‘தெறி’யை நெருங்குமா ‘கபாலி’? காத்திருக்கும் ரஜினி-விஜய் ரசிகர்கள்

rajini vijay stillsதமிழகத்தை போன்றே கேரளாவிலும் ரஜினி, விஜய் படங்களுக்கு மாபெரும் வரவேற்பு உள்ளது.

எனவே இவர்களது படங்களின் கேரளா உரிமைக்கு பலத்த போட்டி இருக்கும்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாஸ், தன்னுடைய புலிமுருகன் படத்தை தள்ளி வைத்துவிட்டு கபாலியை 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டார்.

இந்நிலையில் கபாலி இதுவரை ரூ 16 கோடியை வசூல் செய்துள்ளதாம்.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தெறி அங்கு ரூ 16.50 கோடியை வசூல் செய்து இருந்தது.

எனவே இன்னும் ரூ. 50 லட்சத்தை தொட்டுவிட்டால் தெறி சாதனையை கபாலி முறியடிக்கும் என்பதால், இருதரப்பு ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

ஆனால் இந்த படங்களுக்கு முன்பே, விக்ரம் நடித்த ஐ படம் ரூ 20 கோடி வசூலை கேரளாவில் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post