and rating in tamil

பாம்பாட்டம் பட விமர்சனம்

பாம்பாட்டம் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

இந்திய சுதந்திரப் போராட்ட கால கதைக்களத்துடன் அரசி அரசர் இளவரசி இவர்களுடன் நாக தோஷத்தை இணைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்.

ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவர் அரசி மல்லிகா ஷெராவத். ஆனால் அரண்மனை ஜோசியரோ.. நாகத்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்கிறார்.. பாம்பு இருந்தால்தானே பிரச்சனை பாம்புகள் அனைத்தையும் அழித்துவிட கட்டளையிடுகிறார் அரசி.. ஆனாலும் அசுர பாம்பு சீண்டியதால் அரசி மரணடைகிறார்.

இதன் பின்னர் இளவரசி உயிருக்கும் ஆபத்து என்கின்றனர் ஜோசியர்கள்.. இதனையடுத்து தன் மகளை அழைத்துக் கொண்டு பாம்பு தென்படாத தேசமான நியூசிலாந்து நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார் அரசர். அங்கு தன் மகளுக்காக அரண்மனை கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார். இவரது நண்பர் சுமன்.. இவர்கள் சில வழக்குகளை விசாரிக்கும் போது தான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன… அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஜீவன் (மாணிக்க வேல் )- அப்பா ) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் (ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் இந்த படத்திற்கு ஆணிவேர் என நினைத்து போனால் படம் தொடங்கி 10 நிமிடங்களில் அவரின் கதை முடிவது பெரும் சோகம்.

அப்பா மகன் இரு வேடங்களில் ஜீவன் நடித்திருக்கிறார்.. ஒரு பக்கம் கைதியாகவும் மறுபக்கம் போலீஸ் ஆகவும் கம்பீரம் காட்டி இருக்கிறார்.. ஜெயிலில் இருந்து வந்த பிறகு அவர் போடும் சதித்திட்டங்கள் படத்திற்கு பக்க பலம்.

இளவரசியாக ரித்திகா சென்.. அரசர் குடும்பதிற்க்கு ஏற்ற முகத்தோற்றமும் இருப்பதால் ரசிக்க முடிகிறது.. இவரைப் பெண் கேட்க வரும் அந்த நியூஸ்லாந்து டாக்டரும் அவரது கேரக்டரும் எதிர்பாராத ட்விஸ்ட்..

இவர்களுடன் சாய்பிரியா, யாஷிகா ஆனந்த், பருத்திவீரன் சரவணன், சுமன், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான்
ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – C.E.சண்முகம், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா,மக்கள் தொடர்பு – மணவை புவன்,

இணை தயாரிப்பு – பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு – V.பழனிவேல்.

பெரும்பாலும் பேயை வைத்து ரசிகர்களை இதுவரை பயமுறுத்திய வடிவுடையான் இந்த படத்தில் பாம்பை வைத்து நம்மை பயப்பட வைத்திருக்கிறார்.. ஆனால் அதற்கு கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

முக்கியமாக ஒரு காட்சியில் பாம்புகளை அழிக்க திட்டமிடுகின்றனர்.. அந்தக் காட்சிகளில் பாம்புகளை அடிப்பது போல காட்டி இருக்கலாம்.. ஆனால் வெறும் வார்த்தையாகவே பாம்புகளை ஒழித்து விட்டோம் என படைவீரர்கள் சொல்வதாக காட்சிகள் உள்ளன.

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்..

பின்னணி இசை பல இடங்களில் காது கிழிக்கும் வகையில் இரைச்சலை கொடுத்திருப்பததை தவிர்த்து இருக்கலாம். ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது..

ஜீவன், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், லிவ்விங்டண்ட், சரவணசக்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து வடிவுடையான் இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

ஆனால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. இடைவேளைக்கு முன்பு வரை பாம்பை போல கதை அங்கும் இங்குமே செல்கிறது.. இடைவேளைக்குப் பிறகுதான் கொஞ்சம் கதை புரியும் படியாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.

பாம்பாட்டம்

Pambattam movie review and rating in tamil

வித்தைக்காரன் விமர்சனம் 3.5/5… கெட்டிக்காரன்

வித்தைக்காரன் விமர்சனம் 3.5/5… கெட்டிக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

2003 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது.. தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு (சதீஷ்) மேஜிக் கற்றுத் தருகிறார் தந்தை.. இதில் ஒரு மகன் மற்றவர்களை ஏமாற்றுவது தப்பில்லையா? என கேட்கிறார்.. மற்றொரு மகனோ ஏமாற்றுவது தப்பில்லை ஏமாறுவது தான் தப்பு என்கிறார்..

