மீண்டும் ஒரு ‘கில்லி’… தரணிக்கு ஓகே சொல்வாரா விஜய்.?

மீண்டும் ஒரு ‘கில்லி’… தரணிக்கு ஓகே சொல்வாரா விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay dharaniதரணி இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான கில்லி படத்தின் 13வது ஆண்டு விழா நேற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இத்துடன் கில்லி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் தரணி கூறியுள்ளதாவது…

‘பதிமூன்று வருடங்கள் கழித்தும் ரசிகர்கள் கில்லியை கொண்டாடி வருவது சந்தோஷம்.

இதன் பார்ட் 2 பற்றி பலரும் கேட்கிறார்கள். விஜய் சார் ஓகே சொன்னால் இயக்க நான் ரெடி’ என்று கூறியுள்ளார்.

மேலும் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Will Vijay and Dharani combo join for Ghilli sequel

சரத்குமாரின் அடுத்த படம் ‘சென்னையில் ஒரு நாள் -2’

சரத்குமாரின் அடுத்த படம் ‘சென்னையில் ஒரு நாள் -2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar new movie titled Chennaiyil Oru Naal 2கல்பதரு பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் தயாரிக்கும் படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் இந்த படத்துக்கு ‘சென்னையில் ஒரு நாள் -2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் கதையை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது.

ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குற்றம்-23 படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ராம் மோகன் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராகவும் ‘மாயா’ புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.

முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் ‘under cover agent’ என்றும், அவர் புலன் விசாரணை செய்யும்முறை பரபரப்பாகஇருக்கும் என்றும் சொல்கிறார் இயக்குநர் ஜெபிஆர்.

இப்படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது.

‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது.

Sarathkumar new movie titled Chennaiyil Oru Naal 2

sarathkumar

டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகிறார் கமல்ஹாசன்

டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகிறார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan likely to host a Big Boss show in Tamilதிரையுலகில் கமல்ஹாசன் ஒரு சகலகலா வல்லவன் என்பது நாம் அறிந்ததே.

சினிமாவில் ஐம்பதைந்து வருடங்களை கடந்துவிட்ட இவர் அண்மைகாலமாக போத்தீஸ் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

இந்த விளம்பரத்தை நாம் டிவியில் பார்த்து இருக்கிறோம்.

இந்நிலையில் பிரபலமான ஒரு டிவியில் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கவிருக்கிறாராம் கமல்ஹாசன்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

இந்தியில் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி போன்று இந்நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இது குறித்த அறிவிப்பு விளம்பரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Kamalhassan likely to host a Big Boss show in Tamil

சக்தி வாய்ந்த 50 இந்தியர்கள் பட்டியலில் கோலிவுட் ஹீரோஸ்

சக்தி வாய்ந்த 50 இந்தியர்கள் பட்டியலில் கோலிவுட் ஹீரோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kollywood Heros in 50 most Powerful Indian Listபிரபல ஊடகமான இந்தியா டுடே இந்தாண்டின் சக்தி வாய்ந்த 50 இந்தியர்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டைபோல, இந்தாண்டும், ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார்.

முதல் பத்து இந்தியர்கள்…

1. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனர்)
2. ரத்தன் டாடா (டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர்)
3. கே.எம்.பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர்)
4. கெளதம் அதானி (அதானி குழுமத் தலைவர்)
5. பாபுராம்தேவ்
6. ஆனந்த் மகிந்த்ரா (மகிந்திரா குரூப்)
7. உதய் கோடாக் (கோடாக் மகிந்திரா நிறுவனம்)
8. திலிப் சங்வி (தொழிலதிபர்)
9. ஆசிம் பிரேம்ஜி ( விப்ரோ நிறுவன சேர்மன்)
10. என். சந்திரசேகரன் (டாடா சன்ஸ் போர்டு தலைவர்)

இவர்களைத் தொடர்ந்து இடம் பிடித்துள்ள பிரபலங்கள்…

  • கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி 11வது இடம்
  • அமிதாப்பச்சன் 15வது இடம்
  • சுப்பிரமணியன் சாமி 20வது இடம்
  • எழுத்தாளர் குருமூர்த்தி 30வது இடம்
  • ரஜினிகாந்த் 34வது இடம்
  • ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்து 36வது இடம்
  • ஷாருக்கான் 40வது இடம்
  • அக்சயகுமார் 44வது இடம்
  • கமல்ஹாசன் 45வது இடம்
  • அமீர்கான் 47வது இடம்

இந்த பட்டியலில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் முதன்முறையாக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kollywood Heros in 50 most Powerful Indian List

rajini kamal in 50 powerful indian list

விஜய்-சூர்யா-தனுஷ்-விஜய்சேதுபதி… இந்தாண்டில் வசூலை அள்ளியது யார்..?

விஜய்-சூர்யா-தனுஷ்-விஜய்சேதுபதி… இந்தாண்டில் வசூலை அள்ளியது யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Suriya Dhanush Vijay Sethupathi2017ஆம் ஆண்டு தொடங்கி கிட்டதட்ட 100 நாட்களை கடந்து விட்டது.

இதில் பெரிய நட்சத்திரங்களின் படங்களும் சிறு பட்ஜெட் படங்களும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இதுவரை இந்தாண்டில் வெளியான படங்களில் எந்த நடிகரின் படம்? வசூலில் சாதனை படைத்துள்ளது என்பதை பார்ப்போம்

அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் இதோ…

1. பைரவா
2. சிங்கம் 3
3. மொட்ட சிவா கெட்ட சிவா
4. கவண்
5. போகன்

தனுஷ் இயக்கி, தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படம் வெளியாகி 4 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.

இதுவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

அஜித் பிறந்த நாளில் ‘விவேகம்’ டீசருடன் நான்கு படங்கள்

அஜித் பிறந்த நாளில் ‘விவேகம்’ டீசருடன் நான்கு படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stillsவருகிற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில், அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

எனவே தல ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக விவேகம் படத்தின் டீசரை அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்த, அதிரடியான அறிவிப்புகளை
சென்னை, கோயம்பேடு ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

பிறந்தநாள் அன்று காலை, அங்குள்ள நான்கு ஸ்கிரீன்களிலும் நான்கு அஜீத் படங்களை திரையிட இருக்கிறார்களாம்.

ஆனால், எந்த படங்கள் திரையிடப்படும் என அவர்கள் அறிவிக்கவில்லை.

‘பிளைண்ட் டேட்’ போல, எந்தப் படம் என தெரியாமல் தியேட்டருக்குப் போக வேண்டியதுதான்.

அட.. எந்த படமாக இருந்தால் என்ன? அஜித்தை பார்க்கப்போறோம் என கிளம்பவேண்டியதுதானே..

Vivegam teaser and 4 movies will be treat for Ajith fans on his Birth day

ajith new look

More Articles
Follows