தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீனிவாசன் இயக்கத்தில் அண்ணாதுரை மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இதில் அண்ணாதுரை படத்தில் இரண்டு வேடங்களை ஏற்று, எடிட்டராகவும் பணிபுரிந்து வருகிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் அப்படி எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
Will Seeman direct Vijay Antony for Lyca Productions