இதன்படி கதை 2023 ஆம் ஆண்டுக்கு நகர்கிறது.. பெரிய மேஜிக் மேனாக வளர்ந்து நிற்கும் சதீஷ்க்கு ஒரு கட்டத்தில் பெரிய தொகை ஒன்று தேவைப்படுகிறது. இதனால் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.

வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்படும் வைர நகைகளை லாக்கர் ரோமில் வைத்திருப்பார்கள். அந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் சதீஷ். ஆனால் இவர் நேரடியாக ஈடுபடாமல் மூன்று தாதாக்களையும் கொண்டுவர திட்டமிடுகிறார்.

மூன்று கேங் லீடர்ஸ் மதுசூதன் ஆனந்தராஜ் சுப்ரமணிய சிவா.. இவர்கள் மூவரும் சதீஷின் சதித்திட்டம் தெரியாமல் கொள்ளையடிக்க வருகின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா? சதீஷின் உள்நோக்கம் என்ன? இவர்கள் மூவரையும் ஒரே நேர்கோட்டில் அங்கே சந்திக்க விடுவது நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை.

(இதில் சுப்ரமணிய சிவாவின் அடியாளாக வருபவர் தான் இந்த படத்தின் இயக்குனர் வெங்கி.)

கேரக்டர்ஸ்…

Sathish
Simran Gupta
Anandraj
Madhusudhan
Subramaniam Siva
John Vijay
Pavel Navageethan
Japan Kumar

வடிவேலு, யோகிபாபு, சந்தானம், சூரி உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் இப்போது கதையின் நாயகர்களாக மாறிவிட்டனர்.. அந்த வரிசையில் சதீஷும் கதையின் நாயகனாக படங்களை கொடுத்து வருகிறார்.

ஹீரோ ஆகிவிட்டாலும் அதற்கான முயற்சிகளையும் சரியாகவே எடுத்திருக்கிறார் சதீஷ்.. ஒரு குத்துப் பாடலுக்கு அழகாக நடனமும் போட்டிருக்கிறார்.

தான் ஒருதலையாக காதலித்தாலும் தன் காதலிக்கு பிரச்சனை ஏற்பட்ட போது அதற்காக உதவும் சதீஷின் கேரக்டர் பாராட்டுக்குரியது. தான் காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் அவள் மேல் ஆசிட் அடிக்கும் ஆசாமிகளுக்கு இது ஒரு பாடம்.

தனக்கு என்ன வருமோ தனக்கு எந்த கதை பொருந்துமோ அதை சரியாக தேர்ந்தெடுத்த சதீஷுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.

டைட்டில் கார்டில் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற பெயர்களை போட்ட பிறகு இறுதியாகவே சதீஷ் பெயர் வருகிறது. அதற்கும் ஒரு பெரிய மனசு வேண்டும்.

நாயகி சிம்ரன் குப்தா.. இவரின் அழகும் இன்வெஸ்டிகேஷன் செய்யும் முறையும் ரசிக்க வைக்கிறது.

ஆனந்தராஜ், மதுசூதன் மற்றும் சுப்ரமணிய சிவா இவர்களுடன் வேலை செய்யும் அடியாள்கள் அனைவரும் சிரிப்புக்கு நாங்க கேரண்டி என உதவி இருக்கின்றனர்.

மதுசூதனின் உதவியாளர் சாம்ஸ்.. சுப்பிரமணிய சிவாவின் அடியாளாக வரும் இந்த படத்தின் இயக்குனர் வெங்கி ஆகியோரும் ஸ்கோர் செய்கின்றனர்.

இதில் இயக்குனர் வெங்கி DEFENCE ஆபீஸர்களிடம் சிக்கிக் கொள்ளும் காட்சி சிறப்பு.

ஆனந்தராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.. பாத்ரூமில் நிற்க கூட இடமில்லாமல் தவிக்கும் ஒரு அதிகாரிக்கு உங்க நம்பர கொடுத்துட்டு போங்க நாங்க போன் பண்ணி சொல்றோம் என்று ஆனந்தராஜ் செய்யும் அலப்பறை செம..

பாவல் நவநீதன், ஜான்விஜய் & ஜப்பான் குமார் ஆகியோரும் நம்மை கவனிக்க வைக்கின்றனர். இரண்டாவது நாயகியாக வருபவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் அழகால் நம்மை கவர்ந்து விடுகிறார்..

