அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

நடிகர்கள் : மிர்ச்சி சிவா, சீனிவாசன், நைனா சர்வார், சென்ட்ராயன், ராஜ்கபூர், சிங்கமுத்து, மன்சூர் அலிகான், மதுமிதா மற்றும் பலர்.
இசை : ரகுநந்தன்
ஒளிப்பதிவு : காசி விஷ்வா
படத்தொகுப்பு : சுஜீத்
இயக்கம் : திரைவண்ணன்
பிஆர்ஓ : கேஎஸ்கே செல்வா
தயாரிப்பாளர் : என். திருநாவுக்கரசு

 

ad 4

கதைக்களம்…

சினிமாவில் பெரிய நடிகராக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். இவரின் உதவியாளர் சிங்கமுத்து. அவரின் தீவிர ரசிகர்களான சிவா, சென்ட்ராயன்.

பவர்ஸ்டாரின் படங்கள் வரும்போது அமர்க்களப்படுத்தும் இவர்கள் ஒருமுறை அவரின் படத்தை வாங்கி விநியோகம் செய்கின்றனர்.

படம் பெரும் தோல்வியை சந்திக்க, நஷ்டஈடு கேட்கின்றனர். ஹீரோ மறுக்க அதன்பின்னர் ரசிகர்கள் எடுக்கும் முடிவே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

மிர்ச்சி சிவா ரசிகராக நடித்துள்ளார். தன் தலைவனுக்காக எதையும் செய்யும் கேரக்டரில் சில ரசிகர்களை நினைவுபடுத்துகிறார்.

இதில் கொஞ்சம் டான்சும் ஆடி இருக்கிறார். ஆனால் சென்டிமென்ட் மற்றும் ஜாலியான காட்சிகளில் ஒரே மாதிரியான ரியாக்ஷன்தான். கொஞ்சம் மாற்றினால் நல்லது.

நாயகி நைனா சர்வார். அழகு பதுமையாக வந்து செல்கிறார். கலங்கும் காட்சிகளில் கூட ஓவர் மேக்கப் போட்டு பளிச்சின்னு இருக்கிறார்.

பப்ளியாக இருந்தும் இவரை ஹீரோ அவ்வளவாக கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஏனோ?

ad 1

பவர்ஸ்டார் சீனிவாசன் உயர்ந்த நடிகர்களுக்கே உரிய பந்தாவாக வருகிறார். பெரும்பாலும் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பதால், முக பாவனைகள் தெரியவில்லை.

க்ளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார். மற்றபடி ஒன்றுமில்லை.

சென்ட்ராயன் இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

ராஜ்கபூர் மற்றும் டிபி கஜேந்திரன் சிலகாட்சிகளில் வருகின்றனர்.

இவர்களுடன் மன்சூர் அலிகான், சிங்கமுத்து, மதுமிதா ஆகியோர் தங்கள் பணியை கொஞ்சம் ஓவராகவே செய்துள்ளனர்.

ad 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது ரகுநந்தனின் இசை. பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.

காசி விஸ்வாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

படத்தின் ப்ளஸ்…

  • இடைவேளை ட்விஸ்ட்
  • ரசிகர்களுக்கு பாடம் சொன்னது

படத்தின் மைனஸ்…

  • ஹீரோ + ரசிகர்கள் மோதல் என்ற எதிர்பாராத இடைவேளையை கொடுத்துவிட்டு, அதன் பின்னர் சுவாரஸ்யமில்லாமல் கதையை கொண்டு சென்றது.
  • மன்சூர் அலிகான், சிங்கமுத்து மற்றும் மதுமிதாவின் ஓவர் ஆக்ட்டிங்
  • காட்சிகளில் உள்ள நாடகத்தன்மை.

ad 2

நடிகர்களும் மனிதர்கள்தான். படம் என்பது பொழுதுபோக்கு சாதனமே. அதுவே ரசிகனின் வாழ்க்கையல்ல என்பதை சொன்ன திரைவண்ணனை பாராட்டலாம்.

இயக்குனர் முதல்பாதியில் கொடுத்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இன்னும் இன்னும் அட்ரா மச்சான் விசிலு என சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் அட்ரா மச்சான் விசிலு.. ரசிகனுக்கு நடிகன் சொல்லும் பாடம்.

Comments are closed.

Related News

விஜய் டிவி சின்னத்திரை என்றாலும். இதன்…
...Read More
மிர்ச்சி சிவா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன்…
...Read More
மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன்…
...Read More