தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய் தீவிர அரசியலில் நுழைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அவர் அதற்கான நகர்வுகளை நடத்தி வருகிறார்.
தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல நற்பணிகளை செய்து வரும் விஜய் சமீப காலமாக தேசிய தலைவர்களின் பிறந்த நாட்களில் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க சொல்லியிருக்கிறார்.
மேலும் அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் அவர்களை போனில் அழைத்து வாழ்த்தும் சொல்லி வருகிறார்.
சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் விஜய்.
இந்த நிலையில் நேற்று நவம்பர் 8ம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய்.
அப்போது பல சந்தர்ப்பங்களில் எனக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீங்கள் குரல் கொடுத்து வருகிறீர்கள் அண்ணா. என விஜய் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.
நீ என் தம்பி.. உனக்காக நான் நிற்க மாட்டேனா.? என சீமான் விஜய்யிடம் சொன்னதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
Vijays birthday wishes to Politician Seeman