டெக்னீசியன்ஸ்…

Banner : White Carpet Films
Produced by : K.Vijay Pandi
Written & Directed by : Venki
Music : VBR
DOP : Yuva Karthick
Editor : Arul Elango Siddharth
Art : G.Durairaj
Stunts : Stunner Sam
Costume Designer : Kiruthika Sekhar
Production Controller: S.N.Asraf
Production Executive: Hakkim Sulaiman
Stills : S.P.Suresh
PRO : Sathish (AIM)
Motion Poster: Aathi
Publicity Designer : Thandora
Co-Producer : R. Murali Krishnan
Associate Directors: A.Abilash, Aneesh Rathenam, Maris
Assistant Directors: G.Hariharan, Rajeshwaran.J, V.Prabakaran, V.K Senthil Rajan, Sriram GV, Vaseekaran Dhanavel, Zubedh Syed

வி பி ஆர் என்பவர் இசையமைத்துள்ளார்..
இதுபோல திருட்டு கதைகளுக்கு பின்னணி இசை முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப பின்னி இருக்கிறார்..

சதீஷ்க்காக இவர் இசையமைத்தாரா.? இசைக்காக சதீஷ் ஆடினாரா? தெரியவில்லை.. ஆனால் பாடலும் ஆட்டமும் ரசிக்க வைக்கிறது.

யுவ கார்த்திக் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. ஏர்போர்ட்டில் திருடும் அந்த காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமைந்துவிட்டது..

அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங் செய்திருக்கிறார்.. நாயகன் சதீஷ் நடந்து வரும்போது திடீரென பின்னணி இசை கட்டிங் செய்து விட்டு நடக்க விடுவது அதன் பின்னர் இசையை சேர்ப்பதும் என பின்னி எடுத்து விட்டார்..

இதுபோன்ற கதைளுக்கு விறுவிறுப்பான எடிட்டிங் தேவை.. அதை உணர்ந்து தன் பணியை நேர்த்தியாக செய்து இருக்கிறார் சித்தார்த்.

லோகேஷ் இடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒரு சிம்பிளான கதையை கொஞ்சம் சீரியஸ் ஆகவும் அதே சமயம் சிரிக்கவும் வைத்திருப்பது சிறப்பு.. ஆனால் ஏர்போர்ட்டில் இப்படி எல்லாம் நடக்குமா என்றால் கொஞ்சம் லாஜிக் மீறல்கள் உள்ளது.

பெரும்பாலும் ஹீரோவுடன் நான்கைந்து நண்பர்கள் இருப்பார்கள் அல்லது அட்லீஸ்ட் ஒரு நண்பராக இருப்பார். தமிழ் சினிமாவின் இந்த இலக்கணத்தை உடைத்து ஒன் மேன் ஆர்மி போல இந்த வித்தைக்காரனை வைத்து வித்தை காட்டி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.

வித்தைக்காரன்

Vithaikkaaran movie review and rating in tamil

நினைவெல்லாம் நீயடா விமர்சனம்..; காலம் மாறலாம் காதல் மாறாது..

நினைவெல்லாம் நீயடா விமர்சனம்..; காலம் மாறலாம் காதல் மாறாது..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி ..

ரோஹித் & யுவஸ்ரீ இருவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கையில் காதலிக்கின்றனர் . இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பிரஜன் & சீனாமிகா. (இதில் சினாமிகா கேரக்டரில் மட்டும் ட்விஸ்ட்..)

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே யுவஸ்ரீ திடீரென அமெரிக்கா செல்கிறார். இதன் பிறகு காதலர்களிடையே தொடர்பு இல்லை. ஆனாலும் காதலியை நினைத்து உருகி கொண்டு இருக்கிறார் பிரஜன்.

ஒரு கட்டத்தில் முறைப்பெண் மனிஷாவை கட்டிக்க பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர்.. முதலில் மறுக்கிறார் பிரஜன்.. ஒருவேளை தன் காதலி திரும்பி வந்தால் என்ன செய்வது? என கேட்க அவள் இந்நேரம் திருமணம் செய்து குழந்தை பெற்று இருப்பாள் என்கின்றனர் நண்பர்கள்.

ஒருவேளை அவள் திருமணம் செய்யாமல் திரும்பி வந்தால் நான் செத்துடுவேன் என்கிறார் பிரஜன். மனீஷாவின் தற்கொலை முயற்சியால் வேறு வழியின்றி மனீஷாவை மணக்கிறார். இவர்கள் திருமண வாழ்வில் சந்தோஷம் இல்லை.

இந்த நிலையில் தான் நீங்கள் எதிர்பார்ப்பது போல திருமணம் செய்து கொள்ளாமல் சினாமிகா தன் காதலனை தேடி இந்தியா வருகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது காதலன் என்ன செய்தான்? மனைவி மனிஷாவின் நிலை என்ன? சினாமிகா என்ன செய்தார்? நண்பர்கள் என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்ஸ்…

Starring – PRAJAN, MANISHA YADAV, SINAMIKAA, YUVALAKSHMI, ROHIT, REDDIN KINGSLEY, MANOBALA, MADHUMITHA, RV UDHAYAKUMAR, PL THENAPPAN MUTHURAMAN, YASAR ABI NATCHATHIRA

காதலியின் கரம் பிடிக்க முடியாமல் மனைவியுடன் மனம் ஒத்துப் போகாமல் இரண்டு உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் பிரஜன். கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைத்து நம்மையும் கொஞ்சம் அழ வைக்கிறார்.

