தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரையில் பிரபலமான பல சீரியல்களில் நடித்துள்ளவர் ராஜ்கமல்.
மேலும் பல மேடை நிகழ்ச்சிகள், டிவி ஷோக்கள் என அனைத்தையும் தொகுத்து வழங்கியும் வருகிறார்.
இப்படியான திறமைகள் இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து வருகிறார்.
இவர் சீரியல் நடிகர் என்பதால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு பெரும்பாலும் மறுக்கப்பட்டு வருகின்றன.
இவர் நாயகனாக நடித்த சண்டி குதிரை படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மேல்நாட்டு மருமகன் என்ற படம் நாளை வெளியாகவுள்ளது.
இதனையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது…
டிவி சீரியல்கள் அனுபவம் இருந்தாலும் னிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை.
கில்லியில் த்ரிஷாவுக்கு வில்லன், அதே த்ரிஷாவுக்கு அபியும் நானும் படத்தில் அப்பாவாக நடித்தவர் பிரகாஷ்ராஜ். அவரைப் போன்று விதவிதமாக நடிக்கவே எனக்கு ஆசை.
இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டதால் கேரக்டர் ரோலில் நடிக்க என்னை யாரும் அழைப்பதில்லை.
மேலும் நான் நிறைய சம்பளம் கேட்பேன் என நினைக்கிறார்கள்.
ஒரு தயாரிப்பாளர் இந்த கேரக்டருக்கு இந்த சம்பளம் போதும் என நினைத்து அவர் எதை கொடுக்கிறாரோ? அதுவே எனக்கு போதும்.
என் சம்பளத்தை அவரே நிர்ணயிக்கட்டும். நான் என் சம்பளம் பற்றி பேசமாட்டேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.
I would like to act like Prakash Raj says Actor Rajkamal