First on Net ஆச்சரியமில்லை… ஐரா விமர்சனம் 2.5/5

First on Net ஆச்சரியமில்லை… ஐரா விமர்சனம் 2.5/5

நடிகர்கள்: நயன்தாரா, கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – சுதர்சன்
எடிட்டர் – கார்த்திக் ஜோகேஷ்
இசை – சுந்தர மூர்த்தி
இயக்கம் – சர்ஜுன்
தயாரிப்பு – கோட்டப்பாடி ராஜேஷ்

கதைக்களம்…

முதன்முறையாக யமுனா மற்றும் பவானி என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

பத்திரிகையாளர் யமுனா (நயன்தாரா) பிரபலமாக நினைத்து யூடிப் சேனல் ஒன்றை ஆரம்பிக்கிறார். இவருக்கு உதவியாக யோகிபாபு இருக்கிறார்.

இவர்கள் மக்களை ஏமாற்ற பேய் இருப்பதாக சொல்லி பல வீடியோக்களை வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பேய் வந்து நயன்தாராவை கொல்ல துடிக்கிறது.

யார் அந்த பேய்? எதற்காக நயன்தாரா கொல்ல வருகிறது. இது ஒரு புறம்.

மற்றொரு புறம் கலையரசன் நாயகன். ஒரு விபத்தில் தன் காதலியை இழக்கிறார். அதன்பின்னர் சில நபர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இவர்களை ஒரு மர்ம சக்தி கொல்கிறது என்பதை உணர்கிறார். அவர் யார்?

இந்த இரண்டு விஷயங்களை இணைத்து மொக்க ட்விஸ்ட் வைத்து கதையை முடிக்கிறார் பட டைரக்டர் சர்ஜுன்.

கேரக்டர்கள்…

ரொமான்டிக் ஹீரோயின், ஆக்சன் குயின், கிளாமர் டால், கோலமாவு கோகிலா என வெரைட்டி காட்டிய நயன்தாரா இதில் ஒரு படி மேல சென்று டபுள் கேரக்டர் கொடுத்துள்ளார்.

இரண்டு கேரக்டருக்கும் தன் பாடி லாங்குவேஜ்ஜில் நிறைய வித்தியாசங்களை கொடுத்துள்ளார். முக்கியமாக ராசி இல்லாத பவானி கேரக்டரில் அசத்தியிருக்கிறார்.

பிறந்த நிமிடம் முதல் ஒரு ராசியில்லாத பெண் (கதை அப்படி) எப்படியெல்லாம் கஷ்டப்படுவாள் என்பதை தன் உணர்வுகளில் அழகாக காட்டியிருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் நயன்தாரா.

யோகிபாபு வழக்கம்போல ரசிக்க வைக்கிறார். காமெடி அவ்வளவாக இல்லையென்றாலும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

அமுதன் கேரக்டரை இன்னும் அழகாக்கியிருக்கிறார் கலையரசன். நடிப்பில் மெர்ச்சூர்ட்டியை கொடுத்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

திகிலான காட்சிகளில் நமக்கு இன்னும் திகில் கொடுத்துள்ளார் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன். பூனை மற்றும் வண்ணத்து பூச்சியை கூட மிரட்டலாக காட்டியுள்ளது சிறப்பு.

சுந்தரமூர்த்தி என்பவர் இசையமைத்துள்ளார். திகில் படத்திற்கு எப்படி இசை தேவையோ அதை சிறப்பாக கொடுத்துள்ளார். அதுவே மிரட்டலாக உள்ளது. மேகதூதம் பாடல் நம்மை கவர்ந்த ஒன்றாகும்.

கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங்கை சிறப்பாக செய்திருக்க வேண்டும். இடைவேளைக்கு பிறகு படம் எப்போடா முடியும்? என்று நினைக்க வைக்கிறது.

வசனங்கள் சில இடங்களில் மட்டுமே நம்மை கவர்கிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கியவர் சர்ஜுன். இவையில்லாமல் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற ஒரு படத்தையும் இயக்கியுள்ளார்.

ஒரு த்ரில்லர் கதையில் சுயநலவாதிகளால் மற்றவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கலந்துச் சொல்ல முற்பட்டு இருக்கிறார்.

நயன்தாரா போல் ஒரு சிறந்த நடிகையை வைத்து கதை சொன்னவர், நம்பும்படியான ட்விஸ்ட் வைத்து சொல்லியிருக்கலாம். ஆனால் லிப்ட், மாடிப்படி, டைமிங் மிஸ் என எதை எதையோ சொல்லி தடுமாறியிருக்கிறார்.

ஒருவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்தால் தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள பேயாக வருவார் என்ற கான்செப்ட் ஓகே தான்.

ஆனால் தன் மரணத்திற்கு காரணமானவர்கள் இவர்கள் தான் என நினைத்து ஒரு லிப்ட் சீன் வைத்து சொன்னாரு பாருங்கள்.. அதுதான் படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

நயன்தாராவின் பாட்டியை எதற்காக பேய் கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

ஆக ஐரா… ஆச்சரியமில்லை.

Comments are closed.

Related News

கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே…
...Read More
முதன்முறையாக இரண்டு வேடங்களில் நயன்தாரா நடித்து…
...Read More
ஆச்சர்யப்படுத்தும் ஃபர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே…
...Read More