நாயகியாக சினாமிகா.. காதலனை தேடி இந்தியாவிற்கு வந்து பின்னர் வேதனைப்படும் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சித்து இருக்கிறார். ஆனாலும் நாயகனின் அக்காவை போலவே தோற்றத்தில் தென்படுகிறார்.

பள்ளியில் பார்த்து ரசித்த யுவஸ்ரீ? இது என ரசிகர்களையும் குழப்பி விடுகிறார் இயக்குனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் வித்தியாசமான ட்விஸ்ட் வைத்து நம்மை தேற்றி விட்டார்.

பள்ளிக் காதலர்களாக ரோஹித் மற்றும் யுவஸ்ரீ.. இருவரின் லவ் கெமிஸ்ட்ரி செம. இவர்களுக்காக இளையராஜா போட்ட காதல் மெலோடியும் சூப்பர்.

எதிர்பாராத கேரக்டரில் ஸ்ரீ பிரியங்கா.. அந்த கேரக்டரை சொன்னால் சுவாரசியம் இருக்காது.. ஆனாலும் இவரின் காட்சிகள் இன்னும் இருக்காதா? என ஏங்க வைத்து விட்டார்.

இளவயது பிரஜனாக ஆக ரோகித் நடித்திருக்கிறார். இவரும் செம ஸ்மார்ட்.. யுவஸ்ரீ தோழியாக அபி நட்சத்திரா.. பள்ளி மாணவியாக பக்காவ பொருந்திருக்கிறார்

மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா ஆகியோர் ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

நினைவெல்லாம் நீயடா

டெக்னீசியன்ஸ் ..

Written & Directed by: AADHIRAAJAN

Music : ILAIYARAAJA

Producer : ROYAL BABU

Banner : LEKHA THEATRES

Cinematographer : RAJA BHATTACHARJEE

Editor : ASHISH

Art director: Munikrishna

STUNT MASTER: PRADEEP DINESH

LYRICS: ILAIYARAAJA, PAZHANI BHARATHI, SNEKAN

SINGERS: Yuvan, KARTHIK ANANYA BHAT
SIREESHA BHAGAVATHULLA
HARIPRIYA

CHOREOGRAPHY: DINESH , DHEENA

இளையராஜாவின் இசையில் பள்ளி காதலர்களுக்கான பாடல்கள் மட்டும் ரசிக்க வைக்கிறது.. இசைஞானியின் பின்னணி இசை வழக்கம் போல ரசிக்க வைக்கிறது.

ராஜா பட்டாச்சாரியார் ஒளிப்பதிவு செய்ய ஆஷிஷ் என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்… ஒளிப்பதிவை வண்ணமயமாய் கொடுத்திருக்கிறார். பள்ளி பருவ காட்சிகள் படத்திற்கு பலம் என்பதை உணர்ந்து அழகுற செய்து இருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் எடிட்டர் வெட்டியிருக்கலாம்.

‘சிலந்தி & அருவா சண்டை’ படங்களை இயக்கிய ஆதிராஜன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. வாழ்க்கையில் ஆயிரம் பெண்களைக் கடந்தாலும் நாம் காதலித்த முதல் பெண் நினைவு மனதில் நிற்கும் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார்

கம்யூனிகேஷன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காதல் என்றென்றும் நிற்கும் என்பதை கொஞ்சம் வலியுடன் சொல்ல முற்பட்டு இருக்கிறார்.

90களில் வந்த படங்களில் பார்க்காமல் காதல்… டெலிபோன் காதல்.. கடிதம் காதல்.. நாக்கை அறுத்துக் கொண்ட காதல் என பல காதல் பாடல்களை பார்த்து இருப்போம்.. அதுபோல இந்த படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு காதல் சுவாரசியத்தை வைத்திருக்கிறார். அது இன்றைய 90ஸ் கிட்ஸ் மட்டும் 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கு பிடிக்குமா? உண்மையாக காதலிப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் எனலாம்.

நினைவெல்லாம் நீயடா என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் காதலியை நினைத்துக் கொண்டிருக்கும் காதலனுக்காக நினைவெல்லாம் நீயடி என வைத்திருக்கலாம் இயக்குனர் ஆதிராஜன்.

ஆக நினைவெல்லாம் நீயடா.. காலம் மாறலாம் காதல் மாறாது..

நினைவெல்லாம் நீயடா

NINAIVELLAM NEEYADA movie review and rating in tamil

More Articles
Follows