விஜய்யின் கில்லி தங்கை ஹீரோயினாகிறார்

விஜய்யின் கில்லி தங்கை ஹீரோயினாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghilli fame sister Jennifer becames heroine‘கில்லி’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் ஜெனிபர்.

இதில் விஜய் மற்றும் ஜெனிபரின் பாசம் மற்றும் சண்டைக் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பின்னர் சினிமாவில் ஜெனிபருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தபோதிலும் டிவி சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், தற்போது சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ghilli fame sister Jennifer becames heroine

நடிகர் சங்க போராட்டம் கமல்-ரஜினி பங்கேற்பு; விஜய்-அஜித் கலந்துக் கொள்வார்களா?

நடிகர் சங்க போராட்டம் கமல்-ரஜினி பங்கேற்பு; விஜய்-அஜித் கலந்துக் கொள்வார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini kamal vijay ajithகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனவும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இதற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.

ஆனால் காலம் நேரம் குறைக்கப்பட்டே அனுமதி வழங்கப்பட்டது.

எனவே காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்.

இதில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இவர்கள் தவிர விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட நடிகைகளும் போராட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்காக தமிழ்திரை உலகம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கும் கோரிக்கைகள் வருமாறு:-

* மத்திய அரசே தமிழர்களின் உரிமையை நிலைநாட்டு. நேர்மையான காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்து.

* மத்திய அரசே மக்களின் உணர்வை மதித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடு.

மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வை மதியுங்கள்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தன் கட்சி நிர்வாகி குழந்தைக்கு தன் பெயரை இணைத்து வைத்த கமல்

தன் கட்சி நிர்வாகி குழந்தைக்கு தன் பெயரை இணைத்து வைத்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal vaasanமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய பின் பல்வேறு அதிரடி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்களை நடத்தியும் மக்களை சந்தித்தும் வருகிறார்.

அப்போது ரசிகர்களுடனும் பொது மக்களுடனும் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.

தீவிர அரசியலில் ஆர்வம் காட்ட விரைவில் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு கமல்வாசன் என பெயரிட்டு மகிழ்ந்துள்ளார் கமல்.

ஜூன் 16-17 தேதிகளில் லண்டனில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி

ஜூன் 16-17 தேதிகளில் லண்டனில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhதமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிருத் இலண்டனில் பிரம்மாண்டாமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.

ஜூன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது.

இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான டிக்கெட் விற்பனை இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிரூத் லண்டனில் முதன்முறையாக நடத்தும் இசை நிகழ்ச்சி இது. இந்த இசைநிகழ்ச்சி Gig Style Show பாணியில் நடைபெறவிருக்கிறது.

இந்திய இசைக்கலைஞர் ஒருவர் இதுபோன்ற வகையில் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இது தான் முதன்முறை. இது இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனிரூத் ரசிகர்களையும், லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிரூத் ஜுன் 17 ஆம் தேதியன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் Zenith என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

இங்கு இதுவரை எந்த தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை. அனிரூத் அவர்கள் தான் முதன்முறையாக இங்கு இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.

‘ஒய் திஸ் கொலவெறி…’ என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியிருக்கும் முன்னணி இளம் இசைகலைஞரான அனிரூத்தின் இசையுலக பயணத்தில் இந்த இசைநிகழ்ச்சி வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெறவிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக லட்சக்கணக்கானவர் இந்நிகழ்ச்சியை நேரலையாக கண்டு ரசிப்பதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த இசைநிகழ்ச்சியில் ஜெனிதா காந்தி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும், பாடகிகளும், இசை கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இதுப் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.’ என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு டைரக்டருடன் கைகோர்க்கும் கார்த்தி

தெலுங்கு டைரக்டருடன் கைகோர்க்கும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthiநடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோருக்கு தமிழகத்தை போன்று தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் உள்ளனர்.

எனவே இவரது படங்கள் தயாராகும்போது தெலுங்கு சினிமாவை குறி வைத்தே தயாரிக்கப்படுகின்றன.

நடிகர் கார்த்திக்கு தோழா படத்திற்கு பிறகு தெலுங்கில் நல்ல மார்கெட் உருவாகியுள்ளது.

தற்போது பாண்டிராஜ் இயக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இதனையடுத்து “நீடி நாடி ஓகே கதா” படத்தை இயக்கிய வேணு உடுகுலா அவர்களின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கார்த்தியை சந்தித்து வேணு ஒரு கதை சொன்னாராம். அவரும் ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளது.

சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரி ரீமேக்கில் நடிக்கும் ஜீவா

சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரி ரீமேக்கில் நடிக்கும் ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva plays lead role in Swathanthryam Ardharathriyil Malayalam remakeகடந்த வாரம் மலையாளத்தில், ‘சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்’ என்கிற படம் வெளியானது.

டினு பாப்பச்சன் என்பவர் இயக்கியிருந்த இப்படத்தில் ‘அங்கமாலி டைரீஸ்’ புகழ் ஆண்டனி வர்கீஸ்தான் நாயகனாக நடித்திருந்தார்.

தன் நண்பர்களுடன் இணைந்து ஜெயிலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகச கதை இப்படத்தின் கதையாம்.

இந்தப்படத்தை பார்த்த நடிகர் ஜீவா படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

தமிழிலும் டினு பாப்பச்சன்தான் இயக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Jiiva plays lead role in Swathanthryam Ardharathriyil Malayalam remake

More Articles
Follows